பே – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சு 1
பேச்சு_இன்மையால் 1
பேச்சும் 1
பேச 4
பேசல் 2
பேசலாமோ 1
பேசலும் 1
பேசவும் 1
பேசவொணா 2
பேசி 4
பேசிய 3
பேசின் 2
பேசினன் 1
பேசினாய் 1
பேசினார்க்கு 1
பேசினான் 1
பேசினானால் 1
பேசினை 1
பேசு 2
பேசுகின்றாய் 1
பேசுதற்கு 1
பேசுவாய் 1
பேசுவார் 1
பேடி 1
பேடிகள் 1
பேடு 1
பேணப்பட்டதே 1
பேணல் 1
பேணலாம் 1
பேணற்பாலிரே 1
பேணா 2
பேணாதன 1
பேணார் 1
பேணி 5
பேணிய 1
பேணுதற்கு 2
பேணும் 4
பேணுவ 1
பேதம் 4
பேதமும் 1
பேதாய் 5
பேதுறல் 1
பேதுறு 1
பேதுறுக்குமே 1
பேதுறும் 1
பேதுறுவர் 1
பேதை 10
பேதை-தான் 1
பேதை-தானே 1
பேதைக்கு 1
பேதைகள் 2
பேதைமை 1
பேதைமையே 2
பேதையர் 1
பேதையும் 1
பேதையே 1
பேதையை 2
பேம் 2
பேம்படுப்பவரொடும் 1
பேய் 17
பேய்க்கு 1
பேய்கள் 1
பேய்களும் 2
பேய்த்தியை 1
பேயன் 1
பேயாய் 1
பேயின் 2
பேயும் 4
பேயே 1
பேயேந்திரியமும் 1
பேயேன் 1
பேர் 59
பேர்-தாம் 1
பேர்_அருள் 2
பேர்_அருளார் 1
பேர்_அருளின் 1
பேர்_அருளீர் 1
பேர்_அழல் 2
பேர்_அளவு 1
பேர்_அறம் 1
பேர்_ஆற்றல் 1
பேர்_ஆற்றலை 1
பேர்_இசை 1
பேர்_இடம் 1
பேர்_இடர் 2
பேர்_இடரை 1
பேர்_இடி 1
பேர்_இன்ப 1
பேர்_இன்பம் 4
பேர்_உணர்வு 1
பேர்_ஒலி 1
பேர்_ஒளியால் 1
பேர்க்குநர் 1
பேர்கள் 1
பேர்களாம் 1
பேர்ச்சியும் 1
பேர்த்து 5
பேர்த்தும் 1
பேர்தற்கு 1
பேர்ந்திலள் 1
பேர்ந்து 3
பேர்ந்தும் 1
பேர்ப்பவன் 1
பேர்ப்பாலே 1
பேர்ப்பு 1
பேர்ப்பு_இன்று 1
பேர 2
பேரது 2
பேரறிவாகி 1
பேரன் 1
பேரா 2
பேராம் 1
பேரார் 2
பேரான் 6
பேரிகை 1
பேரினன் 1
பேரினும் 2
பேரும் 9
பேரொடு 1
பேழ் 9
பேழ்த்த 1
பேழை 2
பேழைகள் 1
பேறு 3
பேறு_இன்மை 1
பேறும் 3
பேன் 1

பேச்சு (1)

பெற்ற வகை என பேச்சு_இன்மையால் எனின் பிள்ளைகளும் – நீலகேசி:6 685/3
மேல்


பேச்சு_இன்மையால் (1)

பெற்ற வகை என பேச்சு_இன்மையால் எனின் பிள்ளைகளும் – நீலகேசி:6 685/3
மேல்


பேச்சும் (1)

பேரும் உணரப்படாமை பெற்றாம் என்னும் பேச்சும் உண்டால் – நீலகேசி:5 508/2
மேல்


பேச (4)

பேச அரும் பெருமை பிரச்சோதனன் – உதயணகுமார:1 61/2
பேச அரும் பெருமை சால் ப்ரச்சோதனன் தூதர் வந்து – உதயணகுமார:4 209/1
பேச அரும் மக பெற்றெடுத்ததும் – உதயணகுமார:6 305/4
இன்னன பிறவும் ஏனை இரு நிலத்து அரசர் பேச
மன்னவ_குமரன் மாமன் மலர் அடி வணங்கி வாழ்த்தி – சூளாமணி:9 1200/1,2
மேல்


பேசல் (2)

தவளை கிண்கிணிகள் மிக்க தரத்தினால் பேசல் இன்றி – உதயணகுமார:1 115/3
பிறந்த நாம் பெற்றபெற்ற பிறவிகள் பேசல் ஆகா – யசோதர:1 35/2
மேல்


பேசலாமோ (1)

பின் அவர் பிறவி-தோறும் பெற்றன பேசலாமோ – யசோதர:4 250/4
மேல்


பேசலும் (1)

பின்னை செய்வன பேசலும் ஆகுமோ – நீலகேசி:3 243/4
மேல்


பேசவும் (1)

பெண் அழகிற்கு இவள் பிறரால் பேசவும் படுவாளோ – நீலகேசி:2 191/3
மேல்


பேசவொணா (2)

பேசவொணா வகையில் கேட்டேன் பெரும் தவம் இல்லை நீயும் – நாககுமார:2 60/3
பேசவொணா மலை முழஞ்சுள் பிலத்தினில் வைத்திருந்தான் – நாககுமார:3 93/4
மேல்


பேசி (4)

அன்னணம் அரசர் பேசி இருந்த பின் அருக்கனோடும் – சூளாமணி:8 973/1
ஆங்கு அமர்ந்து அரசர் பேசி அலர் மிசை அணங்கு_அன்னாளை – சூளாமணி:8 989/1
பின்னும் உள வேள்வி முறை சென்ற பல பேசி
இன்னணம் இயன்ற எரி ஓம்பு தொழிலார்க்கு – சூளாமணி:8 1104/1,2
அனன்று அனன்று அவைகள் பேசி அமையும் அ அரசர் தீமை – சூளாமணி:9 1149/1
மேல்


பேசிய (3)

செம் கண் நெடியான் திறம் பேசிய சிந்தைசெய்த – சூளாமணி:0 5/1
பேயின் பேசிய பிள்ளையே ஆக என்று பெயர்ந்தான் – சூளாமணி:7 707/4
திண் திறல் பேசிய அ சிறியானையும் – சூளாமணி:9 1226/3
மேல்


பேசின் (2)

உருவினொடு அழகு-தானும் ஒளி அமை குலனும் பேசின்
திரு_மகள் அனைய மாதர் இவளையும் சிதைய சீறி – யசோதர:2 127/1,2
பேசின் மானிட பேதைகள் ஆற்றலால் – சூளாமணி:7 635/3
மேல்


பேசினன் (1)

பின் அவன்-தன்னை நோக்கி பேசினன் பிறங்கு தாரோய் – சூளாமணி:6 564/2
மேல்


பேசினாய் (1)

பித்தியாய் முழு கேடு பேசினாய் ஆகாயோ – நீலகேசி:2 203/4
மேல்


பேசினார்க்கு (1)

பேசினார்க்கு அருள் உணா – நீலகேசி:1 101/4
மேல்


பேசினான் (1)

பிணிசெய்து எம் உழை வம் என பேசினான்
கணிதம்_இல் பொருள் சென்று கவர்ந்தனர் – யசோதர:3 209/3,4
மேல்


பேசினானால் (1)

பெரியது ஓர் வியப்பு சென்று பட்டது பேசினானால் – சூளாமணி:9 1137/4
மேல்


பேசினை (1)

பேசினை நீ உளது எனினும் பெரும் தாமத்து உள் நூல் போல் – நீலகேசி:2 201/3
மேல்


பேசு (2)

பேசு அவை தளர கேட்டு பெருமகன் இனியன் ஆகி – உதயணகுமார:1 105/2
பின்னும் மிகை பிறவும் உரை பேசு திறம் நினைவும் – யசோதர:5 282/2
மேல்


பேசுகின்றாய் (1)

பேய் எரி உமிழ்ந்து நம் மேல் வரும் என பேசுகின்றாய்
நீ பெரிது இனியை என்னா நெடியவன் அதனை நோக்கி – சூளாமணி:9 1436/1,2
மேல்


பேசுதற்கு (1)

பெண்ணினுக்கு அரசி ஆண்மை பேசுதற்கு அரியது என்றார் – யசோதர:1 64/4
மேல்


பேசுவாய் (1)

பெரும் தவங்கள் செய்ந்நரை பேசுவாய் ஓர் பேதையே – நீலகேசி:4 358/4
மேல்


பேசுவார் (1)

பெற்று நின்ற பெற்றியான் பீடு யாவர் பேசுவார் – சூளாமணி:4 137/4
மேல்


பேடி (1)

பேடி வேதனை பெரிது – நீலகேசி:1 96/1
மேல்


பேடிகள் (1)

பேடிகள் சாரினும் பிள்ளை பெறாமையை – நீலகேசி:7 764/3
மேல்


பேடு (1)

பேடு வந்து ஒன்று பாய்ந்து முடிந்தது முடிந்த பின்னை – சூளாமணி:12 2117/2
மேல்


பேணப்பட்டதே (1)

பெரும் கலி மாளிகை பேணப்பட்டதே – சூளாமணி:9 1505/4
மேல்


பேணல் (1)

பெரும் கலம் உடையரேனும் பிறர்க்கு அவை பேணல் ஆகா – சூளாமணி:8 1015/2
மேல்


பேணலாம் (1)

பேணலாம் பிறபிற பீடு காண்பதே – சூளாமணி:9 1213/4
மேல்


பேணற்பாலிரே (1)

பின்னை நும் கருமமே பேணற்பாலிரே – சூளாமணி:12 2091/4
மேல்


பேணா (2)

பிறந்த நம் பிறவி-தோறும் பெறும் உடம்பு அவைகள் பேணா
துறந்து அறம் புணரின் நம்மை தொடர்ந்தன அல்ல தோகாய் – யசோதர:1 36/1,2
பின்னுறு பழியிற்கு அஞ்சா பெண் உயிர் பெருமை பேணா
என்னும் இ மொழிகட்கு அந்தோ இலக்கியம் ஆயினாளே – யசோதர:2 96/3,4
மேல்


பேணாதன (1)

பேயே எனப்பட்டு பேணாதன செய்வர் – நீலகேசி:1 115/3
மேல்


பேணார் (1)

தன் அலால் தெய்வம் பேணார் சார்ந்தவர் தானும் சார்ந்தார்க்கு – சூளாமணி:5 302/1
மேல்


பேணி (5)

பின் அமைச்சரை பேணி கேட்டனன் – உதயணகுமார:5 285/4
பெற்றனர் புரிந்து பேணி பெரும் குணத்து ஒழுகுவாருக்கு – யசோதர:4 240/2
பெருமகன் உருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும் – சூளாமணி:2 65/1
பின்னை மன்னவன் பேணி நல் மொழி – சூளாமணி:7 590/1
தெய்வம் பேணி பெற்றனர் பேணும் திருவே போல் – சூளாமணி:10 1746/3
மேல்


பேணிய (1)

பெருமான் அடி பேணிய பூசனை நாள் – சூளாமணி:8 1071/2
மேல்


பேணுதற்கு (2)

பெறற்கு அரும் அரும் கலங்கள் பேணுதற்கு அரிய ஆகும் – உதயணகுமார:6 332/2
பேணுதற்கு அரிது இது பெரிதும் பிணி தரு பேய் வனம் எனவே – நீலகேசி:1 69/2
மேல்


பேணும் (4)

பேணும் நூல் புலவர் மாண்பும் பெருகுவது உருவ தார் மேல் – சூளாமணி:5 259/3
பேணும் நூல் நிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான் – சூளாமணி:5 301/3
தெய்வம் பேணி பெற்றனர் பேணும் திருவே போல் – சூளாமணி:10 1746/3
பின்பு பேணும் தவத்தினின் ஆகிய – நீலகேசி:4 316/3
மேல்


பேணுவ (1)

பெரும் கலி விழவின தெய்வம் பேணுவ
சுருங்கல்_இல் சுடர் ஒளி துளும்ப தோன்றல்-பால் – சூளாமணி:9 1501/2,3
மேல்


பேதம் (4)

இற்று என நிறைசெய்திட்டும் இறைவனே பேதம் காணேன் – யசோதர:4 235/2
என்றும் அவற்றுக்கு எழல் இல்லை நின் பேதம் என்றால் – நீலகேசி:4 404/3
சொல்லார்கள் பேதம் சொல வேண்டுவை ஆயின் அக்கால் – நீலகேசி:4 405/2
பிறிது கொளு புலம் உள்ளது ஆகும் எனில் பேதம்
சிறிது நெறி காட்டின் அது செல்லும் என சொல்லும் – நீலகேசி:5 523/3,4
மேல்


பேதமும் (1)

பேதமும் ஆம் என்ற பெற்றியினால் பொருள் இற்று என்றலால் – நீலகேசி:5 496/3
மேல்


பேதாய் (5)

பின்னை தன் பிறிது அறிவும் பெயர்த்து உரைத்தல் பெரும்_பேதாய் – நீலகேசி:2 195/2
பெண் என்றும் பிற என்றும் தான் நோக்கி பெரும் பேதாய்
கண் அன்றோ உள்ளத்தை கலக்குவன அவை காவாய் – நீலகேசி:4 275/3,4
பிறிது ஒன்று பேதுறும் அங்கு என்பதூஉம் பெரும் பேதாய்
குறிகொண்டார் உரை அன்றால் குற்றமே கொளல் உறுவாய் – நீலகேசி:4 306/2,3
பேய் உடம்பு பிறிது உடம்பில் புகல் பேதாய் காணாயோ – நீலகேசி:4 309/4
பெற்ற வகை என்னை பேதாய் அதனை பெயர்த்து எனவே – நீலகேசி:6 680/4
மேல்


பேதுறல் (1)

பிணி மிகு பேய் வனம் இதனுள் பேதுறல் ஒருதலை பிறவோ – நீலகேசி:1 68/3
மேல்


பேதுறு (1)

பேதுறு பிறவி போக்கும் பெரும் திரு உருவுக்கு ஏற்ற – யசோதர:1 56/1
மேல்


பேதுறுக்குமே (1)

பெரும் துயர் என பேதுறுக்குமே – உதயணகுமார:6 326/4
மேல்


பேதுறும் (1)

பிறிது ஒன்று பேதுறும் அங்கு என்பதூஉம் பெரும் பேதாய் – நீலகேசி:4 306/2
மேல்


பேதுறுவர் (1)

பெண்பாலார் கண்டக்கால் பேதுறுவர் என உரைப்பாய் – நீலகேசி:4 276/1
மேல்


பேதை (10)

பிறை நுதல் பேதை தன்னால் பெறு சுவை_கடலுள் ஆழ்ந்தார் – நாககுமார:2 41/4
பேதை மாதர் பெய் நஞ்சினில் எஞ்சி இ – யசோதர:3 203/1
பேதை அம் பிணை_அனாளும் பிறப்பு இனிது உணர்ந்த பின்னர் – யசோதர:5 315/2
பெண் நலம் கனிந்த பேதை இருப்பதும் பெருமை அன்றே – சூளாமணி:5 348/4
மல் உயர் அலர்ந்த மார்பின் மாதவி பேதை ஆர்த்த – சூளாமணி:6 559/3
பேதை மட மகளிர் வீழ்ந்தார் பிணை_அன்னார் – சூளாமணி:9 1471/4
பிறந்து நாம் புறம்செய்கின்ற பேதை இ உடலம்-தானும் – சூளாமணி:11 1848/1
பிணங்கி நாம் பிதற்றிய பேதை வாய் மொழி – சூளாமணி:12 2106/2
எண்ணுங்கால் என் பேதை என உரைக்கும் அவன் ஒத்தாள் – நீலகேசி:2 191/4
பேதை மற்று இவன் பெரிது எனப்படும் கருத்து உடை மிகுதியினாய் – நீலகேசி:4 448/2
மேல்


பேதை-தான் (1)

பேதை-தான் இவனும் பெண்ணின் அனையனே பிறிதும் ஒன்று உண்டு – யசோதர:2 124/2
மேல்


பேதை-தானே (1)

பின்னும் ஓர் சிறுவன்-தன்னை பெற்றனள் பேதை-தானே – யசோதர:4 259/4
மேல்


பேதைக்கு (1)

பொரிய போகின்ற போலும் பொங்கு அரி தடம் கண் பேதைக்கு
உரிய மாலவற்கு சென்று கொடுப்பன் என்று உலகம் காக்கும் – சூளாமணி:8 829/2,3
மேல்


பேதைகள் (2)

பேசின் மானிட பேதைகள் ஆற்றலால் – சூளாமணி:7 635/3
பேதைகள் உரைப்பனவே சொல்லி பெரிது அலப்பாட்டினை நீ – நீலகேசி:4 448/1
மேல்


பேதைமை (1)

பேதைமை கலந்து பிறழ் கண்ணினொடு ஒடுங்கும் – சூளாமணி:10 1614/1
மேல்


பேதைமையே (2)

பெருமையினால் ஒன்று பெற்று ஒன்று பேறு_இன்மை பேதைமையே – நீலகேசி:4 391/4
பிறங்கி இ பிறவியில் போக்கும் மற்று இவை என்ன பேதைமையே – நீலகேசி:9 839/4
மேல்


பேதையர் (1)

பேதையர் பிழைத்தது பொறுக்கல் வேண்டுமால் – சூளாமணி:9 1210/3
மேல்


பேதையும் (1)

பிறை என வளர செல்வன் பேதையும் விசும்பில் செல்லும் – உதயணகுமார:5 243/2
மேல்


பேதையே (1)

பெரும் தவங்கள் செய்ந்நரை பேசுவாய் ஓர் பேதையே – நீலகேசி:4 358/4
மேல்


பேதையை (2)

பேதையை கண்டு பீடு உடை காளையும் – உதயணகுமார:5 263/3
பெண்களை மருட்டும் சாயல் பேதையை காண்-மின் என்று – சூளாமணி:8 1002/3
மேல்


பேம் (2)

பேம் கொள் பேரது அ ஊரது பிணம் படு பெருங்காடு – நீலகேசி:1 27/2
பேம் தரு தோற்ற பிசாசிகன் இற்று என – நீலகேசி:10 894/1
மேல்


பேம்படுப்பவரொடும் (1)

பேம்படுப்பவரொடும் பிரிவு இன்னாமையை – நீலகேசி:8 822/3
மேல்


பேய் (17)

பரிந்து பேய் கணம் ஆடவும் பல நரி பறைந்து உண்ணவும் – உதயணகுமார:3 181/2
பேய் மையானம் கொண்டு இருந்து அன்ன பெரு வரை நெரிதர திரை சிந்தி – சூளாமணி:8 881/1
பேய் எரி உமிழ்ந்து நம் மேல் வரும் என பேசுகின்றாய் – சூளாமணி:9 1436/1
பேய் நீலகேசி பெரியோன் அறம் கொண்ட பின்னை – நீலகேசி:0 4/2
தேடும் சிறு பேய் பெரும் பேய்த்தியை சென்று பற்றும் – நீலகேசி:0 8/3
மீளி யாக்கைய தாக்கி உண் பேய் கணம் மிகை சூழ் – நீலகேசி:1 32/3
பிணி மிகு பேய் வனம் இதனுள் பேதுறல் ஒருதலை பிறவோ – நீலகேசி:1 68/3
பேணுதற்கு அரிது இது பெரிதும் பிணி தரு பேய் வனம் எனவே – நீலகேசி:1 69/2
திண் திறல் சேர் சிறு பேய் அறை கீறி – நீலகேசி:1 144/1
பெற்றீரே பேய் உடம்பு அன்றேல் பெரும்பாலும் – நீலகேசி:3 258/3
கத்தி கொண்டு இல்லில் வாழ் பேய் கால் தலை வேறு செய்து – நீலகேசி:3 260/3
பேய் உடம்பு பிறிது உடம்பில் புகல் பேதாய் காணாயோ – நீலகேசி:4 309/4
தின்னும் மனம் உடை பேய் எய்தும் தீ_வினை – நீலகேசி:4 346/1
பேய் ஒப்ப நின்று பிணங்கி கண்டார்க்கு எனும் – நீலகேசி:4 349/1
பேய் சொல்லுபவே பல சொல்லி பிதற்றல் என்றாள் – நீலகேசி:4 411/4
பேய் மற்று இவள்-தான் என கண்டோர் பெரியவன்-தான் – நீலகேசி:6 722/2
பேய் கண்டாய் அதன் பெற்றி உரை என – நீலகேசி:10 891/1
மேல்


பேய்க்கு (1)

பேய்க்கு ஒன்று ஈதல் பெரும் கொடை என்பதை – நீலகேசி:2 223/2
மேல்


பேய்கள் (1)

இந்திரன் வேண்டினும் பேய்கள் என்ன மற்று இலங்கு இழை மடவோள் – நீலகேசி:1 71/4
மேல்


பேய்களும் (2)

குண்டு கண்ணின பேய்களும் கூகையும் குழறி – நீலகேசி:1 28/3
நோய்களும் பேய்களும் ஒழிக்குவம் எனின் அவை நுங்களுக்கும் – நீலகேசி:9 842/3
மேல்


பேய்த்தியை (1)

தேடும் சிறு பேய் பெரும் பேய்த்தியை சென்று பற்றும் – நீலகேசி:0 8/3
மேல்


பேயன் (1)

பித்தன் நல் பேயன் என்று பெருமகற்கு உரைப்ப கேட்டு – உதயணகுமார:1 83/1
மேல்


பேயாய் (1)

பேயாய் புடைத்து உண்ணும் பெற்றமுமாய் குத்தும் – நீலகேசி:7 774/2
மேல்


பேயின் (2)

பேயின் பேசிய பிள்ளையே ஆக என்று பெயர்ந்தான் – சூளாமணி:7 707/4
பித்தொடு கனவு இடை பேயின் மயங்குநர்க்கு – நீலகேசி:5 612/1
மேல்


பேயும் (4)

பேயும் கூடி பெரிதும் மகி சூழ்ந்து தம் பெற்றி சொல்லின் – நீலகேசி:1 42/2
மாலும் பேயும் உடையவர் செய்கையே – நீலகேசி:2 207/3
பேயும் இல்லை பிறப்பதும் இல் என்பாய் – நீலகேசி:10 887/1
பிறப்பும் பேயும் முதலா பிறகளும் – நீலகேசி:10 893/1
மேல்


பேயே (1)

பேயே எனப்பட்டு பேணாதன செய்வர் – நீலகேசி:1 115/3
மேல்


பேயேந்திரியமும் (1)

பித்தேந்திரியமும் பேயேந்திரியமும்
குத்தேந்திரியமும் கொண்டிலை அன்றே – நீலகேசி:7 754/3,4
மேல்


பேயேன் (1)

பேயேன் செய்த பிழை எல்லாம் பெரும பொறு என்று இறைஞ்சினான் – நீலகேசி:1 134/4
மேல்


பேர் (59)

பிங்கல கடகர் என்று பேர் இனிது இட்டு மன்னன் – உதயணகுமார:1 26/1
பேர்_இடி கரி முன் விட்டால் பெரும் பழி ஆகும் என்று – உதயணகுமார:1 93/3
பெறுக என்று அமைத்து உடன் பேர் வருடகாரியும் – உதயணகுமார:3 175/3
பேர்_இசை தத்தை ஆயம் பெரும் குழாத்து இனிதின் நோக்காள் – உதயணகுமார:4 227/4
பெரும நீர் உண்ண காட்டி பேர்_இடர் தீர்த்தான் அன்றே – உதயணகுமார:5 244/4
பேறு உடை நடை வேல்_கண்ணாள் பெறற்குஅரும் கற்பினாள் பேர்
வீறு உடை சாலினீ தாம் இடை தவழ் கொங்கை கொண்டை – நாககுமார:1 9/2,3
மற்றும் எண்ணாயிரம் பேர் மன்னனுக்கு இனிய மாதர் – நாககுமார:1 10/1
தங்கள் ஊர் நாமமும் தந்தை_தாய் பேர் உரைத்து – நாககுமார:3 88/3
மன்னிய முலையினாள் பேர் வனமாலை மகள் நல் நாமம் – நாககுமார:3 99/2
பிரிதிவிதிலகம் எங்கள் பேர் உடைய நல் நகர் – நாககுமார:4 137/2
பெலம்கொள் இவர் நல் மகள் பேர் மதனமஞ்சிகை – நாககுமார:4 140/4
இங்கித மனைவி பேர் இயல் விசையை என்பளே – நாககுமார:4 142/4
விலை_இல் பேர்_அருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி – யசோதர:4 243/3
காளை தகு கல்யாணமித்திரன் எனும் பேர்
ஆளி அடு திறல் வணிகன் அரசன் உயிர் அனைய – யசோதர:5 267/1,2
வெறுத்து உடன் விடுத்து அரசினை துகள் என பேர்
அற பெரு மலை பொறை எடுத்தவன் அடி-கண் – யசோதர:5 268/1,2
பேழ்த்த காயின பேர் எள் பிறங்கு இணர் – சூளாமணி:1 30/1
பெற்றியான் பயாபதி என்னும் பேர் உடை – சூளாமணி:2 51/3
பெண் நிலாம் தகை பெருந்தேவி பேர் அமர் – சூளாமணி:3 71/1
கண் ஆர் கோதை காமரு வேய் தோள் கனக பேர்
மண்ணார் சீர்த்தி சித்திரை என்னும் மட மாது இன்று – சூளாமணி:5 315/1,2
பேர் அருள் மருவிய பிரான்-தன் சேவடி – சூளாமணி:5 395/2
தன் நிகர் இகந்தவன் அங்கதன் எனும் பேர்
பொன் அருவி நூல் கெழு புரோகிதன் உரைத்தான் – சூளாமணி:6 444/3,4
சலநலசடி என் பேர் தாமரை செம்_கணான்-தன் – சூளாமணி:6 572/2
பேர் இருள் கிழிய தோன்றும் பிறை எயிற்று அமர நோக்கின் – சூளாமணி:7 759/3
இன் இசை அமரர் பேர் கொண்டு இயன்ற மா நகரம் காக்கும் – சூளாமணி:8 843/1
வரை-தன் மேல் தழலின் பேர் ஆர் வள நகர்-அதனை ஆளும் – சூளாமணி:9 1177/1
உயிரினும் மதிக்கற்பாலது உள்ள பேர் உறையின் உள்ளது – சூளாமணி:9 1196/1
அடும் திறல் வெகுளி காற்றோடு அருக்க பேர் உடைய மேகம் – சூளாமணி:9 1197/1
கடுத்தவர் கன்னி பேர் உரைக்க கண்களுள் – சூளாமணி:9 1205/1
தாழி பேர் விலன் தமன் ஒருவன் கூறினான் – சூளாமணி:9 1257/3
ஊழி பேர் எரியுள் நெய் சொரிந்தது ஒப்பவே – சூளாமணி:9 1257/4
மாற்றினன் மறுப்ப நோக்கி மற்று அவன் மாற்றலான் பேர்_ஆற்றலை – சூளாமணி:9 1457/2
பெரிது இது சித்திரம் என்று பேர்_ஒலி – சூளாமணி:9 1487/3
பேர்_அருள் ஆழியானும் பெயர்ந்து பொன் மாடம் சேர்ந்தான் – சூளாமணி:9 1549/4
பேர் ஒளி பீதக உடையர் பைம்பொனால் – சூளாமணி:11 1878/1
பெய்யா அரு நஞ்சும் பேர்_அழல் குட்டமும் – சூளாமணி:11 1945/1
பேர் அறிவாரும் பிறர் இல்லை இன்னவை – சூளாமணி:11 1958/2
மீட்சி_இல் பேர்_இன்ப வெள்ளத்து உழவே – சூளாமணி:11 2017/4
சோதியும் பேர் எண்_குணனும் துப்புரவும் துன்னுவரே – சூளாமணி:11 2047/4
அந்தர பேர் உலகத்துள் அமரரை மற்று அறையுங்கால் – சூளாமணி:11 2048/2
ஒளியோடு பேர்_இன்பம் உயர்ந்தவர்க்கே உயர்ந்து உளவாம் – சூளாமணி:11 2057/2
அறுதி_இல் பேர்_அருளீர் என்று அரசன் ஆங்கு அடி தொழலும் – சூளாமணி:11 2068/2
இறுதி_இலா பேர்_இன்பம் எய்தும் ஆறு எடுத்து உரைத்தான் – சூளாமணி:11 2068/3
உளம் காண் கேவல பேர்_ஒளியால் இம்பர்_உலகு எல்லாம் – சூளாமணி:12 2127/3
பேர்_அளவு ஐஞ்ஞூறு வில் – நீலகேசி:1 92/2
பிணங்கள் இடையிடை பேர்_அழல் ஈமத்து – நீலகேசி:1 145/1
பெண்ணும் அல்லவும் சாராய் பிரிதல்_இல் பேர்_இன்பம் உடையை – நீலகேசி:2 159/2
உய் வகை_இல் பேர்_இடரை ஒழிப்பதன் பொருட்டாக – நீலகேசி:2 186/2
பெருவழியார் பேர்_அருளார் பிறர் யாரே என நக்காள் – நீலகேசி:2 192/4
உரைப்ப பேர்_அருள் உண்பன மீனொடு ஊன் – நீலகேசி:3 251/1
சொல் நெறி திரிவாயேல் சோர்வு_இல் பேர்_இன்பம் எய்தி – நீலகேசி:3 264/3
பேர் இவை-தாம் இரண்டு ஒன்றினுக்கே எனின் ஒன்று அவை ஆம் – நீலகேசி:4 383/3
பேர்_இடம் ஆக்கி பிளப்பன் எனவும் பிதற்றுகின்றாய் – நீலகேசி:4 397/2
பேர் இதுவே என சொல்லுதல்-தானும் பிழைக்கும்-கொலோ – நீலகேசி:5 502/4
ஒளித்தனை கொள்ளலுற்றாய் உயிர்-தன்னை ஓர் பேர் உரைத்தே – நீலகேசி:5 513/4
பிணங்குவது ஒக்கும் நின் பேர் எமக்கு என்றாள் – நீலகேசி:5 575/4
பிண்டி நீழலவன் பேர்_அறம் சார்தலின் – நீலகேசி:5 591/3
பிண பிணக்கு எய்தும் அ பேர்_இடர் செய்தாய் – நீலகேசி:5 639/4
அந்து இணை_இல் பேர்_ஆற்றல் ஆக்குவிக்கும் அன்றே – நீலகேசி:6 665/4
பேர்_உணர்வு எய்தி பெரிதும் பெரியவன் – நீலகேசி:6 668/2
மேல்


பேர்-தாம் (1)

விரிவாகு மதி அமைச்சர் மிக்க நால் குமரர் பேர்-தாம்
பரிவு ஆர் கோமுகனும் பாங்காம் தரிசகன் நாகதத்தன் – உதயணகுமார:5 253/2,3
மேல்


பேர்_அருள் (2)

பேர்_அருள் ஆழியானும் பெயர்ந்து பொன் மாடம் சேர்ந்தான் – சூளாமணி:9 1549/4
உரைப்ப பேர்_அருள் உண்பன மீனொடு ஊன் – நீலகேசி:3 251/1
மேல்


பேர்_அருளார் (1)

பெருவழியார் பேர்_அருளார் பிறர் யாரே என நக்காள் – நீலகேசி:2 192/4
மேல்


பேர்_அருளின் (1)

விலை_இல் பேர்_அருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி – யசோதர:4 243/3
மேல்


பேர்_அருளீர் (1)

அறுதி_இல் பேர்_அருளீர் என்று அரசன் ஆங்கு அடி தொழலும் – சூளாமணி:11 2068/2
மேல்


பேர்_அழல் (2)

பெய்யா அரு நஞ்சும் பேர்_அழல் குட்டமும் – சூளாமணி:11 1945/1
பிணங்கள் இடையிடை பேர்_அழல் ஈமத்து – நீலகேசி:1 145/1
மேல்


பேர்_அளவு (1)

பேர்_அளவு ஐஞ்ஞூறு வில் – நீலகேசி:1 92/2
மேல்


பேர்_அறம் (1)

பிண்டி நீழலவன் பேர்_அறம் சார்தலின் – நீலகேசி:5 591/3
மேல்


பேர்_ஆற்றல் (1)

அந்து இணை_இல் பேர்_ஆற்றல் ஆக்குவிக்கும் அன்றே – நீலகேசி:6 665/4
மேல்


பேர்_ஆற்றலை (1)

மாற்றினன் மறுப்ப நோக்கி மற்று அவன் மாற்றலான் பேர்_ஆற்றலை
அறிந்து வெய்ய ஆழிகை ஏந்தி இன்னும் – சூளாமணி:9 1457/2,3
மேல்


பேர்_இசை (1)

பேர்_இசை தத்தை ஆயம் பெரும் குழாத்து இனிதின் நோக்காள் – உதயணகுமார:4 227/4
மேல்


பேர்_இடம் (1)

பேர்_இடம் ஆக்கி பிளப்பன் எனவும் பிதற்றுகின்றாய் – நீலகேசி:4 397/2
மேல்


பேர்_இடர் (2)

பெரும நீர் உண்ண காட்டி பேர்_இடர் தீர்த்தான் அன்றே – உதயணகுமார:5 244/4
பிண பிணக்கு எய்தும் அ பேர்_இடர் செய்தாய் – நீலகேசி:5 639/4
மேல்


பேர்_இடரை (1)

உய் வகை_இல் பேர்_இடரை ஒழிப்பதன் பொருட்டாக – நீலகேசி:2 186/2
மேல்


பேர்_இடி (1)

பேர்_இடி கரி முன் விட்டால் பெரும் பழி ஆகும் என்று – உதயணகுமார:1 93/3
மேல்


பேர்_இன்ப (1)

மீட்சி_இல் பேர்_இன்ப வெள்ளத்து உழவே – சூளாமணி:11 2017/4
மேல்


பேர்_இன்பம் (4)

ஒளியோடு பேர்_இன்பம் உயர்ந்தவர்க்கே உயர்ந்து உளவாம் – சூளாமணி:11 2057/2
இறுதி_இலா பேர்_இன்பம் எய்தும் ஆறு எடுத்து உரைத்தான் – சூளாமணி:11 2068/3
பெண்ணும் அல்லவும் சாராய் பிரிதல்_இல் பேர்_இன்பம் உடையை – நீலகேசி:2 159/2
சொல் நெறி திரிவாயேல் சோர்வு_இல் பேர்_இன்பம் எய்தி – நீலகேசி:3 264/3
மேல்


பேர்_உணர்வு (1)

பேர்_உணர்வு எய்தி பெரிதும் பெரியவன் – நீலகேசி:6 668/2
மேல்


பேர்_ஒலி (1)

பெரிது இது சித்திரம் என்று பேர்_ஒலி
விரிதரு விசும்பிடை விரவி நின்றதே – சூளாமணி:9 1487/3,4
மேல்


பேர்_ஒளியால் (1)

உளம் காண் கேவல பேர்_ஒளியால் இம்பர்_உலகு எல்லாம் – சூளாமணி:12 2127/3
மேல்


பேர்க்குநர் (1)

பெருநிதி காண்கிலாமல் பேர்க்குநர் தேடுகின்றான் – உதயணகுமார:3 162/4
மேல்


பேர்கள் (1)

உருமண்ணுவா அனுப்ப உற்ற முந்நூறு பேர்கள்
மருவிய விச்சை-தன்னால் மன்னவன் கோயில்-தன்னுள் – உதயணகுமார:3 162/1,2
மேல்


பேர்களாம் (1)

அன்னவர்-தம் புத்திரிகளான ஏழு பேர்களாம்
நல் சுயம்பிரபையும் நாக சுப்பிரபையும் – நாககுமார:4 123/1,2
மேல்


பேர்ச்சியும் (1)

பின் தான் பிரளையத்து ஆக்கமும் பேர்ச்சியும்
ஒன்றா வகையால் உரைகளை ஒட்டா – நீலகேசி:7 731/3,4
மேல்


பேர்த்து (5)

பிணங்கும் பிறவிகள் பேர்த்து உய்-மின் என்றார் – சூளாமணி:11 1916/4
பேர்த்து பிறவா பெருமை பெறுநரும் – சூளாமணி:11 2022/2
பேர்த்து அ பிணியுள் பிறவார் பெரிது இன்பமுற்றே – நீலகேசி:1 116/4
பெற்றதன்னில் சேக்கையும் பேர்த்து உண்ணாது ஒழிதலும் – நீலகேசி:4 356/2
பேர்த்து இவண் வாரல் இல்லா பிறவி ஆம் தானம் என்னின் – நீலகேசி:4 426/1
மேல்


பேர்த்தும் (1)

பண் நலம் கொண்ட சொல்லாள் அவை பேர்த்தும் பகர்ந்தனளாய் – நீலகேசி:6 679/4
மேல்


பேர்தற்கு (1)

பேர்தற்கு அரும் பிணி-தாம் இவை அ பிணி – நீலகேசி:1 116/1
மேல்


பேர்ந்திலள் (1)

பின்னும் வந்தவரொடும் சென்று பேர்ந்திலள்
இன்னும் அஃது அவள்-தனது இயற்கை வண்ணமே – சூளாமணி:12 2088/3,4
மேல்


பேர்ந்து (3)

பெற்றி நல் இமயம் கண்டு பேர்ந்து கீழ் திசையும் சென்றார் – உதயணகுமார:5 250/4
பெருமை மன்னனும் பேர்ந்து வணங்கினன் – உதயணகுமார:6 335/2
பேர்ந்து வீழ்வன போல பிறழ்ந்தவே – சூளாமணி:8 891/4
மேல்


பேர்ந்தும் (1)

பேர்ந்தும் ஒரு கால் விரை பெருக்கி மெழுகிட்டான் – சூளாமணி:8 1095/3
மேல்


பேர்ப்பவன் (1)

பேர்ப்பவன் ஆயும் பெறுகின்றது என்னோ – நீலகேசி:7 773/4
மேல்


பேர்ப்பாலே (1)

பேர்ப்பாலே பற்றி பிறப்பிறவாம் நீ பெருக்கி – நீலகேசி:6 689/2
மேல்


பேர்ப்பு (1)

பிறப்பதை வீடும் என்னேன் அ இடம் பேர்ப்பு_இன்று என்னேன் – நீலகேசி:4 427/1
மேல்


பேர்ப்பு_இன்று (1)

பிறப்பதை வீடும் என்னேன் அ இடம் பேர்ப்பு_இன்று என்னேன் – நீலகேசி:4 427/1
மேல்


பேர (2)

இறுதியில் அவதி ஞானி யசோதரன் என்னும் பேர
உறுவனை வணங்கி கேட்டான் மகன் திறம் உலம் கொள் தோளான் – சூளாமணி:5 352/3,4
மாதர் வண்டு ஒருங்கு பேர மழையிடை நுடங்கும் மின் போல் – சூளாமணி:10 1639/2
மேல்


பேரது (2)

பேம் கொள் பேரது அ ஊரது பிணம் படு பெருங்காடு – நீலகேசி:1 27/2
பேரது அஃதேல் பெரிதும் அழகிதே – நீலகேசி:3 241/2
மேல்


பேரறிவாகி (1)

பேரறிவாகி தம்மில் பிறழ்வு_இலா உயிரை அன்றே – யசோதர:4 232/3
மேல்


பேரன் (1)

அலங்கல் அம் புரவி தானை அரும் கல தேரின் பேரன்
குலம் கெழு குரிசில் கண்டாய் கொண்டல் வான் உருமோடு ஒப்பான் – சூளாமணி:5 322/3,4
மேல்


பேரா (2)

பெண் உயிர் எளியது ஆமே பெரும் திறல் அறிவும் பேரா
திண்மையும் உடைய வல்ல சிந்தையின் என்பது எண்ணி – யசோதர:1 47/1,2
பேரா வென்றிக்கு ஒன்றியவாறு பெயர் இட்டு – சூளாமணி:10 1745/2
மேல்


பேராம் (1)

பேராம் இனிய யாழ் பெருமகன்-தன்னையே – உதயணகுமார:3 171/2
மேல்


பேரார் (2)

விண்ணினை சுழல ஓடும் வெய்யவன் என்னும் பேரார்
எண்ணினுள் தலை-கண் வைத்த கண் அஃது இல்லை ஆயின் – சூளாமணி:5 268/2,3
புது மலர் கொடியும் பூவும் துணர்களும் புணர்ந்த பேரார்
கதிர் அன கலங்கள் தாங்கி காப்பு மங்கலங்கள் ஏந்தி – சூளாமணி:8 994/2,3
மேல்


பேரான் (6)

தேர் அணி அரவ தானை சித்திர தேரின் பேரான்
தார் அணி மார்பன் அன்றே தரணிக்கு ஒர் திலதம் ஆவான் – சூளாமணி:5 327/3,4
அற்றம்_இல் கேள்வி எந்தை அஞ்சுமான் என்னும் பேரான்
பெற்ற தாய் அருசிமாலை பெரு_மகள் அருளினால் யான் – சூளாமணி:6 533/2,3
சுற்றி நின்று இலங்கும் சோதி தோள் வலி எனும் பேரான் அ – சூளாமணி:6 552/2
விண் நலம் கனியும் சீர்த்தி விருக வெல் கடி கொள் பேரான்
பெண் நலம் கனியும் நீர்மை பெருகிய உருவ தோளான் – சூளாமணி:8 831/3,4
மெய் நவின்று இலங்கும் செம்பொன் அங்கதம் விளைந்த பேரான் – சூளாமணி:8 836/4
கற்றவன் கலைகள் எல்லாம் காமுகன் என்னும் பேரான்
பற்றிய வில்லும் அம்பும் பாங்குடன் பரித்து வந்தான் – சூளாமணி:9 1305/3,4
மேல்


பேரிகை (1)

திடுதிடு என்று ஒலி தெறித்த பேரிகை
நடுநடுங்கினார் நகர மாந்தரே – உதயணகுமார:6 313/3,4
மேல்


பேரினன் (1)

விடபகன் என்னும் பேரினன் மற்று அவன் – உதயணகுமார:6 337/2
மேல்


பேரினும் (2)

பேரினும் பெருகிய சின்னம்-தன்னினும் – சூளாமணி:9 1272/1
பேரினும் உருவினும் பெறல் இலன் ஆதல் இன்றா குறித்து – நீலகேசி:9 829/3
மேல்


பேரும் (9)

வீரர்கள் இலக்கம் பேரும் வீறு நல் குமரற்கு ஈந்தான் – உதயணகுமார:1 108/4
செறியும் ஐஞ்ஞூறு பேரும் சீர்மையில் கரத்தினாரை – நாககுமார:2 61/3
தன்னவன் தேவி பேரும் தக்க சிரீமதி ஆம் அம் பொன் – நாககுமார:3 79/2
மிருகலோசனை என்பாளாம் மிக்க நல் மகள்-தன் பேரும்
சுரி குழல் கரும் கண் செ வாய் துடி இடை குணவதீயை – நாககுமார:4 113/2,3
முந்து மற்று இதன் முதல் மலை பிறந்து நம் மலைஅது முழை பேரும்
சிந்து என்பது வலத்தது செழும் கலம் சிதர்கின்ற நிகழ் யாறு – சூளாமணி:8 878/1,2
பேரும் உணர்வும் பொருள் இல்லதற்கு இல்லை என்றி – நீலகேசி:4 412/1
பேரும் உணரப்படாமை பெற்றாம் என்னும் பேச்சும் உண்டால் – நீலகேசி:5 508/2
நீதியினால் சொல்லி நின்று நின் பேரும் உணர்வு_இலையே – நீலகேசி:5 519/4
பெற்ற பேரும் பிசாசிகன் என்பதே – நீலகேசி:10 892/1
மேல்


பேரொடு (1)

பேரொடு உறு பீடு உடையன் ஆர் என வினாவி – சூளாமணி:9 1281/3
மேல்


பேழ் (9)

வம்பு உயர் மகர பேழ் வாய் வயிரமாகண்டன் வண்டும் – சூளாமணி:5 299/2
உள் எரி உமிழ நோக்கி உரும் என அதிரும் பேழ் வாய் – சூளாமணி:7 697/3
பெரிய பாம்பும் உள பிலம் கொள் பேழ் வாயவே – சூளாமணி:7 737/4
கலி கற்ற களிறு உண் பேழ் வாய் கலிங்கினான் இழிந்து போந்து – சூளாமணி:7 769/2
ஊன்றிய மகர பேழ் வாய் ஒளி முகம் தெளிப்ப வீழ்ந்து – சூளாமணி:8 850/1
வெள் ஒளி எயிற்று பேழ் வாய் விரி உளை அரச சீயம் – சூளாமணி:8 968/1
முரசு என அதிரும் பேழ் வாய் முழங்கு இசை மொழியில் சாற்றி – சூளாமணி:9 1174/2
பிலத்தினது அளவில் பேழ் வாய் பிறழ்ந்து இலங்கு எயிற்றது ஆகி – சூளாமணி:9 1440/3
வள் உகிர் பேழ் வாய் ஞமலி வடிவுகள் – சூளாமணி:11 1933/2
மேல்


பேழ்த்த (1)

பேழ்த்த காயின பேர் எள் பிறங்கு இணர் – சூளாமணி:1 30/1
மேல்


பேழை (2)

நல் புடைய பேழை நறும் சாந்து நனி பெய்த – சூளாமணி:8 870/3
பேழை பிளவும் பிலத்தின் முகங்களும் – சூளாமணி:11 1927/1
மேல்


பேழைகள் (1)

கலம்கொள் பேழைகள் கவிழ்ந்து என கதிர் மணி சொரிகின்ற அவை காணாய் – சூளாமணி:8 883/4
மேல்


பேறு (3)

பேறு உடை நடை வேல்_கண்ணாள் பெறற்குஅரும் கற்பினாள் பேர் – நாககுமார:1 9/2
எண் பெற்ற தவம் யார் பெற்றார் யான் பெற்ற பேறு இது என்றான் – யசோதர:2 113/4
பெருமையினால் ஒன்று பெற்று ஒன்று பேறு_இன்மை பேதைமையே – நீலகேசி:4 391/4
மேல்


பேறு_இன்மை (1)

பெருமையினால் ஒன்று பெற்று ஒன்று பேறு_இன்மை பேதைமையே – நீலகேசி:4 391/4
மேல்


பேறும் (3)

முற்ற முன் உரைத்த பேறும் வந்துறும் முறைமை என்றான் – யசோதர:4 240/4
பிணங்கலாய் பொருள்-வயின் பேறும் உள்ளதே – நீலகேசி:8 804/2
பெறுதலை என்னை-கொல் தத்துவம்-தனை அன்று பேறும் உண்டே – நீலகேசி:9 835/2
மேல்


பேன் (1)

பேன் அறா கூறை பெரு முடுகு நாறுமேல் துக்கம் துக்கம் – நீலகேசி:3 256/1

மேல்