வா – முதல் சொற்கள், கலிங்கத்துப்பரணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 1
வாகனம் 1
வாகை 2
வாங்க 2
வாங்கி 5
வாங்கீரே 1
வாசம் 1
வாசி 3
வாண 1
வாணர் 1
வாணனை 1
வாதப்போரும் 1
வாதம் 1
வாதராசனை 1
வாது 1
வாய் 28
வாய்-தொறும் 1
வாய்களோ 1
வாய்மை 1
வாயிடை 1
வாயின் 3
வாயின்-நின்று 1
வாயின 1
வாயினால் 1
வாயினான் 1
வாயினில் 1
வாயை 4
வாயொடு 1
வார் 3
வார்க்க 1
வார்த்தை 1
வார்ப்பராலோ 1
வாரண 2
வாரணப்போரும் 2
வாரணம் 8
வாரணமும் 1
வாராமல் 1
வாரார் 1
வாரி 4
வாரியில் 1
வாரீர் 4
வாரீரே 16
வால் 1
வாலதியால் 1
வாழ்க்கை 1
வாழ்க 9
வாழ்த்த 1
வாழ்த்தி 1
வாழ்த்தியே 1
வாழ்த்தினவே 9
வாழ்நாள் 1
வாழ்வு 1
வாழ்வை 1
வாழ 1
வாழி 3
வாழும் 2
வாள் 18
வாளி 1
வாளில் 1
வாளின் 1
வான் 2
வானவர் 1
வானவர்கள் 1
வானில் 1
வானின் 2
வானுளோர் 1
வானை 1
வானோர் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


வா (1)

வள்ளை பாடி ஆடி ஓடி வா எனா அழைக்குமே – கலிங்:309/2

மேல்


வாகனம் (1)

சக்கு ஆயிரம் உடை களிறு வாகனம் என தான் இருந்து பொரு தானவரை வென்ற சயமும் – கலிங்:188/2

மேல்


வாகை (2)

வற்றல் வாகை வறந்த கூகை மடிந்த தேறு பொடிந்த வேல் – கலிங்:78/1
உபய பலமும் விடாது வெம் சமம் உடலு பொழுதினில் வாகை முன் கொள – கலிங்:444/1

மேல்


வாங்க (2)

வாயின் சிவப்பை விழி வாங்க மலர் கண் வெளுப்பை வாய் வாங்க – கலிங்:61/1
வாயின் சிவப்பை விழி வாங்க மலர் கண் வெளுப்பை வாய் வாங்க
தோய கலவி அமுது அளிப்பீர் துங்க கபாடம் திற-மினோ – கலிங்:61/1,2

மேல்


வாங்கி (5)

சொல் அரிய ஓமத்தீ வளர்ப்பராலோ தொழுது இருந்து பழு எலும்பு தொடர வாங்கி
வல் எரியின் மிசை எரிய விடுவராலோ வழி குருதி நெய்யாக வார்ப்பராலோ – கலிங்:110/1,2
வரை கலிங்கர்-தமை சேர மாசை ஏற்றி வன் தூறு பறித்த மயிர் குறையும் வாங்கி
அரை கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம் அமணர் என பிழைத்தாரும் அநேகர் ஆங்கே – கலிங்:466/1,2
மறிந்த களிற்றின் பழு எலும்பை வாங்கி நாக்கை வழியீரே – கலிங்:505/2
வாய் அம்புகளாம் உகிர் கொள்ளி வாங்கி உகிரை வாங்கீரே – கலிங்:506/1
பொரு சின வீரர்-தம் கண்மணியும் போதக மத்தக முத்தும் வாங்கி
வரிசை அறிந்து நரம்பில் கோத்து வன்ன சரங்கள் அணியீரே – கலிங்:514/1,2

மேல்


வாங்கீரே (1)

வாய் அம்புகளாம் உகிர் கொள்ளி வாங்கி உகிரை வாங்கீரே
பாயும் களிற்றின் மத தயிலம் பாய பாய வாரீரே – கலிங்:506/1,2

மேல்


வாசம் (1)

வாசம் ஆர் முலைகள் மார்பில் ஆட மது மாலை தாழ் குழலின் வண்டு எழுந்து – கலிங்:66/1

மேல்


வாசி (3)

வாசி கொண்டு அரசர் வாரணம் கவர வாண கோவரையன் வாள் முக – கலிங்:365/1
பிழைக்க உரைசெய்தனை பிழைத்தனை எனக்கு உறுதி பேசுவது வாசி கெடவோ – கலிங்:391/1
வாசி கிடக்க கலிங்கர் ஓட மானதன் ஏவிய சேனை வீரர் – கலிங்:586/1

மேல்


வாண (1)

வாசி கொண்டு அரசர் வாரணம் கவர வாண கோவரையன் வாள் முக – கலிங்:365/1

மேல்


வாணர் (1)

தத்து நீர் வரால் குருமி வென்றதும் தழுவு செந்தமிழ் பரிசில் வாணர் பொன் – கலிங்:198/1

மேல்


வாணனை (1)

தோள் இரண்டால் வாணனை முன் துணித்த தோள் ஆயிரமே – கலிங்:543/2

மேல்


வாதப்போரும் (1)

வரு செரு ஒன்று இன்மையினால் மற்போரும் சொற்புலவோர் வாதப்போரும்
இரு சிறை வாரணப்போரும் இகல் மத வாரணப்போரும் இனைய கண்டே – கலிங்:276/1,2

மேல்


வாதம் (1)

குரக்கு வாதம் பிடித்த விதத்தினில் குடி அடங்கலும் கூன் முதுகு ஆனவும் – கலிங்:151/2

மேல்


வாதராசனை (1)

வலியினில் குருதி உண்க என அளித்த அவனும் வாதராசனை வலிந்து பணிகொண்ட அவனும் – கலிங்:193/2

மேல்


வாது (1)

வன் பிலத்தொடு வாது செய் வாயின வாயினால் நிறையாத வயிற்றின – கலிங்:136/1

மேல்


வாய் (28)

முனிபவர் ஒத்திலராய் முறுவல் கிளைத்தலுமே முகிழ் நகை பெற்றம் எனா மகிழ்நர் மணி துவர் வாய்
கனி பவளத்து அருகே வருதலும் முத்து உதிரும் கயல்கள் இரண்டு உடையீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:27/1,2
முத்து வடம் சேர் முகிழ் முலை மேல் முயங்கும் கொழுநர் மணி செ வாய்
வைத்த பவள வடம் புனைவீர் மணி பொன் கபாடம் திற-மினோ – கலிங்:30/1,2
அவசமுற்று உளம் நெக துயில் நெக பவள வாய் அணி சிவப்பு அற விழி கடை சிவப்பு உற நிறை – கலிங்:33/1
மதுரமான மொழி பதற வாள் விழி சிவப்ப வாய் இதழ் வெளுப்பவே – கலிங்:54/1
செம் கனி வாய் மருந்து ஊட்டுவீர் செம்பொன் நெடும் கடை திற-மினோ – கலிங்:55/2
வாயின் சிவப்பை விழி வாங்க மலர் கண் வெளுப்பை வாய் வாங்க – கலிங்:61/1
தீயின்-வாயின் நீர் பெறினும் உண்பதோர் சிந்தை கூர வாய் வெந்து வந்து செந்நாயின் – கலிங்:83/1
வற்றிய பேய் வாய் உலர்ந்து வறள் நாக்கை நீட்டுவ போல் – கலிங்:89/1
மண் ஓடி அற வறந்து துறந்து அங்காந்த வாய் வழியே வேய் பொழியும் முத்தம் அ வேய் – கலிங்:92/1
கொல் வாய் ஓரி முழவாக கொள்ளிவாய்ப்பேய் குழவிக்கு – கலிங்:119/1
நல் வாய் செய்ய தசை தேடி நரி வாய் தசையை பறிக்குமால் – கலிங்:119/2
நல் வாய் செய்ய தசை தேடி நரி வாய் தசையை பறிக்குமால் – கலிங்:119/2
ஒருவர்க்கு ஒரு வாய் கொண்டு உரைக்க ஒண்ணாதேனும் உண்டாகும் – கலிங்:313/1
உறுவது என்-கொல் என நிலைகுலைந்து அரசர் உயிர் நடுங்க ஒளிர் பவள வாய்
முறுவல் கொண்ட பொருள் அறிகிலம் சிறிதும் முனிவு கொண்டது இலை வதனமே – கலிங்:339/1,2
விழித்த விழி தனி விழித்த விருதர்கள் விடைத்து வெடுவெடு சிரித்த வாய்
தெழித்த பொழுது உடல் திமிர்க்க இமையவர் திசை-கண் மத கரி திகைக்கவே – கலிங்:354/1,2
வயல் ஆறு புகுந்து மணி புனல் வாய் மண்ணாறு வளம் கெழு குன்றி எனும் – கலிங்:368/1
இட்ட வட்டணங்கள் மேல் எறிந்த வேல் திறந்த வாய்
வட்டம் இட்ட நீள் மதிற்கு வைத்த பூழை ஒக்குமே – கலிங்:426/1,2
வாய் மடித்து கிடந்த தலைமகனை நோக்கி மணி அதரத்து ஏதேனும் வடுவுண்டாயோ – கலிங்:482/1
உற்ற வாய் அம்பு தம் பரிசையும் கருவியும் உருவி மார்பு அகலமும் உருவி வீழ் செருநர் வில் – கலிங்:495/1
வாய் அகல் அம்பு அரத்தமொடு நிணம் கொண்டு ஓட மற்று அதனை வள் உகிரின் பருந்து கோணல் – கலிங்:500/1
வாய் அகல் அம்பரத்தினிடை கௌவி வல் வாய் வகிர்ப்பட்டு நிலம் பட்ட வண்ணம் காண்-மின் – கலிங்:500/2
வாய் அகல் அம்பரத்தினிடை கௌவி வல் வாய் வகிர்ப்பட்டு நிலம் பட்ட வண்ணம் காண்-மின் – கலிங்:500/2
வாய் அம்புகளாம் உகிர் கொள்ளி வாங்கி உகிரை வாங்கீரே – கலிங்:506/1
வேண்டும் அளவும் வாய் நெகிழ்த்து விடுகம்பிகளா புனையீரே – கலிங்:511/2
ஒரு வாய் கொண்டே இது தொலைய உண்ண ஒண்ணாது என்று என்று – கலிங்:553/1
வெருவா நின்றீர் ஆயிரம் வாய் வேண்டுமோ இ கூழ் உணவே – கலிங்:553/2
தமக்கு ஒரு வாயொடு வாய் மூன்றும் தாம் இனிதா படைத்துக்கொண்டு – கலிங்:580/1
நமக்கு ஒரு வாய் தந்த நான்முகனார் நாணும்படி களித்து உண்ணீரே – கலிங்:580/2

மேல்


வாய்-தொறும் (1)

தீய அ கொடிய கானக தரை திறந்த வாய்-தொறும் நுழைந்து தன் – கலிங்:79/1

மேல்


வாய்களோ (1)

வயிறுகள் என்னில் போதா வாய்களோ போதா பண்டை – கலிங்:305/1

மேல்


வாய்மை (1)

வந்த அட்டகமும் ஒட்டு அரிய சங்கிதைகளும் வாய்மை வேதியர்கள் தாம் விதி எனும் வகையுமே – கலிங்:183/2

மேல்


வாயிடை (1)

வட்ட வெண்குடை சென்னி மானதன் வாளின் வாயினான் மறலி வாயிடை
பட்ட மன்னர்-தம் பட்ட மங்கையர் பரு மணி கரு திரு இருத்தியே – கலிங்:98/1,2

மேல்


வாயின் (3)

வாயின் சிவப்பை விழி வாங்க மலர் கண் வெளுப்பை வாய் வாங்க – கலிங்:61/1
வாயின் நீர்-தன்னை நீர் எனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே – கலிங்:83/2
அயங்களின் வாயின் நுரையின் அடங்கின தூளி அடைய – கலிங்:361/2

மேல்


வாயின்-நின்று (1)

இ கரி தலையின் வாயின்-நின்று உதிர நீர் குடித்து உரும் இடித்து என – கலிங்:163/1

மேல்


வாயின (1)

வன் பிலத்தொடு வாது செய் வாயின வாயினால் நிறையாத வயிற்றின – கலிங்:136/1

மேல்


வாயினால் (1)

வன் பிலத்தொடு வாது செய் வாயின வாயினால் நிறையாத வயிற்றின – கலிங்:136/1

மேல்


வாயினான் (1)

வட்ட வெண்குடை சென்னி மானதன் வாளின் வாயினான் மறலி வாயிடை – கலிங்:98/1

மேல்


வாயினில் (1)

வாயினில் புகு வேல்கள் பற்று வல கையோடு நிலத்திடை – கலிங்:498/1

மேல்


வாயை (4)

வாயை புதைக்கு மட நல்லீர் மணி பொன் கபாடம் திற-மினோ – கலிங்:67/2
மூக்கு அருகே வழு நாறி முடை நாறி உதடுகளும் துடிப்ப வாயை
ஈ கதுவும் குறியால் உய்ந்து இருக்கின்றேம் அன்றாகில் இன்றே சாதும் – கலிங்:219/1,2
ஓகை சொன்ன பேயின் வாயை ஓடி முத்தம் உண்ணுமே – கலிங்:308/1
பொதுத்த தொளையால் புக மடுத்து புசித்த வாயை பூசீரே – கலிங்:582/2

மேல்


வாயொடு (1)

தமக்கு ஒரு வாயொடு வாய் மூன்றும் தாம் இனிதா படைத்துக்கொண்டு – கலிங்:580/1

மேல்


வார் (3)

வார் முரசு இருந்து வறிதே அதிருமாலோ வந்து இரவில் இந்திரவில் வானில் இடுமாலோ – கலிங்:223/1
மார்பிடையில் குளித்த பகழியை வார் சிலையில் தொடுத்து விடுவரே – கலிங்:436/2
நுதிக்கே கூழை வார் என்னும் நோக்க பேய்க்கு வாரீரே – கலிங்:573/2

மேல்


வார்க்க (1)

புயல்வண்ணன் புனல் வார்க்க பூமிசையோன் தொழில் காட்ட புவன வாழ்க்கை – கலிங்:1/1

மேல்


வார்த்தை (1)

சேரர் வார்த்தை செவிப்பட்டது இல்லையோ – கலிங்:382/2

மேல்


வார்ப்பராலோ (1)

வல் எரியின் மிசை எரிய விடுவராலோ வழி குருதி நெய்யாக வார்ப்பராலோ – கலிங்:110/2

மேல்


வாரண (2)

கண் ஆகிய சோழன் சக்கரம் ஆம் கருணாகரன் வாரண மேல் கொளவே – கலிங்:363/2
வாளில் வெட்டி வாரண கை தோளில் இட்ட மைந்தர் தாம் – கலிங்:435/1

மேல்


வாரணப்போரும் (2)

இரு சிறை வாரணப்போரும் இகல் மத வாரணப்போரும் இனைய கண்டே – கலிங்:276/2
இரு சிறை வாரணப்போரும் இகல் மத வாரணப்போரும் இனைய கண்டே – கலிங்:276/2

மேல்


வாரணம் (8)

அறிஞர் தம்பிரான் அபயன் வாரணம் அரசர் மண்டலத்து அரண் அற பறித்து – கலிங்:100/1
ஆளி வாரணம் கேழல் சீயம் என்று அவை நிரைத்து நாசிகை இருத்தியே – கலிங்:102/2
உதயபானு ஒத்து உதகை வென்ற கோன் ஒரு கை வாரணம் பல கவர்ந்ததும் – கலிங்:201/2
ஈர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே இந்திரன் எதிர்ந்தவரை வென்று வருமே யான் – கலிங்:245/1
ஓர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே ஒன்னலரை வெல்வன் என அன்னது பயின்றே – கலிங்:245/2
கெண்டை மாசுணம் உவணம் வாரணம் கேழல் ஆளி மா மேழி கோழி வில் – கலிங்:293/1
வாசி கொண்டு அரசர் வாரணம் கவர வாண கோவரையன் வாள் முக – கலிங்:365/1
மன்னர் புரந்தரன் வாள் அபயன் வாரணம் இங்கு மதம் படவே – கலிங்:529/1

மேல்


வாரணமும் (1)

கனக தானம் முறை நின்று கவிவாணர் பெறவே கரட தானம் மத வாரணமும் அன்று பெறவே – கலிங்:281/2

மேல்


வாராமல் (1)

செல் காற்று வாராமல் காக்க அன்றோ திசைக்கரியின் செவி காற்றும் அதற்கே அன்றோ – கலிங்:94/2

மேல்


வாரார் (1)

வருவார் கொழுநர் என திறந்தும் வாரார் கொழுநர் என அடைத்தும் – கலிங்:69/1

மேல்


வாரி (4)

வாழி சோழ குல சேகரன் வகுத்த இசையின் மதுர வாரி எனலாகும் இசைமாது அரிது எனா – கலிங்:285/1
மா மழை போல் பொழிகின்ற தான வாரி மறித்து விழும் கட களிற்றை வெறுத்து வானோர் – கலிங்:479/1
காட்டிய வேழ அணி வாரி கலிங்க பரணி நம் காவலன் மேல் – கலிங்:535/1
முன்கை எலும்பினை மெல்லீரே மூளையை வாரி விழுங்கீரே – கலிங்:578/2

மேல்


வாரியில் (1)

பிறங்கு சோரி வாரியில் பிளிற்றி வீழ் களிற்று இனம் – கலிங்:434/1

மேல்


வாரீர் (4)

மறிமாடீ குதிர்வயிறீ கூழ் அட வாரீர் கூழ் அட வாரீரே – கலிங்:504/2
வைப்பு காணும் நமக்கு இன்று வாரீர் கூழை எல்லீரும் – கலிங்:549/1
மற்றை கூழின் மிக நன்று வாரீர் இழிச்ச வாரீரே – கலிங்:551/2
வரிசையுடனே இருந்து உண்ண வாரீர் கூழை வாரீரே – கலிங்:562/2

மேல்


வாரீரே (16)

மறிமாடீ குதிர்வயிறீ கூழ் அட வாரீர் கூழ் அட வாரீரே – கலிங்:504/2
பாயும் களிற்றின் மத தயிலம் பாய பாய வாரீரே – கலிங்:506/2
மற்றை கூழின் மிக நன்று வாரீர் இழிச்ச வாரீரே – கலிங்:551/2
வரிசையுடனே இருந்து உண்ண வாரீர் கூழை வாரீரே – கலிங்:562/2
படைத்து பயின்ற மடை பேய்கள் பந்தி-தோறும் வாரீரே – கலிங்:564/2
பவதி பிட்சாந்தேகி எனும் பனவ பேய்க்கு வாரீரே – கலிங்:565/2
மயிரை பார்த்து நிண துகிலால் வடித்து கூழை வாரீரே – கலிங்:566/2
கழுத்தே கிட்ட மணம் திரியா கஞ்சி ஆக வாரீரே – கலிங்:567/2
பைதல் இறைச்சி தின்று உலர்ந்த பார்வை பேய்க்கு வாரீரே – கலிங்:568/2
காணாது அரற்றும் குருட்டு பேய் கைக்கே கூழை வாரீரே – கலிங்:569/2
கையால் உரைக்கும் ஊமை பேய் கைக்கே கூழை வாரீரே – கலிங்:570/2
எல்லாம் கவிழ்த்து திகைத்திருக்கும் இழுதை பேய்க்கு வாரீரே – கலிங்:572/2
நுதிக்கே கூழை வார் என்னும் நோக்க பேய்க்கு வாரீரே – கலிங்:573/2
குடியான் என்று தான் குடிக்கும் கூத்தி பேய்க்கு வாரீரே – கலிங்:574/2
ஒரு கூழ் பரணி நாம் இருக்கும் ஊர்-கண் பேய்க்கு வாரீரே – கலிங்:575/2
கணக்க பேய்க்கும் அகம் களிக்க கையால் எடுத்து வாரீரே – கலிங்:577/2

மேல்


வால் (1)

ஒட்டகங்கள் யானை வால் உயர்த்த மா அழிந்த போர் – கலிங்:433/1

மேல்


வாலதியால் (1)

சோரும் களிற்றின் வாலதியால் சுழல அலகிட்டு அலை குருதி – கலிங்:557/1

மேல்


வாழ்க்கை (1)

புயல்வண்ணன் புனல் வார்க்க பூமிசையோன் தொழில் காட்ட புவன வாழ்க்கை
செயல் வண்ணம் நிலைநிறுத்த மலைமகளை புணர்ந்தவனை சிந்தை செய்வாம் – கலிங்:1/1,2

மேல்


வாழ்க (9)

உரிமையினில் கைப்பிடித்த உபயகுலோத்தமன் அபயன் வாழ்க என்றே – கலிங்:2/2
இ நெடு மா நிலம் அனைத்தும் பொதிந்து இனிது வாழ்க என்றே – கலிங்:4/2
குல நான்கும் காத்து அளிக்கும் குலதீபன் வாழ்க என்றே – கலிங்:6/2
தனி ஆழி-தனை நடத்தும் சய_துங்கன் வாழ்க என்றே – கலிங்:8/2
அனைத்து உலகும் கவித்தது என கவித்து நிற்கும் அருள் கவிகை கலி பகைஞன் வாழ்க என்றே – கலிங்:10/2
ஈரிரண்டு படைத்து உடைய இரவி குலோத்தமன் அபயன் வாழ்க என்றே – கலிங்:12/2
மண்மடந்தை தன் சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்த பிரான் வளவர் பிரான் வாழ்க என்றே – கலிங்:14/2
பொறுத்த மலர் பாத மலர் மீது அணிய நல்கும் பூழியர் பிரான் அபயன் வாழ்க இனிது என்றே – கலிங்:16/2
அடக்கம் அன்று இது கிடக்க எம்முடைய அம்மை வாழ்க என எம்மை பார் – கலிங்:164/1

மேல்


வாழ்த்த (1)

திரிபுவனங்கள் வாழ்த்த திரு அபிடேகம் செய்தே – கலிங்:263/2

மேல்


வாழ்த்தி (1)

வண்டல் பாய் பொன்னி நாடனை வாழ்த்தி மா மதுரை வெம் களத்தே மதுரிக்க அட்டு – கலிங்:148/1

மேல்


வாழ்த்தியே (1)

எனா உரைத்த தேவி வாழி வாழி என்று வாழ்த்தியே
கனா உரைத்த பேயினை கழுத்தினில் கொடு ஆடுமே – கலிங்:310/1,2

மேல்


வாழ்த்தினவே (9)

அபயன் அருளினை பாடினவே அணி செறி தோளினை வாழ்த்தினவே – கலிங்:590/2
வசையில் வய புகழ் வாழ்த்தினவே மனு குல தீபனை வாழ்த்தினவே – கலிங்:591/2
வசையில் வய புகழ் வாழ்த்தினவே மனு குல தீபனை வாழ்த்தினவே – கலிங்:591/2
பொன்னி துறைவனை வாழ்த்தினவே பொருநை கரையனை வாழ்த்தினவே – கலிங்:592/1
பொன்னி துறைவனை வாழ்த்தினவே பொருநை கரையனை வாழ்த்தினவே
கன்னி கொழுநனை வாழ்த்தினவே கங்கை மணாளனை வாழ்த்தினவே – கலிங்:592/1,2
கன்னி கொழுநனை வாழ்த்தினவே கங்கை மணாளனை வாழ்த்தினவே – கலிங்:592/2
கன்னி கொழுநனை வாழ்த்தினவே கங்கை மணாளனை வாழ்த்தினவே – கலிங்:592/2
ஊழி-தொறு ஊழியும் காத்தளிக்கும் உலகு உய்ய வந்தானை வாழ்த்தினவே – கலிங்:593/2
காப்பதும் என் கடன் என்று காத்த கரிகால சோழனை வாழ்த்தினவே – கலிங்:594/2

மேல்


வாழ்நாள் (1)

வரும் சேனை தம் சேனை மேல் வந்து உறாமே வில் வாள் வீரர் வாழ்நாள் உக – கலிங்:490/1

மேல்


வாழ்வு (1)

மான அரசர் தனித்தனி வாழ்வு கருதி உரைப்பரே – கலிங்:336/4

மேல்


வாழ்வை (1)

நிறை வாழ்வை பெறல் நமக்கும் அணித்து என்று நில பாவை களிப்ப விந்தத்து – கலிங்:244/1

மேல்


வாழ (1)

வாழ அபயம் புகுது சேரனொடு கூட மலைநாடு அடைய வந்தது எனவே – கலிங்:297/2

மேல்


வாழி (3)

வாழி சோழ குல சேகரன் வகுத்த இசையின் மதுர வாரி எனலாகும் இசைமாது அரிது எனா – கலிங்:285/1
எனா உரைத்த தேவி வாழி வாழி என்று வாழ்த்தியே – கலிங்:310/1
எனா உரைத்த தேவி வாழி வாழி என்று வாழ்த்தியே – கலிங்:310/1

மேல்


வாழும் (2)

பூமாதும் சயமாதும் பொலிந்து வாழும் புயத்து இருப்ப மிக உயரத்து இருப்பள் என்று – கலிங்:13/1
கொற்றவர் கோன் வாள் அபயன் அறிய வாழும் குவலயத்தோர் கலை அனைத்தும் கூற ஆங்கே – கலிங்:174/1

மேல்


வாள் (18)

மதுரமான மொழி பதற வாள் விழி சிவப்ப வாய் இதழ் வெளுப்பவே – கலிங்:54/1
முள் ஆறும் கல் ஆறும் தென்னர் ஓட முன் ஒருநாள் வாள் அபயன் முனிந்த போரில் – கலிங்:95/1
துங்கபத்திரை செம் களத்திடை சோள சேகரன் வாள் எறிந்த போர் – கலிங்:103/1
கொற்றவர் கோன் வாள் அபயன் அறிய வாழும் குவலயத்தோர் கலை அனைத்தும் கூற ஆங்கே – கலிங்:174/1
தண்டு தனு வாள் பணிலம் நேமி எனும் நாம தன் படைகள் ஆன திரு ஐம்படை தரித்தே – கலிங்:240/2
விரித்த வாள் உகிர் விழி தழல் புலியை மீது வைக்க இமயத்தினை – கலிங்:273/1
தொடைகள் கந்தரம் புடை கொள் கொங்கை கண் சோதி வாள் முகம் கோதை ஓதி மென் – கலிங்:294/1
வாசி கொண்டு அரசர் வாரணம் கவர வாண கோவரையன் வாள் முக – கலிங்:365/1
முழை-கண் இள வாள் அரி முகத்து எளிது என களிறு முட்டி எதிர் கிட்டி வருமோ – கலிங்:391/2
என்னுடைய தோள் வலியும் என்னுடைய வாள் வலியும் யாதும் அறியாது பிறர் போல் – கலிங்:392/1
கலக்கம் அற்ற வீரர் வாள் கலந்த சூரர் கைத்தலத்து – கலிங்:427/1
சுடர் படை வாள் அபயன் அடி அருளினோடும் சூடினான் வண்டையர் கோன் தொண்டைமானே – கலிங்:471/2
பொரு தட கை வாள் எங்கே மணி மார்பு எங்கே போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத – கலிங்:484/1
வரும் சேனை தம் சேனை மேல் வந்து உறாமே வில் வாள் வீரர் வாழ்நாள் உக – கலிங்:490/1
இணைத்த முரசம் வாள் காம்பிட்டு இரட்டை வாளி ஏற்றீரே – கலிங்:512/2
கொற்ற வாள் மறவர் ஓச்ச குடரொடு தலையும் காலும் – கலிங்:518/1
மன்னர் புரந்தரன் வாள் அபயன் வாரணம் இங்கு மதம் படவே – கலிங்:529/1
ஒளிறு நெடும் படை வாள் அபயற்கு உத்தர பூமியர் இட்ட திறை – கலிங்:531/1

மேல்


வாளி (1)

இணைத்த முரசம் வாள் காம்பிட்டு இரட்டை வாளி ஏற்றீரே – கலிங்:512/2

மேல்


வாளில் (1)

வாளில் வெட்டி வாரண கை தோளில் இட்ட மைந்தர் தாம் – கலிங்:435/1

மேல்


வாளின் (1)

வட்ட வெண்குடை சென்னி மானதன் வாளின் வாயினான் மறலி வாயிடை – கலிங்:98/1

மேல்


வான் (2)

ஒற்றை வான் தொளை புற்று என பாம்புடன் உடும்பும் உட்புக்கு உறங்கிடும் உந்திய – கலிங்:139/2
தூங்கு மூன்று எயில் எறிந்த அவனும் திரள் மணி சுடர் விமானம்-அது வான் மிசை உயர்த்த அவனும் – கலிங்:194/1

மேல்


வானவர் (1)

மன்னர் ஆதிபன் வானவர் ஆதிபன் வந்து இருந்தனன் என்ன இருக்கவே – கலிங்:326/2

மேல்


வானவர்கள் (1)

கடல் கலக்க எழும் இன் அமுது-தன்னை ஒருவன் கடவுள் வானவர்கள் உண்ண அருள்செய்த கதையும் – கலிங்:190/1

மேல்


வானில் (1)

வார் முரசு இருந்து வறிதே அதிருமாலோ வந்து இரவில் இந்திரவில் வானில் இடுமாலோ – கலிங்:223/1

மேல்


வானின் (2)

மொய்த்து இலங்கிய தாரகை வானின் நீள் முகட்டு எழுந்த முழுமதிக்கு ஒப்பு என – கலிங்:316/1
நிலம் தரு தூளி பருகி நிறைந்தது வானின் வயிறு – கலிங்:360/1

மேல்


வானுளோர் (1)

இ நிலத்துளோர் ஏகலாவதற்கு எளிய கானமோ அரிய வானுளோர்
அ நிலத்தின் மேல் வெம்மையை குறித்து அல்லவோ நிலத்து அடி இடாததே – கலிங்:84/1,2

மேல்


வானை (1)

தட்டி வானை தகர்க்கும் தலையின தாழ்ந்து மார்பிடை தட்டும் உதட்டின – கலிங்:141/2

மேல்


வானோர் (1)

மா மழை போல் பொழிகின்ற தான வாரி மறித்து விழும் கட களிற்றை வெறுத்து வானோர்
பூ மழை மேல் பாய்ந்து எழுந்து நிரந்த வண்டு பொருள்பெண்டிர் போன்றமையும் காண்-மின் காண்-மின் – கலிங்:479/1,2

மேல்