தோ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோ 1
தோகாய் 1
தோகை 10
தோகை_போல்வாள் 1
தோகையை 1
தோகையோடு 1
தோசத்தவாம் 1
தோட்டம் 1
தோட்டன 1
தோட்டி 4
தோட்டியால் 1
தோட்டியிட்டு 1
தோட்டு 2
தோடத்தினால் 1
தோடு 18
தோடும் 8
தோணி 1
தோத்திரங்கள் 2
தோம் 6
தோம்_இல் 4
தோய் 12
தோய்த்து 1
தோய்ந்த 1
தோய்ந்தான் 1
தோய்ந்து 4
தோயவே 1
தோயவைத்து 1
தோயினும் 1
தோயும் 4
தோரண 1
தோரணம் 5
தோராத 1
தோல் 1
தோல்வி 1
தோலா 3
தோலாத 1
தோலாதாய் 1
தோலின் 1
தோலினும் 1
தோலும் 1
தோலை 1
தோழர் 3
தோழர்களுக்கு 1
தோழரா 1
தோழரோடு 1
தோழன் 7
தோழன்மார் 1
தோழன்மாரும் 2
தோழனா 1
தோழனாம் 1
தோழனும் 2
தோழனே 1
தோழி 15
தோழிமார் 1
தோழியர் 1
தோழியரும் 1
தோழியவளது 1
தோழியும் 1
தோள் 82
தோள்_வளை 1
தோள்_வளையொடு 1
தோள்கள் 3
தோள்களால் 1
தோள்களை 2
தோளவர் 1
தோளவருள் 1
தோளவன் 3
தோளவனுக்கு 1
தோளாய் 8
தோளார் 4
தோளாற்கு 2
தோளான் 28
தோளி 7
தோளிடை 3
தோளிமாரொடு 1
தோளியர் 2
தோளில் 1
தோளிலும் 1
தோளின் 4
தோளினர் 1
தோளினன் 1
தோளினனும் 1
தோளினாய் 3
தோளினார் 1
தோளினார்-தம் 1
தோளினால் 2
தோளினாள் 1
தோளினாற்கு 1
தோளினான் 9
தோளினான்-தன் 1
தோளினும் 2
தோளும் 10
தோளை 3
தோளையும் 1
தோளொடு 2
தோற்குமோ 1
தோற்பரம் 1
தோற்ற 8
தோற்றத்தாள் 1
தோற்றத்து 1
தோற்றத்தை 1
தோற்றப்படு 1
தோற்றம் 12
தோற்றமும் 14
தோற்றமே 1
தோற்றலும் 1
தோற்றவர் 1
தோற்றாயே 1
தோற்றார்க்கு 1
தோற்றாரை 1
தோற்றி 8
தோற்றிய 1
தோற்றினார் 1
தோற்றினால் 1
தோற்றினை 1
தோற்று 1
தோற்றுவிக்கும் 1
தோன்ற 21
தோன்றல் 14
தோன்றல்-பால் 1
தோன்றலால் 6
தோன்றலும் 7
தோன்றலே 1
தோன்றலை 1
தோன்றலோடு 1
தோன்றவும் 1
தோன்றவே 2
தோன்றா 4
தோன்றாது 1
தோன்றாமை 1
தோன்றால் 1
தோன்றி 41
தோன்றிட 1
தோன்றிய 10
தோன்றியின் 1
தோன்றியும் 1
தோன்றில் 1
தோன்றிற்றும் 1
தோன்றின 3
தோன்றினர் 1
தோன்றினனால் 1
தோன்றினார் 12
தோன்றினாள் 1
தோன்றினாளே 1
தோன்றினான் 18
தோன்று 2
தோன்றுக 1
தோன்றுகின்ற 2
தோன்றுங்களே 1
தோன்றுதலின் 1
தோன்றுபு 1
தோன்றும் 24
தோன்றுமால் 1
தோன்றுமே 15
தோன்றுவ 8
தோன்றுவதன்-கண் 1
தோன்றுவரே 1
தோன்றுவன 1

தோ (1)

தோ மறிந்த சூழ் துகில் நெகிழ்ந்து உடுத்து வீழ்ந்து அசைஇ – சூளாமணி:6 487/2
மேல்


தோகாய் (1)

துறந்து அறம் புணரின் நம்மை தொடர்ந்தன அல்ல தோகாய்
சிறந்ததை இது என்று எண்ணி செம்மையே செய்ய தாமே – யசோதர:1 36/2,3
மேல்


தோகை (10)

மாதவி பொதும்பின் மயில் தோகை போல் – உதயணகுமார:5 263/2
துலங்கு சந்திரகுப்தன் தோகை சந்திரம்மதி – நாககுமார:4 140/3
தோகை மா மயில் போல் சுரி கூந்தலாள் – சூளாமணி:5 337/3
தோகை அம் சாயலார்-தம் குழாங்களும் நெதியும் சொல்லி – சூளாமணி:7 692/4
தூறு கொண்ட தோகை மஞ்ஞை ஆடல் கண்டு கண் மகிழ்ந்து – சூளாமணி:7 796/3
விலங்கலின் குவடு சேரும் மெல் இயல் தோகை_போல்வாள் – சூளாமணி:8 975/4
சோலை அமர் தோகை எனவே தொழுது நின்றாள் – சூளாமணி:10 1603/4
தோகை மட மஞ்ஞை சோலை பரப்பின போல் – சூளாமணி:10 1648/1
அழல் அவாம் செம் தோகை அலங்கு பொலம் கதிர் செந்நெல் அலைத்த வாடை – சூளாமணி:10 1817/2
சுரி குழல் மடந்தை என்னும் தோகை அம் மஞ்ஞை நோக்கி – சூளாமணி:10 1834/2
மேல்


தோகை_போல்வாள் (1)

விலங்கலின் குவடு சேரும் மெல் இயல் தோகை_போல்வாள் – சூளாமணி:8 975/4
மேல்


தோகையை (1)

துன்னு தங்கையாம் தோகையை காண்கிலன் – உதயணகுமார:5 266/2
மேல்


தோகையோடு (1)

துஞ்சும் மன்னவன் மா மயில் தோகையோடு
அஞ்சி மெல்ல அசைந்தது பூமி மேல் – யசோதர:3 167/3,4
மேல்


தோசத்தவாம் (1)

தோசத்தவாம் நின் பொருள் என கேட்டு இது சொல்லினளே – நீலகேசி:4 377/4
மேல்


தோட்டம் (1)

தோட்டம் செய் சேம்பு உயிர் தொல் முடிவு அன்றோ – நீலகேசி:4 369/4
மேல்


தோட்டன (1)

ஆங்கு அவர் அணி நடை அன்ன தோட்டன
தீம் குரல் மழலையால் சிலம்பும் தண்பணை – சூளாமணி:1 9/1,2
மேல்


தோட்டி (4)

பெருந்தகை ஏவி கோட்டு பெரும் கையால் தோட்டி கொண்டான் – உதயணகுமார:1 98/4
பவள வாய் மணி கை கொண்ட பண் இயல் தோட்டி பற்றி – யசோதர:2 98/3
தொடு கடா வயிர தோட்டி உடையன தொடர்கள் ஊன்ற – சூளாமணி:8 912/2
உன்னிய திசையின் உய்க்கும் உணர்வு எனும் வயிர தோட்டி
இன் இயல் ஞான வேழத்து எழில் எருத்து தேறினானே – சூளாமணி:12 2113/3,4
மேல்


தோட்டியால் (1)

மாதராள் அமிழ்து இன் சாயல் தோட்டியால் வணக்கப்பட்டு – சூளாமணி:10 1705/3
மேல்


தோட்டியிட்டு (1)

தோட்டியிட்டு ஊர்வதே போல் சூரிய சோமன்-தானும் – நீலகேசி:3 265/2
மேல்


தோட்டு (2)

தோட்டு இலங்கு உருவ தொங்கல் அமைச்சற்கு சொல்லியிட்டார் – சூளாமணி:7 693/4
கார் இருள் குவளை கண்ணி கதிர் நகை கன பொன் தோட்டு
கூர் இருள் சுரிபட்டு அன்ன குழல் அணி கொடிறு உண் கூந்தல் – சூளாமணி:7 759/1,2
மேல்


தோடத்தினால் (1)

தீது இன்றி இதனில் அழுந்தல் திரி தோடத்தினால்
வேதனை-அது தீர்ப்பது மெய்யுணர்வு ஆமே – நீலகேசி:6 724/3,4
மேல்


தோடு (18)

தோடு அலர் கோதை மாதர் துயரியில் தொடுத்து எடுத்த – யசோதர:2 88/1
தோடு அலர் குழலி தோழி துணிந்தனள் பெயர்த்து சென்றாள் – யசோதர:2 110/4
தோடு உடைந்தன சூகமும் கற்பக – சூளாமணி:1 20/3
தோடு கொண்ட பைங்காய் துவள் செந்நெலின் – சூளாமணி:1 31/3
தோடு அலர் தொங்கல் அம் குஞ்சியுள் தோயவைத்து – சூளாமணி:5 287/3
தோடு இலங்கு உருவ தொங்கல் சுடர் முடி அரசன் செம்மல் – சூளாமணி:5 319/2
தோடு மல்கு சுரும்பு அணி கோதையர் – சூளாமணி:7 621/1
சூடக முன்கையர் தோடு அக மெல் அடி – சூளாமணி:7 663/3
தோடு உலாம் துளங்கி தோன்றும் சுடிகை வாள் முகத்து நல்லார் – சூளாமணி:7 676/2
நிழல் அணங்கி முருகு உயிர்த்து நிரந்து அலர்ந்து தோடு ஏந்தி நிழற்றும் போலும் – சூளாமணி:8 1039/2
நிழல் அணங்கி முருகு உயிர்த்து நிரந்து அலர்ந்து தோடு ஏந்தி நிழற்றும் ஆயின் – சூளாமணி:8 1039/3
தோடு அகம் அடுத்த துதை கண்ணியொடு துன்னார் – சூளாமணி:9 1282/3
தோடு உடைந்து ஒருவழி தொகுத்தல் ஒத்தவே – சூளாமணி:9 1398/4
சுருள் இரும் தோடு வாங்கி தோள் மிசை துளங்க வீழ்ப்பார் – சூளாமணி:10 1675/3
தோடு இலங்கு கற்பகமும் சுரபுன்னை வனங்களுமே துதைந்து வெள்ளி – சூளாமணி:10 1821/2
தேன் ஆரும் அரவிந்தம் சென்று ஏந்தும் போழ்து திரு_அடிகள் செம் தோடு தீண்டாவே ஆகில் – சூளாமணி:11 1908/3
தோடு கொண்டு ஒரு செவி விளங்க துளங்குவ மகரம் ஒன்று ஆட – நீலகேசி:1 67/1
தோடு வார்ந்தால் ஒப்ப சொல் விரிப்பான் போல் பாவம் – நீலகேசி:5 475/2
மேல்


தோடும் (8)

மங்கையை வலத்து கொண்டு மாலையும் குழலும் தோடும்
அங்கையால் திருத்தி மாமன் அடிகளை பணிக என்று – சூளாமணி:8 985/1,2
கோதையும் குழையும் தோடும் குளிர் முத்த வடமும் தாங்கி – சூளாமணி:8 995/3
மகர பைம் பூண் மடவார்கள் வயிர குழையும் பொன் தோடும்
தகர குழலும் அளகமும் திருத்தி பயின்ற தாழ் தட கை – சூளாமணி:9 1477/1,2
பட்டமும் குழையும் தோடும் பையவே கனிவிப்பாரும் – சூளாமணி:10 1637/4
கலை புனை துகிலும் தோடும் ஒழிய போய் கரை கொள்வாரும் – சூளாமணி:10 1673/4
கரிய குழலும் பொன் தோடும் செய்ய வாயும் கதிர் முறுவல் – சூளாமணி:10 1752/1
காதின கனக பைம் தோடும் கை வெள் வளைகளும் கழல – நீலகேசி:1 73/1
பட்டு ஆர் கலை உடையும் பல் வளையும் பைம் தோடும்
நட்டாரை எல்லா நரகுக்கே உய்க்கும் நாய் – நீலகேசி:1 130/2,3
மேல்


தோணி (1)

தோணி முகம் காட்டு என சொல்லியே புலம்புவான் – உதயணகுமார:2 145/4
மேல்


தோத்திரங்கள் (2)

தோத்திரங்கள் கொண்டு மீ தொடுத்து ஒலியின் வாழ்த்தியே – உதயணகுமார:6 359/2
நலம் உறு தோத்திரங்கள் நாதன்-தன் வதனம் நோக்கி – நாககுமார:1 15/3
மேல்


தோம் (6)

தோம்_இல் நாலிரண்டு ஒன்று ஆயிரம் – உதயணகுமார:5 291/4
தோம் கலந்திலாத சொல்லான் தொல் நகர் சொரிக என்றான் – சூளாமணி:8 921/4
சுரமையர் அதிபதி தோம்_இல் மாக்களுள் – சூளாமணி:9 1410/1
துஞ்சிய மன்னவன் தமரம் தோம்_இல் சீர் – சூளாமணி:9 1489/2
சொல்லற்கு அரிய பெரியோய் நின் தோம்_இல் பாதம் தொழுவல் யான் – நீலகேசி:1 138/4
துத்தலே வேண்டி நின்று தோம் தொடர்ப்பாடு நீக்காய் – நீலகேசி:3 260/1
மேல்


தோம்_இல் (4)

தோம்_இல் நாலிரண்டு ஒன்று ஆயிரம் – உதயணகுமார:5 291/4
சுரமையர் அதிபதி தோம்_இல் மாக்களுள் – சூளாமணி:9 1410/1
துஞ்சிய மன்னவன் தமரம் தோம்_இல் சீர் – சூளாமணி:9 1489/2
சொல்லற்கு அரிய பெரியோய் நின் தோம்_இல் பாதம் தொழுவல் யான் – நீலகேசி:1 138/4
மேல்


தோய் (12)

விளிம்பு தோய் நெடும் கடை வீதி வாய் எலாம் – சூளாமணி:2 45/2
மஞ்சு தோய் வரை மைந்தரொடு ஆடிய – சூளாமணி:4 126/1
மங்குல் தோய் வரை மன்னவன் தொல் குடி – சூளாமணி:4 156/1
மஞ்சு தோய் வரையார் அஞ்சும் மாண்பினால் – சூளாமணி:4 158/1
மரம் தலை இணங்கி வான் தோய் மணி வளர் வயிர_குன்றம் – சூளாமணி:5 273/1
கூடு தும்பி ஊடு தோய் குழல் தொகை துணர் துதைந்து – சூளாமணி:6 478/1
மஞ்சு தோய் வரை மார்பம் மடுத்து உழ – சூளாமணி:7 611/3
வண்டு தோய் மது வாக்கி வள்ளத்தினுள் – சூளாமணி:7 614/1
மை தோய் மலையும் மண்ணகமும் நமதா செய்வென் செய்யேனேல் – சூளாமணி:9 1336/3
மங்குல் தோய் மணி வரை மன்னன்-தன் மகள் – சூளாமணி:10 1728/3
மஞ்சு தோய் நெடு மாடமும் வீதியும் – நீலகேசி:3 232/3
எரி தோய் நரகம் பாழ் ஏற்றுவானே ஆம் – நீலகேசி:5 473/3
மேல்


தோய்த்து (1)

துன்னம் செய்து ஆடையை துவர் தோய்த்து கொட்டியும் – நீலகேசி:4 270/1
மேல்


தோய்ந்த (1)

தேன் நெய் தோய்ந்த திரு மொழி மா தவர் – உதயணகுமார:6 352/2
மேல்


தோய்ந்தான் (1)

பொலம் புரி தாமரையாள் பொன் ஆகம் தோய்ந்தான்
கலம் புரி வண் தட கை கார் மேக_வண்ணனே – சூளாமணி:10 1661/3,4
மேல்


தோய்ந்து (4)

துவள் இடை இள முலை தோய்ந்து கொண்டு போம் என – உதயணகுமார:1 63/2
அலத்தக குழம்பு தோய்ந்து அரச வீதிகள் – சூளாமணி:2 47/3
செம் களி தோய்ந்து உள் சிவந்த சீறடியார் வாள் முகத்தின் – சூளாமணி:10 1654/1
வெய்து ஆய தீயும் குளிர் ஆகிய நீரும் விண் தோய்ந்து
ஐது ஆய காற்றும் அவை யாரும் அறிப என்றால் – நீலகேசி:4 399/1,2
மேல்


தோயவே (1)

தோளை நாண்_இலர் தோயவே – சூளாமணி:9 1355/4
மேல்


தோயவைத்து (1)

தோடு அலர் தொங்கல் அம் குஞ்சியுள் தோயவைத்து
ஊடல் உணர்த்தும் தொழிலது ஒன்று உண்டே – சூளாமணி:5 287/3,4
மேல்


தோயினும் (1)

தோயினும் பகையாம் சுடர் வேலினாய் – சூளாமணி:5 334/4
மேல்


தோயும் (4)

வன மலர் உருவ கண்ணி மணி_வண்ணன் மார்பு தோயும்
கன மணி பூணினாளை காண்க என விடுக்கப்பட்டார் – சூளாமணி:8 993/3,4
சீறடி பரடு தோயும் சிலம்பு இணை திருந்தவைப்பன் – சூளாமணி:8 1023/1
மஞ்சு தோயும் வரையார்-தம் மன்னன்-தன்னை மத யானை – சூளாமணி:9 1483/1
அம் துகிலினிடை தோயும் அகல் அல்குல் தீண்டும் அணி மருங்கு சூழும் மணி ஆர் வடமும் தாக்கும் – சூளாமணி:10 1755/3
மேல்


தோரண (1)

தோரண தூண்கள்-தோறும் சுடர் மணி சிலம்ப நான்று – சூளாமணி:8 852/2
மேல்


தோரணம் (5)

புரம் மதிக்க பூ_மாலை தோரணம்
வரம்பு_இல் நாற்றியே வான் கொடி மிடை – உதயணகுமார:5 297/1,2
தோரணம் திசை-தொறும் சுடர நாட்டுக – சூளாமணி:8 902/3
பொன் வாழை மரகத பைம் கமுகொடு தோரணம் வாயில் புணர நாட்டி – சூளாமணி:9 1527/3
உள் அணி பரப்பு-மின் உயர்-மின் தோரணம்
வெள் அணி விரும்பு-மின் விருந்து போற்று-மின் – சூளாமணி:10 1765/2,3
தோரணம் எடுத்தன துதைந்த வெண் கொடி – சூளாமணி:11 1870/2
மேல்


தோராத (1)

தோராத அழகி தத்தை தோழி விச்வலேகை வந்தாள் – உதயணகுமார:4 225/4
மேல்


தோல் (1)

காட்டிய தோல் ஒத்திராமையும் வாடும் அ – நீலகேசி:4 369/3
மேல்


தோல்வி (1)

பூம்_கொடி தோல்வி கண்டு பொறுப்பு_இலா மனத்தள் ஆகி – உதயணகுமார:4 230/2
மேல்


தோலா (3)

தோலா நாவின் சச்சுதன் சொல்லும் பொருள் எல்லாம் – சூளாமணி:5 308/3
சொல் மலர்ந்து உலகம் ஏத்தும் சுடரவன் மருகன் தோலா
மன் மலர்ந்து இலங்கு செய்கை வளம் கெழு மதுரை ஆள்வான் – சூளாமணி:10 1789/1,2
சொரி மலர் தண் மலர் அணிந்த சோலை சூழ் சூரியத்தார் கோமான் தோலா
அரி குலத்தார் போர் ஏறு இ அரி ஏறு போல் இருந்த அரச காளை – சூளாமணி:10 1812/1,2
மேல்


தோலாத (1)

தோலாத வாளின் எறிய துணிந்து சுடர் கான்று வீழ்ந்தது அதுவே – சூளாமணி:9 1332/4
மேல்


தோலாதாய் (1)

அரைசர்_கோவே அடல் ஆழி வலவ ஆர்க்கும் தோலாதாய்
புரிசை நகரம் நூற்றொருபது உடையாய் பூமி முழுது ஆண்டாய் – சூளாமணி:9 1473/1,2
மேல்


தோலின் (1)

மூடினாய் தோலின் முகமன் உரையேனே – நீலகேசி:1 131/4
மேல்


தோலினும் (1)

விரித்த தோலினும் வேண்டியவற்றினும் – உதயணகுமார:1 39/3
மேல்


தோலும் (1)

புன் தோலும் பல் என்பும் போர்த்த புறங்காட்டுள் – நீலகேசி:1 132/3
மேல்


தோலை (1)

நீ தின்னும் தோலை நெருப்பொடு கூட்டத்தின் – நீலகேசி:4 365/2
மேல்


தோழர் (3)

வானவ குமரர் போல வாரணம் ஏறி தோழர்
சேனை முன் பின்னும் செல்ல சீர் நகர் வீதி சென்றான் – உதயணகுமார:5 255/3,4
உரிமையால் தோழர் வந்துசேர்ந்தது கூறல் உற்றேன் – நாககுமார:3 74/4
நங்கை-தன் தாதை தோழர் நால்வருள் நால்வனாவான் – சூளாமணி:5 347/3
மேல்


தோழர்களுக்கு (1)

ஆய்ந்த பல தோழர்களுக்கு அவனிகள் அளித்து – நாககுமார:5 159/2
மேல்


தோழரா (1)

சுந்தர வயிர திண் தோள் தோழரா செவிகள் ஒற்றா – சூளாமணி:6 565/2
மேல்


தோழரோடு (1)

மனத்து இசைந்த தோழரோடு வள்ளல் தீபம் சென்று நல் – நாககுமார:4 135/2
மேல்


தோழன் (7)

தோள் அன தோழன் கூட தூபத்துக்கு ஏற்ற வத்தும் – உதயணகுமார:1 84/2
துன்ன அரும் சூழ்ச்சி தோழன் வயந்தகன் – உதயணகுமார:2 148/2
தோள் அன தோழன் கூட தொல் கிரிபுரத்தை சேர்ந்தான் – நாககுமார:3 98/4
சீர் அணி குமரன் தோழன் சிறந்து அணி மாமன் கூட – நாககுமார:3 100/2
ஓர் உயிர்_தோழன் ஆகி உறுதி சூழ் வணிகன்-தன்னை – யசோதர:5 312/1
கழலவன் காதல் தோழன் கனன்று அவன் கருதி சொன்ன – சூளாமணி:9 1180/2
வெறி மின் விரிகின்ற விறல் ஆழி இறை தோழன்
அறி-மின் பெயர் யான் அ அரிசேனன் என நின்றே – சூளாமணி:9 1283/1,2
மேல்


தோழன்மார் (1)

துணை இனிய தோழன்மார் சூழ்ந்து உடன் இருந்த பின் – நாககுமார:4 121/2
மேல்


தோழன்மாரும் (2)

மற்று நல் தோழன்மாரும் வரிசையின் ஏறி வானம் – உதயணகுமார:5 250/2
இமையம் போல் களிற்றின் ஏறி இனிய நல் தோழன்மாரும்
இமையவர்க்கு இறைவன் போல எழில்பெற புக்க அன்றே – நாககுமார:5 154/3,4
மேல்


தோழனா (1)

ஆசை என்றனக்கு அருளும் தோழனா
ஓசை வண் புகழ் யூகி ஆனதும் – உதயணகுமார:6 305/1,2
மேல்


தோழனாம் (1)

மன்னன் தோழனாம்
முன்னி வந்தனன் – சூளாமணி:9 1299/3,4
மேல்


தோழனும் (2)

தந்தி மேல் மாதர் கூட தோழனும் தானும் ஏறி – நாககுமார:3 86/2
மன்னவ குமரனும் மன்னனும் தோழனும்
அ நகர்ப்புறத்தினில் ஆடல் மேவலின் – நாககுமார:3 87/1,2
மேல்


தோழனே (1)

நலம் புரி செய்கை மேனாள் பெற்ற நல் தோழனே போல் – சூளாமணி:9 1437/1
மேல்


தோழி (15)

நயந்து கோன்_மகளை மிக்க நல் பிடி ஏற்ற தோழி
கயம்-தனை விட்டு வந்த காஞ்சனை ஏறினாளே – உதயணகுமார:1 111/3,4
துவள்_இடை அருகில் மேவும் தோழி தோள் பற்றி செல்வாள் – உதயணகுமார:1 115/4
நாரியை தோழி கூட நன்மையில் துயில்க என்று – உதயணகுமார:1 117/2
யாப்பியாயினியாள் என்னும் அவளுடை தோழி சென்று – உதயணகுமார:3 158/1
சேனை நல் பதி நீ என்று திரு நிகர் பதுமை தோழி
ஈனம்_இல் இராசனையை எழில் வேள்வியால் கொடுத்தான் – உதயணகுமார:4 206/3,4
வந்தனள் பதுமை தோழி வனப்பு இராசனை என்பாளாம் – உதயணகுமார:4 222/4
தோராத அழகி தத்தை தோழி விச்வலேகை வந்தாள் – உதயணகுமார:4 225/4
கரும் கணி பதுமை தோழி காரிகை ஒருத்தி வந்தாள் – உதயணகுமார:4 226/4
சுமர ஏந்தி பட்டுடன் தோழி கொண்டுபோகையில் – நாககுமார:2 62/3
துன்னினள் தோழி துன்னி துணைவர் இல் தமியரே போன்று – யசோதர:2 97/3
தோடு அலர் குழலி தோழி துணிந்தனள் பெயர்த்து சென்றாள் – யசோதர:2 110/4
வீட்டிடும் செல்க என்று ஏவ வேய் புரை தோளி தோழி
காட்டுவ காட்டி அன்னான் கருத்தையும் கலைத்திட்டாளே – யசோதர:2 112/3,4
பெயர்ந்து தோழி குறியிடம் துன்னினாளே – யசோதர:2 117/4
எண் அதிர் மனத்தினாட்கு தோழி மற்று இதனை சொன்னாள் – சூளாமணி:8 977/4
மங்கல தோழி கூறும் மாமியார் அடிகள்-தம்மை – சூளாமணி:8 1004/2
மேல்


தோழிமார் (1)

சுண்ண_மாரி தூவுவார் தொடர்ந்து சேர்ந்து தோழிமார்
வண்ண ஆர வளை தயங்கு முன்கை மேல் வணங்குவார் – சூளாமணி:6 481/1,2
மேல்


தோழியர் (1)

ஆயின திரு_அனாள் ஆய தோழியர்
வேய் என திரண்ட தோள் விளங்கும் மேனியாள் – சூளாமணி:8 1046/1,2
மேல்


தோழியரும் (1)

பெறுமாறு தாயரும் தோழியரும் நின்று பிணை_அனாள்-தன் மேல் பல் மொழி மிழற்றுகின்றார் – சூளாமணி:10 1756/4
மேல்


தோழியவளது (1)

அல்லதும் மடந்தை தோழியவளது முகத்தினால் ஓர் – சூளாமணி:8 1011/1
மேல்


தோழியும் (1)

துன்னும் வாய் அவளோடு எண்ணி தோழியும் உன்னினாளே – யசோதர:2 102/4
மேல்


தோள் (82)

தோள் அன தோழன் கூட தூபத்துக்கு ஏற்ற வத்தும் – உதயணகுமார:1 84/2
பூம்_துகில் செறி மருங்குல் பொரு கயல்_கண்ணி வேய் தோள்
வாய்ந்த வாசவதத்தைக்கு வருவித்தும் வீணை-தன்னை – உதயணகுமார:1 103/2,3
துவள்_இடை அருகில் மேவும் தோழி தோள் பற்றி செல்வாள் – உதயணகுமார:1 115/4
நீண்ட தோள் அமைச்சரும் நின்று அரசன் பற்றியே – உதயணகுமார:2 140/3
உலம் பொருத தோள் உடை உதயணகுமரனும் – உதயணகுமார:3 172/1
இளம் பிறை நுதல் வேல்_கண்ணி இனிய வில் புருவம் வேய் தோள்
இளம் கிளி மொழி நல் கொங்கை ஈடு_இல் பொன் கலசம் அல்குல் – உதயணகுமார:4 229/1,2
தோள் அன தோழன் கூட தொல் கிரிபுரத்தை சேர்ந்தான் – நாககுமார:3 98/4
சிலை உயர்ந்து இனிய திண் தோள் செம்மலும் பிரிதல் இன்றி – நாககுமார:4 116/2
வரை செய் தோள் மன்ன வணிகர் மயிடத்தால் – யசோதர:3 208/1
சூடும் முடி மாலை குழை தோள்_வளையொடு ஆரம் – யசோதர:5 276/3
செம்பொன் மா மணி தோள்_வளை கடகங்கள் செறி கழல் முதலா – யசோதர:5 326/2
தேன் அளாம் உருவம் கண்ணி செல்வர் தோள் திளைக்கும் மாடம் – சூளாமணி:2 40/2
தோள் இணை செவ்வியோ என்ன சூழ் ஒளி – சூளாமணி:4 195/3
தோள் வலி சூழ்ச்சி என்று ஆங்கு இரு வகை தொகையிற்று ஆகும் – சூளாமணி:5 248/2
கண் ஆர் கோதை காமரு வேய் தோள் கனக பேர் – சூளாமணி:5 315/1
விளங்கு ஒளி உருவ திண் தோள் வேகமாரதனை அன்றே – சூளாமணி:5 320/3
பாழி தோள் உருவ செம் கண் பதுமத்தேர் பெயரினானை – சூளாமணி:5 321/3
உலம் கெழு வயிர திண் தோள் ஒளி முடி அரசன் செம்மல் – சூளாமணி:5 322/2
ஏந்து தோள் அரசர் போர் ஏறு இவன் நளிதாங்கன் என்பான் – சூளாமணி:5 324/3
பாழி ஆகின்ற திண் தோள் பவச்சுதன் – சூளாமணி:5 333/2
வேயினும் பணைக்கின்ற மென் தோள் பிறர் – சூளாமணி:5 334/3
பனை திரள் அனைய தோள் படலை மாலையான் – சூளாமணி:5 381/2
பாழியா நவின்ற தோள் பரதன் ஆங்கு ஒர் நாள் – சூளாமணி:5 398/2
கல் நவில் இலங்கு தோள் காளையானவன் – சூளாமணி:5 405/2
வேய் மறிந்த தோள் விளர்த்து வெவ் உயிர்ப்பொடு உள் விராய் – சூளாமணி:6 487/1
சுற்றி நின்று இலங்கும் சோதி தோள் வலி எனும் பேரான் அ – சூளாமணி:6 552/2
கரு வடி நெடும் கண் நல்லார் கலந்த தோள் வல்லி புல்ல – சூளாமணி:6 556/2
சுந்தர வயிர திண் தோள் தோழரா செவிகள் ஒற்றா – சூளாமணி:6 565/2
உலன் நலன் அடு திண் தோள் ஊழி வேல் ஓடை யானை – சூளாமணி:6 572/1
மாசு_இல் தண்டு அன்ன தோள் மன்ன மன்னிய – சூளாமணி:7 625/1
குன்றம் அன்ன திண் தோள் மிசை குண்டலம் – சூளாமணி:7 630/3
தொகையை வென்ற என் தோள் உளவா பிற – சூளாமணி:7 634/2
ஆசு_இல் தோள் இவை-தாம் அசைவு எய்துமோ – சூளாமணி:7 635/4
பாழி தோள் மனித்தர்க்கு பணியுமோ – சூளாமணி:7 636/4
கல் நவில் வயிர திண் தோள் கடல்_வண்ணன் வினவ யாரும் – சூளாமணி:7 679/2
உலத்தின் வீங்கிய ஒளி மணி சுடர் அணி திணி தோள்
நலத்தின் வீங்கிய நளிர் புகழ் இளையவன் விரையின் – சூளாமணி:7 718/1,2
கல் நவில் வயிர திண் தோள் கடல்_வண்ணன் உவப்ப காட்டி – சூளாமணி:7 767/2
வரை செய் தோள் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார் – சூளாமணி:7 773/2
திரு வரை அனைய தோள் சிறுவர்-தம்மை அ – சூளாமணி:7 821/1
இன்னன உழையவர்க்கு அருளி ஏந்து தோள்
மன்னவன் மருசியை மருள கட்டுரைத்து – சூளாமணி:8 906/1,2
ஊழி நீர் உலகம் காக்கும் முழவு தோள் உருவ தாரான் – சூளாமணி:8 933/4
ஆங்கு எழு அனைய தோள் தழுவி தன்னொடும் – சூளாமணி:8 963/2
எழில் கொள் கந்து அனைய திண் தோள் இளையரோடு அரசர் ஈண்டி – சூளாமணி:8 967/1
வேய் என திரண்ட தோள் விளங்கும் மேனியாள் – சூளாமணி:8 1046/2
மிடைந்த தோள் தழூஉ பிணை நெகிழ மெல்லவே – சூளாமணி:8 1059/3
நின்ற நாண் எனும் நீள் கன்னி சிறை விண்டு காளை திண் தோள்
குன்றினால் செறிக்கப்பட்ட குமரி நீர் அமிர்த யாறு – சூளாமணி:8 1111/1,2
மெள்ள என் தோள் அணைவாள் என்னும் விருப்பு ஆராது – சூளாமணி:8 1121/3
எழு மலர்ந்து அனைய திண் தோள் இவை சுமந்து இருப்பது என்னே – சூளாமணி:9 1160/2
தோள் வடுப்படாமை மன்னன் புகழ் வடுப்படுதல் உண்டோ – சூளாமணி:9 1163/2
விச்சையின் செருக்கினாலும் வீங்கு தோள் தருக்கினாலும் – சூளாமணி:9 1189/1
ஒன்று வில் இரண்டு தோள் ஒருவன் எய்யவே – சூளாமணி:9 1255/1
தோள் வீசும் ஆறும் அவை மீளும் ஆறும் இடை சொல்லும் வீர மொழியும் – சூளாமணி:9 1331/2
வெவ் வேல் தெருட்டி ஒரு தோள் நிமிர்த்தி விரல் ஒன்று சுட்டி வரவே – சூளாமணி:9 1333/3
செரு வரை அனைய தோள் மன்னர் சேனையுள் – சூளாமணி:9 1400/1
கரு வரை அனைய தோள் கனக காமனே – சூளாமணி:9 1416/4
வனை கதிர் இலங்கு தோள் வயிரகண்டனோடு – சூளாமணி:9 1418/1
கரு வரை அனைய தோள் கன பொன் தாரினான் – சூளாமணி:9 1491/4
கோடி குன்றம் கோடு இயல் போலும் குவவு தோள்
கோடிக்குன்றம் கொண்டு அது மீட்டே கொள நாட்டி – சூளாமணி:9 1521/1,2
வேய் புரையும் மென் பணை தோள் மெல்_இயலார் மெல்லவே திறந்தார் அன்றே – சூளாமணி:9 1529/4
வேய் காயும் மென் பணை தோள் வெண் சந்தனம் மெழுகி முத்தம் தாங்கி – சூளாமணி:9 1534/1
அணி வரை அனைய திண் தோள் அருக்கனோடு அரசர் சேர்ந்தார் – சூளாமணி:9 1545/4
உல தகைய தோள் அணி கொள் மார்ப உரை என்ன – சூளாமணி:10 1606/3
கந்து என திரண்ட திண் தோள் கனக சாலங்கள் காட்டி – சூளாமணி:10 1627/2
காம்பு அழி பணை மென் தோள் மேல் கரும் குழல் துவண்டு வீழ – சூளாமணி:10 1638/2
சுருள் இரும் தோடு வாங்கி தோள் மிசை துளங்க வீழ்ப்பார் – சூளாமணி:10 1675/3
அடைந்தது மதியம் ஆக ஆயிடை அரசன் திண் தோள்
மிடைந்த தோள் நெகிழ விம்மி மெல்_இயல் வெருவலோடும் – சூளாமணி:10 1707/1,2
மிடைந்த தோள் நெகிழ விம்மி மெல்_இயல் வெருவலோடும் – சூளாமணி:10 1707/2
தோள் நலம் பொலிந்தது ஓர் தோன்றலோடு தன் – சூளாமணி:10 1712/2
பந்து ஆடும் மாடே தன் படை நெடும் கண் ஆட பணை மென் தோள் நின்று ஆட பந்து ஆடுகின்றாள் – சூளாமணி:10 1754/4
செவ் வரை அனைய தோள் செல்வன்-தன்னொடும் – சூளாமணி:10 1770/2
பாழி தோள் பரதன் பின் இவன் இவனால் நில மடந்தை பரிவு தீர்ந்தாள் – சூளாமணி:10 1804/4
கொண்டது ஓர் குமரன் போல்வான் குங்கும குவவு தோள் மேல் – சூளாமணி:10 1825/3
விரி கதிர் விலங்கல் திண் தோள் குவட்டினை விரும்பிற்று அன்றே – சூளாமணி:10 1834/4
தோள் வினை களவு காவல் உள் வழி துன்னல் செல்லா – சூளாமணி:11 1854/2
எழு வளர்த்து அனைய தோள் இயக்கர் ஏந்தின – சூளாமணி:11 1894/3
உலம் கொண்ட தோள் மன்ன ஓர் அறிவு ஆதி – சூளாமணி:11 1956/2
முரண் தரு தோள் மன்ன முற்ற உணர் நீ – சூளாமணி:11 2005/4
பவழ வரை அன்ன திரள் தோள் பரவை மார்பன் – சூளாமணி:11 2030/1
வேய் இடை மென் பணை பொன் தோள் விழைவு இன்றி பெரிது ஆகி – சூளாமணி:11 2064/2
உலம் மிகு வயிர தோள் உருவ தாரினீர் – சூளாமணி:12 2087/4
பனி வேய் இணை பன்னிய தோள் மடவாய் – நீலகேசி:5 488/4
கல் ஒத்து ஓங்கிய தோள் களி யானையான் – நீலகேசி:10 855/4
மேல்


தோள்_வளை (1)

செம்பொன் மா மணி தோள்_வளை கடகங்கள் செறி கழல் முதலா – யசோதர:5 326/2
மேல்


தோள்_வளையொடு (1)

சூடும் முடி மாலை குழை தோள்_வளையொடு ஆரம் – யசோதர:5 276/3
மேல்


தோள்கள் (3)

தோளிடை மிடைந்தன தோள்கள் தோளிடை – சூளாமணி:9 1273/2
வடி எயிறு இலங்க நக்கு வாழிய தோள்கள் இன்று – சூளாமணி:9 1427/2
தோளொடு தோள்கள் தேய்ப்ப சுடர் அணி சுடர்ந்து சிந்த – சூளாமணி:9 1433/3
மேல்


தோள்களால் (1)

இழை சுடர் தோள்களால் எறிய யானையின் – சூளாமணி:9 1399/2
மேல்


தோள்களை (2)

தூண் தொழ வளர்த்த தத்தம் தோள்களை நோக்குகிற்பார் – சூளாமணி:9 1162/4
தோள்களை புடைத்து வீக்கி துணை கரம் கொட்டி ஆர்த்து – சூளாமணி:9 1166/1
மேல்


தோளவர் (1)

சிலை தடம் தோளவர் செம் சாந்து அணிந்த – சூளாமணி:5 288/1
மேல்


தோளவருள் (1)

ஏந்து தோளவருள் இளையான் நமக்கு – சூளாமணி:7 632/1
மேல்


தோளவன் (3)

உரம் கொள் தோளவன் விரல் நுதி உற உடைந்து ஒழிந்த – சூளாமணி:7 716/4
உலம் பாராட்டும் தோளவன் ஒண் பூம் குழலாளை – சூளாமணி:8 1123/1
கல் நவில் தோளவன் கண் கொண்டிட்டவே – சூளாமணி:8 1129/4
மேல்


தோளவனுக்கு (1)

உலம் கொள் தோளவனுக்கு உணர்வு_ஆயினார் – சூளாமணி:7 642/4
மேல்


தோளாய் (8)

சிலை பயில் வயிர தோளாய் செப்பிய பொருள் இது எல்லாம் – யசோதர:4 245/1
வரை மலி வயங்கு தோளாய் வியாதியால் மயங்கினார்க்கு – சூளாமணி:6 520/1
இரும் கலி முழவு தோளாய் எரி மணி பலகை மேல் ஓர் – சூளாமணி:8 1015/3
கல் நவில் வயிர தோளாய் காய்ந்தவன் விடுக்க ஈண்டு – சூளாமணி:9 1434/3
வரை செய்து அனைய திரள் தோளாய் மறிதல் பொருளோ வய வேந்தே – சூளாமணி:9 1473/4
வெல்லா வகை இல்லை வீங்கு எழில் தோளாய் – சூளாமணி:11 2002/4
விலகும் சுடர் ஒளி வீங்கு எழில் தோளாய் – சூளாமணி:11 2006/4
வேயே புரை தோளாய் மிக்க இடம் எங்கும் – நீலகேசி:1 115/2
மேல்


தோளார் (4)

எழு வளர்த்து அனைய தோளார் இளையவர் இன்ன நீரார் – சூளாமணி:3 98/3
காந்திய கனக பைம் பூண் கரு வரை அனைய தோளார் – சூளாமணி:8 966/4
வேய் இரும் பணை மென் தோளார் மெல் அடி பரவ சென்று – சூளாமணி:8 984/2
வேய் மருள் உருவ தோளார் வெம் முலை தடங்கள் என்னும் – சூளாமணி:10 1704/1
மேல்


தோளாற்கு (2)

உலம் புரி உருவ தோளாற்கு உற்ற போழ்து உதவலுற்று – சூளாமணி:9 1437/2
உலம் கொண்ட வயிர தோளாற்கு உற்றதை உணரமாட்டார் – சூளாமணி:9 1460/1
மேல்


தோளான் (28)

தேன் உமிழ் அலங்கல் தோளான் செல்வத்தில் குபேரன் அன்னான் – உதயணகுமார:1 10/3
வாரித்து இசைந்து அளிக்கும் வண் கை அம் பொன் திண்_தோளான் – நாககுமார:1 8/3
குன்று என திரண்ட தோளான் குமரனும் கேட்டு வந்து – நாககுமார:3 92/1
கல் நவில் கடக தோளான் காட்சி அம் கதிர்ப்பு சென்றான் – சூளாமணி:4 204/3
கொற்றவன் சிறுவன் கோல குங்கும குவவு தோளான்
செற்றவர் செருக்கும் செய்கை செரு_வல்லான் சிங்ககேது – சூளாமணி:5 328/2,3
உறுவனை வணங்கி கேட்டான் மகன் திறம் உலம் கொள் தோளான் – சூளாமணி:5 352/4
ஒன்று மற்று உரைக்கமாட்டாது இருந்தனன் உரம் கொள் தோளான் – சூளாமணி:6 516/4
கொடி வரைந்து எழுதப்பட்ட குங்கும குவவு தோளான்
இடி முரசு அதிரும் தானை இறை தொழில் மகனுக்கு ஈந்து – சூளாமணி:6 553/1,2
அணி முழா அனைய தோளான் அருளியது அறிந்த போழ்தின் – சூளாமணி:7 674/1
பெண் நலம் கனியும் நீர்மை பெருகிய உருவ தோளான் – சூளாமணி:8 831/4
முன்னவன் நம்பி வெய்யோன்_பெயரவன் முழவு தோளான்
பின்னவன் சுரமை வேந்தன் பெருமகன் அவற்கு தம்பி – சூளாமணி:8 978/1,2
கல் நவில் வயிர தோளான் கரு முகில் உருவ காளை – சூளாமணி:8 978/3
கோல வாய் அரச காளை குங்கும குவவு தோளான்
மேல் அவாம் நெடும் கண் ஓட மீட்டு அவை விலக்க மாட்டாள் – சூளாமணி:8 979/2,3
உலம் கொண்ட வயிர தோளான் உழைக்கல மகளிர் என்று – சூளாமணி:8 998/2
தட வரை அனைய தோளான் தன்னுளே வியந்து நின்றான் – சூளாமணி:9 1143/4
வரை செறிந்து அனைய தோளான் மந்திரசாலை சேர்ந்தான் – சூளாமணி:9 1174/3
சிலை படு வயிர தோளான் செம் கதிர் முறுவல் தோன்றி – சூளாமணி:9 1198/2
கணை சேர்ந்த தூணி தோளான் கை சிலை பிடித்து கொண்டு – சூளாமணி:9 1304/3
மல்லால் செய்த தோளான் மேல் மாய வெம் போர் செய்குற்றான் – சூளாமணி:9 1344/4
உலம் புரி வயிர தோளான் உரப்பினான் உரப்பலோடும் – சூளாமணி:9 1439/3
கல் நவில் கடக தோளான் கண்டு கை தொழுதுகொண்டு – சூளாமணி:9 1461/1
ஓங்கினன் உருவத்தாலும் வில் எண்பது உயர்ந்த தோளான் – சூளாமணி:10 1558/4
எழு மலர்த்து அனைய தோளான் தேவியர் இனையர் ஆனார் – சூளாமணி:10 1642/4
மன் அவாம் வயிர தோளான் வலஞ்சுழி வாவி புக்கான் – சூளாமணி:10 1671/4
தழுவியது அனைய தோளான் தன் ஒளி தயங்க சார்ந்தான் – சூளாமணி:10 1785/4
குண்டலபுரம்-அது ஆளும் குங்கும குவவு தோளான்
கண்டிகை தவழ பூண்டு கதிர் மணி முடியின் மேலால் – சூளாமணி:10 1786/2,3
கொங்கு ஆர வார் குழலார் குவி முலைகள் முகம் பொருத குவவு தோளான்
இங்கு ஆரும் நிகர்_இல்லா இக்குவா குலத்து இறைவன் இருந்த கோவே – சூளாமணி:10 1802/3,4
வாள் வினை புரிந்த தோளான் மனத்ததை உணர்ந்து மாதோ – சூளாமணி:11 1855/3
மேல்


தோளி (7)

மது மலர் குழலி விண் மின் மாலை வேல் விழி மென் தோளி
பதுமை வந்து அரசன் கண்டு பன்னுரை இனிது கூறும் – உதயணகுமார:4 190/1,2
வேயிடை_தோளி மெல்ல விழித்தனள் வியந்து நோக்கா – யசோதர:2 94/3
வீட்டிடும் செல்க என்று ஏவ வேய் புரை தோளி தோழி – யசோதர:2 112/3
காம்பின் வாய்ந்த மென் தோளி அ காதலன் – சூளாமணி:5 342/1
வேய் ஒத்த பணை மென் தோளி மிடை மணி கபாடம் நீக்கி – சூளாமணி:8 976/2
பண்டு இ நின்ற பணை_தோளி பாலன் பெறாமையை – நீலகேசி:1 36/1
வேய் ஒத்த தோளி நிலையுதல் வேண்டப்படுதலினால் – நீலகேசி:4 377/1
மேல்


தோளிடை (3)

தோளிடை மிடைந்தன தோள்கள் தோளிடை – சூளாமணி:9 1273/2
தோளிடை மிடைந்தன தோள்கள் தோளிடை
வாளிடை மிடைந்தன வாள்கள் மற்று இவை – சூளாமணி:9 1273/2,3
தொடுத்ததும் துரந்ததும் விடலை தோளிடை
மடுத்ததும் கிழித்ததும் மண்ணினுள் புக – சூளாமணி:9 1422/1,2
மேல்


தோளிமாரொடு (1)

வளை தகை ஒண் பணை தோளிமாரொடு
திளைத்து அகம் கழுமிய தரங்க தெள் புனல் – சூளாமணி:10 1686/1,2
மேல்


தோளியர் (2)

வரி வளை தோளியர் மனத்துள் காம_நோய் – சூளாமணி:3 79/3
சூழ்ச்சி அமைந்த துணை_தோளியர் சொற்கள் என்று – நீலகேசி:6 727/3
மேல்


தோளில் (1)

மின் தவழ் மேனியாளை மென் பணை தோளில் புல்லி – சூளாமணி:8 1012/2
மேல்


தோளிலும் (1)

எழிலும் தோளிலும் எருத்திலும் கிடந்தில எழுந்தே – சூளாமணி:7 715/4
மேல்


தோளின் (4)

சூடக மணி மென் தோளின் தொழுதனர் துளங்க தோன்றி – யசோதர:4 228/2
தோளின் மேல் செல சுடர் விடு கடகங்கள் செறியா – சூளாமணி:7 713/2
உலம் ஏசு தோளின் ஒளி வேலினோடும் ஒருவான் எதிர்ந்து பொருவான் – சூளாமணி:9 1330/4
நெய்யுற்ற வேலும் ஒரு தோளும் வீழ ஒரு தோளின் நீடு செருவை – சூளாமணி:9 1334/1
மேல்


தோளினர் (1)

தோளினர் தாளினர் தோன்றினர் அன்றே – சூளாமணி:9 1242/4
மேல்


தோளினன் (1)

கோடு உயர் குன்று என குலவு தோளினன்
பீடு உடை நடையினன் பெரிய நம்பியே – சூளாமணி:3 76/3,4
மேல்


தோளினனும் (1)

உலம் புரி தோளினனும் உலகம் எல்லாம் உடன் வணங்க – சூளாமணி:12 2130/2
மேல்


தோளினாய் (3)

கல் நவில் தோளினாய் நீ வரவிடு காவல் என்றான் – சூளாமணி:3 102/4
பாழி அம் தோளினாய் பண்டும் கேட்டுமே – சூளாமணி:3 112/4
கொடி மிசை எழுதிய குவவு தோளினாய் – சூளாமணி:10 1591/4
மேல்


தோளினார் (1)

தூமத்து சுடர் ஒளி துளும்பு தோளினார்
வாமத்தின் மயங்கி மை மதர்த்த வாள் கணார் – சூளாமணி:2 61/3,4
மேல்


தோளினார்-தம் (1)

சிலை தடம் தோளினார்-தம் சிந்துநாடு-அதனை சேர்ந்து – சூளாமணி:7 698/2
மேல்


தோளினால் (2)

தோளினால் ஆகுமேனும் சொல் எலாம் ஒழிக மற்று அ – சூளாமணி:9 1168/2
தோளினால் அவன் – சூளாமணி:9 1302/3
மேல்


தோளினாள் (1)

வேயின் நன்மை விலக்கிய தோளினாள் – நீலகேசி:5 559/4
மேல்


தோளினாற்கு (1)

கல் நவில் தோளினாற்கு கருமம் ஈது என்று காட்டி – சூளாமணி:7 696/3
மேல்


தோளினான் (9)

நெதி இரண்டு என நீடிய தோளினான்
யதி கொள் பண்ணவர் பாவலன் புக்கதே – நாககுமார:1 21/3,4
உலம் உறை தோளினான் உவகை கூர்ந்தனன் – சூளாமணி:4 179/1
செரு அமர் தோளினான் சிறுவர் ஆகிய – சூளாமணி:5 406/3
உலத்தினும் பெருகிய உருவ தோளினான் – சூளாமணி:8 909/4
உலம் புரி தோளினான் ஒளி கொள் பைம் கழல் – சூளாமணி:8 960/3
பாழி அம் தோளினான் பால ஆக்கினால் – சூளாமணி:9 1212/2
சிலை மிசை தோளினான் சேவகங்களே – சூளாமணி:9 1214/4
குன்று போல் பெருகிய குவவு தோளினான் – சூளாமணி:9 1255/4
கல் நவில் தோளினான் கண்டங்கண்டமா – சூளாமணி:9 1385/3
மேல்


தோளினான்-தன் (1)

கல் நவில் தோளினான்-தன் கழல் அடி தொழுது நின்றான் – சூளாமணி:6 509/3
மேல்


தோளினும் (2)

தோளினும் தொடு கழல் வலியினானும் இ – சூளாமணி:7 685/3
இருவரும் வருக என இரண்டு தோளினும்
ஒரு வரை அகலத்தின் ஒடுங்க புல்லினான் – சூளாமணி:7 821/3,4
மேல்


தோளும் (10)

தொலைவு_இல் வானவர் தோளும் துணிக்குமே – சூளாமணி:7 638/4
மன்னவற்கு உணர்வும் கண்ணும் மாற்றமும் வலியும் தோளும்
அன்னவன் அமைச்சர்க்கு ஏறாம் அவன் அரிமஞ்சு என்பான் – சூளாமணி:9 1175/3,4
சுவை பெறு தோளும் வாளும் சொல்லு-மின் சுருங்க என்பார் – சூளாமணி:9 1192/4
தோளும் அங்கு இட வயின் துடித்த வீரர் கை – சூளாமணி:9 1218/3
சோலை தலை மலை போல்வன தோளும் இவை உடையான் – சூளாமணி:9 1315/2
நெய்யுற்ற வேலும் ஒரு தோளும் வீழ ஒரு தோளின் நீடு செருவை – சூளாமணி:9 1334/1
மீது ஆர்ந்த வெண் நிலா சுடர் ஒளியும் வெள்ளி குன்று அனைய தோளும்
போது ஆர்ந்த கரும் குஞ்சி மணி தொடர்ந்தால் போல் புறம் தாழ்ந்து இருண்டவாறும் – சூளாமணி:9 1533/2,3
இட்ட தளை-தம்மொடு இரு தோளும் இடை வீக்கி – சூளாமணி:10 1617/1
தொண்டை வாய் நல் நலமும் தோளும் துடி இடையும் – நீலகேசி:1 128/2
மின் போல் நுடங்கு இடையும் வேய் ஏய் திரள் தோளும்
என்றே இவை மகிழ்ந்து ஈங்கு என் முன்னே வந்தாயால் – நீலகேசி:1 132/1,2
மேல்


தோளை (3)

தோளை வீழ்த்த ஓர் – சூளாமணி:9 1302/2
வை வேலினோடும் நிமிர்கின்ற தோளை அற வீசினான் அ மறவோன் – சூளாமணி:9 1333/4
தோளை நாண்_இலர் தோயவே – சூளாமணி:9 1355/4
மேல்


தோளையும் (1)

தோளையும் சுடர் கெழு நாஞ்சில் வாயினால் – சூளாமணி:9 1417/3
மேல்


தோளொடு (2)

தோளொடு துதைந்து எறியும் வாள்-அதனை நோக்கி – சூளாமணி:9 1293/2
தோளொடு தோள்கள் தேய்ப்ப சுடர் அணி சுடர்ந்து சிந்த – சூளாமணி:9 1433/3
மேல்


தோற்குமோ (1)

துட்ட போர் யானை தூமகேதனனும் தோற்குமோ ஒருவனுக்கு என்று – சூளாமணி:9 1325/3
மேல்


தோற்பரம் (1)

முதலையின் முதுகு என நிவந்த தோற்பரம்
கதலிகை காம்பொடு கடுகி தாமரை – சூளாமணி:9 1404/2,3
மேல்


தோற்ற (8)

தோற்ற மன்னன் வந்து எதிர்த்தனன் தூய காளை தன் வாளினால் – உதயணகுமார:3 182/2
மேவரும் தகைய செல்வம் விருந்துபட்டனகள் தோற்ற
மா அரசு அழித்த செம் கண் மணி_வண்ணன் மகிழ்ந்த காலை – சூளாமணி:10 1555/2,3
வேரி ஆர் குவளை வேய்ந்த மெல்லியலவர்க்கு தோற்ற
ஓரையாய் முதலை ஆகி கூன் படை ஒளித்த அன்றே – சூளாமணி:10 1677/3,4
தொன்று மூத்தலை துறந்தாய் தோற்ற மா கடல் இறந்தாய் – நீலகேசி:2 154/2
நன்றி_இல் தொழில் தோற்ற நவையினால் – நீலகேசி:5 541/3
சுடர் உடை தோற்ற தொடர்ச்சியை சொல்லி – நீலகேசி:5 617/1
பிறப்பித்து கேடும் பின் தோற்ற கெடலும் – நீலகேசி:5 631/1
பேம் தரு தோற்ற பிசாசிகன் இற்று என – நீலகேசி:10 894/1
மேல்


தோற்றத்தாள் (1)

விண் ஆறு செல்வாள் வியன் மலை போல் தோற்றத்தாள்
உள் நால் வினையும் ஒருவி ஒளிர் மேனி – நீலகேசி:6 659/2,3
மேல்


தோற்றத்து (1)

மஞ்சு இவர் தோற்றத்து மகர வாயொடு – சூளாமணி:11 1892/2
மேல்


தோற்றத்தை (1)

நின் வழி தோற்றத்தை நீ உரை என்றாள் – நீலகேசி:5 629/4
மேல்


தோற்றப்படு (1)

சொல்லினது என் செய தோற்றப்படு பொருள் – நீலகேசி:7 765/3
மேல்


தோற்றம் (12)

அம் சுடர் இஞ்சி ஆங்கு ஓர் அகழ் அணிந்து அலர்ந்த தோற்றம்
வெம் சுடர் விரியும் முந்நீர் வேதிகை மீது இட்டன்றே – சூளாமணி:2 38/3,4
துஞ்சு இடை பெறாது தும்பி துவன்றி மேல் துகைக்கும் தோற்றம்
செம் சுடர் இலங்கும் செம் தீ கரும் சுடர் கந்துள் சிந்தி – சூளாமணி:4 164/2,3
நிழல் அணி மணி கல் நீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம்
குழல் அணி குஞ்சி மைந்தர் குங்கும குழம்பு பூசி – சூளாமணி:7 757/2,3
மூடம் மூன்றும் உரைத்தோய் நீ முரண் செய் தோற்றம் முனிந்தோய் நீ – நீலகேசி:1 137/1
தூய்மை உண்மையின் தோற்றம் கரந்து அவண் – நீலகேசி:3 244/2
ஐ_வினை இல் நிலை தோற்றம் நாசம்-தான் நாட்டுங்கால் – நீலகேசி:4 311/4
கெடுவது தோற்றம் நிலையுதல்-தான் அ பொருள் எனவும் – நீலகேசி:4 392/3
தோற்றம் இடையறவு இல்லா தொடர்ச்சியை – நீலகேசி:5 611/1
தோற்றம் வழி என்று சொல்லுதலால் தடுமாற்றம் – நீலகேசி:5 628/1
பின் வழி தோற்றம் பெறுமோ இரண்டனுள் – நீலகேசி:5 629/2
என் வழி தோற்றம் அஃது ஆம் மாறு இருள் அற – நீலகேசி:5 629/3
துப்பு என பொருள்களும் தோற்றம் இல்லையே – நீலகேசி:8 799/4
மேல்


தோற்றமும் (14)

தோற்றமும் சுடர் ஒளி வடிவும் முன் இலா – சூளாமணி:9 1208/1
துணி மலர்ந்து உமிழ்தரும் தண்மை தோற்றமும்
நணி மலர் நாற்றமும் என்ன அன்னதால் – சூளாமணி:12 2074/2,3
கள்ளி ஆர் இடை கலந்தது ஓர் தோற்றமும் கடிதே – நீலகேசி:1 30/4
நட்டமும் தோற்றமும் நாட்டேன் உருவிற்கு நானும் என்றாள் – நீலகேசி:4 389/4
சொலவாம் உடன் கேட்டொடு தோற்றமும் ஆம் – நீலகேசி:5 486/4
தோற்றமும் என்னை துடித விமானத்துள் – நீலகேசி:5 604/2
நில்லாது அற கெடும் தோன்றிற்றும் தோற்றமும்
எல்லா வகையினும் இல்லதற்கேல் இல்லை – நீலகேசி:5 616/1,2
தோற்றமும் கேடும் தொகு பிண்டம் ஒன்றிற்கு – நீலகேசி:5 636/3
தொகுதி செய் பல் குணம் தோற்றமும் இல் ஆம் – நீலகேசி:7 761/2
அடக்கும் தன் தோற்றமும் ஒட்டி மும்மையும் – நீலகேசி:8 803/3
தோற்றமும் நாற்றமும் சுவையுடன் ஊறு இவற்றால் தொடங்கி – நீலகேசி:9 830/1
சூதித்த தோற்றமும் பிழைப்பு என சூத்திர பிறவி கொள்ளார் – நீலகேசி:9 834/3
ஈறும் தோற்றமும் இல் உயிர் ஆயின – நீலகேசி:10 882/2
சுட்டினாள் அங்கு தோற்றமும் நோக்கு என – நீலகேசி:10 888/3
மேல்


தோற்றமே (1)

சொல் இல சுழற்சியும் வீடும் தோற்றமே – நீலகேசி:8 807/4
மேல்


தோற்றலும் (1)

வழு_இல் வாயும் வளை பல்லும் தோற்றலும் – நீலகேசி:10 889/4
மேல்


தோற்றவர் (1)

தோற்றவர் புறக்கொடையும் நாணி மிக நோக்கார் – சூளாமணி:9 1280/2
மேல்


தோற்றாயே (1)

செய்ய குருதி சேறு ஆடி சிறு மானிடர்க்கே தோற்றாயே – சூளாமணி:9 1478/4
மேல்


தோற்றார்க்கு (1)

வென்றார்க்கு ஓர் விழு பொருளும் தோற்றார்க்கு ஓர் பெரும் துயரும் – நீலகேசி:2 173/2
மேல்


தோற்றாரை (1)

புறப்படுப்பன் தோற்றாரை பொல்லாங்கு செய்து என்றாற்கு – நீலகேசி:2 174/3
மேல்


தோற்றி (8)

ஓத நீர் உலகின் மிக்க ஒழுக்கமும் தொழிலும் தோற்றி
தீது தீர்ந்திருந்த பெம்மான் திரு_அடி சார சென்று – சூளாமணி:6 535/2,3
பாடு பாணி இலயம் பல தோற்றி
ஆடியாடி அசதி தொழில் செய்ய – சூளாமணி:10 1567/1,2
மாதவனை நோக்கி மணி வாய் முறுவல் தோற்றி
கோதைகளில் யாத்து இவனை நீர் கொணர்-மின் என்றாள் – சூளாமணி:10 1614/2,3
இன் நகை மழலை தோற்றி இளையவர் இனையர் ஆனார் – சூளாமணி:10 1631/4
ஈங்கு இவை அனைய தோற்றி இன்பமே பெருக நின்ற – சூளாமணி:11 1842/3
தூவென மும்மையே தோற்றி தொழான் அங்கு ஓர் – நீலகேசி:5 542/3
தன் வழி தோற்றி கெடுமோ அது கெட – நீலகேசி:5 629/1
வழி ஒன்று தோற்றி கெடுமேல் மக பெற்று – நீலகேசி:5 630/1
மேல்


தோற்றிய (1)

துடி இடை தத்தை கேட்டு தோற்றிய சீற்றத்தானாள் – உதயணகுமார:4 238/4
மேல்


தோற்றினார் (1)

தொகை மணி தொழில் பல தொடர தோற்றினார் – சூளாமணி:10 1774/4
மேல்


தோற்றினால் (1)

தோற்றினால் உயிர்-தான் தொகை என் செயும் – நீலகேசி:10 881/2
மேல்


தோற்றினை (1)

துணிவு தோற்றினை என சிலர் துதியொடு தொழுது – நீலகேசி:5 476/3
மேல்


தோற்று (1)

கந்தம் ஆர் திரிபுவனாரதி கை வீணை-அதனில் தோற்று
என் தமரோடும் கூட எங்கள் ஊர்க்கு ஏற சென்றோம் – நாககுமார:3 89/3,4
மேல்


தோற்றுவிக்கும் (1)

துன்புறவு_இல் அ கதியுள் தோற்றுவிக்கும் அன்றே – நீலகேசி:6 664/4
மேல்


தோன்ற (21)

முறையின் நல் வழியை நோக்க மொய்ம்பன் அ தினத்தில் தோன்ற
அறை அலை கடலில் சங்கம் மாணி முத்து ஈன்றது ஒத்தாள் – உதயணகுமார:1 15/3,4
பெரும் தெரு நடுவுள் தோன்ற பீடு உடை குமரன் தானும் – உதயணகுமார:1 97/2
பவள கொப்புளங்கள் பாவை பஞ்சி மெல் அடியில் தோன்ற
தவளை கிண்கிணிகள் மிக்க தரத்தினால் பேசல் இன்றி – உதயணகுமார:1 115/2,3
போதின் நல் குமரன் தோன்ற புரவலன் இனியன் ஆகி – உதயணகுமார:5 252/3
சொன்ன மும்மதம் தோன்ற வேழமும் – உதயணகுமார:6 310/3
இருள் மனை இமில் ஏறு ஒன்றும் இளம் கதிர் கனவில் தோன்ற
பொரு_இலாள் கண்டு எழுந்து புரவலர்க்கு உணர்த்தினாளே – நாககுமார:2 42/3,4
திங்கள் ஒன்பான் நிறைந்து செல்வன் நல் தினத்தில் தோன்ற
பொங்கு நீர் கடல் போல் மன்னன் புரிந்து நல் உவகை ஆகி – நாககுமார:2 49/1,2
பா அலர் இசையின் தோன்ற பாடுபு பயின்ற அன்றே – சூளாமணி:3 99/4
துணிந்து தன் புலைமை தோன்ற சச்சுதன் சொல்லலுற்றான் – சூளாமணி:5 257/2
இணைந்து நின்று உலவும் தும்பி இடையிடை இருண்டு தோன்ற
அணிந்து நின்று அலரும் பைந்தார் அணி மணி முடியினாற்கே – சூளாமணி:5 257/3,4
தொழில் கதிர்_கடவுள் தோன்ற சூரியகாந்தம் என்னும் – சூளாமணி:5 258/2
தேவரே எனினும் தோன்ற சில் பகல் செல்ப ஆயில் – சூளாமணி:6 519/2
விஞ்சையர் விமானம் தோன்ற மேல் அரும் கலங்கள் ஏற்றி – சூளாமணி:7 678/2
பண் எலாம் அணிந்து தோன்ற பருமித்து கருவி ஏற்றி – சூளாமணி:8 839/3
கார் அணி மின்னின் தோன்ற கதலிகை நடுவித்தானால் – சூளாமணி:8 932/4
சுற்றிய பளிங்கில் சோதி சுவர் மிசை எரித்து தோன்ற
இற்று இவள் உருவம் என்றாங்கு இதயத்துள் எழுதி வைத்து – சூளாமணி:8 1001/2,3
உருகினான் போன்று தோன்ற மயிர் துளை உகுத்த தெள் நீர் – சூளாமணி:9 1147/2
துன்னலர்க்கு அரும் படர் தோன்ற தோன்றுபு – சூளாமணி:9 1392/3
அஞ்சு தோன்ற நுதலின் இழித்து அந்தணாளார் மெய் தீண்டி – சூளாமணி:9 1483/2
அடி மலரும் கைத்தலமும் அம் தளிராய் தோன்ற
கடி நறும் பூம் சோலையை காரிகையார் வென்றார் – சூளாமணி:10 1643/3,4
வம்பு உருவம் தோன்ற மணி அருவி ஆடுவார் – சூளாமணி:10 1653/4
மேல்


தோன்றல் (14)

துடி இடை விரிசிகையை தோன்றல் மாலை சூட்டினான் – உதயணகுமார:2 134/4
தொழுது அவர் பெறுக போகம் தோன்றல் நீ என்று சொன்னார் – உதயணகுமார:3 159/4
துன்னும் மால் கடல் தோன்றல் நீந்து நாள் – உதயணகுமார:6 310/2
துணியலென் உணர சொல்வாய் தோன்றல் நீ என்று சொன்னாள் – யசோதர:2 133/4
தன் நிகர் இகந்த தோன்றல் சரண் என பரமன் பாதம் – சூளாமணி:6 544/3
வளர் ஒளி வயங்கு தோன்றல் வருத்தமானத்து மன்னன் – சூளாமணி:8 830/2
கண் நலம் கனியும் தோன்றல் கந்தருவ நகரம் காப்பான் – சூளாமணி:8 831/2
தூங்கு நீர் உடுத்த பாங்கில் சோபனம் உடைய தோன்றல்
தேங்கு நீர் கடல் அம் தானை சித்திரதரன் இ வையம் – சூளாமணி:8 837/2,3
அம் கலம் மலர்ந்த தோன்றல் அரிபுரத்தவர்கள் கோமான் – சூளாமணி:8 844/1
ஊழி காண்பு அரிய தோன்றல் உக்கிர குலத்து வேந்தன் – சூளாமணி:10 1787/1
இல்லை அமர்ந்துழி தோன்றல் என இவை – சூளாமணி:11 1983/2
வான் உயர் தோன்றல் வளர்_பிறை ஏசிய வாள்_நுதலாய் – நீலகேசி:1 86/4
சாத்திரம் இவை மூன்று என வல் தவ தோன்றல்
பாத்து உரைக்கும் தன் பத பொருள் பல வகைப்படவே – நீலகேசி:5 477/3,4
ஒருங்கு குறியோடு உணர்வு தோன்றல் இல ஆமே – நீலகேசி:5 525/3
மேல்


தோன்றல்-பால் (1)

சுருங்கல்_இல் சுடர் ஒளி துளும்ப தோன்றல்-பால்
அரும் கலம் ஒழிந்தவும் அடைந்த என்பவே – சூளாமணி:9 1501/3,4
மேல்


தோன்றலால் (6)

துளங்கு பூ_மாலையும் சுரும்பும் தோன்றலால்
வளம்கொள் பூம் கற்பக வனமும் போலுமே – சூளாமணி:2 45/3,4
சொரி கதிர் கோடக முடிகள் தோன்றலால்
பொரு களம் புற்று எடுக்கின்றது ஒக்குமே – சூளாமணி:9 1397/3,4
தொக்கவர் அடி தொழ தோன்றும் தோன்றலால்
அக்கிர பெரும் சிறப்பு எய்தி ஆயிடை – சூளாமணி:9 1504/2,3
சுருங்கல்_இல் கருடற்கு சுடரும் தோன்றலால்
பெரும் கலி மாளிகை பேணப்பட்டதே – சூளாமணி:9 1505/3,4
நிலம் புரி நிழல் ஒளி நிரந்து தோன்றலால்
வலம்புரி மணி கரு இருந்தது அன்னது ஓர் – சூளாமணி:10 1710/2,3
தொல் நலம் பெயர்ந்து பொன் சுடர்ந்து தோன்றலால்
மன் இலங்கு அரு மணி வளர வாள் உமிழ் – சூளாமணி:10 1711/2,3
மேல்


தோன்றலும் (7)

துதிக்கை மா வீழ்ந்த கானம் தோன்றலும் மாடம் பண்ணி – உதயணகுமார:4 188/3
நாக நீள்புர நடுவில் தோன்றலும்
காமனே என கன்னி மங்கையர் – உதயணகுமார:5 289/2,3
நேமி ஆளவே நினைத்த தோன்றலும்
வாமநாகர்-தம் மலையில் சென்றனன் – உதயணகுமார:5 290/1,2
இங்கண் மால் உயிர்க்கு எலாம் எளிய்ய என்று தோன்றலும்
தங்கள் சோதி சாரல் ஆவ அல்ல அன்ன நீரவால் – சூளாமணி:6 501/2,3
தொழு தகை வடிவொடு நம்பி தோன்றலும்
தழுவினர் முயங்கினர் முயங்கி தம் உளே – சூளாமணி:10 1719/2,3
துத்தல்_உடையன் என் தோன்றலும் என்றான் – நீலகேசி:7 736/4
தொழுவிப்பான் அங்கு ஓர் தோன்றலும் தோன்றுமே – நீலகேசி:10 883/4
மேல்


தோன்றலே (1)

துணிவொடு சுரமைநாடு உடைய தோன்றலே – சூளாமணி:12 2097/4
மேல்


தோன்றலை (1)

சொல்லி நண்பினால் உரைத்து தோன்றலை மிக புல்லி – உதயணகுமார:3 177/2
மேல்


தோன்றலோடு (1)

தோள் நலம் பொலிந்தது ஓர் தோன்றலோடு தன் – சூளாமணி:10 1712/2
மேல்


தோன்றவும் (1)

துகிலிகை கொடி_அனார் மின்னின் தோன்றவும்
இகலின மலையொடு மாடம் என்பவே – சூளாமணி:2 41/3,4
மேல்


தோன்றவே (2)

மணி நிலை சுடர் ஒளி மலர்ந்து தோன்றவே – சூளாமணி:4 180/4
பா மழை உருவுகள் பலவும் தோன்றவே
பூ_மழை பொன் நிலம் புதைய வீழ்ந்தவே – சூளாமணி:11 1897/3,4
மேல்


தோன்றா (4)

நல் தவ நங்கை தோன்றா முன்னம் நாம் ஆண்டது எல்லாம் – சூளாமணி:5 304/4
எப்பாலும் தான் கெடா இல்லனவும் தோன்றா என்று – நீலகேசி:6 696/1
இல்லாத தோன்றா கெடா உள்ளன என்பாய் – நீலகேசி:6 698/1
சோம்பன் குணம்_இலன் தோன்றா ஒளிப்பினன் – நீலகேசி:7 744/1
மேல்


தோன்றாது (1)

இருள் உடை மாலைக்கண் தோன்றாது எனக்கு என நண்பகலே – நீலகேசி:5 514/1
மேல்


தோன்றாமை (1)

உடுத்த தூவி தோன்றாமை நிலத்தினுள் புக்கு ஒளித்ததுவே – சூளாமணி:9 1346/4
மேல்


தோன்றால் (1)

தூங்கு நீர் மருத வேலி சுரமைநாடு உடைய தோன்றால்
ஏங்கு நீர் அமிர்தின் தீர்த்தம் சென்றனர் தெளித்தல் அன்றே – சூளாமணி:8 971/2,3
மேல்


தோன்றி (41)

நடுவண் தோன்றி நாடகமாடி – உதயணகுமார:1 77/2
மருவுறு வருத்தம் கண்டு ஓர் வானவன் வந்து தோன்றி
பெரும நீர் உண்ண காட்டி பேர்_இடர் தீர்த்தான் அன்றே – உதயணகுமார:5 244/3,4
சேர்ந்து இரு புதல்வர் தோன்றி செவ்வியால் செல்லும் நாளில் – நாககுமார:3 76/2
ஆனை மேல் குமரன் தோன்றி அவனும் வந்து எதிர்த்த போது – நாககுமார:3 83/2
மருவின் ஆன சோதமத்தின் வானவன் ஆகி தோன்றி
வரு கயல் விழியாள் நாகவசுவும் வந்து அமரனுக்கு – நாககுமார:5 149/2,3
அ குலத்து உடம்பு தோன்றி அன்று தொட்டு இன்று காறும் – யசோதர:1 43/3
சூடக மணி மென் தோளின் தொழுதனர் துளங்க தோன்றி
நாடக மகளிர் ஆடும் நாடகம் நயந்தும் நல்லார் – யசோதர:4 228/2,3
ஐயென அங்கி தோன்றி அதனையும் எரிக்கலுற்றது – யசோதர:4 236/3
அம் சுடர் கடவுள் காத்த அரும் குலம் மலர தோன்றி
வெம் சுடர் எஃகம் ஒன்றின் வேந்து கண் அகற்றி நின்ற – சூளாமணி:3 101/2,3
வீழ் வினை பிறிதும் ஆக்கி வெய்துற விளிந்து தோன்றி
ஆழ் துயர் உழக்கும் அந்தோ அளி அற்ற அறிவு_இல் சாதி – சூளாமணி:4 199/2,3
சூழ் கதிர் தொழுதி மாலை சுடர் பிறை_கடவுள் தோன்றி
தாழ் கதிர் சொரிந்த போழ்தில் சந்திரகாந்தம் என்னும் – சூளாமணி:5 260/1,2
காரிய கிழவர் சூழ கவின்று கண் குளிர தோன்றி
ஆரியன் அலர்ந்த சோதி அரும் கல பீடம் நெற்றி – சூளாமணி:6 510/2,3
அங்கு அவர் வழிக்-கண் தோன்றி அகல் இடம் வணங்க நின்ற – சூளாமணி:6 561/3
வெம் சுடர் விளங்கும் மாடத்து இடைநிலை விரவி தோன்றி
வஞ்சி நல் மருங்குல் நோவ மணி நகை கலாவம் மின்ன – சூளாமணி:7 675/2,3
நீக்க நீங்கா நிலம் போல தோன்றி புகில் – சூளாமணி:7 740/2
வணம் கிளர்வன தோன்றி வகை சுடர்வன தோன்றி – சூளாமணி:7 751/2
வணம் கிளர்வன தோன்றி வகை சுடர்வன தோன்றி
இணங்கு இணர்வன இஞ்சி எரி பொன் புடை இஞ்சி – சூளாமணி:7 751/2,3
துன்னிய துணர் இளம் தோன்றி மென் கொடி – சூளாமணி:7 816/1
பெற்ற தன் நிலையிற்று ஆகி பெருகிய வளமை தோன்றி
சுற்றிய பசும்பொன் சோதி சொரிந்து போய் துறக்கம் காண – சூளாமணி:8 847/2,3
நீர் அணி நிழல் கொள் முத்த மணல் மிசை நிரந்து தோன்றி
பூரண குடங்கள் செம்பொன் கொழும் கதிர் புதைந்த கீழால் – சூளாமணி:8 852/3,4
சொரி கதிர் வயிரம் கான்ற சுடர் எனும் கொழுந்து தோன்றி
புரி கதிர் முத்தம் என்னும் புது நகை அரும்பு பம்பி – சூளாமணி:8 857/2,3
நலம்கொண்டு ஓர் ஆர்வம் கூர நகை முகம் முறுவல் தோன்றி
புலம் கொண்டது அதனை காப்பான் பூ ஒன்று நெரித்து மோந்தாள் – சூளாமணி:8 998/3,4
அங்கு ஒளி விசும்பில் தோன்றி அந்தி வான் அகட்டு கொண்ட – சூளாமணி:8 1031/1
சிலை படு வயிர தோளான் செம் கதிர் முறுவல் தோன்றி
இலை படு வயிர பைம் பூண் இமையவர் அல்லர் ஆயின் – சூளாமணி:9 1198/2,3
போது ஆவியே கமழ்ந்து புரை வட்டம் பொன் இழையால் பொலிந்து தோன்றி
ஊது ஆவியால் நுடங்கும் ஒள் அரத்த நுண் கலிங்கம் ஒன்று சேர்த்தி – சூளாமணி:9 1538/1,2
என்று அவள் மொழிந்த போழ்தின் இலங்கு ஒளி முறுவல் தோன்றி
நன்று அது பெரிது யாமும் நங்கை-தன் மகனை காண்டும் – சூளாமணி:10 1564/1,2
விஞ்சையன் ஒருவன் தோன்றி விசும்பின் ஆறு இழிந்து வந்து – சூளாமணி:10 1694/2
எரி மணி வயிர பூணான் இக்குவா குலத்துள் தோன்றி
அரு மணி புரிசை வேலி அயோத்தி ஆள்கின்ற வேந்தன் – சூளாமணி:10 1784/1,2
குழவி அம் பரிதி_போல்வான் குருகுலம் குளிர தோன்றி
அழுவம் நீர் புரிசை வேலி அத்தினபுரம்-அது ஆள்வான் – சூளாமணி:10 1785/1,2
நண்டு பொன் கிளைக்கும் நாடன் நாதவன் குலத்துள் தோன்றி
குண்டலபுரம்-அது ஆளும் குங்கும குவவு தோளான் – சூளாமணி:10 1786/1,2
வரை செறிந்து அனைய செம்பொன் மஞ்சங்கள் மலிர தோன்றி
அரைசர்கள் இருந்த போழ்தில் ஆழியம் தட கை வேந்தன் – சூளாமணி:10 1793/1,2
அங்கு ஆர அலர் கதிர மணி சுடரும் அரியணை மேல் அமர்ந்து தோன்றி
தங்கு ஆரம் மணி நிழற்றும் தட வரை ஆர் அகலத்தான் தகரம் நாறும் – சூளாமணி:10 1802/1,2
இனியன போன்று தோன்றி நுகர்ந்தவற்கு இறுதிசெய்யும் – சூளாமணி:11 1861/1
தரு சுடரன தளவு அயலின தகை மலரன தோன்றி
அருகு உடையன அணி உருவின அயலன அலர் காயா – நீலகேசி:1 15/2,3
காமலேகை-தன் உருவொடு திரு என தோன்றி
தாமம் சாந்து தண் மலர் இன்ன பல கொண்டு துணை சால் – நீலகேசி:1 59/2,3
விலங்கு வெம் நரகு ஆதிகள்-தம்முள் விளிந்து தோன்றி விழு நோயொடும் உற்று – நீலகேசி:1 147/1
உடனே அவை தோன்றி ஒரு கணத்துள் – நீலகேசி:5 491/2
ஒருங்கு குறியோடு உணர்வு தோன்றி உடன் கொள்க – நீலகேசி:5 525/1
ஒருங்கு புலம் தோன்றி அவை ஒத்த கெடல் ஆனால் – நீலகேசி:5 525/2
மரத்து இடை சென்று மலரின்-கண் தோன்றி
பரக்கும் என்றேன் பயம் பைம்_தொடி என்றான் – நீலகேசி:5 601/3,4
வந்து தோன்றி மது மயக்கு ஆற்றலின் – நீலகேசி:10 858/2
மேல்


தோன்றிட (1)

அஞ்சும் மாவினுக்கு அறிவு தோன்றிட
குஞ்சரம் இனி கோ நகர் உன்னி – உதயணகுமார:6 327/2,3
மேல்


தோன்றிய (10)

பெண் அணங்கு இது தோன்றிய பின்-கொலோ – சூளாமணி:4 154/3
நங்கை தோன்றிய பின் நகை வேலினாற்கு – சூளாமணி:4 159/1
உய்யும் வாயில் உணர்த்திய தோன்றிய
ஐயனால் பிற ஆர் அஞர் நீங்கி இ – சூளாமணி:5 339/2,3
அன்னணம் புராணநூல் அகத்து தோன்றிய
கல் நவில் இலங்கு தோள் காளையானவன் – சூளாமணி:5 405/1,2
தோன்றிய விஞ்சையர் மேல் தொடு வெம் கணை – சூளாமணி:9 1243/1
மக்களுள் தோன்றிய போழ்து அ மர உயிர்க்கு – நீலகேசி:4 373/1
கெட்ட திரட்சியும் தோன்றிய சாந்தும் பொருள் எனவும் – நீலகேசி:4 389/1
விட்ட திரள்வினும் தோன்றிய சாந்தினும் வேற்றுமையாம் – நீலகேசி:4 389/3
மண்டையாம் மான் தசை மீன் தடி தோன்றிய
அண்டு உணவு ஆகலும் ஆம் அதனாலே – நீலகேசி:5 586/3,4
துப்பும் உரைத்து என்னை தோன்றிய அ கணம் – நீலகேசி:5 614/2
மேல்


தோன்றியின் (1)

தூ இதழ் துணர் துதைந்து தோன்றுகின்ற தோன்றியின்
பா இதழ் பரப்பின் மேல் அரத்த கோபம் ஊர்ந்து அயல் – சூளாமணி:7 793/2,3
மேல்


தோன்றியும் (1)

பூவின்-கண் கேடும் புத்தோட்டின்-கண் தோன்றியும்
மேவிய வாசனை எங்கும் உண்டாம் எனின் – நீலகேசி:5 624/1,2
மேல்


தோன்றில் (1)

ஊனம் தோன்றில் உரைத்தனன் என்றியேல் – நீலகேசி:4 325/2
மேல்


தோன்றிற்றும் (1)

நில்லாது அற கெடும் தோன்றிற்றும் தோற்றமும் – நீலகேசி:5 616/1
மேல்


தோன்றின (3)

காலை நல் போதால் கனன்று தோன்றின
சோலை நல் வயல் துகைத்து அழித்ததே – உதயணகுமார:6 316/3,4
தோன்றின பதாகை சூழ்ந்து சுடர்ந்தன சூல நாயில் – சூளாமணி:8 850/4
வேற்றுமை உடையவாய் விரிந்து தோன்றின
மாற்றம் அஃது ஒழிந்தனன் மனித்தன் அன்மையை – சூளாமணி:9 1208/2,3
மேல்


தோன்றினர் (1)

தோளினர் தாளினர் தோன்றினர் அன்றே – சூளாமணி:9 1242/4
மேல்


தோன்றினனால் (1)

தூமம் ஆரம் கமழ் குஞ்சி சுவணகேது தோன்றினனால் – சூளாமணி:9 1335/4
மேல்


தோன்றினார் (12)

கொற்றவர் குலங்களை விளக்க தோன்றினார்
இற்றது இ மருங்குல் என்று இரங்க வீங்கிய – சூளாமணி:2 59/2,3
ஈங்கு உடன் இழிந்து வந்து இருவர் தோன்றினார்
வாங்கு நீர் திரை வளர் வளையும் அ கடல் – சூளாமணி:3 70/2,3
பிற்றகை ஊழி இவண் பிரமர் தோன்றினார் – சூளாமணி:5 392/4
ஆழி அம் கிழமை எம் அடிகள் தோன்றினார் – சூளாமணி:5 394/4
பொன் இயல் வள நகர் பொலிய தோன்றினார் – சூளாமணி:7 816/4
நச்சு எரி உமிழ்தரும் நகையர் தோன்றினார் – சூளாமணி:9 1260/4
எவ்வுலகு உடையவர் என்ன தோன்றினார் – சூளாமணி:9 1270/4
பூ மரு மடந்தையர் போன்று தோன்றினார் – சூளாமணி:10 1692/4
அங்கு ஒலித்து எழுந்தன அரசர் தோன்றினார் – சூளாமணி:10 1783/4
கை நிற மலரொடு கலந்து தோன்றினார் – சூளாமணி:11 1876/4
அன்னணம் அசோகு அமர் அடிகள் தோன்றினார் – சூளாமணி:11 1891/4
அரு மணி_வண்ணனுக்கு அருகு தோன்றினார் – சூளாமணி:11 1900/4
மேல்


தோன்றினாள் (1)

காமவல்லியும் காமுற தோன்றினாள் – சூளாமணி:4 150/4
மேல்


தோன்றினாளே (1)

துணி தயங்கு வேல் அரசர் மனம் துளங்க சுடர்ந்து இலங்கி தோன்றினாளே – சூளாமணி:10 1800/4
மேல்


தோன்றினான் (18)

சில தினம் பிரிவிக்க சிந்தை கூர தோன்றினான் – உதயணகுமார:2 135/4
வெண் நிலா சுடர் ஒளி விசயன் தோன்றினான் – சூளாமணி:3 71/4
சீர் அணங்கு அவிர் ஒளி திவிட்டன் தோன்றினான்
நீர் அணங்கு ஒளி வளை நிரந்து விம்மின – சூளாமணி:3 72/2,3
பொய்ம்மை_இல் புகழவன் பொலிந்து தோன்றினான் – சூளாமணி:5 386/4
கொல் நவில் வேலவன் குலத்துள் தோன்றினான்
அன்னவன் கேசவர்க்கு ஆதி ஆகுமே – சூளாமணி:5 401/3,4
மன்னிய வரைப்பகம் மலிர தோன்றினான் – சூளாமணி:5 405/4
கண்ணிய பெரும் குல கடலுள் தோன்றினான்
நண்ணிய தொடர்ச்சியும் நமிக்-கண் நண்ணுமால் – சூளாமணி:8 908/2,3
சூழி மால் யானை துளை மதம் செறிப்ப தோன்றினான் தூமகேதனனே – சூளாமணி:9 1317/4
துன்னிய துணி பல தொடர தோன்றினான் – சூளாமணி:9 1385/4
தொத்து இணர் குஞ்சியான் காளை தோன்றினான் – சூளாமணி:9 1387/4
கார் குலாம் உரும் என காளை தோன்றினான் – சூளாமணி:9 1389/4
தொக்கு எரி சுடர் ஒளி துளும்ப தோன்றினான் – சூளாமணி:9 1502/4
நாள் நலம் பொலிதர நம்பி தோன்றினான் – சூளாமணி:10 1712/4
திருவொடு திசைமுகம் தெளிர்ப்ப தோன்றினான்
திருவொடு வென்றியில் சேரும் ஆதலால் – சூளாமணி:10 1722/1,2
நாணிப்போம் உருவொடு நம்பி தோன்றினான் – சூளாமணி:10 1732/4
அளப்பு அரும் திறலினோடு அலர தோன்றினான்
அளப்பு அரும் திறலினன் அமிததேசன் என்று – சூளாமணி:10 1735/2,3
சிகர மால் யானை மேல் செல்வன் தோன்றினான் – சூளாமணி:11 1879/4
கால் புரை புரவி அம் கடலுள் தோன்றினான் – சூளாமணி:11 1880/4
மேல்


தோன்று (2)

துன்னும் நாற்படை வீடு தோன்று இரவிடை – உதயணகுமார:3 167/3
தோன்று இரண்டு கையினும் தொடுத்து இனிது அடித்தலும் – உதயணகுமார:4 231/2
மேல்


தோன்றுக (1)

சென்றிலதேல் இடை அற்றுழி தோன்றுக
என்றலும் இங்கு உளதோ அது-தான் எனின் – நீலகேசி:5 607/1,2
மேல்


தோன்றுகின்ற (2)

தூ இதழ் துணர் துதைந்து தோன்றுகின்ற தோன்றியின் – சூளாமணி:7 793/2
தூ நீல வாள் நெடும் கண் குழை முகத்தின் உள் இலங்க தோன்றுகின்ற
வாய் நீல மணி ஐம்பால் இ அணங்கு வரை_அணங்கோ அன்றோ காண்-மின் – சூளாமணி:9 1536/3,4
மேல்


தோன்றுங்களே (1)

இழையின் அம் பொன் ஒளி எரிப்ப தோன்றுங்களே – சூளாமணி:7 734/4
மேல்


தோன்றுதலின் (1)

ஒருங்கு புலம் தோன்றுதலின் ஒன்றும் உணர்வு இல்லை – நீலகேசி:5 525/4
மேல்


தோன்றுபு (1)

துன்னலர்க்கு அரும் படர் தோன்ற தோன்றுபு
முன்னினர் கனன்று போர் முறுக முட்டினார் – சூளாமணி:9 1392/3,4
மேல்


தோன்றும் (24)

சோதி மிக்க கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம் – நாககுமார:3 91/2
சுரும்பொடு துதைந்து தோன்றும் சூழ் மதில் இருக்கை எல்லாம் – சூளாமணி:2 39/4
வான் அளாய் மலர்ந்து தோன்றும் மணி வரை அனையது ஒன்றே – சூளாமணி:2 40/4
சூழ்பவர் சூழ்ந்து சூழும் சூழ்ச்சியுள் தோன்றும் அன்றே – சூளாமணி:5 249/2
பூணும் நூல் பொலிந்து தோன்றும் பொன் வரை மார்ப என்றான் – சூளாமணி:5 259/4
தாரகை அணிந்து தோன்றும் சந்திர சவியன் ஆனான் – சூளாமணி:6 510/4
தோடு உலாம் துளங்கி தோன்றும் சுடிகை வாள் முகத்து நல்லார் – சூளாமணி:7 676/2
மணந்து தாது அணிந்து தோன்றும் மரகத மணி கல் பாறை – சூளாமணி:7 758/2
பேர் இருள் கிழிய தோன்றும் பிறை எயிற்று அமர நோக்கின் – சூளாமணி:7 759/3
விண் நிலா இருண்டு தோன்றும் விசயகூடத்து மன்னன் – சூளாமணி:8 835/2
தம் புலம் தெரிந்து தோன்றும் தடத்தின தலங்கள் எல்லாம் – சூளாமணி:8 855/4
சுருங்கை அங்கு அவிழ்ந்து என தோன்றும் மீன் குழாம் – சூளாமணி:8 1043/2
தொக்கவர் அடி தொழ தோன்றும் தோன்றலால் – சூளாமணி:9 1504/2
பூம் பொழில் விளங்க தோன்றும் பொன் இதழ் மறிந்து நோக்கி – சூளாமணி:10 1638/3
பொன் அவிரும் மணி அணை மேல் பொழி கதிர் ஈண்டு எழுந்தது போல் பொலிந்து தோன்றும்
கொல் நவின்ற வேல் குமரன் குரு குலத்தார் கோன் இவனே கூற கேளாய் – சூளாமணி:10 1805/3,4
மஞ்சு இவரும் மாளிகையின் வட மருங்கின் மணி மஞ்சம் மலிர தோன்றும்
விஞ்சையர்-தம் உலகு ஆளும் விறல் வேந்தர் குழாம் காட்டி விரித்து சொன்னாள் – சூளாமணி:10 1820/3,4
துன்பங்கள் தோன்றும் தொடர்ப்பாடு உள எனில் – சூளாமணி:11 1989/3
துக்கம் செய் பல் விலங்கின் தோன்றும் இடையூறும் – நீலகேசி:1 112/3
துன்பம்-தான் தீ_வினையின் வழி தோன்றும் துன்பேயாம் – நீலகேசி:2 184/1
முன்னை தன் முழு கேடும் முழு கேட்டின் வழி தோன்றும்
பின்னை தன் பிறிது அறிவும் பெயர்த்து உரைத்தல் பெரும்_பேதாய் – நீலகேசி:2 195/1,2
இப்படி தோன்றும் இருதுக்கள் சார்ந்து என – நீலகேசி:4 367/2
நாய்-கொல் நரி-கொல் என தோன்றும் உணர்வு நண்ணி – நீலகேசி:4 411/1
வித்தின் வழி வழி தோன்றும் முளை கிளை – நீலகேசி:5 573/1
மிகை குணம் தோன்றும் நின் மேற்கோள் அழித்து – நீலகேசி:7 753/2
மேல்


தோன்றுமால் (1)

சோதியான் திரு_மொழி விளக்கி தோன்றுமால்
போதுவார் புரி குழல் பொலம் கொம்பு அன்ன இ – சூளாமணி:5 385/2,3
மேல்


தோன்றுமே (15)

தொடுத்து அலர் பிணையலார் குழலுள் தோன்றுமே – சூளாமணி:1 33/4
சென்று அவர் அமர்ந்துழி திகழ்ந்து தோன்றுமே – சூளாமணி:4 192/4
மா துணர் வயந்தனை மலர தோன்றுமே
பூம் துணர் ஓதி நீ பிறந்து பொன் செய் தார் – சூளாமணி:4 221/2,3
அன்று அது என்று ஒருவனுக்கு அறிவு தோன்றுமே
நின்றது ஒன்று உண்டு இனி நீதிநூலினோடு – சூளாமணி:4 236/2,3
குலம் மிகு கற்பகம் குளிர்ந்து தோன்றுமே – சூளாமணி:5 414/4
தாம் அரை தடித்து அலர் ததைந்து தோன்றுமே – சூளாமணி:7 748/4
கண்டவர் கண்டுழி கலந்து தோன்றுமே – சூளாமணி:9 1269/4
இடை நிலம் இடையிடை இலங்கி தோன்றுமே – சூளாமணி:9 1274/4
விளக்கிடு குற்றியின் விரிந்து தோன்றுமே – சூளாமணி:9 1407/4
சூழ் ஒளி மண்டிலம் சுடர தோன்றுமே – சூளாமணி:11 1893/4
தொழு தகை உருவின கவரி தோன்றுமே – சூளாமணி:11 1894/4
எத்திசை மருங்கினும் இரங்கி தோன்றுமே – சூளாமணி:11 1898/4
கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே – சூளாமணி:11 1899/4
ஈவன் என்பது ஓர் இச்சையும் தோன்றுமே – நீலகேசி:2 210/4
தொழுவிப்பான் அங்கு ஓர் தோன்றலும் தோன்றுமே – நீலகேசி:10 883/4
மேல்


தோன்றுவ (8)

வெள்ளென் தோன்றுவ கயம் அல்ல பளிக்கு அறை விறலோய் – சூளாமணி:7 729/4
பொழில் பொதி அவிழ்ந்த பூ புதைந்து தோன்றுவ
தழல் பொதிந்து என துகில் தரித்த காஞ்சியர் – சூளாமணி:7 755/2,3
தா_இல் பூம் துகளொடு ததைந்து தோன்றுவ
பூ உக இளையவர் திளைத்த பொங்கு அணை – சூளாமணி:7 756/2,3
பைம் துகில் கதலிகை பரந்து தோன்றுவ
நந்திய சுடர் மணி நாக மீமிசை – சூளாமணி:8 953/2,3
நாசத்தவம் எனில் தோன்றுவ தாமும் நவநவமாம் – நீலகேசி:4 377/3
கெடுவன தோன்றுவ நிற்பன-தாமும் குணம் என்றியேல் – நீலகேசி:4 392/1
கெடுவன தோன்றுவ நிற்பன-தாம் குணம் ஆயினக்கால் – நீலகேசி:4 392/2
தந்திரம் ஆவன தாம் இடை தோன்றுவ
அந்தர ஆத்துமன் ஐந்து என வேண்டினை – நீலகேசி:7 755/1,2
மேல்


தோன்றுவதன்-கண் (1)

கெடுவதன் உள் நின்று தோன்றுவதன்-கண்
வடு அற செல்வது வாசனை என்னப்படுவது – நீலகேசி:5 621/1,2
மேல்


தோன்றுவரே (1)

சுந்தர நல் மணி படிவம் என சுடர்ந்து தோன்றுவரே – சூளாமணி:11 2048/4
மேல்


தோன்றுவன (1)

துப்பன போர்த்தும் பொடித்தும் பொரித்தும் முன் தோன்றுவன
ஒப்பவும் ஒப்பு_இல் உடம்பு உடம்பே கொண்டு உழல்வனவும் – நீலகேசி:1 81/3,4

மேல்