கி – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிடக்க 5
கிடக்கும் 5
கிடங்கு 2
கிடங்கும் 2
கிடத்தி 4
கிடந்த 16
கிடந்தன 2
கிடந்து 13
கிடப்ப 2
கிடவாது 1
கிடை 3
கிடைக்குமளவும் 1
கிடைகிடக்கும் 1
கிடைகொண்டு 1
கிடைத்த 2
கிடைத்தது 1
கிடைத்தலின் 1
கிடைத்து 3
கிடைதரவு 1
கிடைப்பல் 1
கிடையில் 1
கிடையும் 1
கிணையே 1
கிராதர் 1
கிராதரும் 1
கிராதன் 1
கிரியினும் 1
கிழ 1
கிழத்தி 1
கிழமை 1
கிழவன் 2
கிழவன்தான் 1
கிழவோன் 1
கிழிக்கும் 1
கிழித்த 4
கிழிப்ப 1
கிழியினை 1
கிழியும் 1
கிள்ளியும் 1
கிள்ளை 1
கிள்ளையும் 1
கிளக்க 1
கிளக்கும் 1
கிளத்தி 1
கிளப்பினும் 1
கிளர் 6
கிளர்ந்த 1
கிளர்ந்து 1
கிளவி 2
கிளவியில் 1
கிளவியின் 2
கிளவியும் 3
கிளி 1
கிளியும் 3
கிளியே 1
கிளை 15
கிளைகள் 1
கிளைஞர்கள் 1
கிளைத்த 5
கிளையில் 1
கிளையினர் 1
கிளையினரே 1
கிளையுடன் 1
கிளையும் 1
கிளையொடு 1

கிடக்க (5)

தொடர்ந்ததும் இலை கீழ் நடந்த சொல் கிடக்க
பாலை கிழத்தி திருமுன் நாட்டிய – கல்லாடம்:2 17/44,45
தெருமரல் தந்த அறிவு நிலை கிடக்க
சிறிது நின் குறுவெயர் பெறும் அணங்கு ஆறி – கல்லாடம்:2 22/24,25
அறுத்திடும் வழக்கு கிடக்க ஒருகால் – கல்லாடம்:2 60/13
அவர் திறம் நிற்பதும் ஒருபுடை கிடக்க
உள்ளது மொழிமோ நீயே விண்ணுழை – கல்லாடம்:2 71/32,33
ஈங்கு இவை கிடக்க என் நிழல் இரும் புனத்து – கல்லாடம்:2 81/49

மேல்

கிடக்கும் (5)

தேக்கிய தேனுடன் இறால் மதி கிடக்கும்
எழு மலை பொடித்த கதிர் இலை நெடு வேல் – கல்லாடம்:2 1/5,6
அமுதொடு கிடக்கும் நிறைமதி பக்கம் – கல்லாடம்:2 22/12
முத்து மணி கிடக்கும் செறி இருள் அரங்காய் – கல்லாடம்:2 23/21
நிறைமதி கிடக்கும் இறால் விழ எறிந்தும் – கல்லாடம்:2 28/25
உவாமதி கிடக்கும் குண்டு கடல் கலக்கி – கல்லாடம்:2 41/25

மேல்

கிடங்கு (2)

பெரும் கடல் வயிறு கிடங்கு எழ கடைந்த – கல்லாடம்:2 66/8
கிடங்கு என பெயரிய கரும் கடல் காண்க – கல்லாடம்:2 69/19

மேல்

கிடங்கும் (2)

நெடும் கடல் கிடங்கும் ஒருங்கு உயிர் பருகிய – கல்லாடம்:2 6/39
பொய்கையும் கிடங்கும் செய்யினும் புகுந்து – கல்லாடம்:2 26/23

மேல்

கிடத்தி (4)

செம்மலர் பழித்த தாள் கீழ் கிடத்தி
அருள் நடம் புரிந்த தேவர் நாயகன் – கல்லாடம்:2 33/19,20
இரு நிலம் கிடத்தி மனம் கரம் கதுவ – கல்லாடம்:2 82/7
கிடைதரவு ஒருவி களவு அலர் கிடத்தி
பூவை அம் புது மலர் போக்கி அரக்கு அடுத்த – கல்லாடம்:2 84/18,19
நிமிர்த்து எறி காலில் கடைக்கண் கிடத்தி
பாணியில் சிரம் பதித்து ஒரு நடை பதித்து – கல்லாடம்:2 99/7,8

மேல்

கிடந்த (16)

போழ்பட கிடந்த ஒரு பங்கு எழுந்து – கல்லாடம்:1 2/26
சின்னம் கிடந்த கொடிஞ்சி மா தேர் – கல்லாடம்:2 2/17
பகையுடன் கிடந்த நிலைபிரி வழக்கினை – கல்லாடம்:2 3/1
வரை நிரை கிடந்த திரை உவர் புகுந்து – கல்லாடம்:2 15/22
நெடும் சடை கிடந்த குறும்பிறை கொழுந்தும் – கல்லாடம்:2 15/23
ஒருபால் கிடந்த துணை மதி ஆகி – கல்லாடம்:2 22/13
மணம் சூழ் கிடந்த நீள் கரும் கழியே – கல்லாடம்:2 23/5
நல் நயம் கிடந்த பொன் நகர் மூடி – கல்லாடம்:2 25/10
செம் மணி கிடந்த நும் பசும் புனத்து உளறி – கல்லாடம்:2 32/12
பொங்கர் கிடந்த சூல் கார் குளிறலும் – கல்லாடம்:2 39/11
மலை சூழ் கிடந்த பெரும் குல பரப்பை – கல்லாடம்:2 54/31
சுரும்பொடு கிடந்த சொரி இதழ் தாமரை – கல்லாடம்:2 63/5
வழி எதிர் கிடந்த உலமுடன் தாக்கி – கல்லாடம்:2 68/21
உவர் முதல் கிடந்த சுவை ஏழ் அமைத்து – கல்லாடம்:2 81/19
கரும் கழி கிடந்த கானல் அம் கரை-வாய் – கல்லாடம்:2 82/42
கிடந்த வல் இரவில் கிளர் மழை கான்ற – கல்லாடம்:2 83/15

மேல்

கிடந்தன (2)

கிடந்தன ஆம்பி பரந்தன மறைப்ப – கல்லாடம்:2 14/11
அடங்கின அவிந்தன அயர்ந்தன கிடந்தன
என பெறின் மாலை என் உயிர் உளைப்பதும் – கல்லாடம்:2 71/30,31

மேல்

கிடந்து (13)

பெரு மலை சென்னியில் சிறுமதி கிடந்து என – கல்லாடம்:1 1/7
கிடந்து எரி வடவையின் தளிர் முகம் ஈன்று – கல்லாடம்:1 2/7
நெஞ்சினும் கிடந்து நீண்ட வல் இரவில் – கல்லாடம்:2 8/31
பனை கிடந்து அன்ன உடல் முதல் துணிய – கல்லாடம்:2 15/18
நெடும் கார் கிடந்து படும் புனல் பிழியும் – கல்லாடம்:2 19/23
சூல் வயிறு உளைந்து வளை கிடந்து முரலும் – கல்லாடம்:2 21/15
முழை வாய் அரக்கர் பாடு கிடந்து ஒத்த – கல்லாடம்:2 27/11
சூடகம் தோள்வளை கிடந்து வில் வீச – கல்லாடம்:2 41/21
குரு மணி விரித்தலின் தேனொடு கிடந்து
மாயாது தொடுத்த மண மலர் சுமத்தலின் – கல்லாடம்:2 52/4,5
கிடந்து ஒளி பிறழும் நெடும் சடை பெருமான் – கல்லாடம்:2 55/11
கடல் கிடந்து அன்ன நிரைநிரை ஆய – கல்லாடம்:2 64/10
நீலமும் மணியும் நிரை கிடந்து என்ன – கல்லாடம்:2 64/26
நெட்டு எறி ஊதை நெருப்பொடு கிடந்து
மணி புறம் கான்ற புரி வளை விம்மி – கல்லாடம்:2 77/3,4

மேல்

கிடப்ப (2)

கல் என கிடப்ப சொல்லிய மேனி – கல்லாடம்:2 18/4
கோபம் ஊர்தர மணி நிரை கிடப்ப
தென்கால் திகைப்ப வடகால் வளர – கல்லாடம்:2 94/6,7

மேல்

கிடவாது (1)

நிழல்-தலை மணந்த புனல் கிடவாது
விண் உடைத்து உண்ணும் வினை சூர் கவர்ந்த – கல்லாடம்:2 63/7,8

மேல்

கிடை (3)

நிறை கிடை பொற்றை வரை கடந்து இறந்தால் – கல்லாடம்:2 27/12
அந்தணர் அரு மறை அரும் கிடை அடங்க – கல்லாடம்:2 38/11
கிடை முறை எடுக்கும் மறை ஒலி கேள்-மதி – கல்லாடம்:2 69/22

மேல்

கிடைக்குமளவும் (1)

இல் பொழில் கிடைக்குமளவும் நின்று உலைந்தும் – கல்லாடம்:2 85/18

மேல்

கிடைகிடக்கும் (1)

வயிற்றுள் அடக்கி வளை கிடைகிடக்கும்
முழக்கி மெய் கவரும் முக கொலை ஞாளி – கல்லாடம்:2 83/24,25

மேல்

கிடைகொண்டு (1)

வானவர்க்கு இறைவன் நிலம் கிடைகொண்டு
திரு உடல் நிறை விழி ஆயிர திரளும் – கல்லாடம்:2 23/1,2

மேல்

கிடைத்த (2)

எண்ணாது கிடைத்த புண் எழு செரு நிலை – கல்லாடம்:2 6/19
சுரை தலை கிடைத்த இசை உளர் தண்டு எடுத்து – கல்லாடம்:2 91/10

மேல்

கிடைத்தது (1)

வளைத்த வில் வட்டம் கிடைத்தது கண்டு – கல்லாடம்:2 25/26

மேல்

கிடைத்தலின் (1)

தருவும் மணியும் சங்கமும் கிடைத்தலின்
அரி முதிர் அமரர்க்கு அரசன் ஆகியும் – கல்லாடம்:2 9/7,8

மேல்

கிடைத்து (3)

குட கோ சேரன் கிடைத்து இது காண்க என – கல்லாடம்:2 11/26
கண் என கிடைத்து எம் கண் எதிர் நடுநாள் – கல்லாடம்:2 13/19
ஒரு நீ தானே மருவுதல் கிடைத்து
கள்ளமும் வெளியும் உள்ளம் உறை அனைத்தும் – கல்லாடம்:2 25/41,42

மேல்

கிடைதரவு (1)

கிடைதரவு ஒருவி களவு அலர் கிடத்தி – கல்லாடம்:2 84/18

மேல்

கிடைப்பல் (1)

கிடைப்பல் வல் யானே நும்மை தழைத்து எழு – கல்லாடம்:2 64/14

மேல்

கிடையில் (1)

கிடையில் தாபதர் தொடை மறை முழக்கும் – கல்லாடம்:2 39/10

மேல்

கிடையும் (1)

கரும் கோட்டு புன்னை அரும்பு உதிர் கிடையும்
முட வெண் தாழை ஊழ்த்த முள் மலரும் – கல்லாடம்:2 67/3,4

மேல்

கிணையே (1)

நெடு நகர் இரட்டும் களி அரி கிணையே
இருள் கலர் புலன் என சுழல் தரும் சூறை – கல்லாடம்:2 59/13,14

மேல்

கிராதர் (1)

செடி தலை கார் உடல் இடி குரல் கிராதர்
மறைந்து கண்டு அ கொலை மகிழ்வுழி இ நிலை – கல்லாடம்:2 6/12,13

மேல்

கிராதரும் (1)

தனி பார்த்து உழலும் கிராதரும் பலரே – கல்லாடம்:2 96/8

மேல்

கிராதன் (1)

முகில் உரு பெறும் ஓர் கொடுமர கிராதன்
அரு மறை தாபதன் அமைத்திடு செம் மலர் – கல்லாடம்:2 14/26,27

மேல்

கிரியினும் (1)

கோடை சென்று உடற்றும் கொல்லி கிரியினும்
பிறந்தவர் பிறவா பெரும் பதி அகத்தும் – கல்லாடம்:2 52/13,14

மேல்

கிழ (1)

கூர் வாய் பறை தபு பெரும் கிழ நாரை – கல்லாடம்:2 36/2

மேல்

கிழத்தி (1)

பாலை கிழத்தி திருமுன் நாட்டிய – கல்லாடம்:2 17/45

மேல்

கிழமை (1)

கிழமை அவ் அயலினர் நா உடன்று ஏத்த – கல்லாடம்:2 93/4

மேல்

கிழவன் (2)

ஐங்கணை_கிழவன் காட்சியுள் மகிழ – கல்லாடம்:2 19/10
வேனில் கிழவன் பேரணி மகிழ – கல்லாடம்:2 23/16

மேல்

கிழவன்தான் (1)

தருவின் கிழவன்தான் என நிற்றி – கல்லாடம்:2 97/21

மேல்

கிழவோன் (1)

வயிறு வாய்த்து அழகு குழவி அம் கிழவோன்
வாழ் பரங்குன்று எனும் மணி அணி பூண்ட – கல்லாடம்:2 86/22,23

மேல்

கிழிக்கும் (1)

இரு குழை கிழிக்கும் அரி மதர் மலர் கண் – கல்லாடம்:2 41/49

மேல்

கிழித்த (4)

நுதல் மதி கிழித்த அழல் அவிர் நோக்கமும் – கல்லாடம்:2 15/25
சேகரம் கிழித்த நிறைமதி உடலம் – கல்லாடம்:2 68/14
திரு நுதல் கிழித்த தனி விழி நாயகன் – கல்லாடம்:2 69/33
முடம்படு நாஞ்சில் பொன் முகம் கிழித்த
நெடும் சால் போகி கடும் கயல் துரக்கும் – கல்லாடம்:2 74/7,8

மேல்

கிழிப்ப (1)

நெடும் குழை கிழிப்ப கடும் கயல் பாயும் – கல்லாடம்:2 27/30

மேல்

கிழியினை (1)

வெண்_பொடி எருக்கம் என்பு பனை கிழியினை
பூசி அணிந்து பூண்டு பரி கடவி – கல்லாடம்:2 33/27,28

மேல்

கிழியும் (1)

பனையும் கிழியும் படைக்குவன் என்றும் – கல்லாடம்:2 85/8

மேல்

கிள்ளியும் (1)

கிள்ளியும் கிளையும் கிளர் படை நான்கும் – கல்லாடம்:2 80/12

மேல்

கிள்ளை (1)

இவளே மணி வாய் கிள்ளை துணியாது அகற்ற – கல்லாடம்:2 51/23

மேல்

கிள்ளையும் (1)

வளை வாய் கிள்ளையும் வரி புனை பந்தும் – கல்லாடம்:2 29/2

மேல்

கிளக்க (1)

ஒன்று கிளக்க நின்று இவை கேண்-மின் – கல்லாடம்:2 16/3

மேல்

கிளக்கும் (1)

கேளா சிறுசொல் கிளக்கும் கலதியர் – கல்லாடம்:2 80/24

மேல்

கிளத்தி (1)

கிளையில் காட்டி ஐ முறை கிளத்தி
குரலும் பாணியும் நெய்தலில் குமட்டி – கல்லாடம்:2 100/14,15

மேல்

கிளப்பினும் (1)

போக்கு என உழையர் அயர்ப்பிடை கிளப்பினும்
முலை குவட்டு ஒழுக்கிய அருவி தண் தரளம் – கல்லாடம்:2 44/8,9

மேல்

கிளர் (6)

வளி சுழல் விசும்பின் கிளர் முகடு அணவி – கல்லாடம்:2 51/27
மாறுகொண்டு அறையும் மதி நூல் கடல் கிளர்
சமய கணக்கர்-தம் திறம் கடந்து – கல்லாடம்:2 62/25,26
பவள வாயும் கிளர் பச்சுடம்பும் – கல்லாடம்:2 65/27
கிள்ளியும் கிளையும் கிளர் படை நான்கும் – கல்லாடம்:2 80/12
கிடந்த வல் இரவில் கிளர் மழை கான்ற – கல்லாடம்:2 83/15
கிளர்ந்து அயர்வாட்கு முன் கிளர் வினை சென்றோர் – கல்லாடம்:2 84/14

மேல்

கிளர்ந்த (1)

எழு கடல் கிளர்ந்த திரள் கலி அடங்க – கல்லாடம்:2 21/33

மேல்

கிளர்ந்து (1)

கிளர்ந்து அயர்வாட்கு முன் கிளர் வினை சென்றோர் – கல்லாடம்:2 84/14

மேல்

கிளவி (2)

பதினெண் கிளவி ஊர் துஞ்சிய போல் – கல்லாடம்:2 38/3
இன்ப கிளவி அன்பினர் போக்கி – கல்லாடம்:2 50/4

மேல்

கிளவியில் (1)

குறும் சொல் குதட்டிய மழலை மென் கிளவியில்
விளரி உள் விளைக்கும் தளர் நடை சிறுவனும் – கல்லாடம்:2 88/9,10

மேல்

கிளவியின் (2)

வழங்குறு கிளவியின் திசை என மாழ்கியும் – கல்லாடம்:2 44/6
எவ்வழி கிளவியின் கூறி – கல்லாடம்:2 44/28

மேல்

கிளவியும் (3)

முதல் எண் கிளவியும் விதமுடன் நிரையே – கல்லாடம்:2 38/21
மழலை கிளவியும் இருநிலத்து இன்பமும் – கல்லாடம்:2 50/10
அடாஅ கிளவியும் படாஅ பழியும் – கல்லாடம்:2 89/17

மேல்

கிளி (1)

தினை குரல் அறையும் கிளி கணம் கடிந்தும் – கல்லாடம்:2 22/39

மேல்

கிளியும் (3)

மயிலும் கிளியும் குருவியும் படிந்து – கல்லாடம்:2 4/11
தாமரை பாடும் அறுகால் கிளியும்
உறைத்து எறி கம்பலை உம்பரை தாவி – கல்லாடம்:2 47/16,17
மரகத துழாயும் அ நிற கிளியும்
தோகையும் சூலமும் தோளில் முன்கையில் – கல்லாடம்:2 88/27,28

மேல்

கிளியே (1)

கிளை வாய் கிளைத்த வளை வாய் கிளியே
மைந்தர் கண் சென்று மாதர் உள் தடைந்த – கல்லாடம்:2 81/37,38

மேல்

கிளை (15)

களவு உடை நெடும் சூர் கிளை களம் விட்டு ஒளித்த – கல்லாடம்:2 1/3
கல்லா கயவர்க்கு அரு நூல் கிளை மறை – கல்லாடம்:2 1/16
கூடல் அம் பெரும் பதி கூறார் கிளை என – கல்லாடம்:2 3/18
ஒருமை காண்குவர் துகிர் கிளை கொடியே – கல்லாடம்:2 3/22
உறவு இணை நட்பு கிளை வியப்பு எய்த – கல்லாடம்:2 14/13
கூடல் நின்று ஏத்தினர் குல கிளை போல – கல்லாடம்:2 14/36
பெரும் கிளை கூண்டு வெட்சி மலர் பரப்பி – கல்லாடம்:2 24/4
கூடி உண்ணும் குணத்தினர் கிளை போல் – கல்லாடம்:2 35/15
வண்டு கிளை முரற்றிய பாசிலை துளவும் – கல்லாடம்:2 41/16
வண்டும் தேனும் மருள் கிளை முரற்றி – கல்லாடம்:2 41/40
நிரைத்து கிளை கொள் நெடு வழக்கு உய்த்தலும் – கல்லாடம்:2 44/21
கூவிளம் கண்ணியில் குல கிளை முரற்றியும் – கல்லாடம்:2 54/3
நண்ணலர் கிளை போல் தம் மனம் திரிந்து நம் – கல்லாடம்:2 72/15
கிளை வாய் கிளைத்த வளை வாய் கிளியே – கல்லாடம்:2 81/37
கிளை முள் செறிந்த வேலி அம் படப்பை – கல்லாடம்:2 90/17

மேல்

கிளைகள் (1)

வடவை நெடு நாக்கின் கிளைகள் விரிந்து என்ன – கல்லாடம்:1 2/5

மேல்

கிளைஞர்கள் (1)

கிளைஞர்கள் நச்சா பொருளினர் போல – கல்லாடம்:2 68/18

மேல்

கிளைத்த (5)

மேரு கிளைத்த தோள் ஆயிரத்தொடும் – கல்லாடம்:2 21/32
கிளை வாய் கிளைத்த வளை வாய் கிளியே – கல்லாடம்:2 81/37
மஞ்சு அடை கிளைத்த வரி குறு முள் தாள் – கல்லாடம்:2 89/5
கொழும் சுடர் கிளைத்த நெடும் சடை புயங்கன் – கல்லாடம்:2 91/5
ஏழிசை முதலில் ஆயிரம் கிளைத்த
கானம் காட்டும் புள் அடி துணையினர் – கல்லாடம்:2 100/11,12

மேல்

கிளையில் (1)

கிளையில் காட்டி ஐ முறை கிளத்தி – கல்லாடம்:2 100/14

மேல்

கிளையினர் (1)

நின் முக கிளையினர் தம்மையும் கடந்தனர் – கல்லாடம்:2 62/16

மேல்

கிளையினரே (1)

மற்று அவள் பார்த்த மதி கிளையினரே
உடல் நிழல் மான உனது அருள் நிற்கும் – கல்லாடம்:2 62/17,18

மேல்

கிளையுடன் (1)

கீசக பேரியாழ் கிளையுடன் முரல – கல்லாடம்:2 82/21

மேல்

கிளையும் (1)

கிள்ளியும் கிளையும் கிளர் படை நான்கும் – கல்லாடம்:2 80/12

மேல்

கிளையொடு (1)

ஆம்பல் முக அரக்கன் கிளையொடு மறிய – கல்லாடம்:1 1/19

மேல்