மெ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெச்சாயே 1
மெச்சி 1
மெச்சியம் 1
மெச்சுவனே 1
மெத்தெனா 1
மெய் 69
மெய்-தாம் 1
மெய்-பால் 1
மெய்க்-கண் 1
மெய்கள்-தாம் 1
மெய்ஞ்ஞான 1
மெய்ந்நூல் 3
மெய்ந்நெறி 1
மெய்ப்படமாட்டான் 1
மெய்ப்பாலது 1
மெய்ப்பொருள் 4
மெய்ப்பொருளை 2
மெய்ம்மயங்கி 1
மெய்ம்மறந்து 1
மெய்ம்மை 19
மெய்ம்மைபெறா 1
மெய்ம்மைய 1
மெய்ம்மையாக 1
மெய்ம்மையால் 2
மெய்ம்மையில் 2
மெய்ம்மையும் 3
மெய்ம்மையை 2
மெய்மறந்து 1
மெய்யர் 3
மெய்யவள் 1
மெய்யறிவு 1
மெய்யறிவு_இலாமை 1
மெய்யன் 2
மெய்யா 1
மெய்யால் 2
மெய்யில் 4
மெய்யின் 3
மெய்யினால் 1
மெய்யினும் 1
மெய்யுணர்ச்சி 1
மெய்யுணர்வு 1
மெய்யும் 6
மெய்யுரை 1
மெய்யுள் 1
மெய்யென 1
மெய்யே 2
மெய்யை 1
மெய்யோடு 1
மெய்வகை 1
மெல் 46
மெல்_நடையினாளும் 1
மெல்_இயல் 3
மெல்_இயலார் 1
மெல்_இயலை 1
மெல்கு 1
மெல்ல 9
மெல்லமெல்ல 2
மெல்லவே 13
மெல்லிய 1
மெல்லியலவர்க்கு 1
மெல்லியலவர்களை 1
மெல்லியலார்-தம் 1
மெல்லியாள் 1
மெல்லும் 1
மெல்லென 1
மெல 1
மெலிகேன் 1
மெலிந்த 1
மெலிந்தவர் 1
மெலிந்தும் 1
மெலிபவால் 1
மெலிய 2
மெலியலுற்றான் 1
மெலிவு 3
மெலிவுசெய்யவே 1
மெலிவும் 1
மெழுக்கிட்டது 1
மெழுகி 3
மெழுகிட்ட 1
மெழுகிட்டான் 1
மெழுகிய 1
மெழுகின் 2
மெழுகு 3
மெழுகு-மின் 1
மெள்ள 3
மெள்ளவே 1
மென் 46
மென்மெலவே 1
மென்றிடும் 1

மெச்சாயே (1)

மெச்சாயே நீ என யான் மெச்சுவனே என்றான் – நீலகேசி:5 657/4
மேல்


மெச்சி (1)

மெச்சி இடத்தால் பிறிது_இன்மை விளம்புகின்றாய் – நீலகேசி:4 416/1
மேல்


மெச்சியம் (1)

மெழுகு-மின் இடை மெச்சியம் அல்லதின் – நீலகேசி:5 561/3
மேல்


மெச்சுவனே (1)

மெச்சாயே நீ என யான் மெச்சுவனே என்றான் – நீலகேசி:5 657/4
மேல்


மெத்தெனா (1)

மெத்தெனா வருக என்று விடுத்தனன் – உதயணகுமார:1 44/2
மேல்


மெய் (69)

உள்ளம் மெய் மொழிகள்-தம்மால் உணர்ந்தவன் இனியன் ஆனான் – உதயணகுமார:1 47/4
மிக்க வீணையை மெய் நரம்பு ஆர்த்து உடன் – உதயணகுமார:1 48/3
மேல் நிகழ்வு என மெய் தவர் கூறினது – உதயணகுமார:5 274/1
காதல் யானையை கையில் மெய் தீண்டியே – உதயணகுமார:6 351/1
மெய் வகை விளக்கம் சொல்லி நல் அறம் மிக அளிப்பார் – யசோதர:1 54/2
மெய் வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டை எய்தும் – யசோதர:1 70/3
குரை கழல் அசோகன் மெய் குணதரன் பணிந்து – யசோதர:2 84/1
உருத்து எழு சினத்தின் சென்ற உள்ளம் மெய் மொழியோடு ஒன்றி – யசோதர:2 86/3
மெய் தெரிய கண்டே தளர்ந்து கண் புதைத்து மீண்டேன் – யசோதர:2 104/3
விரை கமழ் குழலி மேவி மெய் துயில் என்று காம_துறையினள் – யசோதர:2 117/3
மெய் பலி கொண்டு நெஞ்சின் விரும்பினள் உவக்கும் என்றாள் – யசோதர:2 136/4
மெய் விரிந்தன வேங்கையும் சோர்ந்த தேன் – சூளாமணி:1 17/3
கஞ்சுகியவர்கள் மெய் காவல் ஓம்பினார் – சூளாமணி:3 92/4
மெய் மயிர் எறிந்து ஒளி துளும்பும் மேனியன் – சூளாமணி:4 181/1
மெய் அணி பொறியவன் எவன்-கொல் வீரனே – சூளாமணி:4 229/4
மின் தவழ் விளங்கு வேலோய் மெய் இனும் மேவல் வேண்டும் – சூளாமணி:5 360/2
மெய் இலங்கு உறையினர் விசித்த கச்சையர் – சூளாமணி:5 376/3
தீட்டினார் நறும் சாந்தமும் சிறிது மெய் கமழ – சூளாமணி:6 471/2
மெய் புடை தெரிந்து மேலை விழு தவம் முயன்று நோற்றார்க்கு – சூளாமணி:6 528/1
மெய் புடை தெரிந்து சொன்ன தூதுவர் அவரை மீட்டே – சூளாமணி:7 700/2
மெய் நவின்று இலங்கும் செம்பொன் அங்கதம் விளைந்த பேரான் – சூளாமணி:8 836/4
மெய் அகத்து உவகை கூர விரும்பி தன் அருகு கூவி – சூளாமணி:8 1007/3
மெய் புடை தெரியமாட்டான் விருந்து கொள் மனத்தன் ஆனான் – சூளாமணி:8 1016/4
விரும்பினராய் தொழுது எழுவார் மெய் மறப்பும் உள் மகிழ்வும் வியப்போ அன்றே – சூளாமணி:8 1038/4
பொன் தவழ் பசலை மெய் புகலலுற்றதே – சூளாமணி:8 1045/4
மெய் மயிரெறிந்து மணி வேர் நுதல் அரும்பி – சூளாமணி:8 1103/2
வெருளுமாறு உள்ளம் எல்லாம் வெருண்டு மெய் விதலை கொண்டார் – சூளாமணி:9 1135/4
விஞ்சையர் அதனை கண்டு மெய் பொதிர் எறிந்து விம்ம – சூளாமணி:9 1140/1
மெய்-பால் எடுத்து குத்தியும் மெய் விலங்கி பாய்ந்தும் ஒன்றொன்றை – சூளாமணி:9 1348/3
மெய் வரை நிரைத்திட விழுந்த யானைகள் – சூளாமணி:9 1405/2
அஞ்சு தோன்ற நுதலின் இழித்து அந்தணாளார் மெய் தீண்டி – சூளாமணி:9 1483/2
தன்னை மெய் மறைத்து ஓர் விஞ்சை தாழ் இருள் எழினியாக – சூளாமணி:10 1630/3
கங்குல்-வாய் மடந்தை கண்ட கனவு மெய் ஆகல் வேண்டி – சூளாமணி:10 1709/1
உக்கிர மெய் குலத்து அரசன் ஒளி வேல் இ இளையவனது உருவே கண்டாய் – சூளாமணி:10 1810/2
பன்னும் மெய் துறவில் புக்கான் பயாபதி மன்னர்_மன்னன் – சூளாமணி:11 1840/3
இன் இசை முரசம் கேட்டே மெய் பெரிது இனிய கேட்டாம் – சூளாமணி:11 1869/1
வெண் துகில் உடுத்து வெண் சாந்து மெய் வழித்து – சூளாமணி:11 1873/1
மெய் மலர் அணியினர் வேந்தர் ஆயினார் – சூளாமணி:11 1875/4
மெய் நிறம் செய்யன வேழம் மீமிசை – சூளாமணி:11 1876/3
கூடுவார் குழுவு மெய் குழுமி எங்கணும் – சூளாமணி:11 1887/3
மெய் ஞலம் விஞ்சையர் விரவ மேல் எலாம் – சூளாமணி:11 1899/3
உறவினர்க்கு ஓம்புதல் மெய் தலைப்பாடு என்று – சூளாமணி:11 1994/2
அம் பவழ வண்ணம் முதலானவர் மெய் நாற்றம் – சூளாமணி:11 2037/4
தன்னை மெய் பதைப்ப நோக்கி அவனையும் தபுப்ப நோனார் – சூளாமணி:12 2118/3
நச்சு மெய் என நடுங்கும் என் உடம்பு என ஒடுங்கி – நீலகேசி:1 56/4
கொல்ல ஆவ வல்ல மெய்
பல்ல ஆவும் உள்ளன – நீலகேசி:1 94/2,3
புண்ணினால் அழிய மெய் போரிடை புகுத்தவும் – நீலகேசி:1 104/2
அது அன்றி மெய் பிணியும் மூன்றாய் அலரும் – நீலகேசி:1 109/4
புனைவு சேர் அணுமை பொய்_இன்மை மெய் உரை – நீலகேசி:1 119/2
புழுகு உருகு மெய் காட்டி பொல்லாத போக்கி – நீலகேசி:1 133/3
வெல்லற்கு அரிய அனங்கனை மெய் வெண் நீறு ஆக வெகுண்டோய் நீ – நீலகேசி:1 138/2
விடம்படு பல் உயிர் மெய் வழி ஏற – நீலகேசி:1 140/2
நின் மெய் ஆகிய ஞான நிகழ்ச்சி நீ விரித்து உரைத்த – நீலகேசி:2 161/2
மெய் கோளால் என்றி யான் மிகை தெருட்டும் திறம் காணேன் – நீலகேசி:4 298/4
மெய் அளவிற்று உயிர் என்று மெய் அகத்து அடக்கு உரைத்தல் – நீலகேசி:4 301/1
மெய் அளவிற்று உயிர் என்று மெய் அகத்து அடக்கு உரைத்தல் – நீலகேசி:4 301/1
மெய் அளவ்¢ன் மெய் உணர்வை மெய் அகத்து அடக்கு உரைத்தி – நீலகேசி:4 301/3
மெய் அளவ்¢ன் மெய் உணர்வை மெய் அகத்து அடக்கு உரைத்தி – நீலகேசி:4 301/3
மெய் அளவ்¢ன் மெய் உணர்வை மெய் அகத்து அடக்கு உரைத்தி – நீலகேசி:4 301/3
மோனம் பொய் அஞ்சி கொண்டவன் மெய் உரைக்கு – நீலகேசி:4 325/1
ஊன் மெய் கொண்டு உண்பவன் உன் அலது என்றாள் – நீலகேசி:4 342/4
இனைய மெய் இறையவன் இணை அடி இவையே – நீலகேசி:4 455/4
மூக்கொடு நா மெய் இ மூன்றும் தம் மூன்று புலன்களையும் – நீலகேசி:5 515/1
மெய் பிளந்திட்டு வேண்டுநர்க்கு ஈயும் விழுமிய்யீர் – நீலகேசி:5 564/4
மெய் நின்ற பெற்றி அறிந்தாய் இதன் மேலும் நன்றா – நீலகேசி:6 728/2
மெய் ஆம் பிற செய்கை ஆதலினால் இவை – நீலகேசி:7 740/3
வேண்டின் மெய் ஆதி விகிர்தி விகற்பொடு – நீலகேசி:7 745/2
மெய் வகையால் ஒப்பு_இல் மேற்கோள் முதலிய – நீலகேசி:7 763/3
கண்ணும் மூக்கொடு நா மெய் செவிகளாய் – நீலகேசி:10 857/2
மேல்


மெய்-தாம் (1)

மெய்-தாம் ஒழிய அவை பாறு எய்தல் வேண்டுதலால் – நீலகேசி:4 408/2
மேல்


மெய்-பால் (1)

மெய்-பால் எடுத்து குத்தியும் மெய் விலங்கி பாய்ந்தும் ஒன்றொன்றை – சூளாமணி:9 1348/3
மேல்


மெய்க்-கண் (1)

தான் மெய்க்-கண் நின்ற தவசி மற்று எங்கு உளன் – நீலகேசி:4 342/3
மேல்


மெய்கள்-தாம் (1)

காளமான மெய்கள்-தாம்
வாள வாய்களால் பல – நீலகேசி:1 93/1,2
மேல்


மெய்ஞ்ஞான (1)

விண்டு ஆங்கு வெவ்_வினை வெரூஉ உதிர நூறி விரிகின்ற மெய்ஞ்ஞான சுடர் விளக்கும் மாட்டி – சூளாமணி:11 1910/1
மேல்


மெய்ந்நூல் (3)

அங்க பூ ஆதி மெய்ந்நூல் அமிழ்து அகப்படுத்து அடைந்த – யசோதர:1 55/3
ஆயிடை அலகு_இல் மெய்ந்நூல் அளவு சென்று அடங்கி நின்றான் – சூளாமணி:3 103/1
கல்லாது அறிந்த கடவுள் இறை ஆகும் மெய்ந்நூல்
சொல்லானும் அல்லன் அவன் சொல்லினது ஆகும் மும்மூன்று – நீலகேசி:6 729/1,2
மேல்


மெய்ந்நெறி (1)

மெய்ந்நெறி இது என விரிப்ப கேட்டிருந்து – நீலகேசி:8 790/1
மேல்


மெய்ப்படமாட்டான் (1)

மேனாள் போல மெய்ப்படமாட்டான் விளையாடும் – சூளாமணி:8 1124/3
மேல்


மெய்ப்பாலது (1)

மெய்ப்பாலது அ அரைசர் வீற்றிருக்கும் வியன் உலகே – சூளாமணி:11 2066/4
மேல்


மெய்ப்பொருள் (4)

மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறு சால் – சூளாமணி:2 57/1
மெய்ப்பொருள் தெரிதல் மற்று அ பொருள் மிசை விரிந்த ஞானம் – சூளாமணி:4 201/1
விளியாத மெய்ப்பொருளை நீ விரித்தாய் என்கோ நீ விரித்தவாறே மெய்ப்பொருள் விரிந்தது என்கோ – சூளாமணி:11 1905/3
மெய்ப்பொருள் தேறுதல் காட்சி விளக்கு அது – சூளாமணி:11 2018/1
மேல்


மெய்ப்பொருளை (2)

விளியாத மெய்ப்பொருளை நீ விரித்தாய் என்கோ நீ விரித்தவாறே மெய்ப்பொருள் விரிந்தது என்கோ – சூளாமணி:11 1905/3
விளங்கா திசை இன்றி விளங்க வீரன் மெய்ப்பொருளை
உளம் காண் கேவல பேர்_ஒளியால் இம்பர்_உலகு எல்லாம் – சூளாமணி:12 2127/2,3
மேல்


மெய்ம்மயங்கி (1)

மயில்-உடை ஆடல் கண்டு மகிழ்ந்து மெய்ம்மயங்கி நிற்பார் – சூளாமணி:10 1641/1
மேல்


மெய்ம்மறந்து (1)

கழிந்த அறமும் மெய்ம்மறந்து கங்குலும் பகல் விடான் – உதயணகுமார:2 124/2
மேல்


மெய்ம்மை (19)

மிக்க அண்ணலும் சென்று மெய்ம்மை வேள்வி தன்மையால் – நாககுமார:4 143/2
வெச்செனும் சொல் ஒன்றுமே விடுத்து மெய்ம்மை மேயினான் – சூளாமணி:4 139/4
மாண்ட தன் நிலைமை உள்ளி வரு பொருள் மெய்ம்மை நோக்கி – சூளாமணி:6 546/1
தெளியாமல் இல்லை நின் திரு_அடிகள் மெய்ம்மை தெளிந்தாலும் செவ்வனே தெரிந்து உரைக்கல் ஆமே – சூளாமணி:11 1905/4
மேற்படை மெய்ம்மை விளக்கும் விளக்கு அது – சூளாமணி:11 2014/3
வென்றார்-தம் நூலின் விதி மெய்ம்மை உணர்ந்தவரே – நீலகேசி:1 124/4
உடம்பின் மெய்ம்மை உணர்ந்தோய் நீ உறங்கல் ஆர்வம் மறுத்தோய் நீ – நீலகேசி:1 139/1
வில்லினை ஏற்றி நும் மெய்ம்மை கொளீஇயது – நீலகேசி:4 327/3
கண்டாய் இ மெய்ம்மை பிறர் காண்டற்கு அரியது என்றான் – நீலகேசி:4 398/3
என்றலால் இன்ன தன்மை இறைவனது அறிவு மெய்ம்மை
இன்று எலாம் கேட்டும் ஓராய் ஏட நீ என்று சொன்னாள் – நீலகேசி:4 439/3,4
கற்றிலை மெய்ம்மை நீ கட்புலம்-தன்னோடு ஓர் காலத்தினால் – நீலகேசி:5 516/2
சொல்லுவிர் ஆயின் சொல்லிய மெய்ம்மை துறவு ஆம்-மன் – நீலகேசி:5 566/3
இஃதால் என் மெய்ம்மை கிடந்த ஆறு என்றானுக்கு – நீலகேசி:5 652/2
கண்டிலை நீ மெய்ம்மை காழ்ப்பட்டு நின்ற கன உயிர்க்கு எண் – நீலகேசி:6 716/3
இன்றை பகலே இதன் மெய்ம்மை இசைக்கிற்றியோ – நீலகேசி:6 719/4
மேல் மருவாது உருவு ஆதலினால் மெய்ம்மை
நூல் மருவாது சொன்னாய் இது என்றனள் – நீலகேசி:7 760/2,3
மிகுதி செய் பூதத்து மெய்ம்மை பெறாமல் – நீலகேசி:7 761/3
நெறி எனப்படுவது நின்ற மெய்ம்மை அங்கு – நீலகேசி:8 785/1
நின்ற மெய்ம்மை நினது என நேர்வல் யான் – நீலகேசி:10 878/4
மேல்


மெய்ம்மைபெறா (1)

மேற்குலத்தாரோடு இழிந்தவர் என்பது மெய்ம்மைபெறா
நூல் திறம் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவு_உடையவரே – நீலகேசி:9 830/3,4
மேல்


மெய்ம்மைய (1)

வேல் ஆர் கையாய் மெய்ம்மைய அன்றே மிகை ஆலோ – சூளாமணி:5 308/4
மேல்


மெய்ம்மையாக (1)

மீட்டு அது மெய்ம்மையாக வியந்து உரை விரிக்கல் ஆமோ – சூளாமணி:6 526/4
மேல்


மெய்ம்மையால் (2)

மெய்ம்மையால் கரும சுற்றம் வேண்டுவது இல்லை வேந்தே – சூளாமணி:5 356/4
வேறு வேறு ஐந்து பூதமும் மெய்ம்மையால்
ஈறும் தோற்றமும் இல் உயிர் ஆயின – நீலகேசி:10 882/1,2
மேல்


மெய்ம்மையில் (2)

விஞ்சு மா தவன் மெய்ம்மையில் கூறுவான் – உதயணகுமார:5 271/4
மெய்ம்மையில் தெரிந்து ஒளி துளும்பும் மேனியன் – சூளாமணி:5 386/3
மேல்


மெய்ம்மையும் (3)

மிக்க பல் கதிகளும் உயிரின் மெய்ம்மையும் உணர்ந்தவர்க்கு அரிதே – நீலகேசி:1 70/3
கண்ட நாம் மெய்ம்மையும் காட்டுவாய் ஈங்கு எனின் – நீலகேசி:5 552/3
அறியும் மெய்ம்மையும் ஐம்_கந்தம் மாட்சிய்யும் அல்லவையும் – நீலகேசி:5 571/1
மேல்


மெய்ம்மையை (2)

நீ இனே சொன்ன மெய்ம்மையை நோக்கலார் – நீலகேசி:5 559/1
நினக்கு இனி நெறி-வயின் நின்ற மெய்ம்மையை
மனக்கொள கிளக்குவேன் மன்னும் கேள் என – நீலகேசி:8 784/3,4
மேல்


மெய்மறந்து (1)

அன்று மெய்மறந்து சேர்ந்தார் கின்னரர் அமரர் தாழ்ந்தார் – சூளாமணி:6 542/3
மேல்


மெய்யர் (3)

துளங்கிய மெய்யர் உள்ளம் துளங்கலர் தொழுது நின்றார் – யசோதர:1 25/4
வம்-மின் நீர் பசியின் வாடி வருந்திய மெய்யர் ஆனீர் – யசோதர:1 26/2
இலக்கணம் அமைந்த மெய்யர் இருவரும் இயைந்து நிற்ப – யசோதர:1 59/2
மேல்


மெய்யவள் (1)

அணங்கு மெய்யவள் அரும் தவன் உழை வர நினைந்தாள் – நீலகேசி:1 60/4
மேல்


மெய்யறிவு (1)

மெய்யறிவு_இலாமை என்னும் வித்தினில் பிறந்து வெய்ய – சூளாமணி:4 198/1
மேல்


மெய்யறிவு_இலாமை (1)

மெய்யறிவு_இலாமை என்னும் வித்தினில் பிறந்து வெய்ய – சூளாமணி:4 198/1
மேல்


மெய்யன் (2)

நரம்புகள் விசித்த மெய்யன் நடையினில் கழுதை நைந்தே – யசோதர:2 105/1
புண் பெற்ற மெய்யன் பொல்லா புழுதியில் துளையும் கையன் – யசோதர:2 113/2
மேல்


மெய்யா (1)

மெய்யா மேவும் மேதகுவானை மிக எண்ணி – சூளாமணி:5 318/3
மேல்


மெய்யால் (2)

அரசவை விடுத்து மெய்யால் அறு_சினன் ஒப்ப மன்னன் – யசோதர:2 117/1
வேர்த்தனர் மெய்யால் வெதும்பினர் மனத்தால் விசும்பினை மயங்கவே திரிந்தார் – சூளாமணி:9 1323/4
மேல்


மெய்யில் (4)

அண்ணல் நீ அருளிற்று எல்லாம் அருவருப்பு உடைய மெய்யில்
நண்ணிய நமது என் உள்ளத்தவர்களுக்கு உறுதி நாடி – யசோதர:1 45/1,2
பூதி கந்தத்தின் மெய்யில் புண்களும் கண்கள் கொள்ளா – யசோதர:2 106/1
அடிகள் நீர் அடங்கி மெய்யில் அருள் புரி மனத்திர் ஆகி – யசோதர:4 231/2
மின் அவிர் விளங்கு சுடர் வேல் விடலை மெய்யில்
பொன் அணி புனைந்து புது வேள்வி நகர் புக்கான் – சூளாமணி:8 1089/3,4
மேல்


மெய்யின் (3)

மெய்யின் சோதி சூழ் ஒளி மின்னின் பெயராளும் – சூளாமணி:10 1746/4
கண்ணின் குறி மூக்கின் குறி மெய்யின் குறி செவியின் – நீலகேசி:5 522/1
மெய்யின் உள எனின் மேற்கோள் அழிதலும் – நீலகேசி:7 743/2
மேல்


மெய்யினால் (1)

மெய்யினால் வெளிப்பட்ட நீரதால் – சூளாமணி:7 601/2
மேல்


மெய்யினும் (1)

குட்டமே முழு மெய்யினும் எழுந்தவன் குடுமி – நீலகேசி:5 482/3
மேல்


மெய்யுணர்ச்சி (1)

மேல் நின்ற எல்லாம் மிக நல்ல இ மெய்யுணர்ச்சி
தான் நின்ற தன்மை தவிராது உரைக்கிற்றியேல் நின் – நீலகேசி:6 725/2,3
மேல்


மெய்யுணர்வு (1)

வேதனை-அது தீர்ப்பது மெய்யுணர்வு ஆமே – நீலகேசி:6 724/4
மேல்


மெய்யும் (6)

மெய்யும் அறிவன் வினவில் விஞ்சையன் மடந்தை – சூளாமணி:10 1607/3
மெய்யும் மிடைவுற்ற இதுவால் விதியின் வண்ணம் – சூளாமணி:11 2032/4
முன் கொன்றான் தன் தாயை முழு மெய்யும் போர்த்திருந்து – நீலகேசி:2 190/1
ஏக மெய்யும் விண்டால் இயையார்களே – நீலகேசி:2 214/4
பருங்கினன் மெய்யும் பராசரன்-தன்னை – நீலகேசி:7 733/2
விதனமும் படாய் அது மெய்யும் ஆகுமே – நீலகேசி:8 802/4
மேல்


மெய்யுரை (1)

மீட்டு மீட்டு இவை சொல்லின மெய்யுரை
நாட்டும் ஆறு என்-கொலோ விளி நாச நீ – நீலகேசி:5 533/3,4
மேல்


மெய்யுள் (1)

கட்டி விடு பூம் பிணையல் கைவிடலும் மெய்யுள்
ஒட்டிவிடு காதலொடு வந்து உருவுகொண்டு – சூளாமணி:10 1617/2,3
மேல்


மெய்யென (1)

வீங்கி வந்து இழிந்த போழ்து மெய்யென வியப்பு சென்றேன் – சூளாமணி:7 771/4
மேல்


மெய்யே (2)

அஞ்சினம் எனினும் மெய்யே அடைப வந்து அடையுமானால் – யசோதர:1 33/1
வினையின விளைவு-தம்மை வெருவினம் அடிகள் மெய்யே
சினவரன் சரணம் மூழ்கி செறி தவம் படர்தும் என்றார் – யசோதர:5 316/3,4
மேல்


மெய்யை (1)

புகை கமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த்தாள் – யசோதர:2 130/3
மேல்


மெய்யோடு (1)

எரி போல்வன சுரி பங்கியொடு இருள் போல் இருள் மெய்யோடு
அரி போல் அதிர் அகல் வானுற நிமிரா அடி புடையா – சூளாமணி:9 1311/1,2
மேல்


மெய்வகை (1)

மெய்வகை வயந்தகன்-தான் வீறு அமைந்து இனிதின் வந்தான் – உதயணகுமார:1 119/4
மேல்


மெல் (46)

அன்ன மெல் நடை வேல்_கண்ணாள் அருந்ததி அனைய நங்கை – உதயணகுமார:1 11/2
பவள கொப்புளங்கள் பாவை பஞ்சி மெல் அடியில் தோன்ற – உதயணகுமார:1 115/2
அன்ன மெல் நடையினாளை அகம் மகிழ் குளிர கூறி – உதயணகுமார:4 239/3
அன்ன மெல் நடை அமிர்தம் அன்னவள் – உதயணகுமார:5 287/2
பஞ்சின் மெல் அடி பாவைமாருடன் – உதயணகுமார:5 296/2
வில்லினது எல்லை கண்ணால் நோக்கி மெல் அடிகள் பாவி – யசோதர:1 28/1
அன்ன மெல்_நடையினாளும் அருகு அணைந்து உருகும் வண்ணம் – யசோதர:1 68/3
மிகை கமழ் நீரில் தேற்ற மெல்_இயல் தேறினாளே – யசோதர:2 130/4
பஞ்சி மெல் அணை பாவிய பள்ளி மேல் – யசோதர:3 167/2
அன்ன மெல் நடையாள் அமிர்தம்மதி – யசோதர:3 201/2
அன்ன மெல் நடையினாளும் அபய முன் மதி என்பாளாம் – யசோதர:4 260/2
வீங்கு இள முலையவர் மெல் என் சீறடி – சூளாமணி:1 9/3
அன்ன மெல் நடையவர் பரவ ஆய் துகில் – சூளாமணி:3 91/2
முகைத்த வார் முல்லையை முருக்கும் மெல் இயல் – சூளாமணி:4 210/1
அம் சுடர் மெல் விரல் சிவப்ப ஆழியின் – சூளாமணி:4 219/3
பாடகம் மெல் ஏர் பரவிய சீறடி – சூளாமணி:5 287/2
மன்னர் நீள் முடி மெல் மணி தொத்து ஒளி – சூளாமணி:5 331/1
அன்ன மெல் நடையவட்கு அறிய கூறினான் – சூளாமணி:5 412/4
சூடக முன்கையர் தோடு அக மெல் அடி – சூளாமணி:7 663/3
மெல் நரம்பு அனுக்கும் தீம் சொல் மெல்லியலார்-தம் பாடல் – சூளாமணி:8 836/1
விஞ்சை அம் தொழில் இயல் விடுத்த மெல் இயல் – சூளாமணி:8 957/2
விலங்கலின் குவடு சேரும் மெல் இயல் தோகை_போல்வாள் – சூளாமணி:8 975/4
வேய் இரும் பணை மென் தோளார் மெல் அடி பரவ சென்று – சூளாமணி:8 984/2
அன்ன மெல் நடையவள் அமர ஆயிடை – சூளாமணி:8 1055/2
வீறு பெறு மெல்_இயலை ஆட்டிய பின் மீட்டும் – சூளாமணி:8 1091/2
அங்கையின் அணங்கின் அணி மெல் விரல் பிடித்து – சூளாமணி:8 1102/2
மின் பருகு நுண்_இடையார் மெல் உருவம் கொண்டதே – சூளாமணி:8 1116/4
விடவரும் இயல்புகள் திரிந்து மெல் இயல் – சூளாமணி:9 1221/1
வேய் புரையும் மென் பணை தோள் மெல்_இயலார் மெல்லவே திறந்தார் அன்றே – சூளாமணி:9 1529/4
பந்து அணையும் மெல் விரலி பாடகம் ஒடுக்கி – சூளாமணி:10 1605/1
செழும் மலர் தாது கொய்து மெல் விரல் சிவந்த என்பார் – சூளாமணி:10 1642/1
விழு மலர் துகள் வந்து ஊன்ற மெல் அடி மெலிந்த என்பார் – சூளாமணி:10 1642/2
தம் பொன் சுடர் ஆழி மெல் விரலால் தைவந்து – சூளாமணி:10 1655/3
மிடைந்த தோள் நெகிழ விம்மி மெல்_இயல் வெருவலோடும் – சூளாமணி:10 1707/2
செம்பொன் சுருளை மெல் விரலால் திருத்தி செறிந்த தேர் அல்குல் – சூளாமணி:10 1753/1
விரை செறி குழல் அம் கூந்தல் மெல்_இயல் வருக என்றான் – சூளாமணி:10 1793/3
அம் மெல் அடி தாம் அரைசர் ஆவியொடு நோவ – சூளாமணி:10 1798/1
செம் மெல் இதழ் வாயொடு அவர் சிந்தனை துடிப்ப – சூளாமணி:10 1798/2
கொடி அரத்த மெல் விரலால் கொண்டு அரசர் குல வரவு கொழிக்கும் நீராள் – சூளாமணி:10 1801/2
வஞ்சியின் மெல் இடையவளை வால் நிலா வளர் முன்றில் வலமாய் சூழ்ந்து – சூளாமணி:10 1820/1
பஞ்சியின் மெல் அடி நோவ நடை பயிற்றி படை வேந்தர் பலரை காட்டி – சூளாமணி:10 1820/2
மெல் நரம்பின் இசை கேட்டும் வெறி அயர்வு கண்டு உவந்தும் – சூளாமணி:11 2043/3
ஆமான் மட பிணை அன்ன மெல் நோக்கி அவர் திறமே – நீலகேசி:1 83/4
திரைப்ப மெல் அணை செய்வ விழு தவம் – நீலகேசி:3 251/2
பறைந்து போய் மெல் கோலால் பல் எலாம் தூயவாம் – நீலகேசி:4 278/2
பஞ்சி மெல் அடி நோவ பகல் நடந்து – நீலகேசி:5 550/1
மேல்


மெல்_நடையினாளும் (1)

அன்ன மெல்_நடையினாளும் அருகு அணைந்து உருகும் வண்ணம் – யசோதர:1 68/3
மேல்


மெல்_இயல் (3)

மிகை கமழ் நீரில் தேற்ற மெல்_இயல் தேறினாளே – யசோதர:2 130/4
மிடைந்த தோள் நெகிழ விம்மி மெல்_இயல் வெருவலோடும் – சூளாமணி:10 1707/2
விரை செறி குழல் அம் கூந்தல் மெல்_இயல் வருக என்றான் – சூளாமணி:10 1793/3
மேல்


மெல்_இயலார் (1)

வேய் புரையும் மென் பணை தோள் மெல்_இயலார் மெல்லவே திறந்தார் அன்றே – சூளாமணி:9 1529/4
மேல்


மெல்_இயலை (1)

வீறு பெறு மெல்_இயலை ஆட்டிய பின் மீட்டும் – சூளாமணி:8 1091/2
மேல்


மெல்கு (1)

மெல்கு பூம் துகில் விரித்தவா வருகின்ற விதலைகள் மிக நோக்காய் – சூளாமணி:8 887/4
மேல்


மெல்ல (9)

வேயிடை_தோளி மெல்ல விழித்தனள் வியந்து நோக்கா – யசோதர:2 94/3
தையலாள் மெல்ல தேறி சாரனை மகிழ்ந்து நோக்கி – யசோதர:2 121/1
கற்றை வார் குழலி மெல்ல காவலன் பால் இருந்தாள் – யசோதர:2 129/4
அஞ்சி மெல்ல அசைந்தது பூமி மேல் – யசோதர:3 167/4
என அவர் இறைஞ்சி மெல்ல இ நகரத்து வந்தார் – யசோதர:5 319/3
விடு கொடா வியாளம் நிற்ப மெல்ல வன் பணிகள் செய்யும் – சூளாமணி:8 912/3
மின் நிழல் பூணவன் மெல்ல நக்கு அது – சூளாமணி:10 1599/1
விரை தரு பூம் படை மேல் மெல்ல அசைந்தார் – சூளாமணி:10 1652/4
விண்ட மலர் அல்லி மிசை மெல்ல நனி சென்றாள் – சூளாமணி:10 1797/4
மேல்


மெல்லமெல்ல (2)

வேகத்தை மெல்லமெல்ல வில்_வலான் பெருக்கியிட்டான் – சூளாமணி:8 1021/4
கங்குலும் மெல்லமெல்ல கையகன்றிட்டது அன்றே – சூளாமணி:9 1548/4
மேல்


மெல்லவே (13)

கார்செய் காலை கறித்-தொறும் மெல்லவே
போர்செய் மா இனம் பூ தண் புறணியே – சூளாமணி:1 26/3,4
வெம் சுடர் வேலவர்க்கு உணர்த்தி மெல்லவே
பஞ்சு உடை சேவடி பரவ சென்று தன் – சூளாமணி:4 219/1,2
அல்குல் நோம் என சிலம்பு அணிந்து மெல்லவே
செல்க என் திரு_மகள் என்று செம்பொனால் – சூளாமணி:4 227/2,3
வென்றவன் திரு_அடி வணங்கி மெல்லவே
சென்று தன் வள நகர் செம்பொன் மாளிகை – சூளாமணி:8 1041/1,2
மேயின குறிப்பினை அறிந்து மெல்லவே
பாயின பணி மொழி பலவும் கூறினார் – சூளாமணி:8 1046/3,4
மெல்லவே மெல்லவே சுருங்கி வீங்கு நீர் – சூளாமணி:8 1056/3
மெல்லவே மெல்லவே சுருங்கி வீங்கு நீர் – சூளாமணி:8 1056/3
மிடைந்த தோள் தழூஉ பிணை நெகிழ மெல்லவே
இடம்கழி தொழில் ஒழிந்து இளையர் துஞ்சினார் – சூளாமணி:8 1059/3,4
புனைந்து அகம் புணர் பெடை புல்லி மெல்லவே
அனந்தருள் முரன்றன அன்றில் சேவலே – சூளாமணி:8 1062/3,4
வேய் புரையும் மென் பணை தோள் மெல்_இயலார் மெல்லவே திறந்தார் அன்றே – சூளாமணி:9 1529/4
மின் இலங்கு அவிர் ஒளி மேனி மெல்லவே
தொல் நலம் பெயர்ந்து பொன் சுடர்ந்து தோன்றலால் – சூளாமணி:10 1711/1,2
விண்டு அழி நிறையள் ஆகி மெல்லவே நடுங்கி நாணி – சூளாமணி:10 1825/1
மெல்லவே இவை கேள் என விரித்தவன் உரைக்கும் – நீலகேசி:5 483/4
மேல்


மெல்லிய (1)

மெல்லிய மாலை-தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு – சூளாமணி:6 559/2
மேல்


மெல்லியலவர்க்கு (1)

வேரி ஆர் குவளை வேய்ந்த மெல்லியலவர்க்கு தோற்ற – சூளாமணி:10 1677/3
மேல்


மெல்லியலவர்களை (1)

மெல்லியலவர்களை மெலிவுசெய்யவே – சூளாமணி:8 1051/4
மேல்


மெல்லியலார்-தம் (1)

மெல் நரம்பு அனுக்கும் தீம் சொல் மெல்லியலார்-தம் பாடல் – சூளாமணி:8 836/1
மேல்


மெல்லியாள் (1)

மின் சுலாம் நுடங்கு இடை மெல்லியாள் திறம் – சூளாமணி:5 384/2
மேல்


மெல்லும் (1)

ஆட்டும் கவுளும் அற மெல்லும் பற்களும் – நீலகேசி:7 757/3
மேல்


மெல்லென (1)

மீது படு பொங்கு அணையின் மெல்லென இருந்தான் – சூளாமணி:10 1604/4
மேல்


மெல (1)

ஐய தலத்தும் மெல விரிந்து அது அயலார் செல்லும் ஆணையாய் – சூளாமணி:9 1478/3
மேல்


மெலிகேன் (1)

வேந்த யான் மனத்தின் மெலிகேன் அரோ – சூளாமணி:7 632/4
மேல்


மெலிந்த (1)

விழு மலர் துகள் வந்து ஊன்ற மெல் அடி மெலிந்த என்பார் – சூளாமணி:10 1642/2
மேல்


மெலிந்தவர் (1)

பாழியால் மெலிந்தவர் திறத்து பண்டு எலாம் – சூளாமணி:7 688/1
மேல்


மெலிந்தும் (1)

பாழியான் மெலிந்தும் பண்டை பாவனை பயிற்றி என்னை – சூளாமணி:9 1458/2
மேல்


மெலிபவால் (1)

விதியினை விலக்கமாட்டா மெலிபவால் வெளிய நீரார் – சூளாமணி:7 668/4
மேல்


மெலிய (2)

மேவி நின்றவரையும் மெலிய விம்முமே – சூளாமணி:1 11/4
மிடை கெழு வினைவர் தானை மெலிய மேற்சென்றுவிட்டான் – சூளாமணி:12 2112/4
மேல்


மெலியலுற்றான் (1)

வெம் தழல் கனல மூட்டி வில்_வலான் மெலியலுற்றான் – சூளாமணி:8 1024/4
மேல்


மெலிவு (3)

வெம் சுடர் வேல் இளையவன் ஆங்கு இனையனவின் மெலிவு எய்த விசும்பு செல்லும் – சூளாமணி:8 1035/1
மெள்ளவே கனை இருள் மெலிவு சென்றதே – சூளாமணி:8 1064/4
வேலை_நீர்_வண்ணன் முன்னர் நாணினால் மெலிவு சென்றார் – சூளாமணி:10 1679/4
மேல்


மெலிவுசெய்யவே (1)

மெல்லியலவர்களை மெலிவுசெய்யவே – சூளாமணி:8 1051/4
மேல்


மெலிவும் (1)

விண் மிசை சென்றவர் மெலிவும் வேற்றவர் – சூளாமணி:9 1258/1
மேல்


மெழுக்கிட்டது (1)

இடை நிலம் இருள் மெழுக்கிட்டது ஆயிடை – சூளாமணி:9 1274/2
மேல்


மெழுகி (3)

மெழுகி மீது ஓர் மணி ஆரம் வீசி கிடந்த விரை ஆகம் – சூளாமணி:9 1475/2
வேய் காயும் மென் பணை தோள் வெண் சந்தனம் மெழுகி முத்தம் தாங்கி – சூளாமணி:9 1534/1
பணியொடு நறு விரை மெழுகி பல் மலர் – சூளாமணி:11 1902/1
மேல்


மெழுகிட்ட (1)

சாந்து மெழுகிட்ட தட மா மணி நிலத்தை – சூளாமணி:8 1095/1
மேல்


மெழுகிட்டான் (1)

பேர்ந்தும் ஒரு கால் விரை பெருக்கி மெழுகிட்டான்
ஆய்ந்த மறை ஓதி அதன் ஆர் இடம் அறிந்தான் – சூளாமணி:8 1095/3,4
மேல்


மெழுகிய (1)

விரையினால் மெழுகிய வீதி வாய் எலாம் – சூளாமணி:11 1871/1
மேல்


மெழுகின் (2)

தீயிடை மெழுகின் நைந்த சிந்தையின் உருகினாளே – யசோதர:2 94/4
ஊதுலை மெழுகின் நின்று உருகினார் அவர் – சூளாமணி:12 2102/3
மேல்


மெழுகு (3)

அரக்கினும் மெழுகு ஆக்கிய நூலினும் – உதயணகுமார:1 39/1
மெழுகு உருகும் மண் பாவை மேதையான் காய்த்தி – நீலகேசி:1 133/1
உயா பிழைத்தாய் மெழுகு ஊனொடு பட்ட – நீலகேசி:4 364/3
மேல்


மெழுகு-மின் (1)

மெழுகு-மின் இடை மெச்சியம் அல்லதின் – நீலகேசி:5 561/3
மேல்


மெள்ள (3)

மெள்ள என் தோள் அணைவாள் என்னும் விருப்பு ஆராது – சூளாமணி:8 1121/3
மெள்ள மெள்ள விழுங்கும் அவைகளும் – நீலகேசி:3 237/4
மெள்ள மெள்ள விழுங்கும் அவைகளும் – நீலகேசி:3 237/4
மேல்


மெள்ளவே (1)

மெள்ளவே கனை இருள் மெலிவு சென்றதே – சூளாமணி:8 1064/4
மேல்


மென் (46)

மது மலர் குழலி விண் மின் மாலை வேல் விழி மென் தோளி – உதயணகுமார:4 190/1
சூடக மணி மென் தோளின் தொழுதனர் துளங்க தோன்றி – யசோதர:4 228/2
வெண் முளை பசும் தாமரை மென் சுருள் – சூளாமணி:1 24/1
தவழும் மென் முலை புல்ல ததைந்த தார் – சூளாமணி:4 122/3
வீக்கப்பட்டன மென் முலை விம்முமே – சூளாமணி:4 144/4
தாம் தளிர் மென் முருக்கு இனிய தாதோடு ததைந்தனவே – சூளாமணி:4 176/4
பாசிலை மென் தழை பள்ளியுள் பாவையர் – சூளாமணி:5 293/1
கோங்கு இவர் குவி மென் கொங்கை கொம்பினுக்கு உரிய காளை – சூளாமணி:5 330/2
வேயினும் பணைக்கின்ற மென் தோள் பிறர் – சூளாமணி:5 334/3
காம்பின் வாய்ந்த மென் தோளி அ காதலன் – சூளாமணி:5 342/1
தொய்யில் இள மென் முலையில் நீர் சுடுதிர் ஆயின் – சூளாமணி:6 458/3
பனியின் மென் மலர் அலர்ந்தன உவகையில் பயில்வார் – சூளாமணி:6 460/2
தூம மென் புகை துழாவி வண்டு இடையிடை துவைக்கும் – சூளாமணி:6 465/1
வியந்தசேனை மென் கமலமாலதை என விளம்பும் – சூளாமணி:6 472/2
தாம மென் குழலார் தடம் கண் எனும் – சூளாமணி:7 615/1
கோடி மென் துகில் குய்ய தடம் படிந்து – சூளாமணி:7 621/2
முகையின் வேய்ந்த மென் மொய் மலர் கண்ணியாய் – சூளாமணி:7 647/3
ஏர் இரும் சுணங்கு சிந்தி எழுகின்ற இளம் மென் கொங்கை – சூளாமணி:7 760/2
துன்னிய துணர் இளம் தோன்றி மென் கொடி – சூளாமணி:7 816/1
ஏர் அணி மணி கலம் அணிக யாரும் மென்
தார் அணி வள நகர் அறைக கோடணை – சூளாமணி:8 902/1,2
வேய் ஒத்த பணை மென் தோளி மிடை மணி கபாடம் நீக்கி – சூளாமணி:8 976/2
வேய் இரும் பணை மென் தோளார் மெல் அடி பரவ சென்று – சூளாமணி:8 984/2
மின் தவழ் மேனியாளை மென் பணை தோளில் புல்லி – சூளாமணி:8 1012/2
அடி கலம் திருத்தி அம் மென் புரி குழல் சுருளை நீவி – சூளாமணி:8 1114/1
சூழ் இணர் மென் மல்லிகையும் வளையமும் மின் சூட்டும் எழில் துதைய சூட்டி – சூளாமணி:9 1528/1
வேய் புரையும் மென் பணை தோள் மெல்_இயலார் மெல்லவே திறந்தார் அன்றே – சூளாமணி:9 1529/4
வேய் காயும் மென் பணை தோள் வெண் சந்தனம் மெழுகி முத்தம் தாங்கி – சூளாமணி:9 1534/1
பொங்கிய இள மென் கொங்கை மகளிர்-தம் புருவ வில்லால் – சூளாமணி:10 1624/3
காம்பு அழி பணை மென் தோள் மேல் கரும் குழல் துவண்டு வீழ – சூளாமணி:10 1638/2
கோல மென் துகில்கள் தாங்கி குழை முகம் சுடர கோட்டி – சூளாமணி:10 1679/3
மென் முலை தடங்களும் விருந்து பட்டவே – சூளாமணி:10 1690/4
வார் அணி இளம் மென் கொங்கை வாரியுள் வளைத்துக்கொண்டார் – சூளாமணி:10 1702/4
போது உலாம் புணர் மென் கொங்கை குவட்டிடை பூண்டது அன்றே – சூளாமணி:10 1705/4
வடம் தவழ் இளம் மென் கொங்கை மாதராள் மிழற்றினாளே – சூளாமணி:10 1707/4
பைம்பொன் கோவை பாடக மென் சீறடி நல்லார்-தம் – சூளாமணி:10 1740/3
அம் பொன் குரும்பை மென் முலை மேல் அணிந்த பொன் ஞாண் அருகு ஒடுக்கி – சூளாமணி:10 1753/3
பந்து ஆடும் மாடே தன் படை நெடும் கண் ஆட பணை மென் தோள் நின்று ஆட பந்து ஆடுகின்றாள் – சூளாமணி:10 1754/4
வார் ஆலி மென் கொங்கை மை அரி கண் மாதர் வருந்தினாள் நங்கை இனி வருக ஈங்கு என்றார் – சூளாமணி:10 1757/4
இளமையால் எழுதரும் இணை மென் கொங்கையின் – சூளாமணி:10 1760/1
வாலிய சந்த மென் சேறு மட்டித்து – சூளாமணி:10 1763/1
மண் தங்கு மகர ஆசனத்து மென் மயில் – சூளாமணி:10 1779/1
அண்டம் கொள் அன்ன மென் தூவி ஆர்த்தன – சூளாமணி:10 1779/3
மின் நேர் நுண் இடை நோமால் மென் மலர் மேல் மென்மெலவே ஒதுங்காய் என்று – சூளாமணி:10 1799/3
மென் மலர் அணி நகை மிளிரும் கோலமோடு – சூளாமணி:11 1877/3
வம்பு அழகு கொண்ட மணி மென் முலை வளர்ந்து ஆங்கு – சூளாமணி:11 2027/2
வேய் இடை மென் பணை பொன் தோள் விழைவு இன்றி பெரிது ஆகி – சூளாமணி:11 2064/2
மேல்


மென்மெலவே (1)

மின் நேர் நுண் இடை நோமால் மென் மலர் மேல் மென்மெலவே ஒதுங்காய் என்று – சூளாமணி:10 1799/3
மேல்


மென்றிடும் (1)

செத்த பொழுதின் அ செம் தடி மென்றிடும்
அத்தனுடைய அருள் வகை வண்ணம் – நீலகேசி:3 255/3,4

மேல்