ஊ – முதல் சொற்கள், கல்லாடம் தொடரடைவு

கட்டுருபன்கள்

ஊக்கி (1)

மா குகன் நதி விட ஊக்கி வனத்து – கல்லாடம்:2 95/31

மேல்

ஊக்கும் (1)

ஊர் நகைத்து உட்க ஊக்கும் ஓர் விருந்தினை – கல்லாடம்:2 89/1

மேல்

ஊசல் (3)

நெடும் கயிற்று ஊசல் பரிந்து கலுழ் காலை – கல்லாடம்:2 13/16
மணி நிறை ஊசல் அணிபெற உகைத்தும் – கல்லாடம்:2 22/32
ஒளிர் மணி ஊசல் பரிய இட்டு உயர்த்தும் – கல்லாடம்:2 85/12

மேல்

ஊசலும் (1)

நீட்டி வலி தள்ளிய நெடும் கயிற்று ஊசலும்
அலமரு காலும் அலகை தேரும் – கல்லாடம்:1 1/35,36

மேல்

ஊட்டி (1)

பெரு முகில் வயிறளவு ஊட்டி
திரு உலரு அளிக்கும் கடல் மட மகளே – கல்லாடம்:2 65/30,31

மேல்

ஊட்டிய (1)

மருந்து கை கொண்டு வானவர்க்கு ஊட்டிய
பாக பக்க நெடியோன் உறையுளும் – கல்லாடம்:2 41/26,27

மேல்

ஊட்டியும் (1)

அழுங்குறு புனல் எடுத்து அகில் புகை ஊட்டியும்
ஒளிர் மணி ஊசல் பரிய இட்டு உயர்த்தும் – கல்லாடம்:2 85/11,12

மேல்

ஊடி (2)

ஊடி ஆடுநர் திரையொடு பிணங்கி – கல்லாடம்:2 41/33
ஊடி முறையே எமக்கு உள மண் கருதி – கல்லாடம்:2 93/21

மேல்

ஊடியும் (1)

ஊடியும் வணங்கியும் உவந்து அளி கூறியும் – கல்லாடம்:2 48/20

மேல்

ஊடியே (1)

வாடி நிலைநின்றும் ஊடியே மாந்தும் – கல்லாடம்:2 18/35

மேல்

ஊடு (1)

ஊடு உகள் சிரலை பச்சிறவு அருந்தும் – கல்லாடம்:2 93/14

மேல்

ஊதை (1)

நெட்டு எறி ஊதை நெருப்பொடு கிடந்து – கல்லாடம்:2 77/3

மேல்

ஊதையின் (1)

ஊதையின் அலகிட்டு உறை புயல் தெளித்து – கல்லாடம்:2 14/7

மேல்

ஊமன் (1)

ஆரிய ஊமன் கனவு என ஆக்கிய – கல்லாடம்:2 4/8

மேல்

ஊர் (9)

நடு ஊர் நகர் செய்து அடு பவம் துடைக்கும் – கல்லாடம்:2 12/16
எம் ஊர் சேணும் நும் ஊர் குன்றமும் – கல்லாடம்:2 24/19
எம் ஊர் சேணும் நும் ஊர் குன்றமும் – கல்லாடம்:2 24/19
பதினெண் கிளவி ஊர் துஞ்சிய போல் – கல்லாடம்:2 38/3
ஊர் உடைத்து உண்ணும் சூர் உடல் துணித்த – கல்லாடம்:2 48/10
அம்பல் தூற்றும் இவ் ஊர் அடக்கி – கல்லாடம்:2 64/9
பிறவா பேர் ஊர் பழ நகரிடத்தும் – கல்லாடம்:2 76/15
ஊர் நகைத்து உட்க ஊக்கும் ஓர் விருந்தினை – கல்லாடம்:2 89/1
தமது ஊர் புகுந்து முடி சுமந்தோர்க்கும் – கல்லாடம்:2 95/38

மேல்

ஊர்தர (1)

கோபம் ஊர்தர மணி நிரை கிடப்ப – கல்லாடம்:2 94/6

மேல்

ஊர்தரும் (1)

மாமை ஊர்தரும் மணி நிறத்து இவட்கே – கல்லாடம்:2 59/36

மேல்

ஊர்தி (1)

பணி_பகை ஊர்தி அருள் கொடி இரண்டுடன் – கல்லாடம்:2 59/30

மேல்

ஊர (5)

நிறை நீர் ஊர நெஞ்சகம் பிரிக்கும் – கல்லாடம்:2 57/6
மலர் மலர் துவட்டும் வயல் அணி ஊர
கோளகை குடிலில் குனிந்து இடைந்து அப்புறத்து – கல்லாடம்:2 78/5,6
நல் இயல் ஊர நின் புல்லம் உள் மங்கையர் – கல்லாடம்:2 80/22
பெரும் புனல் ஊர எம் இல்லம் – கல்லாடம்:2 87/41
மருளொடு குறிக்கும் புனல் அணி ஊர
தானவர்க்கு உடைந்து வானவர் இரப்ப – கல்லாடம்:2 95/23,24

மேல்

ஊரர் (4)

பெரு நீர் ஊரர் நிறை நீர் விடுத்து – கல்லாடம்:2 54/36
உள்ளம் கரிவைத்து உரைசெய்த ஊரர்
தம் மொழி திரிந்து தவறு நின்றுளவேல் – கல்லாடம்:2 70/12,13
மணி முடி சுமந்த நம் வயல் அணி ஊரர் பின் – கல்லாடம்:2 89/12
அன்ன ஊரர் புல்லமும் விழு குடிக்கு – கல்லாடம்:2 89/16

மேல்

ஊரர்க்கு (1)

செம் கண் பகடு தங்கும் வயல் ஊரர்க்கு
அரு மறை விதியும் உலகியல் வழக்கும் – கல்லாடம்:2 63/15,16

மேல்

ஊரன் (7)

தரித்த உள்ள தாமரை ஊரன்
பொன் துணர் தாமம் புரிந்து ஒளிர் மணி தேர் – கல்லாடம்:2 10/25,26
பேரா வாய்மை ஊரன்
தாரொடு மயங்கி பெருமையும் இலனே – கல்லாடம்:2 37/23,24
ஆட்டுறும் ஊரன் அன்புகொள் நலத்தினை – கல்லாடம்:2 55/30
விற்று உணும் சேரி விடாது உறை ஊரன்
ஊருணி ஒத்த பொது வாய் தம்பலம் – கல்லாடம்:2 56/16,17
மற்று அவள் ஊரன் கொற்ற வெண்குடையே – கல்லாடம்:2 62/13
பொய் வரும் ஊரன் புகல் அரும் இல் புக – கல்லாடம்:2 79/16
துவர தீர்ந்த நம் கவர் மனத்து ஊரன்
பொம்மல் அம் கதிர் முலை புணர்வுறும்-கொல் என – கல்லாடம்:2 88/12,13

மேல்

ஊரனை (6)

அன்ன ஊரனை எம் இல் கொடுத்து – கல்லாடம்:2 55/34
பேரா வாய்மை நின் ஊரனை கடந்தது – கல்லாடம்:2 62/12
கற்றதும் கல்லாது உற்ற ஊரனை
அவள் தர இவள் பெறும் அரந்தை அம் பேறினுக்கு – கல்லாடம்:2 73/26,27
பூம் புனல் ஊரனை பொருந்தா நெடும் கண் – கல்லாடம்:2 83/27
திருநடம் குறித்த நம் பொரு புனல் ஊரனை
எங்கையர் குழுமி எமக்கும் தங்கையை – கல்லாடம்:2 90/13,14
பொரு புனல் ஊரனை பொது என அமைத்த – கல்லாடம்:2 91/7

மேல்

ஊரி (1)

உயர் மரம் முளைத்த ஊரி போல – கல்லாடம்:2 37/6

மேல்

ஊருணி (2)

ஊருணி ஒத்த பொது வாய் தம்பலம் – கல்லாடம்:2 56/17
ஊருணி அன்ன நின் மார்பகம் தோய்ந்த என் – கல்லாடம்:2 78/26

மேல்

ஊரும் (2)

துன்பு பசப்பு ஊரும் கண் நிழல்-தன்னை – கல்லாடம்:2 20/8
பாவையும் மானும் தெருள்பவர் ஊரும்
நெடும் திசை நடக்கும் பொருள் நிறை கலத்தினை – கல்லாடம்:2 29/4,5

மேல்

ஊழ்த்த (1)

முட வெண் தாழை ஊழ்த்த முள் மலரும் – கல்லாடம்:2 67/4

மேல்

ஊழி (3)

ஊழி தீ படர்ந்து உடற்றுபு சிகையும் – கல்லாடம்:1 1/13
அளவா ஊழி மெய்யொடு சூழ்ந்து – கல்லாடம்:2 41/35
நெடும் பகல் ஊழி நினைவுடன் நீந்தினும் – கல்லாடம்:2 66/24

மேல்

ஊழியும் (1)

ஊழியும் கணம் என உயர் மகன் பள்ளியும் – கல்லாடம்:2 41/24

மேல்

ஊழையும் (1)

ஊழையும் கடந்தது வாய்மையின் மதனே – கல்லாடம்:2 62/9

மேல்

ஊற்றி (1)

சுண்ணமும் கலந்து திமிர்ந்து உடல் ஊற்றி
வண்டொடு மகிழ்ந்து அவிழ் தோட்டு அலர் சூட்டி – கல்லாடம்:2 87/14,15

மேல்

ஊற்றியும் (1)

அமுதம் உள்கையில் உதவுழி ஊற்றியும்
மெய் உலகு இரண்டினுள் செய்குநர் உளரேல் – கல்லாடம்:2 66/9,10

மேல்

ஊற்று (2)

ஊற்று எழும் இரு கவுள் பெரு மத கொலை மலை – கல்லாடம்:2 4/17
அமுத ஊற்று எழுந்து நெஞ்சம் களிக்கும் – கல்லாடம்:2 17/16

மேல்

ஊறி (1)

ஓங்கி புடை பரந்து அமுதம் உள் ஊறி
காண் குறி பெருத்து கச்சது கடிந்தே – கல்லாடம்:2 45/3,4

மேல்

ஊன் (2)

பல உடம்பு அழிக்கும் பழி ஊன் உணவினர் – கல்லாடம்:2 1/18
உதிர் பறை எருவை உணவு ஊன் தட்டி – கல்லாடம்:2 6/26

மேல்

ஊன்றி (1)

இருள் குறள் ஊன்றி எம் அருள் களி ஆற்றி – கல்லாடம்:2 85/24

மேல்