மா – முதல் சொற்கள், கலிங்கத்துப்பரணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 19
மாகதர் 2
மாசுணம் 1
மாசை 1
மாட்டாதீர் 1
மாண் 1
மாதர் 6
மாதரை 1
மாதிரங்களில் 1
மாதின் 1
மாந்தரும் 1
மாநில 1
மாபாரதம் 1
மாய 1
மாயன் 2
மாயை 1
மார்பிடை 1
மார்பிடையில் 1
மார்பில் 2
மார்பின் 3
மார்பின்-நின்றும் 1
மார்பு 3
மாரன் 1
மாருதம் 1
மால் 6
மாலை 5
மாலைகள் 1
மாலையின் 1
மாலையொடு 1
மாவின் 1
மாவும் 1
மாளிகை 1
மாளும் 1
மாளுவர் 1
மாறவே 1
மாறி 6
மாறுபட்டு 1
மான 2
மானதன் 4
மானவர்கள் 1
மானும் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


மா (19)

இ நெடு மா நிலம் அனைத்தும் பொதிந்து இனிது வாழ்க என்றே – கலிங்:4/2
இளக மா முலைகள் இணையறாமல் வரும் இயல் நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:53/2
மீளி மா உகைத்து அபயன் முன் ஒர் நாள் விருதராசரை பொருது கொண்ட போர் – கலிங்:102/1
வண்டல் பாய் பொன்னி நாடனை வாழ்த்தி மா மதுரை வெம் களத்தே மதுரிக்க அட்டு – கலிங்:148/1
தரணி காவலளவும் செல மொழிந்து முனிவன் தான் எழுந்தருள மா முனி மொழிந்த படியே – கலிங்:185/2
மா உகைத்து ஒரு தனி அபயன் இப்படி வட திசை மேற்செல மன்னர் மன்னவன் – கலிங்:257/1
இன்ன மா கடல் முழங்கி எழுகின்ற ஒலி என்று இம்பர் உம்பர் அறியாத பரிசு எங்கும் மிகவே – கலிங்:284/2
சேனை மா கடற்கு அபயன் இம்முறை சேது பந்தனம் செய்தது ஒக்கவே – கலிங்:291/2
நீல மா மணி சிவிகை வெள்ளமும் நித்தில குல கவிகை வெள்ளமும் – கலிங்:292/1
கெண்டை மாசுணம் உவணம் வாரணம் கேழல் ஆளி மா மேழி கோழி வில் – கலிங்:293/1
மன்றில் நடமாடி அருள்கொண்டு விடைகொண்டு அதிகை மா நகருள் விட்டருளியே – கலிங்:299/2
மா ஆயிரமும் பட கலிங்கர் மடிந்த கள போர் உரைப்போர்க்கு – கலிங்:312/1
வளை கலிப்பவும் முரசு ஒலிப்பவும் மரம் இரட்டவும் வயிர மா
தொளை இசைப்பவும் திசையிப செவி தொளை அடைத்தலை தொடரவே – கலிங்:344/1,2
வெம் களிற்றின் மத்தகத்தின் வீழும் முத்து வீர மா
மங்கையர்க்கு மங்கல பொரி சொரிந்தது ஒக்குமே – கலிங்:429/1,2
ஒட்டகங்கள் யானை வால் உயர்த்த மா அழிந்த போர் – கலிங்:433/1
துணிகள் பட மத மா முறிந்தன துரக நிரையொடு தேர் முறிந்தவே – கலிங்:445/2
மா மழை போல் பொழிகின்ற தான வாரி மறித்து விழும் கட களிற்றை வெறுத்து வானோர் – கலிங்:479/1
மா காய மத மலையின் பிண மலை மேல் வன் கழுகின் சிறகால் செய்த – கலிங்:516/1
தூணிகளே நாழிகளா தூணி மா அளவீரே – கலிங்:546/2

மேல்


மாகதர் (2)

சூதர் மாகதர் ஆகிய மாந்தரும் துய்ய மங்கல பாடகர்-தாமும் நின் – கலிங்:322/1
வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர் மிலேச்சர்களே – கலிங்:332/1

மேல்


மாசுணம் (1)

கெண்டை மாசுணம் உவணம் வாரணம் கேழல் ஆளி மா மேழி கோழி வில் – கலிங்:293/1

மேல்


மாசை (1)

வரை கலிங்கர்-தமை சேர மாசை ஏற்றி வன் தூறு பறித்த மயிர் குறையும் வாங்கி – கலிங்:466/1

மேல்


மாட்டாதீர் (1)

கருவி கட்டு மாட்டாதீர் கரைக்கே இருந்து குளியீரே – கலிங்:508/2

மேல்


மாண் (1)

போதம் கொள் மாண் உருவாய் புவி இரந்த அஞ்ஞான்று புகன்று சென்ற – கலிங்:243/1

மேல்


மாதர் (6)

அதர பானம் மதுபானம் ஆக அறிவு அழியும் மாதர் கடை திற-மினோ – கலிங்:54/2
கரும் கண் வேதுபட ஒற்றி மென் கை கொடு கட்டு மாதர் கடை திற-மினோ – கலிங்:56/2
கொண்டு வந்த பேய் கூடிய போதில் அ குமரி மாதர் பெற குறள் ஆனவும் – கலிங்:150/2
திறம்பல் இலா விறல் யோகினி மாதர் சிரித்து விலா இறவே – கலிங்:172/2
கலையினொடும் கலைவாணர் கவியினொடும் இசையினொடும் காதல் மாதர்
முலையினொடும் மனுநீதி முறையினொடும் மறையினொடும் பொழுது போக்கி – கலிங்:277/1,2
பிடியின் மேல் வரு பிடி குலம் அநேகம் எனவே பெய் வளை கை மட மாதர் பிடி மீதின் வரவே – கலிங்:287/1

மேல்


மாதரை (1)

காந்தருடன் கனல் அமளி-அதன் மேல் வைகும் கற்பு உடை மாதரை ஒத்தல் காண்-மின் காண்-மின் – கலிங்:480/2

மேல்


மாதிரங்களில் (1)

மன நடுக்குற பொறை மறத்தலால் மாதிரங்களில் சாதுரங்கமே – கலிங்:349/2

மேல்


மாதின் (1)

பண்டு வசுதேவன் மகன் ஆகி நில மாதின் படர் களையும் மாயன் இவன் என்று தெளிவு எய்த – கலிங்:240/1

மேல்


மாந்தரும் (1)

சூதர் மாகதர் ஆகிய மாந்தரும் துய்ய மங்கல பாடகர்-தாமும் நின் – கலிங்:322/1

மேல்


மாநில (1)

மண்டலீகரும் மாநில வேந்தரும் வந்து உணங்கு கடைத்தலை வண்டை மன் – கலிங்:327/1

மேல்


மாபாரதம் (1)

தேவாசுர ராமாயண மாபாரதம் உள என்று – கலிங்:472/1

மேல்


மாய (1)

வணங்குதலும் கணங்கள் எலாம் மாய பாவி மறித்து எம்மை மறு சூடு சுடுவையாகில் – கலிங்:175/1

மேல்


மாயன் (2)

அதன் முதற்கண் வரும் ஆதி முதல் மாயன் இவனே அப்ரமேயம் எனும் மெய்ப்ரியமதாக உடனே – கலிங்:182/1
பண்டு வசுதேவன் மகன் ஆகி நில மாதின் படர் களையும் மாயன் இவன் என்று தெளிவு எய்த – கலிங்:240/1

மேல்


மாயை (1)

எது-கொல் இது இது மாயை ஒன்று-கொல் எரி-கொல் மறலி-கொல் ஊழியின் கடை – கலிங்:450/1

மேல்


மார்பிடை (1)

தட்டி வானை தகர்க்கும் தலையின தாழ்ந்து மார்பிடை தட்டும் உதட்டின – கலிங்:141/2

மேல்


மார்பிடையில் (1)

மார்பிடையில் குளித்த பகழியை வார் சிலையில் தொடுத்து விடுவரே – கலிங்:436/2

மேல்


மார்பில் (2)

வாசம் ஆர் முலைகள் மார்பில் ஆட மது மாலை தாழ் குழலின் வண்டு எழுந்து – கலிங்:66/1
பெரு மார்பில் வந்து ஒளிர பிறப்பு இரண்டாவது பிறந்து சிறந்த பின்னர் – கலிங்:242/2

மேல்


மார்பின் (3)

பொரும் கண் வேல் இளைஞர் மார்பின் ஊடுருவு புண்கள் தீர இரு கொங்கையின் – கலிங்:56/1
இப்புறத்து இமய மால் வரையின் மார்பின் அகலத்து எழுதினான் எழுதுதற்கு அரிய வேதம் எழுதி – கலிங்:208/1
திரு மார்பின் மலர்மடந்தை திரு கழுத்தின் மங்கலநாண் என்ன முந்நூல் – கலிங்:242/1

மேல்


மார்பின்-நின்றும் (1)

பட ஊன்று நெடும் குந்தம் மார்பின்-நின்றும் பறித்து அதனை நிலத்து ஊன்றி தேர் மேல் நிற்பார் – கலிங்:499/1

மேல்


மார்பு (3)

தண் கொடை மானதன் மார்பு தோய் தாதகி மாலையின் மேல் விழும் – கலிங்:31/1
பொரு தட கை வாள் எங்கே மணி மார்பு எங்கே போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத – கலிங்:484/1
உற்ற வாய் அம்பு தம் பரிசையும் கருவியும் உருவி மார்பு அகலமும் உருவி வீழ் செருநர் வில் – கலிங்:495/1

மேல்


மாரன் (1)

செய்ய திரு மேனி ஒரு பாதி கரிது ஆக தெய்வ முதல் நாயகனை எய்த சிலை மாரன்
கையின் மலர் பாத மலர் மீதும் அணுகா நம் கன்னி-தன் மலர் கழல்கள் சென்னி மிசை வைப்பாம் – கலிங்:15/1,2

மேல்


மாருதம் (1)

அகில வெற்பும் இன்று ஆனை ஆனவோ அடைய மாருதம் புரவி ஆனவோ – கலிங்:347/1

மேல்


மால் (6)

அ நெடு மால் உதரம் போல் அருள் அபயன் தனி கவிகை – கலிங்:4/1
செண்டு கொண்டு கரிகாலன் ஒருகாலின் இமய சிமய மால் வரை திரித்தருளி மீள அதனை – கலிங்:178/1
ஆதி மால் அமல நாபி கமலத்து அயன் உதித்து அயன் மரீசி எனும் அண்ணலை அளித்த பரிசும் – கலிங்:186/1
இப்புறத்து இமய மால் வரையின் மார்பின் அகலத்து எழுதினான் எழுதுதற்கு அரிய வேதம் எழுதி – கலிங்:208/1
மூவுலகும் தொழ நெடு மால் முன் ஒரு நாள் அவதாரம் செய்த பின்னை – கலிங்:233/2
வண்டையர்க்கு அரசு பல்லவர்க்கு அரசு மால் களிற்றின் மிசை கொள்ளவே – கலிங்:364/2

மேல்


மாலை (5)

முறுவல் மாலையொடு தரள மாலை முக மலரின் மீதும் முலை முகிழினும் – கலிங்:49/1
வாசம் ஆர் முலைகள் மார்பில் ஆட மது மாலை தாழ் குழலின் வண்டு எழுந்து – கலிங்:66/1
பூ விரியும் மாலைகள் புலால் கமழுமாலோ பொன் செய் மணி மாலை ஒளி போய் ஒழியுமாலோ – கலிங்:224/1
பொன்னின் மாலை மலர் மாலை பணி மாறி உடனே புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ் பிடி வர – கலிங்:286/1
பொன்னின் மாலை மலர் மாலை பணி மாறி உடனே புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ் பிடி வர – கலிங்:286/1

மேல்


மாலைகள் (1)

பூ விரியும் மாலைகள் புலால் கமழுமாலோ பொன் செய் மணி மாலை ஒளி போய் ஒழியுமாலோ – கலிங்:224/1

மேல்


மாலையின் (1)

தண் கொடை மானதன் மார்பு தோய் தாதகி மாலையின் மேல் விழும் – கலிங்:31/1

மேல்


மாலையொடு (1)

முறுவல் மாலையொடு தரள மாலை முக மலரின் மீதும் முலை முகிழினும் – கலிங்:49/1

மேல்


மாவின் (1)

சதய நாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன் தனி ஒர் மாவின் மேல் – கலிங்:201/1

மேல்


மாவும் (1)

கைப்படு களிறும் மாவும் கணித்து உரைப்பவர்கள் யாரே – கலிங்:455/2

மேல்


மாளிகை (1)

செம்பொன் மாளிகை தென்குட திக்கினில் செய்த சித்திர மண்டபம் தன்னிலே – கலிங்:315/2

மேல்


மாளும் (1)

இ கணம் மாளும் இனி தவிர் விச்சை என கை விதிர்த்தலுமே – கலிங்:173/2

மேல்


மாளுவர் (1)

வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர் மிலேச்சர்களே – கலிங்:332/1

மேல்


மாறவே (1)

தங்கள் பொன் குடை சாமரம் என்று இவை தாங்கள் தம் கரத்தால் பணி மாறவே – கலிங்:325/2

மேல்


மாறி (6)

மாறி இ கையில் அழைக்க மற்று அவை மத கரி தலைகள் ஆன பார் – கலிங்:162/2
மறையவர் வேள்வி குன்றி மனு நெறி அனைத்தும் மாறி
துறைகள் ஓர் ஆறும் மாறி சுருதியும் முழக்கம் ஓய்ந்தே – கலிங்:258/1,2
துறைகள் ஓர் ஆறும் மாறி சுருதியும் முழக்கம் ஓய்ந்தே – கலிங்:258/2
அரிவையர் கற்பின் மாறி அரண்களும் அழிய ஆங்கே – கலிங்:260/2
பொன்னின் மாலை மலர் மாலை பணி மாறி உடனே புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ் பிடி வர – கலிங்:286/1
மாறி அருள அவர்க்கு இடை யாமும் இசைவம் என பல – கலிங்:336/3

மேல்


மாறுபட்டு (1)

மாறுபட்டு எழு தண்டு எழ வத்தவர் – கலிங்:384/1

மேல்


மான (2)

மான அரசர் தனித்தனி வாழ்வு கருதி உரைப்பரே – கலிங்:336/4
மான சயப்பாவை விட்டு ஆடும் அம்மானை வட்டு ஒத்தல் காண்-மின்களோ – கலிங்:491/2

மேல்


மானதன் (4)

தண் கொடை மானதன் மார்பு தோய் தாதகி மாலையின் மேல் விழும் – கலிங்:31/1
வஞ்சி மானதன் விடும் படையினில் கொடிய கண் மட நலீர் இடு மணி கடை திறந்திடு-மினோ – கலிங்:32/2
வட்ட வெண்குடை சென்னி மானதன் வாளின் வாயினான் மறலி வாயிடை – கலிங்:98/1
வாசி கிடக்க கலிங்கர் ஓட மானதன் ஏவிய சேனை வீரர் – கலிங்:586/1

மேல்


மானவர்கள் (1)

எதிர்கொளும் சுரர் விமானங்களில் சுரர்களாய் ஏறு மானவர்கள் தாம் எண்ணுதற்கு அருமையின் – கலிங்:492/1

மேல்


மானும் (1)

ஒரு துறை புனல் சின புலியும் மானும் உடனே உண்ண வைத்த உரவோன் உலகில் வைத்த அருளும் – கலிங்:189/1

மேல்