நே-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேச 1
நேசத்தார் 1
நேசப்படுகின்றனன் 1
நேசம் 2
நேசமும் 1
நேசற்கு 1
நேட 1
நேடி 4
நேடினாம் 1
நேடினாயோ 1
நேடினென் 1
நேடினை 1
நேடும் 1
நேடுவார் 1
நேடுவேம் 1
நேத்திரத்தர் 1
நேமி 46
நேமி-கொலாம் 1
நேமிதான்-கொலோ 1
நேமிப்புள் 2
நேமியது 1
நேமியன் 4
நேமியாய் 3
நேமியால் 1
நேமியான் 13
நேமியானின் 1
நேமியானும் 1
நேமியின் 4
நேமியினானுழை 1
நேமியினோர்க்கு 1
நேமியும் 9
நேமியையும் 1
நேமியோ 2
நேமியோன் 4
நேய 5
நேயத்தால் 2
நேயத்தாலே 1
நேயத்தான் 1
நேயம் 5
நேயமும் 2
நேயமே 1
நேயமோடு 2
நேயர் 1
நேர் 101
நேர்-மின் 1
நேர்_இழை 4
நேர்_இழை-தன் 1
நேர்_இழையர் 1
நேர்_இழையார் 1
நேர்கலா 1
நேர்கிலன் 3
நேர்கிலா 2
நேர்கிலென் 1
நேர்குதியோ 1
நேர்குவது 1
நேர்குவார் 1
நேர்த்ததும் 1
நேர்தரும் 1
நேர்தியால் 2
நேர்தியோ 1
நேர்ந்த 2
நேர்ந்ததால் 1
நேர்ந்தது 2
நேர்ந்ததோ 1
நேர்ந்தன 2
நேர்ந்தனர் 1
நேர்ந்தனன் 3
நேர்ந்தனிர் 1
நேர்ந்தனென் 1
நேர்ந்தனை 2
நேர்ந்தார் 6
நேர்ந்தால் 1
நேர்ந்தாள் 3
நேர்ந்தான் 4
நேர்ந்திலன் 2
நேர்ந்து 10
நேர்ந்துளார் 1
நேர்ந்தே 1
நேர்ந்தேன் 1
நேர்ந்தோம் 1
நேர்பட்டது 1
நேர்பட 1
நேர்மை 2
நேர்மையினால் 1
நேர்மையை 1
நேர்வது 1
நேர்வர் 2
நேர்வரும் 1
நேர்வரோ 2
நேர்வல் 1
நேர்வார் 3
நேர்வான் 2
நேர்வுறா 1
நேர்வோர் 1
நேர 4
நேரலர் 1
நேரா 11
நேராகேனோ 1
நேராய் 1
நேரானது 1
நேரிது 2
நேரில் 1
நேரிலா 1
நேரினர் 2
நேரினும் 2
நேருதும் 1
நேருநரை 1
நேரும் 5
நேருமோ 1
நேரே 11

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


நேச (1)

நேச தாரைகள் சொரிதர நெடு நிலம் சேர்ந்தான் – கிட்:7 75/4

TOP


நேசத்தார் (1)

நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் யான் ஒரு தமியென் நின்றேன் – யுத்2:19 209/2

TOP


நேசப்படுகின்றனன் (1)

நேசப்படுகின்றனன் என்றனனே – யுத்3-மிகை:28 2/4

TOP


நேசம் (2)

மங்கும் பிறவி துயர் அற மாற்று நேசம்
தங்கும் தருமத்து உரு ஆகி தரணி மீது – பால-மிகை:3 2/2,3
நேசம் இல் அன்பினளாயினும் நின்-பால் – ஆரண்:14 51/3

TOP


நேசமும் (1)

நேசமும் அற்றோர் செய்வன செய்தேன் தனி நின்றேன் – யுத்3:22 215/3

TOP


நேசற்கு (1)

நின்று பூசனை செய்கின்ற நேசற்கு
குன்று போல் நெடு மாருதி கூடினான் – யுத்4:41 80/3,4

TOP


நேட (1)

நெடும் படை கூட்டினால் அன்றி நேட அரிது – கிட்:6 29/3

TOP


நேடி (4)

நீந்த அரிய நெடும் கருணைக்கு எல்லாம் நிலயமே வேதம் நெறி முறையின் நேடி
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் – ஆரண்:2 27/2,3
நீயின் அன்னவள் குதலையிர் ஆதலின் நேடி
போய தையலை தருதிர் என்று இராகவன் புகல – கிட்:10 45/1,2
நேடி நூல் தெரிந்துளோர்-தம் உணர்விற்கும் நிமிர நின்றான் – யுத்1:7 16/1
நின்றானொடு நின்றது என் நேடி எனின் – யுத்2:18 51/2

TOP


நேடினாம் (1)

நேடினாம் வாலி காலனை எனா நெடிது நாள் – கிட்:4 21/3

TOP


நேடினாயோ (1)

நீர் அடா போதாது என்று நெடும் தறி நேடினாயோ
போர் அடா பொருதி-ஆயின் புறப்படு புறப்படு என்றான் – யுத்1:3 129/2,3

TOP


நேடினென் (1)

நெறி இடு நெறி வல்லேன் நேடினென் வழுவாமல் – அயோ:8 36/1

TOP


நேடினை (1)

நீர் கண்டனை இ வழி நேடினை போய் – ஆரண்:14 63/1

TOP


நேடும் (1)

ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – சுந்:3 92/4

TOP


நேடுவார் (1)

நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார்
அனையர் வந்துற ஆண்டு எதிர்ந்தார்கள் போல் – அயோ:7 13/2,3

TOP


நேடுவேம் (1)

உயிர் நேடுவேம் போல் உடல் அளைய கண்டும் – யுத்1:3 167/3

TOP


நேத்திரத்தர் (1)

நேத்திரத்தர் இறை நின்றுழி நில்லா – யுத்1:11 16/2

TOP


நேமி (46)

நிழல் என பொலியுமால் நேமி வான் சுடர் – பால:3 40/4
நேமி மால் வரை மதில் ஆக நீள் புற – பால:4 7/1
நீங்கினர் இருந்தனன் நேமி வேந்தனே – பால:5 97/4
திரி புவனம் முழுது ஆண்டு சுடர் நேமி செல நின்றோர் – பால:12 7/2
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர் – பால:23 42/3
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான் – பால:24 27/2
நீலம் ஆம் கடல் நேமி அம் தடக்கை – பால-மிகை:0 2/1
நிருப நின் குல மன்னவர் நேமி பண்டு உருட்டி – அயோ:1 34/1
வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும் இந்த நம்பி-தன் கருணை என்பார் – அயோ:3 94/1,2
கா இயல் குட வரை கால நேமி மேல் – அயோ:10 38/3
நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து என்றான் – அயோ:11 64/4
கன்று ஒன்றும் ஆவின் பல யோனியும் காத்த நேமி
வன் திண் சிலை கைம் மனு என்னும் வயங்கு சீர்த்தி – அயோ-மிகை:4 8/2,3
போர் வித்தகன் நேமி பொறுத்தவன் மா – ஆரண்:2 9/3
நாளம் கொள் நளின பள்ளி நயனங்கள் அமைய நேமி
வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும் – ஆரண்:5 4/1,2
தரை அளித்த தனி நேமி தயரதன்-தன் புதல்வர் யாம் தாய் சொல் தாங்கி – ஆரண்:6 128/1
தராவலய நேமி உழவன் தயரத பேர் – ஆரண்:10 57/1
நேமி மால் வரை-அது நெருக்குகின்றதே – ஆரண்:15 6/3
நீர் புகும் நெடும் கடல் அடங்கும் நேமி சூழ் – ஆரண்:15 20/1
நீடு நீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள் – கிட்:1 37/2
சூரியன் மரபில் தோன்றி சுடர் நெடு நேமி ஆண்ட – கிட்:2 26/1
குல வரை நேமி குன்றம் என்று வான் உயர்ந்த கோட்டின் – கிட்:7 149/1
வலம் கொள் நேமி மழை நிற வானவன் – கிட்:15 36/1
கோல் கணையம் நேமி குலிசம் சுரிகை குந்தம் – சுந்:2 67/3
மழு வாள் நேமி குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை – சுந்:2 214/4
நிருமித்த எழிலி முற்றிற்று என்னலாம் நிலைய நேமி
சொரி முத்த மாலை சூழும் துகில் கொடி தடம் தேர் சுற்ற – சுந்:8 4/3,4
காமரு கணையம் குந்தம் கப்பணம் கால நேமி – சுந்:10 11/4
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே – சுந்:10 31/3
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி
இம்பரில் பணி செய தசரத பெயரினான் இசை வளர்த்தான் – யுத்1:2 82/3,4
நீள் இரும் கனக முட்டை நெடும் சுவர் தேய்ப்ப நேமி
கோளொடும் திரிவது என்ன குல மணி கொடும் பூண் மின்ன – யுத்1:3 150/2,3
நின்றார் இரு மருங்கும் நேமி பெருமானும் – யுத்1:3 161/3
கவ்வு அயில் கால நேமி கணக்கையும் கடந்தது என்பார் – யுத்1:9 74/4
கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல் கரத்து நேமி
சங்கமும் தரித்த மால் மற்று இ நகர் தன்னை சாரார் – யுத்1:14 23/1,2
கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும் – யுத்2:19 298/1
புக்கன நேமி பாட்டிற்கு இழிந்தன புவனம் என்ன – யுத்3:22 36/2
நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமி படையும் அவற்றுடனே நிற்கும் – யுத்3:24 29/2
வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின்-நின்றும் – யுத்3:24 62/3
தான் அலால் சிவன் அலால் நேமி தாங்கிய – யுத்3:24 87/2
கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன – யுத்3:24 88/2
நேமி பெயர் யூகம் நிரைத்து நெடும் – யுத்3:27 17/1
நேமி தனி அரி தான் என நினைந்தான் எதிர் நடந்தான் – யுத்3:27 146/4
நின்று நிலை ஆறினர்கள் வானவரும் மானவனும் நேமி எனல் ஆம் – யுத்3:31 153/2
வியன் கர நேமி அம் படை அ வெற்பினை – யுத்3-மிகை:23 1/2
நீலம் கொண்டு ஆர் கண்டனும் நேமி படையோனும் – யுத்4:37 125/1
பரசுடை கடவுள் நேமி பண்ணவன் பதுமத்து அண்ணல் – யுத்4:40 40/1
நின்று தாழ்த்தருள் நேமி சுடர் நெடும் – யுத்4:41 84/2
விளங்குறும் நேமி புத்தேள் மேவும் மா அயோத்தி கண்டார் – யுத்4-மிகை:41 297/4

TOP


நேமி-கொலாம் (1)

நீண்ட நேமி-கொலாம் என நேர் தொழ – கிட்:13 12/3

TOP


நேமிதான்-கொலோ (1)

நேமிதான்-கொலோ நீலகண்டன் நெடும் சூலம் – கிட்:7 70/1

TOP


நேமிப்புள் (2)

நெஞ்சு உற களித்தன நேமிப்புள் எலாம் – ஆரண்:10 126/4
கள்ளம் ஆர் மகளிர் சோர நேமிப்புள் கவற்சி நீங்க – யுத்1:9 88/2

TOP


நேமியது (1)

செதுகை பெரும் தானவர் ஊனொடும் தேய்த்த நேமியது
கை திசை யானையை ஓட்டியது என்னலாமே – யுத்2:19 22/1,2

TOP


நேமியன் (4)

மின் உடை நேமியன் ஆதல் மெய்ம்மையால் – பால:24 38/2
மின்னு நேமியன் மேவு இடம் மேவினாள் – அயோ:2 6/4
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் சேம வில் கால் – ஆரண்:13 24/3
வளையான் நேமியன் வன்மை சால் வலிக்கு – கிட்:16 34/3

TOP


நேமியாய் (3)

ஆதி யான் அறிந்தனென் அலங்கல் நேமியாய்
வேதியா இறுவதே அன்றி வெண்மதி – பால:24 37/2,3
எல் இயல் விசும்பிடை இருந்த நேமியாய்
சொல்லிய அற நெறி தொடர்ந்த தோழமை – ஆரண்:13 49/1,2
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய் – கிட்:7 111/4

TOP


நேமியால் (1)

உருளுடை நேமியால் உலகை ஓம்பிய – ஆரண்:3 16/1

TOP


நேமியான் (13)

நிச்சயம் எடுக்கும்-கொல் நேமியான் என்பார் – பால:13 9/3
தயரதன் எனும் பெயர் தனி செல் நேமியான்
புயல் பொழி தட கையான் புதல்வன் பூம் கணை – பால:13 58/2,3
நித்திய நியமம் முற்றி நேமியான் பாதம் சென்னி – பால:14 72/1
கருதி ஆவி கவர்ந்தனன் நேமியான் – பால-மிகை:7 21/4
நின் நெடும் புதல்வன்-தனை நேமியான்
தொல் நெடும் முடி சூட்டுகின்றான் என்றார் – அயோ:2 4/3,4
நினையும் மாத்திரத்து ஏகிய நேமியான்
தனையனும் தந்தை சார்விடம் மேவியான் – அயோ:11 38/3,4
நினக்கு ஒன்றா நிலை நிறுவி நேமியான்
தனை கொன்றாள் தரும் தனையன் ஆதலால் – அயோ:14 96/2,3
ஆர் உலாம் நேமியான் ஆற்றல் தோற்றுப்போய் – ஆரண்:10 31/2
நீலனை நெடிது நோக்கி நேமியான் பணிப்பான் நம்-தம்-பால் – சுந்-மிகை:14 44/1
எறி சுடர் நேமியான் வந்து எதிர்ப்பினும் என் கை வாளி – யுத்1:9 86/2
நிற்புற சுற்றிய காட்சி நேமியான்
கற்பக கொம்பினை கரிய மாசுணம் – யுத்2:15 112/2,3
நின்றும் ஒன்று இயற்றல் ஆற்றேம் நேமியான் தானே நேர்ந்து – யுத்3:31 56/2
நிலை உறு நேமியான் அறிந்து நீசனை – யுத்4:37 155/2

TOP


நேமியானின் (1)

தே இயல் நேமியானின் சிந்தை மெய் திருவின் ஏக – சுந்:2 211/1

TOP


நேமியானும் (1)

நிரந்தரம் நோக்குவென் நேமியானும் அ – ஆரண்:4 12/2

TOP


நேமியின் (4)

நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் – ஆரண்:3 36/4
நீல மால் நேமியின் தலையை நீக்கிய – ஆரண்:15 18/3
நிற கரும் கடலுள் நேமியின் நின்று – யுத்1:11 22/2
நேமியின் விசையின் செல்வான் நிடதத்தின் நெற்றி உற்றான் – யுத்3:24 46/4

TOP


நேமியினானுழை (1)

நின்று காணுதும் நேமியினானுழை
சென்று காண்டும் என்று ஏகினர் செவ்வியோர் – யுத்4:33 33/3,4

TOP


நேமியினோர்க்கு (1)

நீதி நிலையும் இவை நேமியினோர்க்கு நின்ற – பால:4 2/3

TOP


நேமியும் (9)

உருளும் நேமியும் ஒண் கவர் எஃகமும் – அயோ:2 19/1
சூர் அறுத்தவனும் சுடர் நேமியும்
ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும் – ஆரண்:3 22/1,2
நீலகண்டனும் நேமியும் குலிசனும் மலரின் – கிட்-மிகை:3 6/1
நீரிடை கண் துயில் நெடிய நேமியும்
தார் உடை தனி மலர் உலகின் தாதையும் – சுந்-மிகை:12 1/1,2
நீலகண்டனும் நேமியும் நேர் நின்று பொரினும் – யுத்1:2 108/1
நேமியும் குலிச வேலும் நெற்றியின் நெருப்பு கண்ணான் – யுத்3:28 52/1
நீறு பூசியும் நேமியும் நீங்கினார் – யுத்3:29 12/1
நீலம் காட்டிய கண்டனும் நேமியும்
ஏலும் காட்டின் எறிந்த படைக்கு எலாம் – யுத்3:29 18/1,2
கண்ணன் நேமியும் கண்ணுதல் கணிச்சியும் கமலத்து – யுத்4:35 23/1

TOP


நேமியையும் (1)

கால நேமியையும் கண்டேன் இரணியன் தனையும் கண்டேன் – யுத்3:31 52/2

TOP


நேமியோ (2)

நேமியோ குலிசியோ நெடும் கணிச்சியோ – சுந்:12 65/1
ஈசனார் படையோ மாயோன் நேமியோ யாதோ இன்னம் – யுத்3:27 74/2

TOP


நேமியோன் (4)

நினைப்பினன் ஆயினும் நேமியோன் நெடும் – கிட்:10 97/2
நின்று ஊக்கி உணர்ந்து உரைப்பான் நேமியோன் பணி அன்றால் – சுந்:2 219/2
நீலனை இனிது நோக்கி நேமியோன் விரைய நீ நம் – யுத்1:9 14/1
கை வைத்த நேமியோன் தன் கால் வைத்த கருத்தமே யாம் – யுத்1-மிகை:12 6/4

TOP


நேய (5)

நெறியிடை படர வேந்தன் நேய மங்கையர் செல்வார் – பால:14 62/4
நெய் துடைத்து அடையலர் நேய மாதர் கண் – அயோ:4 154/3
நேய நெஞ்சின் விரும்பி நிரம்பினான் – அயோ:10 49/4
நினைத்திலை என்-வயின் நேய நெஞ்சினால் – அயோ:14 42/4
நிலம் காவல் அது கிடக்க நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின் – ஆரண்:4 22/2

TOP


நேயத்தால் (2)

நின்றவர் நலிவரால் நேயத்தால் எனா – அயோ:14 139/2
நீடு நெஞ்சு உறு நேயத்தால் நெடிது உற பிரிந்து – கிட்:10 39/1

TOP


நேயத்தாலே (1)

நெகுதற்கு ஒத்த நெஞ்சும் நேயத்தாலே ஆவி – அயோ:4 59/1

TOP


நேயத்தான் (1)

நெய்த்தலை பால் கலந்து-அனைய நேயத்தான் – கிட்:6 4/4

TOP


நேயம் (5)

பெண்கள்-பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால் – பால:2 10/4
நீண்டவன் துயின்ற சூழல் இது எனின் நிமிர்ந்த நேயம்
பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன் பொழுது நீத்தது – அயோ:13 41/2,3
நிலையா மன வஞ்சனை நேயம் இலா – ஆரண்:11 44/3
நின்றதே போல நீங்கும் நிதி-வழி நேயம் நீட்டும் – ஆரண்:11 72/3
நேயம் மூண்டு அது தான் நிற்க நெடியவன் சரணம் சூடி – யுத்4-மிகை:41 47/2

TOP


நேயமும் (2)

நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும்
வேதியர் அருளும் நான் விரும்பி பெற்றனென் – யுத்1:4 21/2,3
நிறைவரு நேயமும் நின்ற வாய்மையும் – யுத்1:4 43/2

TOP


நேயமே (1)

நெருக்கினர் காப்ப நின்-பால் நேயமே அச்சம் நீக்க – சுந்:14 36/2

TOP


நேயமோடு (2)

நேயமோடு இருந்து இவை நிகழ்த்தல் மேயினார் – பால-மிகை:5 6/4
நேயமோடு இரு தாள் பணிந்து அங்கு அவன் நின்றான் – யுத்4-மிகை:41 101/4

TOP


நேயர் (1)

அயிர்க்குறும் நேயர் தம் செயலில் காண்டல் போல் – யுத்1-மிகை:3 12/2

TOP


நேர் (101)

மூக்கில் தாக்குறும் மூரி நந்தும் நேர்
தாக்கின் தாக்குறும் பறையும் தண்ணுமை – பால:2 57/1,2
யாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால் – பால:4 8/1
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கி போய் – பால:6 22/2
தேரும் ஓடாது மா மாகம் மீ தேரின் நேர்
காரும் ஓடாது நீள் காலும் ஓடாது-அரோ – பால:7 9/3,4
தன் நேர் இல்லா மங்கையர் செங்கை தளிர் மானே – பால:10 30/1
என்று உரைத்து எதிர் எதிர் இடைவிடாது நேர்
துன்றிய கனை கழல் தூதர் கொள்க எனா – பால:14 6/1,2
ஊறு நேர் வந்து உருவு வெளிப்பட – பால:14 43/2
நேர் ஒடுங்கல் இல் பகையினை நீதியால் வெல்லும் – பால:15 2/1
தன் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி – பால:17 31/2
நிதம்ப பாரத்து ஓர் நேர்_இழை காமத்தால் – பால:18 24/3
நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஓர் நேர்_இழை – பால:19 23/2
சென்று வந்து உலவும் அ சிதைவு இலா நிழலின் நேர்
வென்ற திண் கொடியொடும் நெடு விதானமும் விராய் – பால:20 14/2,3
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ – அயோ:3 32/2
தன் நேர் இல்லா தீயவள் உள்ளம் தடுமாறாள் – அயோ:3 34/2
தன் நேர் இலாத தலைமகற்கு தாரணியை – அயோ:4 108/2
நிற பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற – அயோ:5 29/1
நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேர்_இழை நிறை தேன் – அயோ:10 24/1
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான் – அயோ:11 130/3
பூ நேர் பொழிலின் புறமே நிறுவா – ஆரண்:2 23/2
அரைத்தும் அயனாலும் அறியாத பொருள் நேர் நின்று – ஆரண்:3 43/3
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி – ஆரண்:5 4/3
நேர்_இழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் – ஆரண்:6 29/4
நேர்_இழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் – ஆரண்:6 29/4
நிலத்தாரும் விசும்பாரும் நேர்_இழையார் என்னை போல் – ஆரண்:6 121/3
நீத்தம் ஓடி நெடும் திசை நேர் உற – ஆரண்:9 28/2
நெல் ஒக்கும் புல் என்றாலும் நேர் உரைத்து ஆகவற்றோ – ஆரண்:10 74/4
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய் – ஆரண்:10 148/2
நேர் இழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி – ஆரண்:10 163/1
தன் நேர் இலாதானும் தம்பியும் அ தன்மையனாய் – ஆரண்:13 100/2
துடியின் நேர் இடை தோன்றலளாம் எனின் – ஆரண்:14 23/1
நின்று என இருந்த அ கவந்தன் நேர் சென்றார் – ஆரண்:15 10/4
தன் நேர் இலாத தம்பி தடுப்பான் பிறர் இல்லை – ஆரண்:15 34/3
நின்றானை கண்டான் நெறி நின்றார் நேர் நின்றான் – ஆரண்:15 49/4
நேர் ஆகாயத்தின் மிசை நிற்கின்றான் நீ இவனை – ஆரண்:15 50/3
மழை படு தரளமும் மணியும் வாரி நேர்
இழை படர்ந்து அனைய நீர் அருவி எய்தலால் – கிட்:1 10/2,3
நீ அம் மான் நேர்தியால் நேர் இல் மாரீசன் ஆம் – கிட்:3 11/3
நின்றன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா – கிட்:3 26/4
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான் – கிட்:3 43/2
முட்டி நின்று அவன் முரண் உரத்தின் நேர்
ஒட்ட அஞ்சி நெஞ்சு உலைய ஓடினான் – கிட்:3 51/1,2
நீடு நாகமூடு மேகம் ஓட நீரும் ஓட நேர்
ஆடு நாகம் ஓட மானை யானை ஓட ஆளி போம் – கிட்:7 4/1,2
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் என – கிட்:7 25/2
தகை நேர் வண் புகழ் நின்று தம்பியார் – கிட்:8 15/1
உக நேர் சிந்தி உலந்து அழிந்தனன் – கிட்:8 15/3
நீண்ட நேமி-கொலாம் என நேர் தொழ – கிட்:13 12/3
நேர் இடை சலிப்பு அற நிறுத்தி நிமிர் கொங்கை – கிட்:14 45/3
அக்கு வடம் முத்த மணி ஆரம் அதன் நேர் நின்று – கிட்:14 49/3
வானவர்க்கும் மற்று அவர் வலிக்கு நேர்
தானவர்க்குமே அரிய தன்மையான் – கிட்:15 4/1,2
எற்றினானை நேர் எற்றினான் அவன் – கிட்:15 7/3
வென்றான் என்னினும் வீர நிற்கு நேர்
நின்றானே அ அரக்கன் நின்னையும் – கிட்:16 37/2,3
காள நிறத்தோடு ஒப்புறும் இ நேர் கடல் தாவுற்று – கிட்:17 3/3
தன்னை நேர் இல் அ சமீரணன் காதலன் – கிட்-மிகை:11 3/2
அன்றியும் அலருள் வைகும் அயனை நேர் முனிவன் வாய்மை – கிட்-மிகை:16 6/1
நேர் இயன்ற வன் திசை-தொறும் நின்ற மா நிற்க – சுந்:2 11/2
அம் தாரத்தின் நேர் வரு சொல்லாள் அறை தும்பி – சுந்:2 78/2
நிலம் சுழித்து எழு மணி உந்தி நேர் இனி – சுந்:4 45/3
நீண்ட விழி நேர்_இழை-தன் மின்னின் நிறம் எல்லாம் – சுந்:4 68/1
தேண்டி நேர் கண்டேன் வாழி தீது இலன் எம் கோன் ஆகம் – சுந்:4 77/1
மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி வீரற்கு – சுந்:4 112/1
மயக்கு இல் பொன் குல வல்லிகள் வாரி நேர்
இயக்குற திசை-தோறும் எறிந்தன – சுந்:6 38/1,2
நீலகண்டனும் நேமியும் நேர் நின்று பொரினும் – யுத்1:2 108/1
நேர் வரு தாயத்து நிரப்பினோர் பிறர் – யுத்1:4 78/3
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா – யுத்1:4 83/3
சிலைகள் ஒக்க முறித்து செறித்து நேர்
மலைகள் ஒக்க அடுக்கி மணல் பட – யுத்1:8 46/2,3
நிலம் அரங்கிய வேரொடு நேர் பறிந்து – யுத்1:8 59/1
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின் – யுத்1:14 12/3
நேர் வரும் உறுதியின் நிலை உரைத்தனென் – யுத்1-மிகை:4 3/1
வாரணத்து எதிர் வாசியின் நேர் வய – யுத்2:15 44/1
பிடித்து தோளை பிறங்கலின் கோடு நேர்
முடித்தலத்தினில் எற்றிட மூளைகள் – யுத்2:15 67/2,3
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின் – யுத்2:15 167/3
எ தேவர்கள் எ தானவர் எதிர்வார் இகல் என் நேர்
பித்து ஏறினர் அல்லால் இடை பேராது எதிர் மார்பில் – யுத்2:15 169/2,3
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – யுத்2:15 180/2
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ – யுத்2:15 182/3
நில் ஐயா என நேர் நின்று பொன்றுதி எனினும் – யுத்2:15 254/3
தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள் மேல் – யுத்2:16 227/1
பொருவோமொடு நேர் பொருதாய் புகழோய் – யுத்2:18 69/3
கழுத்த கைய நிமிர் கால வால பல கண்டமானபடி கண்டு நேர்
எழு தொடர்ந்த படர் தோள்களால் எறிய எற்ற அற்றன எழுந்து மேல் – யுத்2:19 65/2,3
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தட கையின் இடந்து நேர்
மேல் எழுந்து எரி விசும்பு செல்வது ஒரு வெம்மையோடு வர வீசலும் – யுத்2:19 83/1,2
நேர் செலாது இடை நின்றனர் நீள் நெடும் – யுத்2:19 156/1
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து – யுத்2:19 239/1
நெய் அழல் வேள்வி நெடும் பகை நேர் விண் – யுத்3:20 21/1
நேர் எதிர்ந்தனர் நெருப்பு உடை வேள்வியின் பகையும் – யுத்3:20 50/2
புல்லி தரை இட்டனன் நேர் பொருவான் – யுத்3:20 71/4
நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும் – யுத்3:20 84/1
இடங்கர் ஏறு எறுழ் வலி அரக்கன் நேர் ஈர்க்கும் – யுத்3:22 73/3
நேர் ஏறினர் விசும்பு ஏறிட நெரித்தான் கதை திரித்தான் – யுத்3:22 118/4
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மாண்டார் – யுத்3:22 173/2
நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும் – யுத்3:24 26/2
நீதி உரைப்பது நேர் என ஓரா – யுத்3:26 32/2
நேர் ஆயினர் இருவோர்களும் நெடு மாருதி நிமிரும் – யுத்3:27 102/3
நினைத்தது முடித்து நின்றேன் நேர் இழை ஒருத்தி நீரால் – யுத்3:29 39/2
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும் எங்ஙனே கலந்து நேர்
தடுத்து வீரர்-தாமும் ஒன்று செய்யுமா சலத்தினால் – யுத்3:31 84/3,4
பொன் நேர் வரு வரி வில் கரத்து ஒரு கோளரி போல்வான் – யுத்3:31 114/2
நிலை கோடல் இல் வென்றி அரக்கரை நேர்
கொலை கோடலின் மன் குறி கோளுறுமேல் – யுத்3:31 205/1,2
தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர்
கொன்றான் அவனே இவன் என்று கொள்வார் – யுத்3:31 208/3,4
நீங்கினென் என்பது ஓர் இழிவு நேர் உற – யுத்3-மிகை:27 4/2
நெடு நாணிடை சிதையாதவர் நேர் ஏவிய விசிகம் – யுத்3-மிகை:27 7/2
நெரிந்தன நெடு வரை குடுமி நேர் முறை – யுத்4:37 62/3
குழுக்களை கூர்ம் கணை குப்பை ஆக்கி நேர்
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை – யுத்4:37 76/2,3
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து தன் அகத்தின் – யுத்4:41 33/2
நேர் உதிக்க அ படை கொண்டு நிமலனும் நீக்க – யுத்4-மிகை:37 12/2
மான் நேர் விழியாளுடனே வனம் முன் – யுத்4-மிகை:41 178/1

TOP


நேர்-மின் (1)

நீங்கி இவ்வழி நேர்-மின் அடா எனா – ஆரண்:7 18/3

TOP


நேர்_இழை (4)

நிதம்ப பாரத்து ஓர் நேர்_இழை காமத்தால் – பால:18 24/3
நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஓர் நேர்_இழை
தனி சுடர் தாமரை முகத்து சாபமும் – பால:19 23/2,3
நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேர்_இழை நிறை தேன் – அயோ:10 24/1
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி – ஆரண்:5 4/3

TOP


நேர்_இழை-தன் (1)

நீண்ட விழி நேர்_இழை-தன் மின்னின் நிறம் எல்லாம் – சுந்:4 68/1

TOP


நேர்_இழையர் (1)

நேர்_இழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் – ஆரண்:6 29/4

TOP


நேர்_இழையார் (1)

நிலத்தாரும் விசும்பாரும் நேர்_இழையார் என்னை போல் – ஆரண்:6 121/3

TOP


நேர்கலா (1)

நெருங்கிய வன முலை சுமக்க நேர்கலா
மருங்குல் போல் தேய்ந்தது அ மாலை கங்குலே – பால:19 66/3,4

TOP


நேர்கிலன் (3)

கண்ணில் நீர் கடல் கைவிட நேர்கிலன்
எண்ணுகின்றனன் என் செயல்-பாற்று எனா – அயோ:4 222/3,4
நினைத்து அவர் உருகவும் உதவ நேர்கிலன்
மனக்கு இனியாள் ஒரு மாதை நாடுவான் – ஆரண்:12 47/3,4
நெருங்கிய உரையினை நினைந்து நேர்கிலன்
கரும் கடல் கடந்த அ காலன் காலன் வாழ் – யுத்2:16 268/2,3

TOP


நேர்கிலா (2)

எண்ணி நோக்குறின் யாவரும் நேர்கிலா
பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை என் – ஆரண்:7 6/2,3
நிருதர் தானை உடைந்தது நேர்கிலா
தரும கோபன் சதமகன் சண்டியோடு – யுத்2-மிகை:15 9/1,2

TOP


நேர்கிலென் (1)

நின்று நின்று இவை சில விளம்ப நேர்கிலென்
நன்று இனி நரரொடு குரங்கை நாம் அற – யுத்1:2 41/1,2

TOP


நேர்குதியோ (1)

நெடியாய் அடியேன் நிலை நேர்குதியோ – யுத்1:3 104/4

TOP


நேர்குவது (1)

ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை – யுத்2:15 182/1

TOP


நேர்குவார் (1)

நிற்றல் என் பிறிது என நெருக்கி நேர்குவார் – யுத்1:4 37/4

TOP


நேர்த்ததும் (1)

நேர்த்ததும் காணலுற்ற ஈசனார் இருக்கை நிற்க – யுத்4:37 207/4

TOP


நேர்தரும் (1)

நேர்தரும் பரவை பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசை-தொறும் நிமிர – சுந்:3 90/2

TOP


நேர்தியால் (2)

நீ அம் மான் நேர்தியால் நேர் இல் மாரீசன் ஆம் – கிட்:3 11/3
தேன் உயர் தெரியலான் தன்மை நேர்தியால் – சுந்:3 123/4

TOP


நேர்தியோ (1)

கீழ்மையோர் சொல்-கொடு கெடுதல் நேர்தியோ
வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ – யுத்1:4 10/3,4

TOP


நேர்ந்த (2)

நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான் – ஆரண்:14 16/1
நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள் – கிட்:11 6/2

TOP


நேர்ந்ததால் (1)

நிறம் பொலீர் உங்கள் தீவினை நேர்ந்ததால்
மறம் செய்வான் உறின் மாளுதிர் மற்று இனி – கிட்:11 31/2,3

TOP


நேர்ந்தது (2)

ஈனன் நீ யாவன் என்னை நேர்ந்தது இ இடையில் என்ன – பால-மிகை:11 29/3
சிதைவுறல் அவர்க்கு வேண்டின் செய் திறன் நேர்ந்தது எண்ணின் – சுந்:3 144/3

TOP


நேர்ந்ததோ (1)

நின்று தவம் இயற்றி தான் தீர நேர்ந்ததோ
அன்றி உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரை – அயோ:4 106/1,2

TOP


நேர்ந்தன (2)

நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன
வரம்பு_அறு பிணம்பட கொன்ற மாறு இலா – சுந்:3 51/2,3
நெருக்கி நேர்ந்தன நெருப்பு இமை பொடித்தன நெருப்பின் – யுத்4:32 7/3

TOP


நேர்ந்தனர் (1)

வந்து நேர்ந்தனர் மாருதி-மேல் வரும் – யுத்2:19 159/1

TOP


நேர்ந்தனன் (3)

நேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான் – ஆரண்:13 135/4
நீட்டு இது என நேர்ந்தனன் எனா நெடிய கையால் – சுந்:4 63/3
நிந்தனை இலாதவன் இயற்ற நேர்ந்தனன் – யுத்1:8 2/4

TOP


நேர்ந்தனிர் (1)

நீதி வித்தகன் தன் அருள் நேர்ந்தனிர்
யாது உமக்கு அரிது என்றனன் ஈறு இலான் – பால-மிகை:11 54/3,4

TOP


நேர்ந்தனென் (1)

நெறி கொள் மா தவர்க்கு முன்னே நேர்ந்தனென் நிருதர் ஆவி – ஆரண்:7 60/1

TOP


நேர்ந்தனை (2)

நீ இது முடித்தி என்று நேர்ந்தனை நினைவின் எண்ணி – சுந்:8 2/2
நீ அவை துடைத்து நின்று அழிக்க நேர்ந்தனை
ஆயினும் அன்பினால் யாம் செய் மா தவம் – யுத்4-மிகை:41 198/3,4

TOP


நேர்ந்தார் (6)

நெய் நிறை வேலவன் மங்கையர் நேர்ந்தார்
மை நிறை கண்ணியர் வான் உறை நீரார் – பால:23 100/2,3
நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடும் சுரம் நேர்ந்தார் – அயோ:9 38/4
நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார்
என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன் மேல் ஓர் – ஆரண்:11 4/2,3
தம் தாதையரை தனையர் கொலை நேர்ந்தார்
முந்து ஆரே உள்ளார் முடிந்தான் முனை ஒருவன் – ஆரண்:13 95/1,2
தாக்குறு செருவில் நேர்ந்தார் தாள்_அற வீச தாவி – சுந்:1 7/3
நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அ செருவில் நேர்ந்தார்
உய்தலை உற்று மீண்டார் ஒருவரும் இல்லை உள்ளார் – சுந்:9 64/1,2

TOP


நேர்ந்தால் (1)

நிற்க உரியார்கள் யாவர் அனையவர் சினத்தின் நேர்ந்தால்
விற்கு உரியார் இ தன்மை வெகுளியின் விரைவின் எய்த – கிட்:11 86/2,3

TOP


நேர்ந்தாள் (3)

எள்ளூறு தீ கருமம் நேர்ந்தாள் இவள் என்னா – அயோ:4 105/2
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – சுந்:14 27/3,4
நன்று என நங்கை நேர்ந்தாள் நாயக கோலம் கொள்ள – யுத்4:40 28/3

TOP


நேர்ந்தான் (4)

நிற்கும் நோக்கு இது என் பயத்தது என இளையவன் நேர்ந்தான் – ஆரண்:13 79/4
நன்று என அவனும் நேர்ந்தான் நரலையும் நடுங்க ஆர்த்து – சுந்-மிகை:14 4/1
நினைவதன் முன்னே விஞ்சை நீக்குவென் என்று நேர்ந்தான் – யுத்1-மிகை:9 6/4
நினையின் நீண்டது ஓர் பெரும் கொடை அரும் கடன் நேர்ந்தான் – யுத்4:35 24/4

TOP


நேர்ந்திலன் (2)

உரைத்த பின் இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன்
வரை தடம் தோளினான் வதனம் நோக்கினான் – அயோ:4 155/1,2
நின்று உயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க வள்ளல் – அயோ:6 8/1

TOP


நேர்ந்து (10)

மானம் நேர்ந்து அறம் நோக்கி மனு நெறி – பால:1 5/1
ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி கடன்முறைகள் யாவும் நேர்ந்து
தோடு துற்ற மலர் தாரான் விருந்து அளிப்ப இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான் – பால:5 59/3,4
நீங்கினர் சுமாலியை நேர்ந்து நின்கு யாம் – பால-மிகை:7 17/3
ஆயவள்-தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர் – அயோ:14 86/1
நீர் எலாம் அயல் நீங்கு-மின் நேர்ந்து யான் – கிட்:11 42/1
நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து இவனுக்கு – யுத்1:3 174/3
நிலை உடை வட வரை குலைய நேர்ந்து அதன் – யுத்1:5 17/1
நெருக்க நேர்ந்து கும்பானு நெடும் சரம் – யுத்2:15 62/3
நின்ற உருப்பசியும் மேனகையும் நேர்ந்து எடுத்து – யுத்2:18 272/3
நின்றும் ஒன்று இயற்றல் ஆற்றேம் நேமியான் தானே நேர்ந்து
கொன்று போர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி அன்றேல் – யுத்3:31 56/2,3

TOP


நேர்ந்துளார் (1)

நினையினர் நெடிதுற நெருக்கி நேர்ந்துளார் – சுந்-மிகை:12 2/4

TOP


நேர்ந்தே (1)

நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே
தையல் தளிர் கை தட கை பிடித்தான் – பால:23 89/3,4

TOP


நேர்ந்தேன் (1)

ஆவன கடன்கள் நேர்ந்தேன் அரும் சினம் அடக்கி நின்றேன் – பால:24 33/4

TOP


நேர்ந்தோம் (1)

நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம்
பின் செய்தோம் சில அவை இனி பீடு இன்று பெறுமோ – யுத்1:5 71/1,2

TOP


நேர்பட்டது (1)

நின் தாதை அன்றேயும் நீயும் பிடித்தாய் நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே – கிட்-மிகை:7 6/4

TOP


நேர்பட (1)

நினைவரால் அரிய நன்னீர் நேர்பட புலவர் போற்றும் – கிட்:13 35/2

TOP


நேர்மை (2)

நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்-பால் நவை அற உணரலாமே – கிட்:7 125/2,3
நின்ற நேர்மை நினைத்திலன் மானிடன் – யுத்2-மிகை:15 40/3

TOP


நேர்மையினால் (1)

நில்லா உலகின் நிலை நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்-தாம் – ஆரண்:11 52/1,2

TOP


நேர்மையை (1)

நேர்மையை பருமை செய்த நிறை நறும் கூந்தல் நீத்தம் – கிட்:13 59/4

TOP


நேர்வது (1)

தான் நேர்வது தீது எனவே தணிவேன் – யுத்3:21 5/2

TOP


நேர்வர் (2)

நின்றனன் அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னா – சுந்:2 40/2
நிருதி தன் குல புதல்வர் நின் குலத்துக்கு நேர்வர்
பருதி தேவர்கட்கு என தக்க பண்பினர் பான – யுத்3:30 20/1,2

TOP


நேர்வரும் (1)

நிறுக்க நேர்வரும் வீரர் நெருக்கலால் – யுத்2:15 15/3

TOP


நேர்வரோ (2)

நின்னை இ உலகினில் நிருபர் நேர்வரோ – பால:5 77/4
நீயுமே நிகர் பிறர் நிகர்க்க நேர்வரோ – யுத்1:4 3/4

TOP


நேர்வல் (1)

உண்பாய் எனது ஆக்கையை யான் உதவற்கு நேர்வல்
விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால் – சுந்:1 56/2,3

TOP


நேர்வார் (3)

பகை நேர்வார் உளர் ஆன பண்பினால் – கிட்:8 15/2
அன்று நான் வஞ்சம் செய்தது ஆர் எனக்கு அமரில் நேர்வார் – சுந்:3 139/4
கார்த்தவீரியனை நேர்வார் உளர் என கருதல் ஆற்றேன் – யுத்2:16 25/2

TOP


நேர்வான் (2)

நீல கிரி-மேல் நிமிர் பொன்_கிரி நேர்வான் – யுத்2:18 247/4
நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான்
ஒன்றும் கேட்கிலம் என்றது அ குரக்கு_இனம் உரையால் – யுத்3:31 35/2,3

TOP


நேர்வுறா (1)

நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா – யுத்4:37 182/4

TOP


நேர்வோர் (1)

நெக்கு நோக்குவோர் நல்வினை பயன் என நேர்வோர்
பக்கம் நோக்கல் என் பருவரல் இன்பம் என்று இரண்டும் – அயோ:4 210/2,3

TOP


நேர (4)

தேவர்-தம் படைகள் செப்ப செவ்விது என்று அவனும் நேர
பூவை போல் நிறத்தினாற்கு புறத்தொழில் புரிந்த அன்றே – பால:8 3/3,4
ஆன்றுற்ற வானோர் குறை நேர அரக்கி ஆகி – சுந்:1 53/3
நினைவது ஓதுவது என் பெயர் நினக்கு இது நேர
அனையர் அஞ்சுவர் மைந்த நீ யாரிடை அறிந்தாய் – யுத்1:3 48/3,4
நெடும் பாற்கடல் கிடந்தாரும் பண்டு இவர் நீர் குறை நேர
விடும் பாக்கியம் உடையார்களை குலத்தோடு அற வீட்டி – யுத்3:27 143/1,2

TOP


நேரலர் (1)

அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – யுத்3:31 114/4

TOP


நேரா (11)

நீசம் உற வானின் நெடு மா மலயம் நேரா
ஈசன் நிகர் ஆய் உலகு சீர் பெற இருந்தான் – ஆரண்:3 40/3,4
நில் நின்று காண்டி யான் செய் நிலை என விரும்பி நேரா
முன் நின்ற பின்வந்தோனை நோக்கினன் மொழியலுற்றான் – ஆரண்:7 59/3,4
நின்று காண்டிர் என் நெடும் சிலை வலி என நேரா
சென்று தாக்கினன் தேவரும் மருள்-கொண்டு திகைத்தார் – ஆரண்:8 8/2,3
நின்றன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா – கிட்:3 26/4
நீள் வானகத்தினிடை ஏகு நெறி நேரா
ஆழ்வான் அணுக்கன் அவள் ஆழ் பில வயிற்றை – சுந்:1 67/2,3
நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையா-முன் – சுந்:2 79/3
வை எயிற்றாலும் நேரா மணி இழந்து இரங்கலாலும் – யுத்1:13 2/1
குன்று உரைத்தாலும் நேரா குவவு தோள் நிலத்தை கூட – யுத்2:17 17/2
அ கணனே அயில் வாளினர் நேரா
மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார் – யுத்3:20 7/1,2
நின்-மின் யான் இது விலக்குவென் என்று உரை நேரா
மின்னும் வேலினை விண்ணவர் கண் புடைத்து இரங்க – யுத்4:32 32/2,3
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற – யுத்4:33 11/3

TOP


நேராகேனோ (1)

ஐயா கைகேசியை நேராகேனோ நான் என்றான் – அயோ:4 64/4

TOP


நேராய் (1)

இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும் – யுத்2:17 61/3

TOP


நேரானது (1)

நெஞ்சு நேரானது உம்மை நினைப்பு விட்டு ஆவி நீக்க – யுத்2:17 10/3

TOP


நேரிது (2)

நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ – கிட்:7 114/3
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான் – யுத்2:19 225/4

TOP


நேரில் (1)

நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான் – சுந்:10 34/4

TOP


நேரிலா (1)

எய்ய நேரிலா சிலையினை மடக்கினன் இராமன் – யுத்4-மிகை:41 39/4

TOP


நேரினர் (2)

என் நேரினர் என் நேரினர் என்று யாவரும் எண்ண – யுத்3:31 114/1
என் நேரினர் என் நேரினர் என்று யாவரும் எண்ண – யுத்3:31 114/1

TOP


நேரினும் (2)

நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும்
வென்றி வெம் சிலை அலால் பிறிது வேண்டுமோ – கிட்:7 34/1,2
நின்றனன் அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னா – சுந்:2 40/2

TOP


நேருதும் (1)

நேருதும் என்றார் – சுந்:13 43/3

TOP


நேருநரை (1)

நெய் நிலைய வேல் அரசன் நேருநரை இல்லான் – ஆரண்:10 41/1

TOP


நேரும் (5)

செருவில் நேரும் நிருதரை தேடுவார் – ஆரண்:7 4/4
நேரும் அன்று மறைந்து நிராயுதன் – கிட்:7 96/3
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ – சுந்:3 119/2
கரந்திலன் தனித்து ஒருத்தன் நேரும் வந்து காலினான் – யுத்3:31 74/4
பொன்னையே இரும்பு நேரும் ஆயினும் பொரு அன்று என்றான் – யுத்4-மிகை:42 64/4

TOP


நேருமோ (1)

நிணம் தரு நெடும் தடிக்கு உலகு நேருமோ
பிணம் தலைப்பட்டது பெயர்வது எங்கு இனி – யுத்2:16 103/2,3

TOP


நேரே (11)

நேரே பட்டவர் பட மாடே தனி நில்லா உயிரொடு நின்றாரே – சுந்:10 29/4
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே
சென்றான் வன் திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான் விழி எரிகின்றான் – சுந்:10 31/3,4
நீண்ட வாள் எயிற்று அரக்கனை கண்களின் நேரே
காண்டல் வேண்டி இ உயிர் சுமந்து எதிர் சில கழறி – சுந்:12 54/1,2
நிலையுற செறிந்த வெள்ளம் நூற்று இரண்டு எனினும் நேரே
குலை உற குளித்த வாளி குதிரையை களிற்றை ஆளை – யுத்2:16 18/2,3
நிந்தனை நின்னை செய்வர் நல்லது நினைந்தாய் நேரே
வந்தனை புரிவர் அன்றே வீரராய் வசையின் தீர்ந்தார் – யுத்2:16 188/3,4
சென்று விண்ணொடும் பொறியொடும் தீச்செல சேவகன் செனி நேரே
வென்று தீர்க என விட்டனன் அது வந்து பட்டது மேல் என்ன – யுத்2:16 325/3,4
நீயும் நின் கிளையும் மற்று இ நெடு நில வரைப்பும் நேரே
மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிர திண் தோள் – யுத்2:17 67/1,2
வில் எடுத்து உருத்து நின்ற வீரருள் வீரன் நேரே
கல் எடுத்து எறிய வந்த அனுமனை கண்ணின் நோக்கி – யுத்3:27 91/1,2
நேரே நினைகின்றவர் நீ நினைவாய் – யுத்3-மிகை:28 5/2
குன்று அன தோற்றத்தான்-தன் கொடி நெடும் தேரின் நேரே
சென்றது அ இராமன் திண் தேர் விளைந்தது திமில திண் போர் – யுத்4:37 12/3,4
நேரே செல்வென்-கொல் என் அரக்கன் நிமிர்வு எய்தி – யுத்4:37 136/3

TOP