வி – முதல் சொற்கள், கலிங்கத்துப்பரணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விக்குமே 1
விச்சை 2
விசயதரன் 1
விசும்பின் 1
விசும்பு 2
விசும்பு-அதனிலே 1
விசும்பை 1
விசும்வு 1
விசை 6
விசைபட 1
விசைபடு 1
விசையமகட்கு 1
விட்ட 6
விட்டருளியே 1
விட்டவர் 1
விட்டு 8
விட 4
விடம் 1
விடம்பை 1
விடர்கள் 1
விடவிகள் 1
விடா 1
விடாத 1
விடாது 1
விடியளவும் 3
விடு 15
விடு-மின் 2
விடுகம்பிகளா 1
விடுகிலர் 1
விடுத்த 1
விடும் 7
விடுவராலோ 1
விடுவரே 1
விடுவாளை 1
விடை 3
விடைகொடுக்க 1
விடைகொண்டு 1
விடைத்து 1
விண்டு 1
விண்ணப்பம் 2
விண்ணின் 2
விண்ணின்-வாய் 1
விண்ணுளோர் 1
விண்ணோர் 1
விண்நாட்டு 1
வித்துவ 1
விதத்தினில் 1
விதம் 1
விதி 2
விதித்ததுவும் 1
விதிப்படி 1
விதியால் 1
விதிர்த்தலுமே 1
விதுகுலத்தோன் 1
விந்தத்து 1
விம்மு 1
விமானங்களில் 2
விமானம்-அது 1
வியத்தர்களே 1
வியப்ப 1
வியர் 1
வியர்த்த 1
வியர்த்து 2
வியர்ப்ப 1
வியர்வு 1
விரகும் 1
விரல் 3
விரல்கள் 1
விராடர் 1
விராய் 1
விரி 3
விரித்த 2
விரித்தலால் 2
விரித்தலின் 1
விரித்து 3
விரியும் 1
விருதர் 3
விருதர்கள் 1
விருதராச 1
விருதராசபயங்கரன் 1
விருதராசரை 1
விருதரை 1
விருந்தினரும் 1
விருப்புறும் 1
விரை 1
விரைந்து 2
விரைவொடு 1
வில் 6
வில்லவர் 1
வில்லாலும் 1
விலக்குக 2
விலா 2
விலை 1
விலையிலாத 1
விழ 4
விழவு 1
விழவே 1
விழா 3
விழாமலே 1
விழி 15
விழிக்க 1
விழிக்கடை 1
விழிகளின் 1
விழிஞம் 1
விழித்த 2
விழித்து 1
விழிப்பன 1
விழியிட 1
விழு 1
விழுங்க 1
விழுங்கீரே 1
விழுத்துமே 1
விழுந்த 1
விழுந்தன 1
விழுந்தனர் 1
விழுந்திட 1
விழுந்திடின் 1
விழுந்து 4
விழுந்துமே 1
விழுபொழுது 1
விழும் 6
விழுவதாம் 1
விழுவன 1
விழை 1
விளக்கிக்கொள்ளீரே 1
விளக்கு 1
விளக்கும் 1
விளங்கி 1
விளங்கின 2
விளங்கு 1
விளம்ப 1
விளம்பல் 1
விளம்பினள் 1
விளம்புவாம் 1
விளை 2
விளைக்கவே 1
விளைகவே 1
விளைத்ததும் 1
விளைத்தன 2
விளைத்து 1
விளைதலின் 1
விளைந்த 1
விளைந்தவே 1
விளைப்பது 1
விளைப்பன 1
விளைய 3
விளையாடி 1
விளையாடு 1
விளையாடும் 1
விளையுமா 1
விளைவது 2
விளைவு 1
விற்படை 1
விற்று 1
விறகு 2
விறல் 1
விறலும் 1
வினா 1
வினையன 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


விக்குமே (1)

வாயின் நீர்-தன்னை நீர் எனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே – கலிங்:83/2

மேல்


விச்சை (2)

இ கணம் மாளும் இனி தவிர் விச்சை என கை விதிர்த்தலுமே – கலிங்:173/2
தன் முனிவும் அவன் முனிவும் தவிர்க என்று சாதன மந்திர விச்சை பலவும் தந்தே – கலிங்:176/2

மேல்


விசயதரன் (1)

வென்று இலங்கு கதிர் ஆழி விசயதரன் என உதித்தான் விளம்ப கேள்-மின் – கலிங்:232/2

மேல்


விசும்பின் (1)

தேவருக்கு அரசனாய் விசும்பின் மேற்செல தென் திசைக்கு புகும் தன்மை செப்புவாம் – கலிங்:257/2

மேல்


விசும்பு (2)

நேர் செறுத்தவர்க்கு அரிது நிற்பிடம் நெடு விசும்பு அலால் இடமும் இல்லையே – கலிங்:348/2
தனி விசும்பு அடையினும் படைஞர் கண் தவிர்கிலா – கலிங்:522/1

மேல்


விசும்பு-அதனிலே (1)

கதிர் விசும்பு-அதனிலே இதனிலும் பெரியது ஓர் காளையம் விளையுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:492/2

மேல்


விசும்பை (1)

அற்ற குறைத்தலை என்று விசும்பை அதுக்கும் எயிற்றினவே – கலிங்:170/2

மேல்


விசும்வு (1)

இரு பொழுதும் இரவி பசும் புரவி விசும்வு இயங்காதது இயம்ப கேள்-மின் – கலிங்:85/1

மேல்


விசை (6)

விம்மு கடு விசை வனத்தின் வெம்மையினை குறித்து அன்றோ விண்ணோர் விண்ணின் – கலிங்:87/1
வெடித்த கழை விசை தெறிப்ப தரை மேல் முத்தம் வீழ்ந்தன அ தரை புழுங்கி அழன்று மேன்மேல் – கலிங்:93/1
வேழம் ஒன்று உகைத்து ஆலி விண்ணின்-வாய் விசை அடங்கவும் அசைய வென்றதும் – கலிங்:200/1
வட கலிங்கர் பதி அவன் இரண்டு விசை வருகிலன் திறை கொடு எனலுமே – கலிங்:338/2
கடுத்த விசை இருள் கொடுத்த உலகு ஒரு கணத்தில் வலம்வரு கணிப்பில் தேர் – கலிங்:357/1
விசை பெற விடு பரி இரதமும் மறி கடல் மிசை விடு கலம் எனவே – கலிங்:399/1

மேல்


விசைபட (1)

விடவிகள் மொடுமொடு விசைபட முறிபட எறிபட நெறிபடவே – கலிங்:400/1

மேல்


விசைபடு (1)

வெருவர வரி சிலை தெறித்த நாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே – கலிங்:405/1

மேல்


விசையமகட்கு (1)

விசையமகட்கு எடுத்த கொடி என விருதர் களத்து எடுத்து வருவரே – கலிங்:437/2

மேல்


விட்ட (6)

குளம் உதிரம் மெத்தியது ஒர் குரை கடல் கடுப்ப எதிர் குறுகலர்கள் விட்ட குதிரை – கலிங்:253/1
விட்ட அதிகை பதியில்-நின்று பயணம் பயணம் விட்டு விளையாடி அபயன் – கலிங்:300/1
விட்ட தண்டினின் மீனவர் ஐவரும் – கலிங்:381/1
களித்த வீரர் விட்ட நேமி கண்டு வீசு தண்டிடை – கலிங்:431/1
அடு கரி நுதல் பட விட்ட கைப்படை அதனை ஒர் நொடி வரையில் பறிப்பரே – கலிங்:441/2
பொருகை தவிர்ந்து கலிங்கர் ஓட போக புரந்தரன் விட்ட தண்டின் – கலிங்:587/1

மேல்


விட்டருளியே (1)

மன்றில் நடமாடி அருள்கொண்டு விடைகொண்டு அதிகை மா நகருள் விட்டருளியே – கலிங்:299/2

மேல்


விட்டவர் (1)

அடு சிலை பகழி தொடுத்துவிட புகும் அளவினில் அயம் எதிர் விட்டவர் வெட்டின – கலிங்:421/1

மேல்


விட்டு (8)

ந காஞ்சிக்கும் வடமலைக்கும் நடுவில் வெளிக்கே வேடனை விட்டு
அ கானகத்தே உயிர் பறிப்பீர் அம் பொன் கபாடம் திற-மினோ – கலிங்:73/1,2
ஆடுகின்ற சிறை வெம் பருந்தின் நிழல் அஞ்சி அ கடு வனத்தை விட்டு
ஓடுகின்ற நிழல் ஒக்கும் நிற்கும் நிழல் ஓரிடத்தும் உள அல்லவே – கலிங்:80/1,2
ஊர் காக்க மதில் வேண்டா உயிர் காத்த உடம்பினை விட்டு ஓடிப்போதும் – கலிங்:213/2
விட்ட அதிகை பதியில்-நின்று பயணம் பயணம் விட்டு விளையாடி அபயன் – கலிங்:300/1
விட்டு அகன்று போகிலாது மீள்வ போலும் மீளுமே – கலிங்:433/2
ஆட போந்து அகப்பட்டேம் கரந்தோம் என்றே அரி-தனை விட்டு உயிர் பிழைத்தார் அநேகர் ஆங்கே – கலிங்:467/2
மான சயப்பாவை விட்டு ஆடும் அம்மானை வட்டு ஒத்தல் காண்-மின்களோ – கலிங்:491/2
களம் அடைய காட்டுதற்கு முடிவது அன்று கவிழும் மத கரி சொரிய குமிழி விட்டு
குளம் மடை பட்டது போலும் குருதி ஆடி கூழ் அடு-மின் என்று அருள கும்பிட்டு ஆங்கே – கலிங்:503/1,2

மேல்


விட (4)

கடல் கலக்கல்-கொல் மலை இடித்தல்-கொல் கடு விட பொறி பண பணி – கலிங்:343/1
சோழ குல_துங்கன் விட வந்துவிடு தண்டின் எதிர் சென்று அமர் தொடங்குக எனவே – கலிங்:393/2
நெடியன சில சரம் அப்படி பெற்றவர் நிறை சரம் நிமிர விட துணி உற்றவே – கலிங்:423/2
நிறை சரம் நிமிர விட துணி உற்றவர் நெறியினை எறி ஒடிகிற்பவர் ஒத்து எதிர் – கலிங்:424/1

மேல்


விடம் (1)

கடலில் விடம் என அமுது என மதனவேள் கருதி வழிபடு படையொடு கருதுவார் – கலிங்:48/1

மேல்


விடம்பை (1)

இந்த விடம்பை நா தோய்க்கில் இ கூழ் எல்லாம் சுவறாதோ – கலிங்:554/2

மேல்


விடர்கள் (1)

விருதர் இரு துணி பார் நிறைந்தன விடர்கள் தலை மலையாய் நெளிந்தன – கலிங்:446/1

மேல்


விடவிகள் (1)

விடவிகள் மொடுமொடு விசைபட முறிபட எறிபட நெறிபடவே – கலிங்:400/1

மேல்


விடா (1)

காடு குலைந்து அலைய கைவளை பூசலிட கலவி விடா மடவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:62/2

மேல்


விடாத (1)

உள் ஒடுங்கி இரண்டும் ஒன்றாகவே ஒட்டி ஒட்டு விடாத கொடிற்றின – கலிங்:138/1

மேல்


விடாது (1)

உபய பலமும் விடாது வெம் சமம் உடலு பொழுதினில் வாகை முன் கொள – கலிங்:444/1

மேல்


விடியளவும் (3)

மெய்யே கொழுநர் பிழை நலிய வேட்கை நலிய விடியளவும்
பொய்யே உறங்கும் மட நல்லீர் புனை பொன் கபாடம் திற-மினோ – கலிங்:36/1,2
திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திற-மினோ – கலிங்:69/2
வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பு-அதனை விடியளவும் காத்து நின்றே – கலிங்:464/2

மேல்


விடு (15)

பிழை நினைந்து உருகி அணைவுறா மகிழ்நர் பிரிதல் அஞ்சி விடு கண்கள் நீர் – கலிங்:72/1
முதுகில் வித்துவ நிலமுறு துகள் அற முகில் மிதிப்பன முகில் விடு துளியொடு – கலிங்:351/2
எதிர் பறப்பன விடு நுகமொடு கடிது இவுளி முற்படின் இது பரிபவம் எனும் – கலிங்:352/2
நகைத்த விடு பரி முக-கண் நுரை சுரநதி-கண் நுரை என மிதக்கவே – கலிங்:355/2
பல கற்பனைகளை நினைவுற்றிலை வரு படை மற்று அவன் விடு படை என்றே – கலிங்:373/2
விசை பெற விடு பரி இரதமும் மறி கடல் மிசை விடு கலம் எனவே – கலிங்:399/1
விசை பெற விடு பரி இரதமும் மறி கடல் மிசை விடு கலம் எனவே – கலிங்:399/1
வெளி அரிது என எதிர் மிடை படை மனுபரன் விடு படை அதன் எதிரே – கலிங்:403/1
விடு விடு விடு பரி கரி குழாம் விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே – கலிங்:404/2
விடு விடு விடு பரி கரி குழாம் விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே – கலிங்:404/2
விடு விடு விடு பரி கரி குழாம் விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே – கலிங்:404/2
விடு படை பெறுகிலர் மற்று இனி சிலர் விரை பரி விழ எறிதற்கு முற்பட – கலிங்:441/1
அபயன் விடு படை ஏழ் கலிங்கமும் அடைய ஒரு முகம் ஆகி முந்தவே – கலிங்:444/2
மழைகள் அதிர்வன போல் உடன்றன வளவன் விடு படை வேழம் என்று இருள் – கலிங்:453/1
உருவிய சுரிகையொடு உயர் கணை விடு படை உருள் வடிவு இது என உருள்வன சிலசில – கலிங்:589/1

மேல்


விடு-மின் (2)

விடு-மின் எங்கள் துகில் விடு-மின் என்று முனி வெகுளி மென் குதலை துகிலினை – கலிங்:25/1
விடு-மின் எங்கள் துகில் விடு-மின் என்று முனி வெகுளி மென் குதலை துகிலினை – கலிங்:25/1

மேல்


விடுகம்பிகளா (1)

வேண்டும் அளவும் வாய் நெகிழ்த்து விடுகம்பிகளா புனையீரே – கலிங்:511/2

மேல்


விடுகிலர் (1)

எமது என இரு கண் விழிக்க உட்கினர் என விடுகிலர் படைஞர்க்கு வெட்கியே – கலிங்:442/2

மேல்


விடுத்த (1)

விடுத்த வீரர் ஆயுதங்கள் மேல் விழாமலே நிரைத்து – கலிங்:425/1

மேல்


விடும் (7)

வஞ்சி மானதன் விடும் படையினில் கொடிய கண் மட நலீர் இடு மணி கடை திறந்திடு-மினோ – கலிங்:32/2
அக்கிரி குலங்கள் விடும் அங்குலியின் நுண் திவலை அ செழியர் அஞ்சி விடும் அ – கலிங்:298/1
அக்கிரி குலங்கள் விடும் அங்குலியின் நுண் திவலை அ செழியர் அஞ்சி விடும் அ – கலிங்:298/1
விடு விடு விடு பரி கரி குழாம் விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே – கலிங்:404/2
விடு விடு விடு பரி கரி குழாம் விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே – கலிங்:404/2
தோளில் இட்டு நீர் விடும் துருத்தியாளர் ஒப்பரே – கலிங்:435/2
படவு ஊன்றி விடும் தொழிலோர் என்ன முன்னம் பசும் குருதி நீர் தோன்றும் பரிசு காண்-மின் – கலிங்:499/2

மேல்


விடுவராலோ (1)

வல் எரியின் மிசை எரிய விடுவராலோ வழி குருதி நெய்யாக வார்ப்பராலோ – கலிங்:110/2

மேல்


விடுவரே (1)

மார்பிடையில் குளித்த பகழியை வார் சிலையில் தொடுத்து விடுவரே – கலிங்:436/2

மேல்


விடுவாளை (1)

அரமகளிர் அ உயிரை புணரா முன்னம் ஆவி ஒக்க விடுவாளை காண்-மின் காண்-மின் – கலிங்:483/2

மேல்


விடை (3)

தணி தவள பிறையை சடை மிசை வைத்த விடை தலைவர் வனத்தினிடை தனி நுகர்தற்கு நினைத்து – கலிங்:125/1
விடை எனக்கு என புலி உயர்த்தவன் விடைகொடுக்க அ பொழுதிலே – கலிங்:342/2
தொண்டையர்க்கு அரசு முன்வரும் சுரவி துங்க வெள் விடை உயர்த்த கோன் – கலிங்:364/1

மேல்


விடைகொடுக்க (1)

விடை எனக்கு என புலி உயர்த்தவன் விடைகொடுக்க அ பொழுதிலே – கலிங்:342/2

மேல்


விடைகொண்டு (1)

மன்றில் நடமாடி அருள்கொண்டு விடைகொண்டு அதிகை மா நகருள் விட்டருளியே – கலிங்:299/2

மேல்


விடைத்து (1)

விழித்த விழி தனி விழித்த விருதர்கள் விடைத்து வெடுவெடு சிரித்த வாய் – கலிங்:354/1

மேல்


விண்டு (1)

முற்றல் ஈகை முளிந்த விண்டு முரிந்த புன்கு நிரைந்தவே – கலிங்:78/2

மேல்


விண்ணப்பம் (2)

அ பேயின் ஒரு முது பேய் வந்து நின்று இங்கு அடியேனை விண்ணப்பம் செய்க என்றது – கலிங்:158/1
செருவை சிறியேன் விண்ணப்பம் செய்ய சிறிது கேட்டருளே – கலிங்:313/2

மேல்


விண்ணின் (2)

விம்மு கடு விசை வனத்தின் வெம்மையினை குறித்து அன்றோ விண்ணோர் விண்ணின்
மை முகடு முகில் திரை இட்டு அமுத வட்ட ஆலவட்டம் எடுப்பது ஐயோ – கலிங்:87/1,2
விண்ணின் மொய்த்து எழு விமானங்களில் சுரர்களாய் மீது போம் உயிர்களே அன்றியே இன்று தம் – கலிங்:496/1

மேல்


விண்ணின்-வாய் (1)

வேழம் ஒன்று உகைத்து ஆலி விண்ணின்-வாய் விசை அடங்கவும் அசைய வென்றதும் – கலிங்:200/1

மேல்


விண்ணுளோர் (1)

என எடுத்து உரைத்து அதிசயித்து நின்று இனைய மண்ணுளோர் அனைய விண்ணுளோர்
மன நடுக்குற பொறை மறத்தலால் மாதிரங்களில் சாதுரங்கமே – கலிங்:349/1,2

மேல்


விண்ணோர் (1)

விம்மு கடு விசை வனத்தின் வெம்மையினை குறித்து அன்றோ விண்ணோர் விண்ணின் – கலிங்:87/1

மேல்


விண்நாட்டு (1)

தரைமகள் தன் கொழுநன்-தன் உடலம்-தன்னை தாங்காமல் தன் உடலால் தாங்கி விண்நாட்டு
அரமகளிர் அ உயிரை புணரா முன்னம் ஆவி ஒக்க விடுவாளை காண்-மின் காண்-மின் – கலிங்:483/1,2

மேல்


வித்துவ (1)

முதுகில் வித்துவ நிலமுறு துகள் அற முகில் மிதிப்பன முகில் விடு துளியொடு – கலிங்:351/2

மேல்


விதத்தினில் (1)

குரக்கு வாதம் பிடித்த விதத்தினில் குடி அடங்கலும் கூன் முதுகு ஆனவும் – கலிங்:151/2

மேல்


விதம் (1)

வீணை யாழ் குழல் தண்ணுமை வல்லவர் வேறு வேறு இவை நூறு விதம் பட – கலிங்:323/1

மேல்


விதி (2)

விதி மறையவர் தொழில் விளைகவே விளைதலின் முகில் மழை பொழிகவே – கலிங்:19/1
வந்த அட்டகமும் ஒட்டு அரிய சங்கிதைகளும் வாய்மை வேதியர்கள் தாம் விதி எனும் வகையுமே – கலிங்:183/2

மேல்


விதித்ததுவும் (1)

வேறும் ஒரு பொன்னி வள நாடு சய_துங்கன் முன் விதித்ததுவும் ஒக்கும் எனவே – கலிங்:296/2

மேல்


விதிப்படி (1)

நிரை மணி பல குயிற்றிய நெடு முடி மிசை விதிப்படி
சொரி புனலிடை முளைத்தன துறைகளின் அறம் அனைத்துமே – கலிங்:265/1,2

மேல்


விதியால் (1)

வேடத்தால் குறையாது முந்நூல் ஆக வெம் சிலை நாண் மடித்து இட்டு விதியால் கங்கை – கலிங்:467/1

மேல்


விதிர்த்தலுமே (1)

இ கணம் மாளும் இனி தவிர் விச்சை என கை விதிர்த்தலுமே – கலிங்:173/2

மேல்


விதுகுலத்தோன் (1)

இருள் முழுதும் அகற்றும் விதுகுலத்தோன் தேவி இகல் விளங்கு தபன குலத்து இராசராசன் – கலிங்:234/1

மேல்


விந்தத்து (1)

நிறை வாழ்வை பெறல் நமக்கும் அணித்து என்று நில பாவை களிப்ப விந்தத்து
உறைவாளை புயத்து இருத்தி உடைவாளை திரு அரையில் ஒளிர வைத்தே – கலிங்:244/1,2

மேல்


விம்மு (1)

விம்மு கடு விசை வனத்தின் வெம்மையினை குறித்து அன்றோ விண்ணோர் விண்ணின் – கலிங்:87/1

மேல்


விமானங்களில் (2)

எதிர்கொளும் சுரர் விமானங்களில் சுரர்களாய் ஏறு மானவர்கள் தாம் எண்ணுதற்கு அருமையின் – கலிங்:492/1
விண்ணின் மொய்த்து எழு விமானங்களில் சுரர்களாய் மீது போம் உயிர்களே அன்றியே இன்று தம் – கலிங்:496/1

மேல்


விமானம்-அது (1)

தூங்கு மூன்று எயில் எறிந்த அவனும் திரள் மணி சுடர் விமானம்-அது வான் மிசை உயர்த்த அவனும் – கலிங்:194/1

மேல்


வியத்தர்களே (1)

குத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே – கலிங்:332/2

மேல்


வியப்ப (1)

எ வருக்கமும் வியப்ப முறைசெய்த கதையும் இக்குவாகு இவன் மைந்தன் என வந்த பரிசும் – கலிங்:187/2

மேல்


வியர் (1)

பொடித்த வியர் புள்ளிகளே போலும் போலும் போலாவேல் கொப்புளங்கள் போலும் போலும் – கலிங்:93/2

மேல்


வியர்த்த (1)

ஓடி இளைத்து உடல் வியர்த்த வியர்வு அன்றோ உகு புனலும் பனியும் ஐயோ – கலிங்:86/2

மேல்


வியர்த்து (2)

வெம் தறுகண் வெகுளியினால் வெய்து உயிர்த்து கை புடைத்து வியர்த்து நோக்கி – கலிங்:375/2
ஓடி உடல் வியர்த்து உண்ணீரே உந்தி பறந்து இளைத்து உண்ணீரே – கலிங்:581/1

மேல்


வியர்ப்ப (1)

ஓவியம் எலாம் உடல் வியர்ப்ப வருமாலோ ஊறு புனல் செம் குருதி நாற வருமாலோ – கலிங்:224/2

மேல்


வியர்வு (1)

ஓடி இளைத்து உடல் வியர்த்த வியர்வு அன்றோ உகு புனலும் பனியும் ஐயோ – கலிங்:86/2

மேல்


விரகும் (1)

வேகைக்கு விறகு ஆனேம் மெலியா நின்றேம் மெலிந்த உடல் தடிப்பதற்கு விரகும் காணேம் – கலிங்:215/1

மேல்


விரல் (3)

மழை ததும்ப விரல் தரையிலே எழுதும் மட நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:72/2
விரல் புட்டில் அவை சிறிய வில் கூடை பெரியன கொண்டு – கலிங்:547/1
மென் குடர் வெள்ளை குதட்டிரே மெல் விரல் இஞ்சி அதுக்கீரே – கலிங்:578/1

மேல்


விரல்கள் (1)

வெம் களத்தில் அடு மடை பேய் குலம் வேலை புக்கு விரல்கள் திறந்தவும் – கலிங்:152/2

மேல்


விராடர் (1)

வங்கர் இலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே – கலிங்:330/2

மேல்


விராய் (1)

வெண் தயிரும் செம் தயிரும் விராய் கிடந்த கிழான் போல வீரர் மூளை – கலிங்:519/1

மேல்


விரி (3)

பூ விரி மதுகரம் நுகரவும் பொரு கயல் இரு கரை புரளவும் – கலிங்:59/1
விரி புனல் வேலை நான்கும் வேதங்கள் நான்கும் ஆர்ப்ப – கலிங்:263/1
வெருவிய அடுநர் தம்முடை வடிவு இது என விரி தலை-அதனொடு மறிவன சிலசில – கலிங்:589/2

மேல்


விரித்த (2)

எரி விரித்த ஈமவிளக்கு எம்மருங்கும் ஏற்றியதோர் இயல்பிற்றாலோ – கலிங்:108/2
விரித்த வாள் உகிர் விழி தழல் புலியை மீது வைக்க இமயத்தினை – கலிங்:273/1

மேல்


விரித்தலால் (2)

அலகு இல் கண் தழல் கனல் விரித்தலால் அரிய பொன் பணி கலன் எறித்தலால் – கலிங்:346/1
இலகு கைப்படை கனல் விரித்தலால் இருள் கரக்கவே ஒளி பரக்கவே – கலிங்:346/2

மேல்


விரித்தலின் (1)

குடை நிரைத்தலின் தழை நெருக்கலின் கொடி விரித்தலின் குளிர் சதுக்கம் ஒத்து – கலிங்:345/1

மேல்


விரித்து (3)

நிண மெத்தை விரித்து உயர்ந்த நிலா திகழும் பஞ்சசயனத்தின் மேலே – கலிங்:154/2
வீழ்ந்த கலிங்கர் நிண கலிங்கம் விரித்து விரித்து புனையீரே – கலிங்:509/2
வீழ்ந்த கலிங்கர் நிண கலிங்கம் விரித்து விரித்து புனையீரே – கலிங்:509/2

மேல்


விரியும் (1)

பூ விரியும் மாலைகள் புலால் கமழுமாலோ பொன் செய் மணி மாலை ஒளி போய் ஒழியுமாலோ – கலிங்:224/1

மேல்


விருதர் (3)

அறை கழல் விருதர் செருக்கு அற வெட்டலின் அவர் உடல் இரு வகிர் பட்டன முட்டவே – கலிங்:424/2
விசையமகட்கு எடுத்த கொடி என விருதர் களத்து எடுத்து வருவரே – கலிங்:437/2
விருதர் இரு துணி பார் நிறைந்தன விடர்கள் தலை மலையாய் நெளிந்தன – கலிங்:446/1

மேல்


விருதர்கள் (1)

விழித்த விழி தனி விழித்த விருதர்கள் விடைத்து வெடுவெடு சிரித்த வாய் – கலிங்:354/1

மேல்


விருதராச (1)

விருதராச பயங்கரன் முன் ஒர் நாள் வென்ற சக்கர கோட்டத்திடை கொழும் – கலிங்:147/1

மேல்


விருதராசபயங்கரன் (1)

விருதராசபயங்கரன் செம் கையில் வேல் சிவந்தது கீர்த்தி வெளுத்ததே – கலிங்:256/2

மேல்


விருதராசரை (1)

மீளி மா உகைத்து அபயன் முன் ஒர் நாள் விருதராசரை பொருது கொண்ட போர் – கலிங்:102/1

மேல்


விருதரை (1)

விருதரை அரிவர் சிரத்தை அ சிரம் விழுபொழுது அறை எனும் அ களிற்றையே – கலிங்:440/2

மேல்


விருந்தினரும் (1)

விருந்தினரும் வறியவரு நெருங்கி உண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல – கலிங்:477/1

மேல்


விருப்புறும் (1)

கவள மத கரட கரி உரிவை கயிலை களிறு விருப்புறும் அ கனக முலை தரள – கலிங்:128/1

மேல்


விரை (1)

விடு படை பெறுகிலர் மற்று இனி சிலர் விரை பரி விழ எறிதற்கு முற்பட – கலிங்:441/1

மேல்


விரைந்து (2)

கயிற்று உறி ஒப்பதொர் பேய் வறிதே உடல் கௌவினது ஒக்க விரைந்து
எயிற்றை அதுக்கி நிலத்திடை பேய்கள் நிறைத்தன மேல் விழவே – கலிங்:171/1,2
வேழம் இரதம் புரவி வெம் படைஞர் என்று இனைய நம் படை விரைந்து கடுக – கலிங்:393/1

மேல்


விரைவொடு (1)

கனை கடல் திரை நிரை என விரைவொடு கடல் இடத்தினை வலம் இடம் வருவன – கலிங்:351/3

மேல்


வில் (6)

கெண்டை மாசுணம் உவணம் வாரணம் கேழல் ஆளி மா மேழி கோழி வில்
கொண்ட ஆயிரம் கொடி நுடங்கவே குமுறு வெம் புலிக்கொடி குலாவவே – கலிங்:293/1,2
வரும் சேனை தம் சேனை மேல் வந்து உறாமே வில் வாள் வீரர் வாழ்நாள் உக – கலிங்:490/1
புவி புரந்து அருள்செயும் சயதரன் ஒருமுறை புணரி மேல் அணைபட பொருவில் வில் குனிதலின் – கலிங்:494/1
உற்ற வாய் அம்பு தம் பரிசையும் கருவியும் உருவி மார்பு அகலமும் உருவி வீழ் செருநர் வில்
கற்றவா ஒருவன் வில் கற்றவா என்று தம் கை மறித்தவரையும் காண்-மினோ காண்-மினோ – கலிங்:495/1,2
கற்றவா ஒருவன் வில் கற்றவா என்று தம் கை மறித்தவரையும் காண்-மினோ காண்-மினோ – கலிங்:495/2
விரல் புட்டில் அவை சிறிய வில் கூடை பெரியன கொண்டு – கலிங்:547/1

மேல்


வில்லவர் (1)

தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரே – கலிங்:329/1

மேல்


வில்லாலும் (1)

வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பு-அதனை விடியளவும் காத்து நின்றே – கலிங்:464/2

மேல்


விலக்குக (2)

விலக்குக விலக்குக விளைத்தன என களி விளைத்தன இளைத்தன விலா – கலிங்:229/1
விலக்குக விலக்குக விளைத்தன என களி விளைத்தன இளைத்தன விலா – கலிங்:229/1

மேல்


விலா (2)

திறம்பல் இலா விறல் யோகினி மாதர் சிரித்து விலா இறவே – கலிங்:172/2
விலக்குக விலக்குக விளைத்தன என களி விளைத்தன இளைத்தன விலா
அலக்கு உக அலக்கு உக அடிக்கடி சிரித்தன அயர்த்தன பசித்த பசியே – கலிங்:229/1,2

மேல்


விலை (1)

ஏகவடம் இவை மற்று இவை யாதும் விலை இல் பதக்கமே – கலிங்:334/4

மேல்


விலையிலாத (1)

விலையிலாத வடம் முலையில் ஆட விழி குழையில் ஆட விழை கணவர் தோள் – கலிங்:42/1

மேல்


விழ (4)

அஞ்சியே கழல் கெட கூடலில் பொருது சென்று அணி கடை குழையிலே விழ அடர்த்து எறிதலால் – கலிங்:32/1
அரையில் துகில் விழ அடைய சனபதி அடியில் புக விழு பொழுதத்தே – கலிங்:374/2
அடியொடு முடிகள் துணித்து விழ புகும் அளவு அரி தொடை சமரத்தொடு அணைத்தனர் – கலிங்:423/1
விடு படை பெறுகிலர் மற்று இனி சிலர் விரை பரி விழ எறிதற்கு முற்பட – கலிங்:441/1

மேல்


விழவு (1)

அது முதல் கொடி எடுத்தன அமரர்-தம் விழவு எடுக்கவே – கலிங்:266/2

மேல்


விழவே (1)

எயிற்றை அதுக்கி நிலத்திடை பேய்கள் நிறைத்தன மேல் விழவே – கலிங்:171/2

மேல்


விழா (3)

இடையின் நிலை அரிது இறும் இறும் என எழா எமது புகலிடம் இனி இலை என விழா
அடைய மதுகரம் எழுவது விழுவதாம் அளக வனிதையர் அணி கடை திற-மினோ – கலிங்:57/1,2
சதய நாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன் தனி ஒர் மாவின் மேல் – கலிங்:201/1
வெயில் தாரை வேல் சூழவும் தைக்க மண் மேல் விழா வீரர் வேழம்பர் தம் – கலிங்:488/1

மேல்


விழாமலே (1)

விடுத்த வீரர் ஆயுதங்கள் மேல் விழாமலே நிரைத்து – கலிங்:425/1

மேல்


விழி (15)

காதளவு அளவு எனும் மதர் விழி கடல் அமுது அனையவர் திற-மினோ – கலிங்:21/2
அவசமுற்று உளம் நெக துயில் நெக பவள வாய் அணி சிவப்பு அற விழி கடை சிவப்பு உற நிறை – கலிங்:33/1
மீனம் புகு கொடி மீனவர் விழி அம்பு உக ஓடி – கலிங்:40/1
விலையிலாத வடம் முலையில் ஆட விழி குழையில் ஆட விழை கணவர் தோள் – கலிங்:42/1
உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய் உருவும் மதர் விழி உடையவர் திற-மினோ – கலிங்:48/2
மதுரமான மொழி பதற வாள் விழி சிவப்ப வாய் இதழ் வெளுப்பவே – கலிங்:54/1
வாயின் சிவப்பை விழி வாங்க மலர் கண் வெளுப்பை வாய் வாங்க – கலிங்:61/1
ஊசலாட விழி பூசலாட உறவாடுவீர் கடைகள் திற-மினோ – கலிங்:66/2
விழி சுழல வரு பேய்த்தேர் மிதந்து வரு நீர் அ நீர் – கலிங்:90/1
தளவு அழிக்கும் நகை வேல் விழி பிலத்தின் வழியே தனி நடந்து உரகர்-தம் கண்மணி கொண்ட அவனும் – கலிங்:195/1
விரித்த வாள் உகிர் விழி தழல் புலியை மீது வைக்க இமயத்தினை – கலிங்:273/1
கனல் விளைப்பன முகில் உள என விழி கனல் சினத்தன கரியொடு பரிகளின் – கலிங்:350/2
விழித்த விழி தனி விழித்த விருதர்கள் விடைத்து வெடுவெடு சிரித்த வாய் – கலிங்:354/1
அரசன் உரைசெய்த ஆண்மையும் கெட அமரில் எதிர் விழி யாது ஒதுங்கியே – கலிங்:448/2
கதம் பெற்று ஆர்க்கும் செறுநர் விழி கனலும் நிணமும் அணங்கின்-பால் – கலிங்:561/1

மேல்


விழிக்க (1)

எமது என இரு கண் விழிக்க உட்கினர் என விடுகிலர் படைஞர்க்கு வெட்கியே – கலிங்:442/2

மேல்


விழிக்கடை (1)

உருகுதலுற்று உலகத்து உவமை அற சுழல்வுற்று உலவு விழிக்கடை பட்டு உடல் பகை அற்று ஒழிய – கலிங்:131/1

மேல்


விழிகளின் (1)

விளை கனல் விழிகளின் முளைக்கவே மினல் ஒளி கனலிடை எறிக்கவே – கலிங்:409/1

மேல்


விழிஞம் (1)

வேலை கொண்டு விழிஞம் அழித்ததும் – கலிங்:383/1

மேல்


விழித்த (2)

விழித்த விழி தனி விழித்த விருதர்கள் விடைத்து வெடுவெடு சிரித்த வாய் – கலிங்:354/1
விழித்த விழி தனி விழித்த விருதர்கள் விடைத்து வெடுவெடு சிரித்த வாய் – கலிங்:354/1

மேல்


விழித்து (1)

வீங்கு தலை நெடும் கழையின் மிசை-தோறும் திசை-தோறும் விழித்து நின்று – கலிங்:117/1

மேல்


விழிப்பன (1)

கொள்ளி கொண்டு இரண்டே முழை உட்புகின் குன்று தோன்றுவ போல விழிப்பன – கலிங்:138/2

மேல்


விழியிட (1)

வெருவர மிடை படை நடு ஒரு வெளி அற விழியிட அரிது எனவே – கலிங்:402/2

மேல்


விழு (1)

அரையில் துகில் விழ அடைய சனபதி அடியில் புக விழு பொழுதத்தே – கலிங்:374/2

மேல்


விழுங்க (1)

சிர மலை விழுங்க செந்நீர் திரை கடல் பருகல் ஆக – கலிங்:306/1

மேல்


விழுங்கீரே (1)

முன்கை எலும்பினை மெல்லீரே மூளையை வாரி விழுங்கீரே – கலிங்:578/2

மேல்


விழுத்துமே (1)

அரிது அரிது இதுவும் என பரி உய்ப்பவர் அடியொடு முடிகள் துணித்து விழுத்துமே – கலிங்:422/2

மேல்


விழுந்த (1)

விழுந்த தவள குடை மின்னும் வெள்ளி கலமா கொள்ளீரே – கலிங்:559/2

மேல்


விழுந்தன (1)

விழுந்தன கானும் மலையும் வெறுந்தரை ஆன திசைகள் – கலிங்:358/2

மேல்


விழுந்தனர் (1)

அது-கொல் என அலறா விழுந்தனர் அலதி குலதியொடு ஏழ் கலிங்கரே – கலிங்:450/2

மேல்


விழுந்திட (1)

மூளை சேற்றில் வழுக்கி விழுந்திட மொழி பெயர்ந்து ஒரு கால் முடம் ஆனவும் – கலிங்:145/2

மேல்


விழுந்திடின் (1)

உடல் விழுந்திடின் நுகர்ந்திட உவந்த சில பேய் உறு பெரும் பசி உடன்றிட உடன் திரியுமே – கலிங்:113/2

மேல்


விழுந்து (4)

கையில் அணைத்த மணல் கண்பனி சோர் புனலில் கரைய விழுந்து அழுவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:51/2
உண்ட கூழொடு நாவும் சுருண்டு புக்கு உள் விழுந்து அற ஊமைகள் ஆனவும் – கலிங்:148/2
ஒன்று கால் முறிய மேல் விழுந்து அடிசில் உண்ண எண்ணி வெறும் மண்ணின் மேல் – கலிங்:168/2
விழுந்து கொழும் குருதி புனல் என்று வெறுங்கை முகந்து முகந்து – கலிங்:169/1

மேல்


விழுந்துமே (1)

தின்ற போல் பருத்து மெய் சிரித்து மேல் விழுந்துமே – கலிங்:307/2

மேல்


விழுபொழுது (1)

விருதரை அரிவர் சிரத்தை அ சிரம் விழுபொழுது அறை எனும் அ களிற்றையே – கலிங்:440/2

மேல்


விழும் (6)

தண் கொடை மானதன் மார்பு தோய் தாதகி மாலையின் மேல் விழும்
கண் கொடு போம் வழி தேடுவீர் கனக நெடும் கடை திற-மினோ – கலிங்:31/1,2
எழுந்து விழும் தசை என்று நிலத்தை இருந்து துழாவிடுமே – கலிங்:169/2
எழு தூளி அடங்க நடந்து உதயத்து ஏகும் திசை கண்டு அது மீள விழும்
பொழுது ஏகல் ஒழிந்து கடற்படை எப்பொழுதும் தவிராது வழிக்கொளவே – கலிங்:362/1,2
மா மழை போல் பொழிகின்ற தான வாரி மறித்து விழும் கட களிற்றை வெறுத்து வானோர் – கலிங்:479/1
சாய்ந்து விழும் கட களிற்றினுடனே சாய்ந்து தடம் குருதி மிசை படியும் கொடிகள் தங்கள் – கலிங்:480/1
எழுதிய சிலையவர் செறி கடல் விழும் அவை இது என வழி குருதியின் விழுவன சில – கலிங்:588/2

மேல்


விழுவதாம் (1)

அடைய மதுகரம் எழுவது விழுவதாம் அளக வனிதையர் அணி கடை திற-மினோ – கலிங்:57/2

மேல்


விழுவன (1)

எழுதிய சிலையவர் செறி கடல் விழும் அவை இது என வழி குருதியின் விழுவன சில – கலிங்:588/2

மேல்


விழை (1)

விலையிலாத வடம் முலையில் ஆட விழி குழையில் ஆட விழை கணவர் தோள் – கலிங்:42/1

மேல்


விளக்கிக்கொள்ளீரே (1)

பறிந்த மருப்பின் வெண் கோலால் பல்லை விளக்கிக்கொள்ளீரே
மறிந்த களிற்றின் பழு எலும்பை வாங்கி நாக்கை வழியீரே – கலிங்:505/1,2

மேல்


விளக்கு (1)

கதிர் சுடர் விளக்கு ஒளி கறுத்து எரியுமாலோ கால முகில் செம் குருதி கால வருமாலோ – கலிங்:222/2

மேல்


விளக்கும் (1)

பதம் பெற்றார்க்கு பகல் விளக்கும் பா ஆடையுமா கொள்ளீரே – கலிங்:561/2

மேல்


விளங்கி (1)

தூய மனுவும் சுருதியும் பொருள் விளங்கி சொற்கள் தெரிய தனது சொற்கள் தெரிவித்தே – கலிங்:241/2

மேல்


விளங்கின (2)

அரன் உறையும்படி மலைகள் அடைய விளங்கின அனையோன் – கலிங்:268/1
அரி துயிலும்படி கடல்கள் அடைய விளங்கின கவினின் – கலிங்:269/1

மேல்


விளங்கு (1)

இருள் முழுதும் அகற்றும் விதுகுலத்தோன் தேவி இகல் விளங்கு தபன குலத்து இராசராசன் – கலிங்:234/1

மேல்


விளம்ப (1)

வென்று இலங்கு கதிர் ஆழி விசயதரன் என உதித்தான் விளம்ப கேள்-மின் – கலிங்:232/2

மேல்


விளம்பல் (1)

அவையவை மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம் – கலிங்:121/2

மேல்


விளம்பினள் (1)

வினா உரை-தனக்கு எதிர் விளம்பினள் அணங்கே – கலிங்:225/2

மேல்


விளம்புவாம் (1)

பூதலம் பழம் கோயில் என்னினும் புதிய கோயில் உண்டு அது விளம்புவாம் – கலிங்:97/2

மேல்


விளை (2)

முனைகள் ஒட்டினர் முடியினை இடறுவ முடியின் முத்தினை விளை புகழ் என நில – கலிங்:351/1
விளை கனல் விழிகளின் முளைக்கவே மினல் ஒளி கனலிடை எறிக்கவே – கலிங்:409/1

மேல்


விளைக்கவே (1)

தேவர் இன் அருள் தழைக்கவே முனிவர் செய் தவம் பயன் விளைக்கவே – கலிங்:595/2

மேல்


விளைகவே (1)

விதி மறையவர் தொழில் விளைகவே விளைதலின் முகில் மழை பொழிகவே – கலிங்:19/1

மேல்


விளைத்ததும் (1)

இருவர்-தம்மையும் கிழிகள் சுற்றுவித்து எரிவிளக்கு வைத்து இகல் விளைத்ததும் – கலிங்:199/2

மேல்


விளைத்தன (2)

விலக்குக விலக்குக விளைத்தன என களி விளைத்தன இளைத்தன விலா – கலிங்:229/1
விலக்குக விலக்குக விளைத்தன என களி விளைத்தன இளைத்தன விலா – கலிங்:229/1

மேல்


விளைத்து (1)

மெய்யில் அணைத்து உருகி பைய அகன்றவர் தாம் மீள்வர் என கருதி கூடல் விளைத்து அறவே – கலிங்:51/1

மேல்


விளைதலின் (1)

விதி மறையவர் தொழில் விளைகவே விளைதலின் முகில் மழை பொழிகவே – கலிங்:19/1

மேல்


விளைந்த (1)

கள போர் விளைந்த கலிங்கத்து கலிங்கர் நிண கூழ் கள பேயின் – கலிங்:75/1

மேல்


விளைந்தவே (1)

திரைகள் திசைமலையோடு அடர்ந்தன திமில குமிலம் எலாம் விளைந்தவே – கலிங்:447/2

மேல்


விளைப்பது (1)

மென் கலாப மடவார்கள் சீறடி மிசை சிலம்பு ஒலி விளைப்பது ஓர் – கலிங்:275/1

மேல்


விளைப்பன (1)

கனல் விளைப்பன முகில் உள என விழி கனல் சினத்தன கரியொடு பரிகளின் – கலிங்:350/2

மேல்


விளைய (3)

பிடி-மின் என்ற பொருள் விளைய நின்று அருள்செய் பெடை நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:25/2
வேகம் விளைய வரும் கொழுநர் மேனி சிவந்த படி நோக்கி – கலிங்:45/1
போகம் விளைய நகைசெய்வீர் புனை பொன் கபாடம் திற-மினோ – கலிங்:45/2

மேல்


விளையாடி (1)

விட்ட அதிகை பதியில்-நின்று பயணம் பயணம் விட்டு விளையாடி அபயன் – கலிங்:300/1

மேல்


விளையாடு (1)

வளர்வது ஒர் பதத்தினிடை மத கரி முகத்தினிடை வளை உகிர் மடுத்து விளையாடு
இள அரி என பகைஞர் எதிர்முனைகளை கிழிய எறி படை பிடித்தருளியே – கலிங்:250/1,2

மேல்


விளையாடும் (1)

கடன் அமைந்தது கரும் தலை அரிந்த பொழுதே கடவது ஒன்றும் இலை என்று விளையாடும் உடலே – கலிங்:113/1

மேல்


விளையுமா (1)

கதிர் விசும்பு-அதனிலே இதனிலும் பெரியது ஓர் காளையம் விளையுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:492/2

மேல்


விளைவது (2)

இன் கலாம் விளைவது அன்றி எங்கும் ஓர் இகல் கலாம் விளைவது இல்லையே – கலிங்:275/2
இன் கலாம் விளைவது அன்றி எங்கும் ஓர் இகல் கலாம் விளைவது இல்லையே – கலிங்:275/2

மேல்


விளைவு (1)

எனா உரை முடித்ததனை என்-கொல் விளைவு என்றே – கலிங்:225/1

மேல்


விற்படை (1)

அலை படை நிரைகள் நிறைத்த செரு களம் அமர் புரி களம் என ஒப்பில விற்படை
தலை பொர எரிய நெருப்பினின் மற்றது தழல் படு கழை வனம் ஒக்கினும் ஒக்குமே – கலிங்:419/1,2

மேல்


விற்று (1)

உயிரை விற்று உறு புகழ் கொள உழல்பவர் ஒருவர் ஒப்பவர் படைஞர்கள் மிடையவே – கலிங்:353/4

மேல்


விறகு (2)

வெற்று எலும்பை நரம்பின் வலித்து மேல் வெந்திலா விறகு ஏய்ந்த உடம்பின – கலிங்:137/1
வேகைக்கு விறகு ஆனேம் மெலியா நின்றேம் மெலிந்த உடல் தடிப்பதற்கு விரகும் காணேம் – கலிங்:215/1

மேல்


விறல் (1)

திறம்பல் இலா விறல் யோகினி மாதர் சிரித்து விலா இறவே – கலிங்:172/2

மேல்


விறலும் (1)

வென்றி கொண்டவனும் என்று இவர்கள் கொண்ட விறலும் – கலிங்:192/4

மேல்


வினா (1)

வினா உரை-தனக்கு எதிர் விளம்பினள் அணங்கே – கலிங்:225/2

மேல்


வினையன (1)

ஒரு நினைப்பினை உடையன வினையன உயர் செய் மொட்டொடு மலர் என நிறுவிய – கலிங்:352/3

மேல்