பீ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

பீசத்தின் (1)

வலிசெய்து பீசத்தின் மாண்பும் அழித்திட்டு – நீலகேசி:5 598/1
மேல்


பீசத்து (2)

மங்கின பீசத்து உருவம் மலரின்-கண் – நீலகேசி:5 583/2
இரு வகை பீசத்து இயல்வும் அழித்து – நீலகேசி:5 597/1
மேல்


பீசம் (5)

மாதுளம் பீசம் உண் மாண் அரக்கின் நிறம் – நீலகேசி:5 576/3
பீசம் எனப்பட்டது எட்டே பிறிது அங்கு ஒன்று – நீலகேசி:5 579/1
அயல் அரக்கு அட்டக பீசம் உண்டாங்கு – நீலகேசி:5 580/1
அரக்கொடு பீசம் அற கெட்டு அ ஆற்றல் – நீலகேசி:5 601/1
இடு பீசம் அன்றால் இறுங்கு ஆதி அன்றால் – நீலகேசி:5 644/1
மேல்


பீடம் (4)

தம் திரு_அடிகள் ஏந்தும் தமனிய பீடம் ஆக – யசோதர:1 42/2
முனை முக வாயில் பீடம் முன்னர் உய்த்திட்டு நிற்ப – யசோதர:1 57/3
ஆரியன் அலர்ந்த சோதி அரும் கல பீடம் நெற்றி – சூளாமணி:6 510/3
பீடம் ஏறி பெருந்தகையார்க்கு எலாம் – நீலகேசி:3 235/3
மேல்


பீடமும் (1)

திரு மணி பீடமும் செதுக்கம் ஆயவும் – சூளாமணி:5 371/2
மேல்


பீடிகைக்-கண் (1)

திரு முத்த பீடிகைக்-கண் சித்தரையும் சிந்தித்து ஓர் – நீலகேசி:2 165/3
மேல்


பீடிற்கே (1)

பீடிற்கே எனின் நின்னில் பெரும் செல்வர் திருந்தினார் – நீலகேசி:4 272/2
மேல்


பீடு (13)

பெறு பொருள் செறி பீடு உடை கல்வியும் – உதயணகுமார:1 35/2
பெரும் தெரு நடுவுள் தோன்ற பீடு உடை குமரன் தானும் – உதயணகுமார:1 97/2
பிங்கல கடகர் என பீடு உடை குமரரும் – உதயணகுமார:3 178/1
பின் அவன் நினைத்த போழ்தே பீடு உடை அமரன் வந்தான் – உதயணகுமார:5 245/4
பேதையை கண்டு பீடு உடை காளையும் – உதயணகுமார:5 263/3
பிறை-அது போல் வளர்ந்து பீடு உடை குமரன் ஆனான் – நாககுமார:2 59/4
பீடு உடை அயனார் தந்த பெரு_மகள் இவள் என்று உள்ளே – யசோதர:2 110/3
பீடு உடை நடையினன் பெரிய நம்பியே – சூளாமணி:3 76/4
பெற்று நின்ற பெற்றியான் பீடு யாவர் பேசுவார் – சூளாமணி:4 137/4
பேணலாம் பிறபிற பீடு காண்பதே – சூளாமணி:9 1213/4
பேரொடு உறு பீடு உடையன் ஆர் என வினாவி – சூளாமணி:9 1281/3
பீடு அடைந்தவர் பிடர் புடைப்ப ஆனையின் – சூளாமணி:9 1398/2
பெண்ணின் பிறவியும் பீடு உடைத்து அன்றே – சூளாமணி:11 1984/4
மேல்


பீடுறு (1)

பெரு வரை வெள்ளி மீதில் பீடுறு புரம் புக்கானே – உதயணகுமார:5 258/4
மேல்


பீதக (1)

பேர் ஒளி பீதக உடையர் பைம்பொனால் – சூளாமணி:11 1878/1
மேல்


பீலி (5)

கட்டிய கண்ணி பீலி தலையின கழல்காய் போல – சூளாமணி:9 1429/3
பீலி அம் தழையொடு பிணையல் வேய்ந்தன – சூளாமணி:10 1763/2
பீலி அம் தழை பிணித்திட்ட வட்டமும் – சூளாமணி:11 1884/1
பிடிப்பது பீலி பிற உயிர் ஓம்பி – நீலகேசி:4 333/1
ஆட்டு ஒருகால் மயில் பீலி உகும் அவை – நீலகேசி:4 334/1
மேல்


பீலிய (1)

கோலும் பீலிய கோடு உயர் குன்றின் மேல் – சூளாமணி:1 21/2
மேல்


பீழை (1)

பீழை பதகர் பிறக்கும் இடமே – சூளாமணி:11 1927/4
மேல்


பீழைமை (1)

பீழைமை பலவும் செய்து பிணி படை பரப்பி வந்து – சூளாமணி:11 1857/1

மேல்