மொ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொக்கல 1
மொக்கலன் 3
மொக்கலனும் 3
மொக்கலனே 1
மொய் 18
மொய்த்த 3
மொய்த்தன 1
மொய்த்து 2
மொய்ம்ப 1
மொய்ம்பன் 3
மொய்ம்பனும் 1
மொய்ம்பில் 1
மொய்ம்பின் 1
மொய்ம்பினான் 1
மொழி 49
மொழி-தன் 1
மொழி-மின் 1
மொழிகட்கு 1
மொழிகள் 2
மொழிகள்-தம்மால் 2
மொழிகள்-தம்மை 1
மொழிகளால் 1
மொழிகின்றது 1
மொழிகின்றான் 1
மொழிதலுக்கு 1
மொழிதலும் 10
மொழிந்த 13
மொழிந்தது 1
மொழிந்தவற்கு 1
மொழிந்தவன் 1
மொழிந்தவாற்றால் 1
மொழிந்தவாறு 1
மொழிந்தனன் 2
மொழிந்தனை 1
மொழிந்தாய் 2
மொழிந்தாள் 1
மொழிந்தான் 6
மொழிந்திடுதலோடும் 1
மொழிந்து 6
மொழிப 1
மொழிபவேல் 1
மொழிய 8
மொழியப்பட்ட 1
மொழியல் 1
மொழியலுற்று 1
மொழியவள் 1
மொழியா 1
மொழியாய் 1
மொழியார் 1
மொழியாள் 1
மொழியில் 2
மொழியின் 4
மொழியினார்-தம் 2
மொழியினார்கள் 1
மொழியினாரை 1
மொழியினை 1
மொழியும் 6
மொழியே 1
மொழியை 2
மொழியோடு 1
மொழிவது 1
மொழிவன் 1
மொழிவோன்-தன்னை 1
மொள்ளும் 1
மொறுமொறுத்து 1

மொக்கல (1)

மூங்கைமையான் மொழி கொண்டேல் மொக்கல நல் தேர யான் – நீலகேசி:4 271/3
மேல்


மொக்கலன் (3)

முருக்குவாய் சென்று அவன் நாமம் மொக்கலன் என சொன்னான் – நீலகேசி:3 266/4
நல்லை பெரிதும் என மொக்கலன் நக்கனனே – நீலகேசி:4 406/4
மொக்கலன் சொல்லும் இ மோக்கத்தை பாழ்செய்த – நீலகேசி:4 459/2
மேல்


மொக்கலனும் (3)

மூடிற்றின் பயன் என்னை என வினவ மொக்கலனும்
மூடிற்றும் சிறிது உளதால் உரு அறிதற்கு என மொழிந்தான் – நீலகேசி:4 272/3,4
முரண் நின்றது உண்மையால் மொக்கலனும் முனிந்து உரைப்பான் – நீலகேசி:4 284/3
மொக்கலனும் இது கூற முல்லை நாறு இரும் குழலாள் – நீலகேசி:4 290/1
மேல்


மொக்கலனே (1)

முற்றும் அவளது பக்கம் அறிதல்_இல் மொக்கலனே – நீலகேசி:4 376/4
மேல்


மொய் (18)

முரைசொலி கழும புக்கு மொய் மலர் குழலினாரோடு – யசோதர:4 258/3
முன்னவன் புணர்த்த ஆறு அ மொய் மலர்_கணையினானே – சூளாமணி:2 66/4
முருகு அணங்கு தாமரையின் மொய் மலர் மேல் சென்று – சூளாமணி:4 188/1
மூசின வண்டின் மொய் பொழில் எல்லாம் – சூளாமணி:5 293/4
முத்த வாள் முகிழ் நகை அடக்கி மொய் குழல் – சூளாமணி:5 420/3
முடிகளின் மணி பொர முரலும் மொய் கழல் – சூளாமணி:5 422/2
மொய் புறத்து மேல் முழங்கு தானையோடு – சூளாமணி:7 586/3
முத்த வாள் நகை மொய் பவள துணி – சூளாமணி:7 612/1
முகையின் வேய்ந்த மென் மொய் மலர் கண்ணியாய் – சூளாமணி:7 647/3
மொய் மலர் பொதும்பின் மேல் முறுவலித்த முல்லையும் – சூளாமணி:7 789/3
மோடு விட்டு அலர் மொய் மலர் காவினுள் – சூளாமணி:8 890/1
மொய் மலர் தாமரை முகிழ்க்கும் எல்லையுள் – சூளாமணி:8 959/2
மொய் அழல் மேல் அவிந்த தழல் மீள மூள்வதே போல் – சூளாமணி:8 1027/3
மொய் இளம் கமல நாளம் வளையங்கள் முளைத்த அன்றே – சூளாமணி:8 1030/4
மொய் வரை முனை அடிப்புண்ட ஒத்தவே – சூளாமணி:9 1405/4
முற்ற முறைசெய்து அருளு மொய் குழலி என்றான் – சூளாமணி:10 1612/4
பொன் மலர் கண்ணியர் பொன் செய் சுண்ணம் மொய்
மின் மலர் மேனி மேல் விளங்க அப்பினார் – சூளாமணி:11 1877/1,2
கொந்து மொய் மலர் நிறை கோடிகங்களும் – சூளாமணி:11 1885/3
மேல்


மொய்த்த (3)

முன் விரிந்து உக்கன மொய்த்த கல் தலம் – சூளாமணி:7 754/2
கார் மகிழ்ந்த கார் மயில் கலாபம் மொய்த்த கானகம் – சூளாமணி:7 795/3
முல்லை அம் பிணையலும் மொய்த்த பூண் கடை – சூளாமணி:7 818/2
மேல்


மொய்த்தன (1)

ஈங்கு இதன் தாள் முதல் இருள மொய்த்தன
ஓங்கிய கேள்வியாய் உணர்ந்து கொள்க என – சூளாமணி:10 1589/2,3
மேல்


மொய்த்து (2)

மொய்த்து இளம் குமரரோடு ஆடும் முன்கடை – சூளாமணி:10 1715/2
மொய்த்து இலங்கு அலர் மழை முருகு உலாவிய – சூளாமணி:11 1898/1
மேல்


மொய்ம்ப (1)

ஆளி மொய்ம்ப அங்கு அகல் இலை அலரொடும் கிழிய – சூளாமணி:7 730/3
மேல்


மொய்ம்பன் (3)

முறையின் நல் வழியை நோக்க மொய்ம்பன் அ தினத்தில் தோன்ற – உதயணகுமார:1 15/3
ஆளி மொய்ம்பன் அருளினன் என்பவே – யசோதர:3 190/4
ஆளி மொய்ம்பன் அங்கு ஆர்த்தனன் உடைந்தது அ அரியே – சூளாமணி:7 713/4
மேல்


மொய்ம்பனும் (1)

முடி புவி அரசன் ஈய மொய்ம்பனும் அணிந்துகொண்டு – உதயணகுமார:1 100/2
மேல்


மொய்ம்பில் (1)

மை ஆர் சென்னி மால் வரை ஆளும் வய மொய்ம்பில்
கை ஆர் எஃகில் காளைகள்-தம்முள் கமழ் கோதை – சூளாமணி:5 318/1,2
மேல்


மொய்ம்பின் (1)

முன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வது அல்லால் – சூளாமணி:6 527/2
மேல்


மொய்ம்பினான் (1)

முழை அமர் அரி அரசு அனைய மொய்ம்பினான் – சூளாமணி:8 1130/4
மேல்


மொழி (49)

மொழி அமிர்தம் நலாளை மோகத்தில் பிரியேன் என்ன – உதயணகுமார:3 159/3
பரதகன் தங்கை பால் மொழி வேல் கணி – உதயணகுமார:4 219/1
இளம் கிளி மொழி நல் கொங்கை ஈடு_இல் பொன் கலசம் அல்குல் – உதயணகுமார:4 229/2
பால் மொழி வாணி-தன்னை பாங்கினில் சேர்த்தார் அன்றே – உதயணகுமார:5 254/4
கரும்பு ஆர் நல் மொழி காதல் கனவிடை – உதயணகுமார:5 279/2
தேன் நெய் தோய்ந்த திரு மொழி மா தவர் – உதயணகுமார:6 352/2
இறைவன் நல் மொழி இ பொருள் உட்கொண்டு – நாககுமார:1 22/2
பால் மொழி அமிர்தம் அன்னாள் பரமன் ஆலையம் அடைந்து – நாககுமார:1 35/3
நூல் மொழி இறைவன் பாதம் நோக்கி நன்கு இறைஞ்சினாளே – நாககுமார:1 35/4
திரு_மொழி அருளும் தீர்த்தகரர்களே துயர்கள் தீர்ப்பார் – யசோதர:1 53/4
அம் சில் மொழி அமிர்தமதி அரு நரகில் வீழ்ந்தாள் – யசோதர:5 286/3
எதுவின் முனி அருளும் மொழி அவையவைகள் நினையா – யசோதர:5 300/2
பொய்யது-அன்று இது புரவல_குமர நின் புகழ் மொழி புணையாக – யசோதர:5 322/3
சோதியான் திரு_மொழி விளக்கி தோன்றுமால் – சூளாமணி:5 385/2
மன்னிய திரு_மொழி அகத்து மாதராள் – சூளாமணி:5 387/2
நலம் கிளர் திரு_மொழி நாதன் என்பவே – சூளாமணி:5 396/4
சீர் அணி திரு_மொழி தெய்வ தேவனே – சூளாமணி:5 403/4
திரு மனை கிழத்தி-தன் தேம் கொள் சில் மொழி
மரு மணி முடியினான் மகிழ்ந்து மற்று அவள் – சூளாமணி:5 423/1,2
பின்னை மன்னவன் பேணி நல் மொழி
சொன்ன வண்ணமும் சுற்றம் ஆயதும் – சூளாமணி:7 590/1,2
பூம் கண் தேம் மொழி போதனத்து இறைவன்-தன் புதல்வர் – சூளாமணி:7 701/2
தேன் நெய் பாலொடு கலந்தன சில் மொழி சிறு நுதல் திருவே நம் – சூளாமணி:8 880/1
அலங்கல் வார் குழல் அமிர்து அன்ன சில் மொழி அரிவை நம் மருங்கு எல்லாம் – சூளாமணி:8 883/1
தீம் கனி அமிர்தம் அன்ன திரு மொழி பண்ணிகாரம் – சூளாமணி:8 1005/2
சில் அணி மழலை செவ்வாய் திரு மொழி பிறந்தது உண்டு – சூளாமணி:8 1011/2
வல்லி தன் மொழி போய் நீர் எம் மாமியார் அடிகட்கு எம் வாய் – சூளாமணி:8 1011/3
பணி மிடற்று மொழி பயிற்றும் பைங்கிளியின் செவ்வழி இன் இசை மேல் பாட – சூளாமணி:8 1034/2
மணி மருள் திரு_மொழி வாமன் சேவடி – சூளாமணி:8 1040/1
பணி மொழி பலவுடன் பரவி வாழ்த்தினாள் – சூளாமணி:8 1040/3
பிணி மொழி பிறவி நோய் பெயர்க என்னவே – சூளாமணி:8 1040/4
பாயின பணி மொழி பலவும் கூறினார் – சூளாமணி:8 1046/4
இன்னன நகை மொழி இன்ப கோட்டியோடு – சூளாமணி:8 1055/1
மொழி எதிர் உலகம் ஆள்வான் உவந்து அவன் முகத்தை நோக்கி – சூளாமணி:9 1180/3
மன்னவன் தமரம் யாமே வாய் மொழி கேள்-மின் மன்னீர் – சூளாமணி:9 1204/2
சென்றனர் ஆயிடை தெய்வ வாய் மொழி
வென்று வீற்றிருக்கும் இ விடலையே என – சூளாமணி:9 1216/2,3
ஆகிய வாய் மொழி கூறலும் ஆயிடை – சூளாமணி:9 1225/3
தம்பியர் மொழி எனும் தயங்கும் மாரியால் – சூளாமணி:9 1265/1
அங்கு அவன் மொழிந்த மொழி கேட்டலும் அருக்கன் – சூளாமணி:9 1284/1
முன்னிய மொழி புலவர் நூல் முறைமை ஏடா – சூளாமணி:9 1287/2
ஆம்பல் நாணும் தேம் மொழி நல்லார் அலர் தூவி – சூளாமணி:9 1525/2
பெறுமாறு தாயரும் தோழியரும் நின்று பிணை_அனாள்-தன் மேல் பல் மொழி மிழற்றுகின்றார் – சூளாமணி:10 1756/4
படி அரக்கும் பாவைக்கு பைபையவே இனைய மொழி பகராநின்றான் – சூளாமணி:10 1801/4
மைத்துன குமரன்-தன்னை மட_மொழி மாலை சூட்ட – சூளாமணி:10 1828/2
மாற்று அரு மந்திர வாய் மொழி ஆயிடை – சூளாமணி:11 1915/3
தக்க வாய் மொழி தவத்து அரசன் நேர்ந்திலன் – சூளாமணி:12 2076/3
பிணங்கி நாம் பிதற்றிய பேதை வாய் மொழி
குணங்கள்தாம் அல்ல கோன் குறிப்பும் அன்று என – சூளாமணி:12 2106/2,3
சீலம் நல்லன சினவரன் திரு மொழி தெளிந்தான் – நீலகேசி:1 48/1
மூங்கைமையான் மொழி கொண்டேல் மொக்கல நல் தேர யான் – நீலகேசி:4 271/3
பண்ணின் குறி ஏசும் மொழி பாவை என சொல்லும் – நீலகேசி:5 522/4
இன்மை ஆய நெறி மொழி நீ இனி – நீலகேசி:5 528/4
மேல்


மொழி-தன் (1)

கொஞ்சு பைங்கிளி_மொழி-தன் கூடலை விரும்பினான் – உதயணகுமார:2 121/4
மேல்


மொழி-மின் (1)

என்று மற்று அது மொழி-மின் என்று உரைத்து எமை விடுத்தான் – சூளாமணி:7 705/1
மேல்


மொழிகட்கு (1)

என்னும் இ மொழிகட்கு அந்தோ இலக்கியம் ஆயினாளே – யசோதர:2 96/4
மேல்


மொழிகள் (2)

கறையவாம் மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற்று ஓரேன் – சூளாமணி:6 529/2
தேறினார் மொழிகள் கொண்டு செவி சுடு சொற்கள் கேட்டும் – சூளாமணி:9 1447/3
மேல்


மொழிகள்-தம்மால் (2)

உள்ளம் மெய் மொழிகள்-தம்மால் உணர்ந்தவன் இனியன் ஆனான் – உதயணகுமார:1 47/4
பன்னிய பவங்கள் தீர்க்கும் பயம் கெழு மொழிகள்-தம்மால்
கல் நவில் கடக தோளான் காட்சி அம் கதிர்ப்பு சென்றான் – சூளாமணி:4 204/2,3
மேல்


மொழிகள்-தம்மை (1)

கேட்டலும் அடிகள் வாயில் கெழுமிய மொழிகள்-தம்மை
கூட்டினுள் இருந்த மற்று அ கோழிகள் பிறப்பு உணர்ந்திட்டு – யசோதர:4 254/1,2
மேல்


மொழிகளால் (1)

மருவு உடை மொழிகளால் பரவி வாமன – சூளாமணி:4 217/3
மேல்


மொழிகின்றது (1)

மொழிகின்றது ஏயது காணலது என்னின் – நீலகேசி:5 630/3
மேல்


மொழிகின்றான் (1)

வல தகையன் ஆய மணி_வண்ணன் மொழிகின்றான் – சூளாமணி:10 1606/4
மேல்


மொழிதலுக்கு (1)

மொழிதலுக்கு அரிதால் அத்தை முருகு வேய் குழலி மற்று உன் – சூளாமணி:8 1010/3
மேல்


மொழிதலும் (10)

வில்லவன் மொழிதலும் வீர வேந்தர்கள் – சூளாமணி:9 1211/1
என்று அவர் மொழிதலும் எழுந்து தூதுவர் – சூளாமணி:9 1216/1
கேளவர் மொழிதலும் கிரீவன் தம்பிமார் – சூளாமணி:9 1390/3
என்று அவன் மொழிதலும் இலங்கு நீள் முடி – சூளாமணி:9 1494/1
ஆங்கு அவர் மொழிதலும் அரும் கல குழாம் – சூளாமணி:9 1510/1
மாதவன் மொழிதலும் மன்னன் ஆங்கு ஒரு – சூளாமணி:10 1594/1
என்று அவன் மொழிதலும் இலங்கு நேமியான் – சூளாமணி:10 1737/1
விரிகின்ற புலமை வீரர் மொழிதலும் காதி-தன்னால் – சூளாமணி:11 1863/2
மந்திர மாந்தர் மொழிதலும் வானிடை – சூளாமணி:11 1919/1
என அவர் மொழிதலும் எழுந்து போதியின் – சூளாமணி:12 2080/1
மேல்


மொழிந்த (13)

நாம் இனி மற்று அவன் மொழிந்த நாளினால் – சூளாமணி:3 116/1
என்று அவர் மொழிந்த பின் இலங்கு பூணினான் – சூளாமணி:3 117/1
அங்கு அவன் மொழிந்த பின்னை அவனையும் அமைதி கூறி – சூளாமணி:5 347/2
என்று அவன் மொழிந்த போழ்தின் ஏனையார் இனிதின் நோக்கி – சூளாமணி:5 360/1
நன்றவர் மொழிந்த எல்லாம் நல்லவா நயந்து கேட்டான் – சூளாமணி:5 360/4
ஆங்கு அவன் மொழிந்த பின் அடங்கலரை அட்டான் – சூளாமணி:6 447/1
என்று அவன் மொழிந்த பின் இருந்தனன் இருப்ப – சூளாமணி:6 448/1
ஆங்கு அவள் மொழிந்த போழ்தின் அணங்கினை வணங்கி மற்று அ – சூளாமணி:8 1005/1
என்று அவள் மொழிந்த போழ்தில் இலங்கு ஒளி பலகை-தன் மேல் – சூளாமணி:8 1012/1
ஆங்கு அவன் மொழிந்த போழ்தின் அமையும் இஃது அறிவது அன்றே – சூளாமணி:9 1201/1
அங்கு அவன் மொழிந்த மொழி கேட்டலும் அருக்கன் – சூளாமணி:9 1284/1
ஆங்கு அவர் மொழிந்த போழ்தின் அரு வரை கரியது ஒப்பான் – சூளாமணி:9 1425/1
என்று அவள் மொழிந்த போழ்தின் இலங்கு ஒளி முறுவல் தோன்றி – சூளாமணி:10 1564/1
மேல்


மொழிந்தது (1)

நல் தவம் என்று இங்கு நாங்கள் மொழிந்தது
மற்று இது வான்_உலகு ஆள்விக்கும் மன்னா – சூளாமணி:11 2013/3,4
மேல்


மொழிந்தவற்கு (1)

இங்கு முன் மொழிந்தவற்கு இளைய நம்பியே – சூளாமணி:3 78/4
மேல்


மொழிந்தவன் (1)

செவ் வகை மொழிந்தவன் செல்வ சேவடிக்கு – சூளாமணி:11 1888/2
மேல்


மொழிந்தவாற்றால் (1)

தாழ் புரி தயங்கும் நுண் நூல் சதவிந்து மொழிந்தவாற்றால்
யாழ் புரி மழலையாள்-கண் ஆவதை அறிதும் என்றான் – சூளாமணி:5 359/3,4
மேல்


மொழிந்தவாறு (1)

கற்றவர் மொழிந்தவாறு கழிப்பது கடனது ஆகும் – சூளாமணி:5 246/2
மேல்


மொழிந்தனன் (2)

ஈங்கு இவை மொழிந்தனன் இறைவன் என்பவே – சூளாமணி:5 241/4
மன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும் – சூளாமணி:7 660/3
மேல்


மொழிந்தனை (1)

அப்படி நீயும் முன்னர் மொழிந்தனை அன்றே என்றான் – சூளாமணி:6 528/4
மேல்


மொழிந்தாய் (2)

வாட்டமும் நடுக்கும் உற்றே மாண்பு_இல மொழிந்தாய் மன்னன் – யசோதர:2 112/2
இன்றும் நின்றும் நீ மொழிந்தாய் எம் இறையே இறையாகவே – நீலகேசி:5 568/4
மேல்


மொழிந்தாள் (1)

மின் ஒளியோடு உற மிழற்ற மிழற்றுவ கிளி என மொழிந்தாள்
முன்னம் நான் பரவிய வரங்கள் முடி குறை கொடுப்பதற்கு எனவே – நீலகேசி:1 65/3,4
மேல்


மொழிந்தான் (6)

எழில் கதிர் விசும்பிடை இழிந்தவன் மொழிந்தான் – சூளாமணி:6 442/4
தொழில்_கணாளரும் தவிர்க என சூளுற்று மொழிந்தான் – சூளாமணி:7 708/4
வம்பு கொண்டவன் போல் நின்று வளை_வண்ணன் மொழிந்தான்
நம்பி நாம் இனி நளி வரை தாழ்வர் கண்டு அல்லால் – சூளாமணி:7 727/2,3
படர்ந்த தன் யோகினை நிறுவி பணிந்தவட்கு ஆசிடை மொழிந்தான்
இடம்பக_மகள் இவள் பெரிதும் இராசபுத்திரி அலள் எனவே – நீலகேசி:1 64/3,4
ஓதி ஞானி இது ஆயின் உரை அழகு ஈது என மொழிந்தான் – நீலகேசி:1 66/4
மூடிற்றும் சிறிது உளதால் உரு அறிதற்கு என மொழிந்தான் – நீலகேசி:4 272/4
மேல்


மொழிந்திடுதலோடும் (1)

ஆங்கு அவள் அருள் ஒன்று இன்றி அவண் மொழிந்திடுதலோடும்
தேங்கலன் அரசன் செம் கை செவி முதல் செறிய சேர்த்தி – யசோதர:2 138/1,2
மேல்


மொழிந்து (6)

முடி பொருள்-தானும் என்-கொல் மொழிந்து அருள்செய்க என்றான் – யசோதர:4 231/4
சென்று அவன் காக்க என மொழிந்து தேம் குழல் – சூளாமணி:3 117/3
முறையில் தந்து முகமன் மொழிந்து எதிர் – சூளாமணி:7 648/3
இன்னணம் மொழிந்து எதிர் தெழித்து மாற்றலர் – சூளாமணி:9 1385/1
இன்னன கண்டார் மொழிந்து இரங்கும் ஆயிடை – சூளாமணி:9 1469/1
மொழிந்து உலவா காரிகையார் முலை முற்றா இளமையார் – சூளாமணி:11 2059/3
மேல்


மொழிப (1)

சுட்டினர் மொழிப ஆயில் கூற்றமும் துளங்கும் நீரார் – சூளாமணி:8 916/2
மேல்


மொழிபவேல் (1)

முன்னம் ஓர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர்-தம்மால் – சூளாமணி:6 518/1
மேல்


மொழிய (8)

சீர் அருள் மொழிய நின் திரு_அடி தொழுதனம் – சூளாமணி:4 216/4
இறை இவை மொழிய கேட்டே இருந்தவர் இறைஞ்சி ஏத்தி – சூளாமணி:5 256/1
தாங்கிய புகழவன் மொழிய தாரவர் – சூளாமணி:5 425/3
காரியம் துணிந்தவர் மொழிய காவலன் – சூளாமணி:5 428/1
ஆங்கு அவர் மொழிய கேட்டே அறிவினுக்கு அரசர் என்று – சூளாமணி:8 911/1
ஏதம் ஆங்கு இல்லை அன்றே எங்கள் முன் மொழிய என்றாள் – சூளாமணி:8 1003/3
அறிபவர் அவை அவை மொழிய கேட்டலும் – சூளாமணி:9 1511/1
மாதவன் மொழிய மன்னவன் நக்கு ஆங்கு – சூளாமணி:10 1571/1
மேல்


மொழியப்பட்ட (1)

நெறி-தலை திரிவு_இலான் மேல் நினைவு_இலான் மொழியப்பட்ட
மறுதலை முடிக்கும் ஏதுவாய் வழி அழிப்பதே போல் – சூளாமணி:9 1463/1,2
மேல்


மொழியல் (1)

மற்று இனி மொழியல் வேண்டா வருவன அறியலாகா – சூளாமணி:9 1156/3
மேல்


மொழியலுற்று (1)

முறைமுறை மொழியலுற்று முன்னிய முகத்தர் ஆனார் – சூளாமணி:5 256/4
மேல்


மொழியவள் (1)

அம் சில மொழியவள் ஒருத்தி ஆங்கு அயர் – சூளாமணி:8 1047/3
மேல்


மொழியா (1)

இன்று எனக்கு எதிராய் நீ-கொலோ பொருவாய் என்றனன் இனையன மொழியா
குன்றினும் பெரியான் கூற்றினும் வெய்யோன் கொண்டனன் தண்டு கை வலித்தே – சூளாமணி:9 1321/3,4
மேல்


மொழியாய் (1)

பண் பெற்ற மொழியாய் யானும் பண் பெற்ற பயனும் பெற்றேன் – யசோதர:2 113/1
மேல்


மொழியார் (1)

கந்தாரம் களித்து அனைய பனி மொழியார் கண் கவர – சூளாமணி:11 2053/1
மேல்


மொழியாள் (1)

பண் இயல நரம்பு இசை மேல் பரமனையே பணி_மொழியாள் பரவாநின்றாள் – சூளாமணி:8 1036/4
மேல்


மொழியில் (2)

வெருவரு மொழியில் தேறி மேல்முறை தொழிலன் ஆனான் – சூளாமணி:8 926/4
முரசு என அதிரும் பேழ் வாய் முழங்கு இசை மொழியில் சாற்றி – சூளாமணி:9 1174/2
மேல்


மொழியின் (4)

வாள் அளவு உண்கண் மாதே மறுத்து உரை மொழியின் என்றாள் – யசோதர:2 101/4
ஓதி யான் மொழியின் இவன் உறு வலிக்கு நிகர் ஆவார் உளரோ வேந்தர் – சூளாமணி:10 1803/4
முழை வாழ் புலியே மயிலே மொழியின் – நீலகேசி:5 465/4
முழுதும் துன்பம் என மொழியின் அஃது ஆகிய – நீலகேசி:5 553/1
மேல்


மொழியினார்-தம் (2)

கரும்பு அணி மொழியினார்-தம் கரும் தடம் கண்ணும் வண்டும் – சூளாமணி:11 1864/1
பண் இயல் மொழியினார்-தம் கரும் கண்ணால் பருகும் நீர்மை – சூளாமணி:11 1867/3
மேல்


மொழியினார்கள் (1)

இளம் கிளி மொழியினார்கள் இனிமையில் நால்வரோடும் – உதயணகுமார:6 303/3
மேல்


மொழியினாரை (1)

கிள்ளை அம் மொழியினாரை கேட்டு உடன் பெறுகிலன் – நாககுமார:4 124/3
மேல்


மொழியினை (1)

திரு மொழியினை திறத்தில் கேட்டனர் – உதயணகுமார:6 323/4
மேல்


மொழியும் (6)

முந்தை வினை நெகிழ முனி மொழியும் வதம் மருவி – யசோதர:5 299/3
திருந்திய மொழியும் தெய்வ செல்வமும் தெய்வம் அன்னீர் – சூளாமணி:8 988/3
தோள் வீசும் ஆறும் அவை மீளும் ஆறும் இடை சொல்லும் வீர மொழியும்
தாள் வீசு போழ்து கழல் ஓங்கு மாறும் எதிர் தாங்கள் ஆர்க்கும் ஒலியும் – சூளாமணி:9 1331/2,3
செய்யுற்ற போழ்தின் எதிரே விலங்கி இது தேவசேனன் மொழியும்
கையுற்றது ஒன்று கவலேல் உனக்கு இது உறுமாறு போக எனவும் – சூளாமணி:9 1334/2,3
ஆயோ என மொழியும் அ மழலை இன் இசையால் – சூளாமணி:10 1657/2
முனைவர்-தம் ஆகமம் மொழியும் ஆகும் என்று – நீலகேசி:1 119/3
மேல்


மொழியே (1)

முரைசு என அதிரும் எம் முனைவரன் மொழியே – நீலகேசி:4 454/4
மேல்


மொழியை (2)

ஒத்த நல் மொழியை கேட்டே உவந்து உடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:4 221/3
பண்பு உணர் மொழியை கேட்டு பரவச மனத்தள் ஆகி – உதயணகுமார:5 260/3
மேல்


மொழியோடு (1)

உருத்து எழு சினத்தின் சென்ற உள்ளம் மெய் மொழியோடு ஒன்றி – யசோதர:2 86/3
மேல்


மொழிவது (1)

குன்றின் மேல் இருந்து நீ நின் குழுவினுள் மொழிவது அல்லால் – சூளாமணி:9 1448/3
மேல்


மொழிவன் (1)

பாங்கின் மொழிவன் பனி மலர் தாரோய் – சூளாமணி:11 1925/4
மேல்


மொழிவோன்-தன்னை (1)

இவ்வகை மொழிவோன்-தன்னை இறையவன் தேவி மேவும் – யசோதர:2 114/1
மேல்


மொள்ளும் (1)

மொள்ளும் ஆறும் முதுகு நெளித்து உண்டு ஊன் – நீலகேசி:3 237/2
மேல்


மொறுமொறுத்து (1)

என்று கண்டு மொறுமொறுத்து என் செயும் – யசோதர:3 222/1

மேல்