கே-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேகய 3
கேகயத்து 1
கேகயம் 3
கேகயர் 7
கேகயர்_கோன் 5
கேகயற்கு 1
கேகயன் 17
கேசரி 5
கேசரி-தனக்கு 1
கேசவன் 1
கேட்க 5
கேட்கல் 1
கேட்கவும் 1
கேட்கவே 1
கேட்கவோ 1
கேட்கிலம் 1
கேட்கிலர் 1
கேட்கிலன் 1
கேட்கிலா 1
கேட்கிலை 2
கேட்கிற்பாய்-ஆகின் 1
கேட்கின்ற 1
கேட்கும் 3
கேட்ட 39
கேட்ட-பின் 1
கேட்டதும் 1
கேட்டதோ 1
கேட்டல் 1
கேட்டலும் 29
கேட்டலோடும் 1
கேட்டவள் 1
கேட்டவன் 1
கேட்டள் 1
கேட்டற்கு 1
கேட்டன 1
கேட்டனர் 1
கேட்டனன் 9
கேட்டனென் 2
கேட்டாய் 2
கேட்டாயோ 1
கேட்டார் 8
கேட்டால் 2
கேட்டாள் 2
கேட்டான் 21
கேட்டி 19
கேட்டி-ஆயின் 1
கேட்டிட 1
கேட்டியால் 20
கேட்டிரால் 1
கேட்டிருக்கும் 1
கேட்டிரேல் 1
கேட்டிலர்-ஆயினும் 1
கேட்டிலன் 1
கேட்டிலிர் 1
கேட்டிலீர் 1
கேட்டிலேன் 2
கேட்டிலை 2
கேட்டிலோமே 1
கேட்டு 65
கேட்டும் 8
கேட்டே 2
கேட்டேன் 1
கேட்டேனோ 1
கேட்டோர் 2
கேட்ப 5
கேட்ப-மன்னோ 1
கேட்பதானான் 1
கேட்பது 3
கேட்பதும் 1
கேட்பரேல் 1
கேட்பவர் 2
கேட்பவே 1
கேட்பன 1
கேட்பாரோ 1
கேட்புறாத-முன் 1
கேட்பேன் 1
கேட்போர் 2
கேட 1
கேடக 5
கேடகங்கள் 1
கேடகத்தோடு 1
கேடகம் 14
கேடு 38
கேடு_இல் 1
கேடு_இலா 1
கேடும் 2
கேடுற 1
கேண்-மின் 4
கேண்-மின்கள் 1
கேண்ம் 2
கேண்மை 8
கேண்மையர் 1
கேண்மையின் 2
கேண்மோ 4
கேணியில் 1
கேதங்கள் 1
கேதத்தால் 1
கேதம் 1
கேதனன் 1
கேவல 1
கேவலத்து 1
கேழ் 28
கேழ்_இல் 1
கேழ்_இலாள் 1
கேழது 1
கேழல் 2
கேழன 1
கேள் 63
கேள்-தொறும் 1
கேள்-மின் 1
கேள்வர் 1
கேள்வரை 1
கேள்வற்கு 1
கேள்வன் 5
கேள்வனுக்கு 1
கேள்வனை 2
கேள்வி 27
கேள்விய 1
கேள்வியர் 4
கேள்வியன் 7
கேள்வியாய் 3
கேள்வியார் 4
கேள்வியால் 2
கேள்வியாளன் 1
கேள்வியான் 1
கேள்வியின் 3
கேள்வியீர் 1
கேள்வியும் 3
கேளலை 1
கேளா 26
கேளாத 1
கேளாது 2
கேளாய் 8
கேளாயோ 1
கேளார் 1
கேளான் 4
கேளிர் 2
கேளிரின் 1
கேளீர் 1
கேளீரோ 1
கேளேன் 1
கேளொடு 2
கேளோடு 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


கேகய (3)

நளிர் புனல் கேகய நாடு நண்ணினான் – பால:24 49/4
நடந்த கோசலை கேகய நாட்டு இறை – அயோ:4 29/1
கேகய நெடும் குலம் என சிலர் கிடந்தார் – அயோ:5 13/2

TOP


கேகயத்து (1)

கேகயத்து அரசன் பயந்த விடத்தை இன்னது ஒர் கேடு சூழ் – அயோ:3 52/3

TOP


கேகயம் (3)

கேகயம் நவில்வன கிளர் இள வளையின் – பால:2 48/3
கேணியில் வளை முரல் கேகயம் புக – பால:24 47/3
கிடந்த போன்றன கேகயம் தோகைகள் கிளர – அயோ:9 43/2

TOP


கேகயர் (7)

வள்ளலையே அனையானை கேகயர்_கோன் மகள் பயந்தாள் – பால:12 23/4
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – அயோ:4 35/2
சொன்னாள் ஆகாள் என முன் தொழு கேகயர்_கோன் மகளை – அயோ:4 36/2
கொண்டாள் வரம் இரண்டு கேகயர்_கோன் கொம்பு அவட்கு – அயோ:4 90/1
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த – அயோ:6 29/1
தொழுது கேகயர் கோ_மகன் சொல்லொடும் – அயோ:11 7/2
தெவ் மடங்கிய சேண் நிலம் கேகயர்
தம் மடந்தை உன் தம்பியது ஆம் என – சுந்:3 19/1,2

TOP


கேகயர்_கோன் (5)

வள்ளலையே அனையானை கேகயர்_கோன் மகள் பயந்தாள் – பால:12 23/4
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – அயோ:4 35/2
சொன்னாள் ஆகாள் என முன் தொழு கேகயர்_கோன் மகளை – அயோ:4 36/2
கொண்டாள் வரம் இரண்டு கேகயர்_கோன் கொம்பு அவட்கு – அயோ:4 90/1
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த – அயோ:6 29/1

TOP


கேகயற்கு (1)

கேகயற்கு இறை திருமகள் கிளர் இள வரிகள் – அயோ:2 70/3

TOP


கேகயன் (17)

மாசு அறு கேகயன் மாது மைந்தனை – பால:5 102/4
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம் – பால:23 94/1
தொண்டை வாய் கேகயன் தோகை கோயில் மேல் – அயோ:2 48/1
எய்தி அ கேகயன் மடந்தை ஏடு அவிழ் – அயோ:2 50/1
அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம் – அயோ:2 86/1
தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை – அயோ:3 4/4
பெண்ணே வண்மை கேகயன் மானே பெறுவாயேல் – அயோ:3 32/3
கேகயன் மடந்தை கிளர் ஞாலம் இவன் ஆள – அயோ:3 101/2
ஆதி அரசன் அரும் கேகயன் மகள் மேல் – அயோ:4 103/1
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன் – அயோ:5 5/2
எங்கள் கோ_மகற்கு இனி என்னின் கேகயன்
நங்கையே கடைமுறை நல்லள் போலுமால் – அயோ:5 24/3,4
வடி தாழ் கூந்தலில் கேகயன் மாதே மதியாலே – அயோ:6 19/1
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை போய் – அயோ:12 25/3
மல்கிய கேகயன் மடந்தை வாசகம் – அயோ:12 41/1
கனம் குழை கேகயன் மகளின் கண்ணிய – அயோ:12 51/1
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என் – சுந்:5 78/2
அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல் – யுத்4:40 104/1

TOP


கேசரி (5)

நம்பனை தந்த கேசரி கடல் என நடந்தான் – கிட்:12 5/4
அவன் காண் நெடும் கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான் – யுத்1:11 30/4
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – யுத்2:19 59/4
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான் – யுத்3:22 173/4
கெவனொடு கெவாக்கன் தூம்பன் கேசரி கெந்தமாதன் – யுத்4-மிகை:42 41/1

TOP


கேசரி-தனக்கு (1)

கேசரி-தனக்கு தந்தான் கிளர் மணி முழவு தோளான் – யுத்4-மிகை:42 61/4

TOP


கேசவன் (1)

கேசவன் சிறுவர் என்ற இந்த தன்மையோர்-தம்மை கேளாய் – யுத்2:17 21/2

TOP


கேட்க (5)

அனையவர் கேட்க ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகி தோன்ற – பால:8 4/2
கேட்க தட கையாலே கிளர் ஒளி வாளும் பற்றி – பால:14 52/1
மிக்கன கேட்க என விளம்பல் மேயினாள் – சுந்:3 41/4
அன்ன நடையாய் கேட்க என அறிவன் அறைவான் ஆயினான் – சுந்:4 59/4
யான் உளென் கேட்க என்றால் என் சொலாய் யாது செய்யாய் – யுத்2:17 20/4

TOP


கேட்கல் (1)

வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல் – யுத்3:22 149/2

TOP


கேட்கவும் (1)

பாடவும் விறலியர் பாடல் கேட்கவும்
ஆடவும் அகன் புனல் ஆடி அம் மலர் – பால:3 65/2,3

TOP


கேட்கவே (1)

இனைந்தனன் வானரர் எவரும் கேட்கவே
நினைந்து கண்ணீர் விழ நெடிது உயிர்த்தனர் – கிட்-மிகை:16 12/2,3

TOP


கேட்கவோ (1)

இனையன கேட்கவோ எம்மனோர்களை – யுத்1:4 57/3

TOP


கேட்கிலம் (1)

ஒன்றும் கேட்கிலம் என்றது அ குரக்கு_இனம் உரையால் – யுத்3:31 35/3

TOP


கேட்கிலர் (1)

பெறுவது யாது ஒன்றும் காண்கிலர் கேட்கிலர் பெயர்ந்தார் – சுந்:9 3/2

TOP


கேட்கிலன் (1)

முழுதும் நோக்கி நீ வேதியன் கேட்கிலன் முனிய – யுத்1:3 39/3

TOP


கேட்கிலா (1)

எ உலகத்தும் நின் ஏவல் கேட்கிலா
தெவ்வினை அறுத்து உனக்கு அடிமை செய்த யான் – யுத்1:2 30/1,2

TOP


கேட்கிலை (2)

உரை-செய கேட்கிலை உணர்தியோ என்றாள் – அயோ:2 68/4
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு – யுத்4:40 81/3

TOP


கேட்கிற்பாய்-ஆகின் (1)

கேட்கிற்பாய்-ஆகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை – யுத்2:16 159/2

TOP


கேட்கின்ற (1)

கேட்கின்ற வீரம் எல்லாம் கிளத்துவீர் கிளத்தல் வேண்டா – யுத்3:27 83/2

TOP


கேட்கும் (3)

கேட்கும் மென் மழலை சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள் – பால:19 13/2
காண்டற்கு இனியாள் உரு கண்டவள் கேட்கும் ஆற்றால் – ஆரண்:10 146/3
கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றோயை – சுந்:3 132/1

TOP


கேட்ட (39)

கேட்ட வாசவன் அன்னவட்கு அடிமையில் கிடைத்து – பால-மிகை:9 27/1
கேட்ட வேந்தனும் மதலையர்க்கு அ மொழி கிளத்த – பால-மிகை:9 33/1
திருந்தினார் அன்ன சொல் கேட்ட செய் கழல் – அயோ:2 10/2
மாழை ஒண் கணி உரை-செய கேட்ட மந்தரை என் – அயோ:2 87/1
வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை – அயோ:3 10/1
ஒப்பதே முன்பு பின்பு அ வாசகம் உணர கேட்ட
அ பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா – அயோ:3 112/3,4
என்பத்தை கேட்ட மைந்தன் இராமனுக்கு இளையார் என்று – அயோ:13 43/1
அ உரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் செய்கை – ஆரண்:6 33/1
வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான் – ஆரண்:10 83/4
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார் – ஆரண்:12 51/1
இற்று எலாம் அரக்கி ஆங்கே எடுத்து அவள் இயம்ப கேட்ட
கொற்ற வாள் அரக்கன் முன்னே கொண்ட வெம் கோப தீயில் – ஆரண்-மிகை:10 17/1,2
கேள்வி நூல் மறை வலாள என்றனன் என்ன கேட்ட
பாழி அம் தடம் தோள் வென்றி மாருதி பதும செம் கண் – கிட்:2 30/2,3
அ உரை அமைய கேட்ட அரி_குலத்து_அரசும் மாண்ட – கிட்:7 122/1
மாருதி மாற்றம் கேட்ட மலை புரை வயிர தோளான் – கிட்:11 67/1
பொருள் உடை அ உரை கேட்ட போழ்து வான் – கிட்:11 128/1
அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி ஐய கேண்மோ – சுந்:10 22/1
அ வழி அ உரை கேட்ட ஆண்தகை – சுந்:11 1/1
என்ன கேட்ட அரக்கனுக்கு ஈறு இலா – சுந்-மிகை:12 7/1
முற்றுற கேட்ட பின் முனிதி மொய்ம்பினோய் – யுத்1:2 74/4
கேட்ட ஆண்தகை கரத்தொடு கரதலம் கிடைப்ப – யுத்1:2 100/1
இ பொருள் கேட்ட நீர் இயம்புவீர் இவன் – யுத்1:4 55/2
கேட்ட ஆற்றினால் கிளி_மொழி சீதையை கிடைத்தும் – யுத்1:5 70/3
என அவர் இயம்ப கேட்ட இறைவனுக்கு இலங்கை வேந்தன் – யுத்1-மிகை:9 6/1
ஆங்கு அவர் புகல கேட்ட ஐயனும் அவரை நோக்கி – யுத்1-மிகை:9 7/1
அ உரை கேட்ட நங்கை செவிகளை அமைய பொத்தி – யுத்2:17 64/1
அன்னது கேட்ட மைந்தன் அரும்பு இயல் முறுவல் தோன்ற – யுத்2:18 189/1
என்பது சொல்ல கேட்ட இந்திரவில்லினோடும் – யுத்2:19 90/1
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார் மாதர் – யுத்2:19 284/3
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார் – யுத்2:19 284/4
என்றனன் என்ன கேட்ட இராவணன் இதனை சொன்னான் – யுத்2:19 290/4
ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும் முரசம் ஆர்ப்ப – யுத்3:20 1/1
சங்கத்தின் முழக்கம் கேட்ட கவி பெரும் தானை யானை – யுத்3:22 13/1
தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செம் கணான் – யுத்3:24 103/3
அ உரை அமைய கேட்ட வீடணன் அலங்கல் மோலி – யுத்3:27 171/1
கேட்ட அண்ணலும் முறுவலும் சீற்றமும் கிளர – யுத்3:31 34/1
வீரன் மற்று அதனை கேட்ட இளையவன் விளம்பலுற்றான் – யுத்3:31 61/4
என்றனள் இறைவி கேட்ட இராக்கதர்க்கு இறைவன் நீல – யுத்4:40 28/1
கேட்ட தோன்றல் கிளர் தட கைகளால் – யுத்4:41 62/1
அவ் உரை புகல கேட்ட அறிவனும் அருளின் நோக்கி – யுத்4-மிகை:41 172/1

TOP


கேட்ட-பின் (1)

நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான் – யுத்3:31 35/2

TOP


கேட்டதும் (1)

கண்டதும் கேட்டதும் கழறுவாய் என்றான் – யுத்1:4 48/4

TOP


கேட்டதோ (1)

கேட்டதோ கண்டதோ கிளத்துவீர் என்றான் – சுந்:7 60/4

TOP


கேட்டல் (1)

சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர் செறுநர் எல்லாம் – யுத்2:15 142/4

TOP


கேட்டலும் (29)

நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர் – பால:7 41/3
பொன்னை ஏய் சடையான் கூற கேட்டலும் பூமி கேள்வன் – பால:9 16/1
பழுதிலாதவன் உரைத்த சொல் கேட்டலும் பரிவால் – பால-மிகை:9 38/1
மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனை – அயோ:1 41/1
மொழிந்தது கேட்டலும் மொய்த்து நெஞ்சினை – அயோ:1 83/1
அ உரை கேட்டலும் அசனி_ஏறு என – அயோ:11 58/1
தாள் உறு குரிசில் அ தாய் சொல் கேட்டலும்
கோள் உறு மடங்கலின் குமுறி விம்முவான் – அயோ:11 95/1,2
செஞ்செவே முனிவரன் செப்ப கேட்டலும்
நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும் – அயோ:12 12/2,3
உரைத்த வாசகம் கேட்டலும் உள் எழுந்து – அயோ:14 5/1
உரைத்த வாசகம் கேட்டலும் உலகு எலாம் உலைய – ஆரண்:7 73/1
அ உரை கேட்டலும் அசனி ஏற்றினால் – கிட்:16 33/1
என்று அற துறை கேட்டலும் இருபது நயனம் – சுந்:3 133/1
கேட்டலும் வெகுளி வெம் தீ கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி – சுந்:10 1/1
கேட்டலும் கிளர் சுடர் கெட்ட வான் என – சுந்:12 26/1
வென்றி கேட்டலும் வீடு பெற்றார் என வியந்தார் – யுத்1:5 73/4
சொற்ற வார்த்தையை கேட்டலும் தொல் உயிர் – யுத்1:14 39/1
என்னும் வாசகம் கேட்டலும் எழுந்து நன்று இறைவன் – யுத்1-மிகை:3 10/1
கேட்டலும் நளன் என்று ஓதும் கேடு இலா தச்சன் கேள்வி – யுத்1-மிகை:9 3/1
சிங்க_ஏறு அசனி_ஏறு கேட்டலும் சீற்ற சேனை – யுத்2:19 276/1
மற்று அ வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து – யுத்3:30 39/1
கேட்டலும் வெகுளியோடு துணுக்கமும் இழவும் கிட்டி – யுத்4:34 11/2
ஐயன் வாசகம் கேட்டலும் அரி_குலத்து அரசும் – யுத்4:41 14/1
தாய் சொல் கேட்டலும் தந்தை சொல் கேட்டலும் – யுத்4:41 79/1
தாய் சொல் கேட்டலும் தந்தை சொல் கேட்டலும்
பாசத்து அன்பினை பற்று அற நீக்கலும் – யுத்4:41 79/1,2
என்ற வாசகம் கேட்டலும் வானரர் இறங்கி – யுத்4-மிகை:41 9/1
அன்ன வாசகம் கேட்டலும் அந்தணர் கோவும் – யுத்4-மிகை:41 157/1
என்ற வாசகம் கேட்டலும் இரும் தவத்து எவரும் – யுத்4-மிகை:41 162/1
அ உரை கேட்டலும் அறிவின் வேலையான் – யுத்4-மிகை:41 215/1
முரசு ஒலி கேட்டலும் முழங்கு மா நகர் – யுத்4-மிகை:41 217/1

TOP


கேட்டலோடும் (1)

சொற்றது கேட்டலோடும் துணுக்குற உணர்வு சோர – யுத்3:26 57/1

TOP


கேட்டவள் (1)

அன்னது கேட்டவள் அரச ஆயவற்கு – கிட்:7 30/1

TOP


கேட்டவன் (1)

கேட்டவன் யாவரே அ மதுவனம் கேடு சூழ்ந்தார் – சுந்-மிகை:14 8/1

TOP


கேட்டள் (1)

நின்றான் அப்புறத்து அரக்கன் நிலை கேட்டள் மயன் பயந்த நெடும் கண் பாவை – யுத்4:38 11/4

TOP


கேட்டற்கு (1)

புன் மகன் கேட்டி கேட்டற்கு உரியது புகுந்த போரின் – யுத்2:17 59/1

TOP


கேட்டன (1)

இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன
சந்திரன் முதலிய தாரகை குழாம் – கிட்:7 18/2,3

TOP


கேட்டனர் (1)

கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்பு கேட்டனர் என்ன கேட்டார் – யுத்2:15 127/4

TOP


கேட்டனன் (9)

அண்ணல் அன்ன சொல் கேட்டனன் அன்றியும் – அயோ:4 222/1
கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி – அயோ:13 34/1
கேட்டனன் உரை கண்டனன் கண்ணினால் – ஆரண்:7 8/1
கேட்டனன் என்ப-மன்னோ கேள்வியால் செவிகள் முற்றும் – ஆரண்:16 7/3
கேட்டனன் அமலனும் கிளந்தவாறு எலாம் – கிட்:5 15/1
ஆர்ப்பு ஒலி கேட்டனன் அமளி-மேல் ஒரு – கிட்:7 13/3
என்றலும் கேட்டனன் எருவை வேந்தன் தன் – கிட்:16 22/1
முன்னினர் சொல அவன் முன்பு கேட்டனன் – சுந்-மிகை:10 9/4
கேட்டனன் இருந்தும் அ கேள்வி தேர்கலா – யுத்1:4 1/1

TOP


கேட்டனென் (2)

கேட்டனென் கண்டிலென் கெழுவு கங்கை நீர் – ஆரண்:12 38/1
கேட்டனென் நறவால் கேடு வரும் என கிடைத்த அ சொல் – கிட்:11 95/1

TOP


கேட்டாய் (2)

கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ – யுத்2:18 267/3
அச்சென கேட்டாய் அன்றே ஆயிரம் மௌலி அண்ணல் – யுத்3:27 9/2

TOP


கேட்டாயோ (1)

காயாநின்றாய் ஒரு நீயும் கண்டார் சொல்ல கேட்டாயோ
பாயாநின்ற மலர் வாளி பறியாநின்றார் இன்மையால் – ஆரண்:10 114/2,3

TOP


கேட்டார் (8)

எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் – பால:13 34/4
புக்கார் அரசன் பொன்_உலகம் போனான் என்னும் பொருள் கேட்டார்
உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால் – அயோ:6 36/1,2
சொல் என்று என் வாயில் கேட்டார் தொடர்ந்து ஏழு சேனையோடும் – ஆரண்:10 64/1
கேட்டார் கொள்ளார் கண்டவர் பேணார் கிளர் போரில் – ஆரண்:15 32/1
கேட்டார் இ உரை கேட்பாரோ – சுந்:5 45/4
ஆரியன் உரைப்பதானான் அனைவரும் அதனை கேட்டார் – யுத்1:4 103/4
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்பு கேட்டனர் என்ன கேட்டார் – யுத்2:15 127/4
கிழிந்தன என்ன ஆர்த்தான் கண்டிலர் ஓசை கேட்டார் – யுத்3:28 39/4

TOP


கேட்டால் (2)

சொல்லவும் கூடும் கேட்டால் துஞ்சவும் அடுக்கும் கண்ட – கிட்:16 14/2
வழி அடித்து உண்போர் கேட்டால் வழி சொல்லாதவர்கள் வைப்பை – யுத்4-மிகை:41 77/1

TOP


கேட்டாள் (2)

வேல் விழி தாரை கேட்டாள் வந்து அவன் மேனி வீழ்ந்தாள் – கிட்:8 1/4
இங்கு உள தன்மை எல்லாம் இயைபுளி இயைய கேட்டாள்
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறிய சொன்னாள் – சுந்:14 45/1,2

TOP


கேட்டான் (21)

கண்டிலன் வினவ கேட்டான் கைகயள் கோயில் நண்ணி – அயோ:3 83/2
என்றனள் என்ன கேட்டான் எழுந்த பேர் உவகை பொங்க – அயோ:3 84/1
கேட்டான் இளையோன் கிளர் ஞாலம் வரத்தினாலே – அயோ:4 111/1
கோதை வில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான்
சீதையை நோக்கி தம்பி திருமுகம் நோக்கி தீரா – அயோ:8 17/1,2
யாண்டு என இனிது கேட்டான் எயினர்_கோன் இதனை சொன்னான் – அயோ:13 41/4
கேட்டான் நிருதர்க்கு_இறை கேழ் கிளர் தன் – ஆரண்:13 17/1
புண்டரிக கணானும் உற்றது புகல கேட்டான்
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான் – சுந்:4 76/2,3
அள்ளினன் என்ன கேட்டான் அ தொழிற்கு இழிவு தோன்ற – சுந்:6 53/2
கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் கேட்டான்
வாள் கொள் நோக்கியை பாக்கியம் பழுத்து அன்ன மயிலை – யுத்1:5 69/1,2
அரக்கர்_கோன் அதனை கேட்டான் அழகிற்றே ஆகும் என்றான் – யுத்1:14 3/1
அந்தர சித்தர் ஆர்க்கும் அமலையும் கேட்டான் ஐயன் – யுத்2:18 206/2
கேட்டான் இடை உற்றது என் என்று கிளத்தல் யாரும் – யுத்2:19 3/1
அ உரை அருள கேட்டான் அழுகின்ற அரக்கன் தம்பி – யுத்2:19 227/1
கிழிப்புற உயிர்ப்பு வீங்கி கிடந்த வாள் அரக்கன் கேட்டான் – யுத்2:19 274/4
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான்
புழுங்கிய புண்ணினானும் இனையன புகலலுற்றான் – யுத்2:19 286/3,4
தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரிய கேட்டான்
நீ கரன் புதல்வன்-கொல்லோ நெடும் பகை நிமிர வந்தாய் – யுத்3:21 18/1,2
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும் பகர கேட்டான்
வரன்முறை தவிர்ந்தான் வல்லை தருதிர் என் மகனை என்றான் – யுத்3:22 1/3,4
கிழித்தது கிழித்தது என்னும் நாண் உரும் ஏறு கேட்டான்
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் – யுத்3:22 148/3,4
உய்ந்தனம் உய்ந்தோம் என்ற வீடணன் உரையை கேட்டான் – யுத்3:24 19/4
ஆயிரம் புரவி பூண்ட தேரின் பேர் அரவம் கேட்டான் – யுத்3:28 17/4
செய்தலை உற்ற ஓசை செயலதும் செவியின் கேட்டான் – யுத்4:34 20/4

TOP


கேட்டி (19)

செவ்வியோய் கேட்டி மேல்_நாள் செறி சுடர் குலிசத்து அண்ணல் – பால:9 17/2
புரிகிலென் நின்னொடு இன்னம் புகல்வது கேட்டி என்றான் – பால:24 31/4
வடித்த மாதவ கேட்டி இ வள்ளல்-தான் – பால-மிகை:11 5/1
வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான் – அயோ:14 116/4
காண்டி எனின் குறி கேட்டி என வேறு கொண்டு இருந்து கழறலுற்றான் – கிட்:13 32/4
தூய நீ கேட்டி என் துணைவி ஆம் எனா – சுந்:3 31/3
அன்றியும் கேட்டி என்று அறைதல் மேயினாள் – சுந்:3 36/4
சொல் இது தெரிய கேட்டி துரும்பு என கனன்று சொன்னாள் – சுந்:3 112/4
கேட்டி அடியேன் உரை முனிந்தருளல் கேளான் – சுந்:5 2/1
உறுதி கேட்டி உயிர் நெடிது ஓம்புவாய் – சுந்:12 87/4
என் பெரும் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான் – சுந்:14 26/4
கேட்டி வெம் கடு எனா கிளர் உற்பாதமாய் – சுந்-மிகை:3 9/3
தன்னை உள்ளவா கேட்டி என்று உரை-செய சமைந்தான் – யுத்1:2 118/4
புன் மகன் கேட்டி கேட்டற்கு உரியது புகுந்த போரின் – யுத்2:17 59/1
ஆதலின் இறைவ கேட்டி அவன் பெரும் தேவியான – யுத்2-மிகை:16 4/1
இ உரை கேட்டி என்னா இனையன் விளம்பலுற்றான் – யுத்3:27 171/4
பொன் தொடி தெரிவை யான் என் புகழுகேன் கேட்டி அன்பால் – யுத்4-மிகை:41 61/2
பரதனது இயல்பும் இன்றே பணிக்குவென் கேட்டி என்றான் – யுத்4-மிகை:41 166/4
வெவ் அரம் பொருத வேலோய் விளம்புகேன் கேட்டி வேண்டிற்று – யுத்4-மிகை:41 172/2

TOP


கேட்டி-ஆயின் (1)

காரணம் கேட்டி-ஆயின் கடை இலா மறையின்-கண்ணும் – சுந்:12 74/1

TOP


கேட்டிட (1)

கருத கேட்டிட கட்டுரைத்து இடர் கடல் கடக்க – யுத்1:3 40/3

TOP


கேட்டியால் (20)

அன்னவள் யாவள் என்று அறைய கேட்டியால் – பால-மிகை:7 2/4
புலக்கு உரித்து ஒரு பொருள் புகல கேட்டியால் – அயோ:14 40/4
ஒன்று உளது உரை இனம் உணர கேட்டியால் – அயோ:14 120/4
நின்ற நீதியாய் நெடிது கேட்டியால்
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா – கிட்:3 36/3,4
சான்று உள அன்னவை தையல் கேட்டியால் – கிட்:7 25/4
மறந்தனென் இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன் – சுந்:3 34/1,2
வெயிலினும் மெய்யன விளம்ப கேட்டியால் – சுந்:3 39/4
இங்கு இதின் அற்புதம் இன்னும் கேட்டியால் – சுந்:3 48/4
என்றனள் இயம்பி வேறு இன்னும் கேட்டியால்
இன்று இவண் இப்பொழுது இயைந்தது ஓர் கனா – சுந்:3 50/1,2
வாழியாய் கேட்டியால் வாழ்வு கைம்மிக – யுத்1:4 10/1
மேயது கேட்டியால் விளைவு நோக்குவாய் – யுத்1:4 58/4
நகையுறல் இன்றியே நயந்து கேட்டியால் – யுத்1:4 76/4
மேயின சில பொருள் விளம்ப கேட்டியால் – யுத்1:4 86/4
பொருள் உளது எமக்கு அது புகல கேட்டியால் – யுத்1-மிகை:5 1/4
நாயக அறிந்தமை நவில கேட்டியால் – யுத்1-மிகை:5 7/4
செய் திறம் அன்னது தெரிய கேட்டியால் – யுத்2:16 83/4
காதலால் கருமம் ஒன்று கேட்டியால் களித்த சிந்தை – யுத்4:37 6/2
கேட்டியால் என அரக்கர்கள் கிளர் பெரும் செருவில் – யுத்4:40 120/3
கிட்கிந்தை இதுவேல் ஐய கேட்டியால் எனது பெண்மை – யுத்4:41 27/1
இங்கண் நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால் – யுத்4:41 85/4

TOP


கேட்டிரால் (1)

என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால் – அயோ:1 12/4

TOP


கேட்டிருக்கும் (1)

இரணியாய நம என்று கொண்டு ஏத்தல் கேட்டிருக்கும் – யுத்1-மிகை:3 3/4

TOP


கேட்டிரேல் (1)

கிற்றும் கேட்டிரேல் என்றனன் கிளத்துவான் துணிந்தான் – யுத்3:30 39/4

TOP


கேட்டிலர்-ஆயினும் (1)

செவிகளால் பல கேட்டிலர்-ஆயினும் தேவர்க்கு – யுத்1:3 32/1

TOP


கேட்டிலன் (1)

கேட்டிலன் முரசின் கிளர் ஓதையே – அயோ:11 30/4

TOP


கேட்டிலிர் (1)

பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர் போலும் என்றாள் – ஆரண்:12 56/3

TOP


கேட்டிலீர் (1)

கேட்டிலீர் இனி காண்டிர் கிடைத்திரால் – கிட்:11 28/4

TOP


கேட்டிலேன் (2)

கேட்டிலேன் அல்லேன் இன்று கண்டும் அ கிளி_அனாளை – யுத்1:12 39/3
என்னத்தான் கேட்டிலேன் என் ஆனவாறு இதுவே – யுத்2:17 84/4

TOP


கேட்டிலை (2)

அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா – சுந்:3 118/4
கண்டிலை முன்பு சொல்ல கேட்டிலை கடன் ஒன்று எம்-பால் – யுத்2:19 269/1

TOP


கேட்டிலோமே (1)

கிடந்தது கண்டது உண்டோ நாண் ஒலி கேட்டிலோமே
தொடர்ந்து போய் அயோத்தி-தன்னை கிளையொடும் துணிய நூறி – யுத்3:27 70/2,3

TOP


கேட்டு (65)

ஐயன் அங்கு அது கேட்டு அறன் அல்லவும் – பால:7 44/1
அ உரை கேட்டு அ முனியும் அருள் சுரந்த உவகையன் ஆய் – பால:12 19/1
மங்கையர் பாடல் கேட்டு கின்னரம் மயங்கும்-மாதோ – பால:16 9/4
மூசிய கூந்தல் மாதர் மொய்த்த பேர் அமலை கேட்டு
கூசின அல்ல பேச நாணின குயில்கள் எல்லாம் – பால:17 6/2,3
பொற்றொடி கேட்டு வெம் கனலின் பொங்குறா – பால-மிகை:7 13/2
அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன் – பால-மிகை:11 53/1
வருக என்பதாம் வாசகம் கேட்டு உளம் மகிழ்ந்தான் – பால-மிகை:14 4/4
அனையவன் வரவு கேட்டு அலங்கல் வீரனும் – அயோ:2 12/3
நன்று கேட்டு கடைப்பிடி நன்கு என – அயோ:2 14/3
தாய் உரைத்த சொல் கேட்டு தழைக்கின்ற – அயோ:4 6/1
தேர் வலான் அ உரை கேட்டு தீங்கு உறின் – அயோ:5 40/1
படி எலாம் கேட்டு நெஞ்சில் பருவரல் உழந்தான் முன்னே – அயோ:6 7/3
கனிந்த பாடல் கேட்டு அசுணமா வருவன காணாய் – அயோ:10 24/4
என்ன கேட்டு அ இரக்கம் இலாளையும் – அயோ:13 70/1
உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட – ஆரண்:3 23/1
கேட்டு உவந்தனன் கேழ் கிளர் மௌலியான் – ஆரண்:4 38/1
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை – ஆரண்:6 109/1
அ உரை கேட்டு வந்தான் அகம்பன் என்று அமைந்த கல்வி – ஆரண்:7 68/1
அழைத்தது உண்டு அது கேட்டு அயர்வு எய்துமால் – ஆரண்:11 79/3
ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல் உணர்த்தினன் உணர்த்த கேட்டு
நின்ற அ காலின் மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான் – கிட்:2 29/3,4
கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார் – கிட்:3 22/4
சொன்ன கேட்டு அவை கடைப்பிடிப்பாய் என சொன்னான் – கிட்:3 75/4
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு
நன்று உணர் கேள்வியாளன் அருள்வர நாண் உட்கொண்டான் – கிட்:11 59/1,2
எந்தை கேட்டு அருளுக என்ன இயம்பினன் இயம்ப வல்லான் – கிட்:11 60/4
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்ப கேட்டு உணர்தி என்னின் – கிட்:13 38/2
கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே – கிட்:14 54/1
நெருப்பையே விளைத்த போல நெஞ்சமும் மறுக கேட்டு
விருப்பினால் அவனை நோக்கி விளம்பினன் எண்கின் வேந்தன் – கிட்:16 16/3,4
கூறிய வாசகம் கேட்டு கோது_இலான் – கிட்:16 32/1
விளித்தான் அன்னது கேட்டு மெய்ம்மையோய் – கிட்:16 43/1
ஒன்று ஒழிவுறாமல் கேட்டு அது யோகத்தின் உணர்ச்சி பேணி – கிட்-மிகை:16 6/3
சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் என துறந்தானோ – சுந்:3 14/2
உன்னையும் கேட்டு மற்று உன் ஊற்றமும் உடைய நாளும் – சுந்:3 130/1
இன்ன மொழிய அ மொழி கேட்டு எரியின் இட்ட மெழுகு என்ன – சுந்:4 59/1
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர் மா கடல் – சுந்:5 71/2
ஆர்த்தது கேட்டு உவந்து இருத்தி அன்னை நீ – சுந்:5 71/4
ஆக இ மொழி ஆசு இல கேட்டு அறிவுற்றாள் – சுந்:5 75/1
ஓசையின் இடிப்பும் கேட்டு ஆங்கு உருத்து எழு சினத்தின் ஆகி – சுந்-மிகை:7 1/1
ஓதினர் ஓதல் கேட்டு உளம் துளங்கினான் – சுந்-மிகை:10 11/4
என்று அவன் மாற்றம் இயம்புதல் கேட்டு
குன்றம் எனும் புய வானர வீரன் – சுந்-மிகை:11 23/1,2
தன் இறைக்கு உறுகண் வெய்யோர் தாம் இயற்றலும் கேட்டு இன்னே – சுந்-மிகை:12 8/1
அன்று அவன் உரைத்தல் கேட்டு அருக்கன் மைந்தனும் – சுந்-மிகை:14 25/3
அ சொல் கேட்டு அவன் ஆழியான் என்றனை ஆயின் – யுத்1:2 112/1
பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என் பெயர் கேட்டு
எய்த்த சிந்தையர் ஏகுழி ஏகுழி எல்லாம் – யுத்1:2 116/1,2
அன்ன கேட்டு அவன் அந்தண அந்தணர்க்கு அடாத – யுத்1:3 36/1
வேந்தும் என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று அ இலங்கை – யுத்1:5 68/2
என்று அ வேதியன் இவை_இவை இயம்பலும் இது கேட்டு
ஒன்று மெய்ப்பொருள் உணர்ந்துள சிறுவனும் உரவோய் – யுத்1-மிகை:3 9/1,2
சாற்று மா முரசு ஒலி கேட்டு தானையின் – யுத்1-மிகை:8 1/1
செவி துளை இருபதூடும் தீ சொரிந்தென்ன கேட்டு
புவித்தலம் கிழிய அண்டம் பொதிர் உற திசையில் நின்ற – யுத்1-மிகை:9 14/1,2
ஆதி அம் பரன் அங்கதன் ஓதல் கேட்டு
ஈது அவன் கருத்து என்றிடின் நன்று எனா – யுத்1-மிகை:14 7/1,2
உவய லோகத்தினுள்ள சிறப்பும் கேட்டு உவந்தேன் உள்ளம் – யுத்2:16 126/2
அனகன் அது கேட்டு இது அறைந்திடுவான் – யுத்2-மிகை:18 4/4
சொல் அது கேட்டு அடி தொழுது சுற்றிய – யுத்3:22 44/1
கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றி பின் கெடாமல் எம்-பால் – யுத்3:24 62/1
கோல வில் குரல் கேட்டு குலுங்கி தம் – யுத்3:29 21/3
இழந்தனன் என்ன கேட்டு ஆங்கு இடி உறும் அரவை ஒத்தாள் – யுத்3-மிகை:29 1/4
அன்று முக்கணான் உரைத்தல் கேட்டு அவர் உளம் தெளிந்தார் – யுத்3-மிகை:31 4/4
கேட்டு அயல் இருந்த மாலி ஈது ஒரு கிழமைத்து ஆமோ – யுத்4:34 13/1
தேவர் அது கேட்டு இது செயற்கு உரியது என்றார் – யுத்4:36 6/1
ஐயன் இது கேட்டு இகல் அரக்கர் அகல் மாய – யுத்4:36 24/1
வார்த்தை உண்டு அதனை கேட்டு நாணுறு மனத்தினேற்கு – யுத்4:37 207/2
சொன்ன வாய்மை கேட்டு அனுமனும் துணைவரை பாரா – யுத்4-மிகை:41 43/3
ஆங்கது கேட்டு அருந்ததியே அனையாளும் அவதியுடன் – யுத்4-மிகை:41 80/1
என்ற வாசகம் இரும் தவன் கேட்டு இகல் இராமன் – யுத்4-மிகை:41 151/1
என்று அவன் இயம்ப கேட்டு அங்கு இருந்த மா தவனும் இந்த – யுத்4-மிகை:41 159/1
உண்ணும் வாசகம் கேட்டு இமையோர் முனிவோரும் – யுத்4-மிகை:41 206/3

TOP


கேட்டும் (8)

அஞ்சி மந்தரை அகன்றிலள் அ மொழி கேட்டும்
நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்து என்ன – அயோ:2 75/1,2
கீண்டிலென் வாய் அது கேட்டும் நின்ற யான் – அயோ:11 70/3
பெருமகன் உலைவு உறு பெற்றி கேட்டும் நீ – ஆரண்:12 13/2
கேட்டும் இ மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ – ஆரண்:12 82/4
கேட்டும் காண்டற்கு இருத்தி-கொல் கிள்ளை நீ – சுந்:3 107/2
கடுத்தது கேட்டும் ஈண்டு இங்கு இருந்துவீர் ஏது நோக்கின் – யுத்3:31 55/4
கிளப்பது கேட்டும் அன்றே அரவின்-மேல் கிடந்து மேல்_நாள் – யுத்4:34 14/3
மெய்யுறு கட்டுரை கேட்டும் மீட்டியோ – யுத்4:40 80/3

TOP


கேட்டே (2)

கேட்டே இருந்தேன் எனினும் கிளர் வான் இன்றே அடைய – அயோ:4 63/1
ஒன்று ஒழியாத வண்ணம் ஓதினான் ஓத கேட்டே
ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா உற்று என்ன – யுத்4-மிகை:41 122/2,3

TOP


கேட்டேன் (1)

என்றனர் யானே கேட்டேன் நீ அதற்கு இயைவ செய்தாய் – சுந்:3 129/4

TOP


கேட்டேனோ (1)

எம்பியோ யான் உன்னை இ உரையும் கேட்டேனோ – யுத்2:17 78/4

TOP


கேட்டோர் (2)

ஒன்றினை படித்தோர் தாமும் உரைத்திட கேட்டோர் தாமும் – பால-மிகை:0 32/3
அனையது-தன்னை சொல்வோர்க்கு அரும் பொருள் கொடுத்து கேட்டோர்
கனை கடல் புடவி மீது காவலர்க்கு அரசு ஆய் வாழ்ந்து – பால-மிகை:0 39/2,3

TOP


கேட்ப (5)

பின்னும் முனிவரர் கேட்ப கலைக்கோட்டு முனி வரின் வான் பிலிற்றும் என்றார் – பால:5 34/4
இந்திரனும் மலர் அயனும் இமையவரும் பணி கேட்ப
சுந்தரி பல்லாண்டு இசைப்ப உலகு ஏழும் தொழுது ஏத்த – ஆரண்:6 100/1,2
தன் நெடும் செல்வம் தானே பெற்றமை பலரும் கேட்ப
பல் நெடும் தானை சூழ பகலவன் சேயும் நீயும் – யுத்1:4 148/2,3
என் இவன் எழுந்த தன்மை என்று உலகு ஈன்றாள் கேட்ப
மன்னவன் இராமன் தூதன் மருந்தின்-மேல் வந்தான் வஞ்சர் – யுத்3:24 45/1,2
ஏது இ தலம் என குறு_முனிவனை கேட்ப
வாத_ராசனும் வாசுகி-தானும் முன் மலைந்த – யுத்4-மிகை:41 90/2,3

TOP


கேட்ப-மன்னோ (1)

பாதி முழுதும் இவற்கே பணி கேட்ப-மன்னோ – பால:4 2/4

TOP


கேட்பதானான் (1)

கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான் – யுத்3:31 67/4

TOP


கேட்பது (3)

சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா – அயோ:11 27/3
ஓதி கேட்பது பரம்பொருள் இன்னம் ஒன்று உளதோ – யுத்1:3 30/4
விரும்பி நான் கேட்பது உண்டால் நின்னுழை வார்த்தை வீரன் – யுத்2:17 58/1

TOP


கேட்பதும் (1)

கேட்பதும் பல் பொருட்கு ஐயம் கேடு அற – யுத்4:40 79/2

TOP


கேட்பரேல் (1)

பத்திசெய்து பரிவுடன் கேட்பரேல்
புத்திரர் தரும் புண்ணியமும் தரும் – பால-மிகை:0 36/2,3

TOP


கேட்பவர் (2)

மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம் – பால-மிகை:0 33/3
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே – பால-மிகை:0 35/4

TOP


கேட்பவே (1)

தாதிமார் என தம் பணி கேட்பவே – அயோ:14 13/4

TOP


கேட்பன (1)

எனைத்து உள கேட்பன துன்பம் யான் என்றான் – அயோ:11 59/4

TOP


கேட்பாரோ (1)

கேட்டார் இ உரை கேட்பாரோ – சுந்:5 45/4

TOP


கேட்புறாத-முன் (1)

முனிவரர் வாசகம் கேட்புறாத-முன்
நனி இதழ் துடித்திட நகைத்து வீடணன் – யுத்4:40 38/1,2

TOP


கேட்பேன் (1)

போலுமால் இவைகள் கேட்பேன் புகழ் உடைத்து அடிமை-மன்னோ – யுத்4-மிகை:41 253/4

TOP


கேட்போர் (2)

கற்றவர் கேட்போர் நெஞ்சில் கருதுவோர் இவர்கள் பார் மேல் – பால-மிகை:0 31/3
இறையவன் இராமன் வாழி இ கதை கேட்போர் வாழி – யுத்4-மிகை:42 33/3

TOP


கேட (1)

கேட கங்கண அம் கையொடும் கிளர் – யுத்3:31 120/1

TOP


கேடக (5)

கேடக தட கைகள் கவ்வி கீதத்தின் – அயோ-மிகை:14 4/3
கேடக தட கைய கிரியின் தோற்றத்த – ஆரண்:7 118/1
பருதி வாளினர் கேடக தட கையர் பரந்த – ஆரண்:7 135/3
உருவி ஓடின கேடக தட்டொடும் உடலம் – ஆரண்:8 10/4
கேடக புறத்தினால் கிழிய வீசினான் – யுத்2:16 303/4

TOP


கேடகங்கள் (1)

கேடகங்கள் துணிந்து கிடந்தன – யுத்3:31 120/2

TOP


கேடகத்தோடு (1)

கேடகத்தோடு மழு எழு சூலம் அங்குசம் கப்பணம் கிடுகோடு – சுந்:3 91/1

TOP


கேடகம் (14)

கேடகம் வெயில் வீச கிளர் அயில் நிலவு ஈன – பால:23 33/1
சரம் தரும் சிலை கேடகம் பிச்சம் மொய் சரங்கள் – யுத்2:16 248/2
மா இரும் கேடகம் இடத்து வாங்கினான் – யுத்2:16 295/2
வீசினன் கேடகம் முகத்து வீங்கு கால் – யுத்2:16 297/1
பொன் நெடும் கேடகம் புரட்டி போர்த்தது ஓர் – யுத்2:16 306/2
மண்டல சுடராம் என கேடகம் வாங்கினன் வாளோடும் – யுத்2:16 331/4
ஊரிடை நின்றான் என்ன கேடகம் ஒரு கை தோன்ற – யுத்2:18 208/3
வீசினன் கேடகம் விசும்பின் மீன் எலாம் – யுத்2-மிகை:16 45/1
செம்பொனின் கேடகம் சிதைத்து வீழ்த்தினான் – யுத்2-மிகை:16 46/4
போயின கேடகம் புரிந்து நோக்கினான் – யுத்2-மிகை:16 47/2
மா இரும் கேடகம் கடிதின் வாங்கினான் – யுத்2-மிகை:16 47/4
போயின கேடகம் போக நோக்கினன் – யுத்2-மிகை:16 48/1
பேய் இரண்டு ஆயிரம் பேணும் கேடகம்
ஏ எனும் அளவினில் எய்த சென்றதால் – யுத்2-மிகை:16 48/3,4
சேம படு கேடகம் மால் கடல் சேர் – யுத்3:31 201/3

TOP


கேடு (38)

கிளப்ப_அரும் கொடுமைய அரக்கி கேடு இலா – பால:7 24/3
கெடுப்பவர் அன்னது ஓர் கேடு இலை என்றான் – பால:8 21/4
கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும் – பால:16 16/3
மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டோ – அயோ:1 20/2
காமம் இல்லை எனின் கடும் கேடு எனும் – அயோ:2 29/3
கேகயத்து அரசன் பயந்த விடத்தை இன்னது ஒர் கேடு சூழ் – அயோ:3 52/3
என்ன கேடு உண்டு இ எல்லை_இல் இன்பத்தை – அயோ:10 55/3
வேரோடும் கேடு ஆக முடித்து என் விளைவித்தாய் – அயோ:11 81/4
கேடு அகல் படியினை கெடுத்து கேடு இலா – அயோ-மிகை:1 8/1
கேடு அகல் படியினை கெடுத்து கேடு இலா – அயோ-மிகை:1 8/1
கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே – ஆரண்:10 77/4
பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும் – ஆரண்:10 86/2
உண்டாகிய கேடு உடையார் துயில்வாய் – ஆரண்:11 46/1
போகின்றேன் அடியனேன் புகுந்து வந்து கேடு
ஆகின்றது அரசன் தன் ஆணை நீர் மறுத்து – ஆரண்:12 16/1,2
அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆர் உயிர் – ஆரண்:12 17/3
கேடு சூழ்வார்க்கு வேண்டும் உரு கொள கிடைத்த அன்றே – கிட்:10 59/4
கேட்டனென் நறவால் கேடு வரும் என கிடைத்த அ சொல் – கிட்:11 95/1
ஐய நான் அஞ்சினேன் இ நறவினின் அரிய கேடு
கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால் – கிட்:11 96/1,2
கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே – கிட்:14 54/1
கேழ்_இல் வெம் கொடியவன் உயிர்ப்பு கேடு இலா – சுந்:2 125/2
கெட்டனர் வீரர் அம்மா பிழைப்பரோ கேடு சூழ்ந்தார் – சுந்:6 54/4
கிங்கரர் சம்புமாலி கேடு_இலா ஐவர் என்று இ – சுந்:11 10/1
கெட்டேம் என எண்ணி இ கேடு அரும் கற்பினாளை – சுந்:11 25/3
காயின் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள் – சுந்:12 88/3
கேட்டவன் யாவரே அ மதுவனம் கேடு சூழ்ந்தார் – சுந்-மிகை:14 8/1
நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ கேடு நான்முகத்தோன் ஆதி – யுத்1:3 136/1
உறங்கின கேடு உற்றாலும் உணர்வரோ உணர்வு இலாதார் – யுத்1:8 20/4
கிளையொடும் படைஞரோடும் கேடு இலா உயிர்கட்கு எல்லாம் – யுத்1:14 33/1
கேட்டலும் நளன் என்று ஓதும் கேடு இலா தச்சன் கேள்வி – யுத்1-மிகை:9 3/1
கிடைப்ப_அரும் கொடி நகர் அடையின் கேடு என – யுத்2:16 271/2
கெடுத்தனை வீடணா நீ என்றனன் கேடு இலாதான் – யுத்2:19 226/4
கேடு இல் வாம் பரி கணக்கையும் கடந்தன கிளர்ந்த – யுத்3:22 96/4
கேடு வந்து அடுத்தது என்னா இனையன கிளத்தலுற்றான் – யுத்3:29 55/4
கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான் – யுத்3:31 67/4
கேடு அகம் கிளர்கின்ற களத்த நன்கு – யுத்3:31 120/3
கேடு நம்-தமக்கு என்பது மனம்-கொண்டு கிளர்ந்தான் – யுத்4:32 25/4
கேட்பதும் பல் பொருட்கு ஐயம் கேடு அற – யுத்4:40 79/2
கெட்டது இன்று இனி தென்புலம் கேடு வந்து எய்தி – யுத்4-மிகை:41 37/1

TOP


கேடு_இல் (1)

கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே – கிட்:14 54/1

TOP


கேடு_இலா (1)

கிங்கரர் சம்புமாலி கேடு_இலா ஐவர் என்று இ – சுந்:11 10/1

TOP


கேடும் (2)

ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தொடு பாவம் ஆய – கிட்:9 16/1
தாழ்வித்தேனோ இத்தனை கேடும் தருவித்தேன் – யுத்3:22 207/4

TOP


கேடுற (1)

கேடுற தளர்ந்தார் போன்றும் திரு உற கிளர்ந்தார் போன்றும் – கிட்:10 25/4

TOP


கேண்-மின் (4)

முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான் – ஆரண்:4 24/4
எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்-மின் என்றான் – ஆரண்:15 51/4
ஏனோர்களும் இ உரை கேண்-மின் இவன் – யுத்2:18 52/2
அன்று கொள்கை கேண்-மின் என்று மாவொடு ஆளி ஏவினான் – யுத்2-மிகை:16 8/3

TOP


கேண்-மின்கள் (1)

நிருபர் கேண்-மின்கள் இராமற்கு நெறி முறைமையினால் – அயோ:1 73/3

TOP


கேண்ம் (2)

ஒன்று நீர் கேண்ம் என உரைத்தல் மேயினான் – பால:5 17/4
துன்று வாசி தொகைகளும் கேண்ம் எனா – யுத்4-மிகை:33 1/3

TOP


கேண்மை (8)

ஏய்ந்த கேண்மை சதானந்தன் என்று உரை – பால-மிகை:11 4/2
ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி ஐய – அயோ:8 24/3
பொருந்திய கேண்மை உகந்தவர்-தம்மொடு போகாதே – அயோ:13 18/3
கிடந்திலர் என்னின் பின்னை நிற்குமோ கேண்மை அம்மா – கிட்:11 56/4
மெய் உறு கேண்மை ஆக்கி மேலை_நாள் விளைவது ஆன – கிட்:11 62/2
வேண்டலர் அறிவரேனும் கேண்மை தீர் வினையிற்று ஆமால் – கிட்:11 66/2
கிளைதரு சுற்றம் வெற்றி கேண்மை நம் கல்வி செல்வம் – யுத்2:16 33/3
கிளை உறு சுற்றம் என் அரசு என் கேண்மை என் – யுத்3:24 77/3

TOP


கேண்மையர் (1)

புத்திரர் குருக்கள் நின் பொரு_இல் கேண்மையர்
மித்திரர் அடைந்துளோர் மெலியர் வன்மையோர் – யுத்1:4 11/1,2

TOP


கேண்மையின் (2)

கிடந்தன நின்றன கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன துவன்றின சூழல் யாவையும் – ஆரண்:4 1/2,3
கெண்டை ஒண் தரளம் என்று இ கேண்மையின் கிடந்த திங்கள் – கிட்:13 58/2

TOP


கேண்மோ (4)

வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான் – அயோ:4 84/4
அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி ஐய கேண்மோ
இன்னதாம் என்னல் ஆமோ உலகியல் இகழல் அம்மா – சுந்:10 22/1,2
வன் திறல் மாருதி கேண்மோ
நின்றிடின் நீ பழுது இன்றே – சுந்-மிகை:13 15/1,2
மன்னவர்_மன்னவ மற்று இது கேண்மோ
துன்னும் அரக்கரின் வீரர் தொகைப்பட்டு – யுத்3-மிகை:20 3/1,2

TOP


கேணியில் (1)

கேணியில் வளை முரல் கேகயம் புக – பால:24 47/3

TOP


கேதங்கள் (1)

கேதங்கள் கூர அயர்கின்ற வள்ளல் திரு மேனி கண்டு கிளர்வான் – யுத்2:19 245/2

TOP


கேதத்தால் (1)

கெட்டேன் நீ உயிர் கேதத்தால்
விட்டாய்-என்றிடின் வெவ் அம்பால் – சுந்:5 47/1,2

TOP


கேதம் (1)

கிடந்தனர் நடந்தது புணர்ச்சி தரு கேதம் – சுந்:2 158/4

TOP


கேதனன் (1)

வள் உறை வயிர வாள் மகர கேதனன்
வெள்_அணி ஒத்தது வேலை ஞாலமே – பால:19 4/3,4

TOP


கேவல (1)

கேவல மலராய் வேறு ஓர் இடம் இன்றி கிடந்த ஆற்றால் – யுத்4:42 3/3

TOP


கேவலத்து (1)

கேவலத்து இவர் நிலைமை தேர்வது எ கிழமை கொடு – கிட்:2 5/4

TOP


கேழ் (28)

கேழ் கிளர் மதுகையர் கிளைகளும் இளையார் – பால:5 128/2
நாண் உடை நங்கை நலம் கிளர் செம் கேழ்
பாணி இவன் படர் செம் கை படாதேல் – பால:13 28/2,3
வாள் புடை இலங்க செம் கேழ் மணி அணி வலையம் மின்ன – பால:15 30/2
இமை உற இமைக்கும் செம் கேழ் இன மணி முத்தினோடும் – பால:22 10/3
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம் – பால:23 94/1
மீண்டும் மண் கிழிதர வீழ்ந்து கேழ் கிளர் – அயோ:11 87/2
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா – அயோ:13 35/4
கேட்டு உவந்தனன் கேழ் கிளர் மௌலியான் – ஆரண்:4 38/1
வான் உற நிவந்த செம் கேழ் மணி மரம் துவன்றி வான – ஆரண்:10 97/1
கேட்டான் நிருதர்க்கு_இறை கேழ் கிளர் தன் – ஆரண்:13 17/1
ஓவிய மரன்கள்-தோறும் உரைத்து அற உரிஞ்சி ஒண் கேழ்
நாவிய செவ்வி நாற கலையொடும் புலந்த நவ்வி – கிட்:10 34/3,4
கேழ் இலா வன முலை கிரி சுமந்து இடைவது ஓர் – கிட்:13 69/2
பெரும் கலை மதி திரு முகத்த பிறழ் செம் கேழ்
கரும் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண – கிட்:14 44/3,4
கேழ் உலாம் முழுநிலாவின் கிளர் ஒளி இருளை கீற – சுந்:1 30/1
கேழ் அரிய பொன் கொடு சமைத்த கிளர் வெள்ளத்து – சுந்:2 60/3
முலை உறு கலவை தீய முள் இலா முளரி செம் கேழ்
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி – சுந்:2 111/2,3
கேழ்_இல் வெம் கொடியவன் உயிர்ப்பு கேடு இலா – சுந்:2 125/2
எரி சுடர் மணியின் செம் கேழ் இள வெயில் இடைவிடாது – சுந்:2 178/1
பன்னக அரசர் செம் கேழ் பணா மணி வலிதின் பற்றி – சுந்:2 183/1
கேழ்_இலாள் நிறை இறை கீண்டதாம் எனின் – சுந்:3 67/1
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – சுந்:4 52/2
கேழ் கிளர் சுடு கணை கிழித்த புண் பொழி – சுந்:5 54/2
கேழ் இரு மணியும் பொன்னும் விசும்பு இருள் கிழித்து நீக்கும் – சுந்:8 16/1
கேள் இது நீயும் காண கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல் – யுத்1:3 146/1
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான் – யுத்2:18 199/2
குண்டல துணைகளோடும் கொந்தள குஞ்சி செம் கேழ்
சண்ட வெம் கதிரின் கற்றை தழையொடும் இரவிதான் அம் – யுத்3:28 54/2,3
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற – யுத்3:28 67/3
வேறாய் நின்ற வெண் மதி செம் கேழ் நிறம் விம்மி – யுத்4:33 19/3

TOP


கேழ்_இல் (1)

கேழ்_இல் வெம் கொடியவன் உயிர்ப்பு கேடு இலா – சுந்:2 125/2

TOP


கேழ்_இலாள் (1)

கேழ்_இலாள் நிறை இறை கீண்டதாம் எனின் – சுந்:3 67/1

TOP


கேழது (1)

கிடந்ததும் ஆர்த்தது மழையின் கேழது – யுத்4:37 153/4

TOP


கேழல் (2)

கிளர் அகன் புனலுள் நின்று அரி ஒர் கேழல் ஆய் – அயோ:14 117/1
எய்த்த மெய் பெரிய கேழல் என எங்கும் விசையின் – ஆரண்:1 32/3

TOP


கேழன (1)

கிளையினும் நரம்பினும் நிரம்பும் கேழன
அளவு_இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால் – அயோ:4 175/1,2

TOP


கேள் (63)

மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர் – பால:5 77/2
ஒன்றிய வலியினள் உறுதி கேள் எனா – பால:7 20/4
தேர் முக அல்குலாள் செவ்வி கேள் எனா – பால:13 15/4
ஊனம் உளது அதன் மெய்ந்நெறி கேள் என்று உரை-புரிவான் – பால:24 25/4
தனு வலாய் இதன் தன்மை கேள் எனா – பால-மிகை:6 3/4
மிகை எழுந்திடு சதமக கேள் என வெகுண்டான் – பால-மிகை:9 12/4
அறிவுறுத்துவென் கேள் இ அரும் தவன் – பால-மிகை:11 8/2
எவ்வம்_இல் அன்பினை இனிது கேள் எனா – அயோ:1 79/4
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது இது கோசலை கேள்
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று – அயோ:4 72/2,3
பொய் ஒன்று அறியா மைந்தன் கேள் நீ என்ன புகல்வான் – அயோ:4 76/4
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா – அயோ:4 149/4
மேல் நிகழ்வது உண்டு அ உரை கேள் என விளம்பும் – அயோ:5 17/4
நல்_நுதலவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம் – அயோ:8 40/3
ஆவது உள்ளதே ஐய கேள் ஐ_இரண்டு அமைந்த – அயோ:9 33/1
கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால் – அயோ:12 48/3
வெற்றி வீர யான் விளம்ப கேள் எனா – அயோ:14 102/3
வினை திறத்து அரசினை விரும்பில் அன்னை கேள்
அனைத்து உள நரகு எனக்கு ஆக என்று அவள் – அயோ-மிகை:11 6/2,3
வள்ளல் வாழி கேள் எனா – ஆரண்:1 62/3
வெய்ய வெம் கொடும் தொழில் விளைவு கேள் எனா – ஆரண்:3 11/4
கேள் உயர் நாட்டத்து கிரியின் தோற்றத்தான் – ஆரண்:6 9/2
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – ஆரண்:6 130/4
மொழிதரும் அளவில் நங்கை கேள் இது முரண் இல் யாக்கை – ஆரண்:12 83/1
கிளி படா மொழியவள் விழியின் கேள் என – கிட்:1 9/2
ஒன்று உளது அதனை நீ உணர்ந்து கேள் எனா – கிட்:6 28/4
அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் இ – கிட்:7 43/1
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான் – கிட்:7 126/4
எந்தை கேள் அ இராமற்கு இளையவன் – கிட்:11 23/1
கேள் ஒக்கும் அன்றி ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமே – கிட்:13 55/1
எந்தாய் இது கேள் என இன்ன இசைத்தது அன்றே – சுந்:1 43/4
ஐய கேள் வையம் நல்கும் அயன் அருள் அமைதி ஆக – சுந்:2 91/1
வாயது கேள் என மறித்தும் கூறுவாள் – சுந்:3 38/4
ஒன்று கேள் உரைக்க நிற்கு ஓர் உயிர் என உரியோன்-தன்னை – சுந்:3 139/1
வேறும் உண்டு உரை கேள் அது மெய்ம்மையோய் – சுந்:5 19/1
ஆண்டையின் அருக்கன் மைந்தன் ஐய கேள் அரிவை நம்-பால் – சுந்:14 49/1
எழுந்து நின்று ஐய கேள் இன்று நாளையோடு – சுந்-மிகை:14 21/1
ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள் எனா – யுத்1:2 15/3
கொற்றவ கேள் என இனைய கூறினான் – யுத்1:2 22/4
இன்னம் ஒன்று உரை செய்கேன் இனிது கேள் எம்பிரான் இருவர் ஆய – யுத்1:2 98/1
ஒன்று கேள் இனம் உறுதி என்று அன்பினன் ஒழியான் – யுத்1:2 110/3
எந்தை கேள் எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இயம்ப – யுத்1:3 35/1
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய – யுத்1:3 42/4
கேள் இது நீயும் காண கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல் – யுத்1:3 146/1
கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் கேட்டான் – யுத்1:5 69/1
அண்ணல் கேள் இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ – யுத்1:11 34/1
மறுத்தும் ஒரு வாய்மை இது கேள் என உரைத்தான் – யுத்1-மிகை:2 20/4
இன்று கேள் இதின் உறுதி என்று எடுத்து இவை உரைப்பான் – யுத்1-மிகை:3 9/4
உன்னும் உண்மையை உரைத்தனென் கேள் என உரைப்பான் – யுத்1-மிகை:3 10/4
என்று உரைத்து இன்னும் சொல்வான் இறைவ கேள் எனக்கு வெய்யோர் – யுத்1-மிகை:7 1/1
கேள் இல் ஞாலம் கிளத்திய தொல் முறை – யுத்2:15 40/1
மன்ன கேள் என வந்து வணங்கினார் – யுத்2:15 82/3
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான் – யுத்2:15 160/4
தேவ மற்று இவர்கள் செய்கை கேள் என தெரிய சொன்னார் – யுத்3:20 2/4
ஆன்ற பேர் அண்ணலே அவற்றின் ஆற்றல் கேள்
மூன்று என ஒன்றிய உலகம் முன்னை நாள் – யுத்3:24 89/2,3
வெவ் இடர் கடலின் வைகல் கேள் என விளம்பலுற்றான் – யுத்3:26 81/4
முத்தன் முகம் நோக்கா ஒரு மொழி கேள் என மொழிவான் – யுத்3:27 128/2
ஐய கேள் சிவன் கை வாள் கொண்டு அளப்ப அரும் புவனம் காக்கும் – யுத்3-மிகை:20 7/1
ஒன்று உரை கேள் எனது எந்தையும் ஊரும் – யுத்3-மிகை:26 3/2
வென்று நான் வருவன எந்தாய் கேள் என விளம்பலுற்றான் – யுத்3-மிகை:28 1/4
என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை – யுத்4:40 86/2
வரத கேள் என தயரதன் உரை செய்வான் மறு இல் – யுத்4:40 116/1
சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை கேள் இது நீள் – யுத்4:41 32/1
இன்னும் என் ஐய கேள் இசைப்பென் மெய் உனக்கு – யுத்4-மிகை:40 15/1
ஒன்று கேள் என உவகையின் மாருதி உரைக்கும் – யுத்4-மிகை:41 162/4

TOP


கேள்-தொறும் (1)

கேள்-தொறும் தொடர்ந்த முறுவல் வெண் நிலவின் முக_மலர் இரவினும் கிளர – சுந்:3 79/4

TOP


கேள்-மின் (1)

பொன்றுதல் ஒழி-மின் யானே புகல்வது கேள்-மின் என்றான் – கிட்-மிகை:16 6/4

TOP


கேள்வர் (1)

ஒன்றா நின்ற ஆர் உயிரோடும் உயர் கேள்வர்
பொன்றா-முன்னம் பொன்றினர் என்னும் புகழ் அல்லால் – அயோ:3 41/1,2

TOP


கேள்வரை (1)

தந்த கேள்வரை உயிர் உற தழுவினர் பிரிந்த – அயோ:9 46/2

TOP


கேள்வற்கு (1)

மறையின் கேள்வற்கு மன் இளம் தோன்றல் பின் – அயோ:14 4/1

TOP


கேள்வன் (5)

பொன்னை ஏய் சடையான் கூற கேட்டலும் பூமி கேள்வன்
என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம் – பால:9 16/1,2
ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன் மற்றை ஒன்றை – பால:24 27/1
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால் – அயோ:3 14/2
சீதை கேள்வன் அவனும் தன் சிற்றவை – ஆரண்:4 33/2
உரை செயற்கு அரும் தவத்தினுக்கு உவந்து உமை கேள்வன்
அருள உற்றது அங்கு அவன் மழு குலிசமோடு ஆழி – யுத்4-மிகை:35 2/1,2

TOP


கேள்வனுக்கு (1)

என்று இறைஞ்சி அ இந்திரை கேள்வனுக்கு
ஒன்றும் நான்மறை ஓதிய பூசனை – அயோ:2 9/1,2

TOP


கேள்வனை (2)

திருவின் கேள்வனை கொணர்-மின் சென்று என – பால:6 17/2
ஊழி கடை முடிவில் தனி உமை கேள்வனை ஒப்பான் – பால:24 11/4

TOP


கேள்வி (27)

பொய் இல் கேள்வி புலமையினோர் புகல் – பால:0 7/3
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும் – பால:2 15/3
ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால் – பால:2 53/4
ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண்_இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி அரும் தவத்தின் – பால:3 74/1,2
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி
ஆய புகும்-கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான் – பால:4 4/3,4
செவி-வயின் அமுத கேள்வி தெவிட்டினார் தேவர் நாவின் – பால:14 70/1
ஆய்ந்து உணர் கேள்வி அரும் தவரோடும் – பால:23 102/2
நோக்கினன் களிப்பு எழ நுணங்கு கேள்வி நூல் – பால-மிகை:5 14/1
கேள்வி செல்வம் துய்க்க வயிற்று ஓர் கிளை தந்தான் – அயோ:6 21/4
பொருள் தீங்கு இல் கேள்வி சுடர் புக்கு வழங்கல் இன்றி – ஆரண்:10 139/2
கேள்வி நூல் மறை வலாள என்றனன் என்ன கேட்ட – கிட்:2 30/2
அயர்வு இல் கேள்வி சால் அறிஞர் வேலை முன் – கிட்:3 32/1
செவியுறு கேள்வி செல்வன் சென்னியின் இறைஞ்சி சொன்னான் – கிட்:7 124/4
சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய் – கிட்:10 64/4
அந்தம்_இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே – கிட்:11 60/2
கேள்வி தீயாளர் துன்பம் கிளர்வித்தீர் பாவம்-தன்னை – கிட்:11 73/3
கேள்வி தீவினை கீறினீர் இருள் – கிட்:16 47/3
போதமும் பொருந்து கேள்வி புரை அறு பயனும் பொய் தீர் – சுந்:12 73/1
நூல் ஏந்து கேள்வி நுகரார் புலன் நோக்கல் உற்றார் – சுந்-மிகை:1 4/1
நுண்புலம் நுணங்கு கேள்வி நுழைவினர் எனினும் நோக்கும் – சுந்-மிகை:1 21/3
கேள்வி யாவையும் தவிர்த்தனென் இவை கிளர் பகையை – யுத்1:3 55/2
கேட்டனன் இருந்தும் அ கேள்வி தேர்கலா – யுத்1:4 1/1
முன்புற கண்டிலென் கேள்வி முன்பு இலென் – யுத்1:4 20/1
கேட்டலும் நளன் என்று ஓதும் கேடு இலா தச்சன் கேள்வி
வாட்டம் இல் சிந்தையான் தன் மனத்தினும் கடுகி வல்லே – யுத்1-மிகை:9 3/1,2
பொருந்து கேள்வி புலமையினோய் எனா – யுத்4:39 1/2
நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன் வணங்கு நெஞ்சன் – யுத்4:42 13/2
முழுது உணர் கேள்வி மேலோன் மொழிகுவான் முழு நீர் கங்கை – யுத்4-மிகை:41 266/2

TOP


கேள்விய (1)

மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான் – அயோ:2 13/2

TOP


கேள்வியர் (4)

ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண்_தொழிற்கு – யுத்1:2 9/1
குற்றம் இல் கேள்வியர் அன்பு கூர்ந்தவர் – யுத்1:4 82/2
புணரும் கேள்வியர் அல்லர் பொறி இலர் – யுத்1:9 41/2
நல் அமைச்சர் நவை அறு கேள்வியர்
எல்லை இல்லவர் தங்களை நோக்கியே – யுத்1-மிகை:9 9/2,3

TOP


கேள்வியன் (7)

தூய்மையன் இரும் கலை துணிந்த கேள்வியன்
வாய்மையன் மறு_இலன் மதியின் கூர்மையன் – ஆரண்:4 5/1,2
வெம்மை தீர் ஒழுக்கினன் விரிந்த கேள்வியன்
செம்மையோன் மன்மதன் திகைக்கும் செவ்வியன் – ஆரண்:12 46/1,2
நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் மறம் கூரும் – சுந்:2 204/1
அந்தம்இல் கேள்வியன் ஆனைகள் காணா – சுந்-மிகை:11 21/3
சால் பெரும் கேள்வியன் தானை நாயகன் – யுத்1:4 75/2
நுணங்கிய கேள்வியன் நுவல்வதாயினான் – யுத்1:4 84/4
நன்று உணர் கேள்வியன் நவை இல் செய்கையன் – யுத்4-மிகை:41 214/3

TOP


கேள்வியாய் (3)

நொந்தனென் அருள்க என நுணங்கு கேள்வியாய்
மைந்தர்கள் இலை ஒரு மகள் உண்டாம் என்றான் – பால-மிகை:7 5/3,4
வகை உள அன்னவை வரம்பு_இல் கேள்வியாய்
தொகையுற கூறுவென் குரங்கின் சொல் என – யுத்1:4 76/2,3
செறி பெரும் கேள்வியாய் கருத்து என் செப்பு என – யுத்1:4 83/2

TOP


கேள்வியார் (4)

சுற்றும் நான்மறை துறை செய் கேள்வியார்
கொற்ற மண்கணை குமுற மன்னனை – அயோ:11 119/2,3
நோக்கினர் இருவரும் நுணங்கு கேள்வியார் – ஆரண்:15 19/4
அறையும் தேடினார் அறிவின் கேள்வியார் – கிட்:15 13/4
பொருள் உற உணர்ந்த அ புலன் கொள் கேள்வியார்
மருளுறு சோலையின் மறைந்து வைகினார் – யுத்1:4 23/2,3

TOP


கேள்வியால் (2)

கேட்டனன் என்ப-மன்னோ கேள்வியால் செவிகள் முற்றும் – ஆரண்:16 7/3
கிட்டின் உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற கேள்வியால்
முட்டும் வெம் கண் மான யானை அம்பு உராய முன்னமே – யுத்3:31 87/2,3

TOP


கேள்வியாளன் (1)

நன்று உணர் கேள்வியாளன் அருள்வர நாண் உட்கொண்டான் – கிட்:11 59/2

TOP


கேள்வியான் (1)

நோக்கினன் நின்றனன் நுணங்கு கேள்வியான்
வாக்கினால் ஒரு மொழி வழங்குறாத முன் – கிட்:16 29/1,2

TOP


கேள்வியின் (3)

சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின் – கிட்:10 116/1
உறைவிடம் எய்தினான் ஒருங்கு கேள்வியின்
துறை அறி துணைவரோடு இருந்த சூழலில் – யுத்1:4 33/1,2
அன்னவன் பின்னுற அலகு_இல் கேள்வியின்
தன் நிகர் பிறர் இலா தகைய சாம்பனை – யுத்1:4 69/1,2

TOP


கேள்வியீர் (1)

நுந்துவென் உயிரினை நுணங்கு கேள்வியீர்
புந்தியின் உற்றது புகல்விர் ஆம் என்றான் – கிட்:16 9/3,4

TOP


கேள்வியும் (3)

பல முதல் கேள்வியும் பயனும் எய்தினார் – அயோ:1 5/2
பரவு கேள்வியும் பழுது_இல் ஞானமும் – அயோ:14 104/1
கிட்டிய போதினில் தவமும் கேள்வியும்
விட்டது கண்டும் நாம் விடாது வேட்டுமோ – யுத்1:4 64/3,4

TOP


கேளலை (1)

கெட்டனர் என்பது கேளலை என்னா – யுத்3:20 19/3

TOP


கேளா (26)

அங்கு உறுவன் அ பரிசு உரைப்ப அது கேளா
கொங்கு உறை நறை குல மலர் குழல் துளக்கா – பால:7 27/1,2
கைவரை என தகைய காளை உரை கேளா
ஐவரை அகத்திடை அடைத்த முனி ஐய – பால:7 28/1,2
அ முனி புகல கேளா அதிசயம் மிகவும் தோன்ற – பால:8 5/2
மைத்துனனோடு முன்னோள் வழங்கிய முறைமை கேளா
தத்துறல் ஒழி நீ யானே தடுப்பென் நின் உயிரை என்னா – பால-மிகை:11 42/1,2
அ சொல் கேளா ஆவி புழுங்கா அயர்கின்றான் – அயோ:3 35/1
ஐயனும் அ சொல் கேளா ஆயிரம் மௌலி யானை – அயோ:3 86/1
கீற்று ஒத்து உடைய படும் நாண் உரும் ஏறு கேளா – அயோ:4 120/4
ஏவிய மொழி கேளா இழி புனல் பொழி கண்ணான் – அயோ:8 25/1
அண்ணலும் அது கேளா அகம் நிறை அருள் மிக்கான் – அயோ:8 30/1
அன்னவன் உரை கேளா அமலனும் உரைநேர்வான் – அயோ:8 40/1
செந்நெல் அம் கழனி நாடன் திரு மகள் செவ்வி கேளா
நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை நாளும் தோலா – ஆரண்:10 110/2,3
பாவையும் அதனை கேளா தம் குல பகைஞர் தம்-பால் – ஆரண்:12 84/1
விடி நாள் கண்டும் கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு ஆண்டு – ஆரண்:14 30/2
ஏந்தலும் இதனை கேளா இன் இள முறுவல் நாற – கிட்:9 20/1
விடம் திரண்டு அனைய மெய்யான் அ உரை விளம்ப கேளா
இடம் புகுந்து இனைய செய்த இதனொடு சீற்றம் எஞ்சேன் – சுந்:10 23/1,2
என பதம் வணங்கி அன்னார் இயம்பிய வார்த்தை கேளா
கன குரல் உருமு வீழ கன_மலை சிதற தேவர் – சுந்-மிகை:6 1/1,2
அங்கதன் அதனை கேளா அங்கையோடு அங்கை தாக்கி – யுத்1:14 28/1
கூற்றின் வெம் புருவம் அன்ன சிலை நெடும் குரலும் கேளா
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா – யுத்2:15 143/3,4
மாற்றம் அஃது உரைப்ப கேளா மலை முழை திறந்தது என்ன – யுத்2:16 196/1
வெய்யவன் அனைய கேளா வெயில் உக விழித்து வீர – யுத்2:17 60/1
அன்னவர் உரைப்ப கேளா அரசன் மோதரனை நோக்கி – யுத்2-மிகை:16 12/1
களத்திடை கவிழ்ந்தார் என்ற மொழியினை காதில் கேளா
துளக்கம் இல் அரக்கன் மேரு துளங்கியது என்ன சோர்ந்தான் – யுத்2-மிகை:18 34/3,4
ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா
தேரிடை நின்று வீழ்ந்தார் சிலர் சிலர் படைகள் சிந்தி – யுத்3:22 34/1,2
ஆர்த்த பேர் அமலை கேளா அணுகினன் அனுமன் எல்லா – யுத்3:22 149/1
கட்டுரை அதனை கேளா கண் எரி கதுவ நோக்கி – யுத்3:26 9/1
அன்ன வாசகங்கள் கேளா அனல் உயிர்த்து அலங்கல் பொன் தோள் – யுத்3:27 79/1

TOP


கேளாத (1)

கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் – யுத்2:19 256/2

TOP


கேளாது (2)

இ குரல் இளவல் கேளாது ஒழிக என இறைவன் இட்டான் – சுந்:4 75/1
உன்னி உரைத்தேன் உரை கேளாது உத்தமனே – யுத்4-மிகை:38 4/2

TOP


கேளாய் (8)

மங்கைமார் சிந்தை போல தூயது மற்றும் கேளாய்
எங்கள் நான்மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டா – பால:8 6/2,3
இயம் துவைத்த கடை தலையாய் யான் அறிந்தபடி கேளாய் – பால:12 15/4
மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால் – பால:24 32/2
இன் உரை பொருளும் கேளாய் ஏது உண்டு எனினும் ஓராய் – யுத்2:16 32/2
கேசவன் சிறுவர் என்ற இந்த தன்மையோர்-தம்மை கேளாய்
பூசலின் எதிர்ந்தேன் என்றாய் போர்க்களம் புக்க போது என் – யுத்2:17 21/2,3
உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய்
நம்பி குல கிழவன் கூறும் நலம் ஓராய் – யுத்2:18 271/1,2
நான் உனை இரந்து கூறும் நயமொழி ஒன்றும் கேளாய்
சானகி-தன்னை வாளால் தடிந்ததோ தனதன் தந்த – யுத்3-மிகை:27 5/1,2
செல்வனே இன்னம் கேளாய் யான் தெரி பாச கையால் – யுத்4-மிகை:41 28/1

TOP


கேளாயோ (1)

கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ
காட்டாயோ என்னுடைய கண்மணியை காட்டாயோ – யுத்2:18 267/3,4

TOP


கேளார் (1)

நீதியாம் புராணம்-தன்னை இகழ்பவர் நிறைய கேளார்
பாதியில் விட்டு வைப்போர் படித்தவர் பிரியப்படுத்தார் – யுத்4-மிகை:41 78/2,3

TOP


கேளான் (4)

கேட்டி அடியேன் உரை முனிந்தருளல் கேளான்
வீட்டியிடுமேல் அவனை வேறல் வினை அன்றால் – சுந்:5 2/1,2
ஆர்க்கின்ற குரலும் கேளான் இலக்குவன் அசனி ஏற்றை – யுத்3:22 138/1
பேர்க்கின்ற சிலையின் நாணின் பேர் ஒலி கேளான் வீரன் – யுத்3:22 138/2
என்று அவன் இகழ்ந்தது எல்லாம் இந்திரசித்து கேளான்
நன்று நம் ஆணை என்னா நகைசெய்யா அவனை பார்த்து – யுத்3-மிகை:28 1/1,2

TOP


கேளிர் (2)

கெட்டது உன் பொருட்டினாலே நின்னுடை கேளிர் எல்லாம் – யுத்4:34 16/3
பல் நெறி-தோறும் தோன்றும் பருணிதர் பண்பின் கேளிர்
மன்னவர்க்கு அரசன் பாங்கர் மரபினால் சுற்ற-மன்னோ – யுத்4-மிகை:42 47/3,4

TOP


கேளிரின் (1)

கிள்ள எழுகின்ற புனல் கேளிரின் விரும்பி – பால:15 23/2

TOP


கேளீர் (1)

எண்ணாது இவை பகர்ந்தீர் பொருள் கேளீர் என இசைந்தான் – யுத்3:27 139/4

TOP


கேளீரோ (1)

எல்லீரும் உறங்குதிரோ யான் அழைத்தல் கேளீரோ – ஆரண்:6 105/4

TOP


கேளேன் (1)

என்றானும் யானோ வாழேன் நீ இலை எனவும் கேளேன்
இன்று ஆய பழியும் நிற்க நெடும் செரு களத்தின் என்னை – யுத்1:12 29/2,3

TOP


கேளொடு (2)

கேளொடு கிடந்த நீல சுருளும் செம் கிடையும் கொண்டு – பால:10 14/2
கேளொடு மடியுமாறும் வானவர் கிளருமாறும் – ஆரண்:12 57/2

TOP


கேளோடு (1)

கிளைஞரின் உதவ ஆணை கிளர் திசை அளப்ப கேளோடு
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கிட்:9 33/2,3

TOP