சோ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோகம் 1
சோணிதம் 1
சோணிதமும் 1
சோதம் 2
சோதமத்தின் 1
சோதமன் 1
சோதி 39
சோதிகள் 1
சோதிடம் 1
சோதிடர் 1
சோதிடர்-தாங்களும் 1
சோதிடரும் 1
சோதிடரே 1
சோதித்து 1
சோதிமாலை 2
சோதிமாலையே 1
சோதிய 1
சோதியர் 1
சோதியள் 1
சோதியன் 1
சோதியாய் 1
சோதியார் 1
சோதியால் 2
சோதியான் 4
சோதியானையும் 1
சோதியும் 1
சோதியே 1
சோதியோடு 1
சோபனம் 1
சோபனமாக 1
சோபான 1
சோம்பன் 1
சோம 2
சோமசுந்தரி 1
சோமப்பிரபரும் 1
சோமன்-தானும் 1
சோமாகி 1
சோர் 2
சோர்ந்த 1
சோர்ந்தவே 2
சோர்ந்தார் 1
சோர்ந்து 5
சோர்வ 2
சோர்வு 3
சோர்வு_இல் 2
சோர்வு_இல 1
சோர 5
சோரவும் 1
சோரன்-தன்னிடம் 1
சோரன்-தன்னை 1
சோரா 1
சோரி 2
சோலை 47
சோலை-வாய் 1
சோலை-அதனுள் 1
சோலைக்கு 1
சோலைக்குள் 1
சோலைகள் 3
சோலைகளும் 1
சோலைகளூடு 1
சோலையின் 1
சோலையும் 4
சோலையே 2
சோலையை 1
சோற்று 1
சோறு 3

சோகம் (1)

துன்னிய சோகம் மேவி துயர் எய்தி தேடுக என்றான் – உதயணகுமார:1 30/3
மேல்


சோணிதம் (1)

தூய்மை_இலா முடை சுக்கில சோணிதம்
ஆம் அது போன்ம் எனின் ஆன் முலை பால் அன்னது – நீலகேசி:4 341/1,2
மேல்


சோணிதமும் (1)

சுக்கிலமும் சோணிதமும் தழீஇ சுதையுள் நெய் அனைத்தாய் – நீலகேசி:4 310/3
மேல்


சோதம் (2)

இமைத்தல்_இல் அமரரா நிறைந்த சோதம் ஆதியாய் – உதயணகுமார:6 366/3
திரு நிறை சோதம் ஆதி சேர்ந்து இன்பம் துய்த்தார் அன்றே – நாககுமார:5 166/4
மேல்


சோதமத்தின் (1)

மருவின் ஆன சோதமத்தின் வானவன் ஆகி தோன்றி – நாககுமார:5 149/2
மேல்


சோதமன் (1)

ஆரணன் அச்சுதன் சோதமன் அந்தமும் ஆதியுமாய் – நீலகேசி:1 90/1
மேல்


சோதி (39)

சோதி நல் அரசன் மிக்க சூழ்ச்சியின் மற்றோர்க்கு எல்லாம் – உதயணகுமார:4 208/3
சோதி பொன் அறை திறந்து தூவினன் சனங்கட்கு எல்லாம் – உதயணகுமார:5 252/4
சோதி மிக்க கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம் – நாககுமார:3 91/2
விரிந்த நல் அறிவின் சோதி விளங்கலின் சனங்கள் எல்லாம் – சூளாமணி:4 203/3
சூழ் துயர் பல கெட சோதி மூர்த்தியாய் – சூளாமணி:5 394/2
தாரொடு ஆரம் மின்னவும் தயங்கு சோதி கண்கொள – சூளாமணி:6 499/2
தங்கள் சோதி சாரல் ஆவ அல்ல அன்ன நீரவால் – சூளாமணி:6 501/3
ஆரியன் அலர்ந்த சோதி அரும் கல பீடம் நெற்றி – சூளாமணி:6 510/3
பூ விரி உருவ கண்ணி பொலம் குழை இலங்கு சோதி
தேவரே எனினும் தோன்ற சில் பகல் செல்ப ஆயில் – சூளாமணி:6 519/1,2
சுற்றி நின்று இலங்கும் சோதி தோள் வலி எனும் பேரான் அ – சூளாமணி:6 552/2
பொன் அவிர் மகர பைம் பூண் பொலம் குழை இலங்கு சோதி
கல் நவில் வயிர திண் தோள் கடல்_வண்ணன் உவப்ப காட்டி – சூளாமணி:7 767/1,2
விது மாண் மிகு சோதி விளங்கு ஒளியான் – சூளாமணி:7 800/4
சுடர் ஒளி மிகு சோதி சூழ் கழல் காளைமார் தம் – சூளாமணி:7 826/1
தாமரை தயங்கு சோதி தார் அணி துரக தேரான் – சூளாமணி:8 832/4
சுற்றிய பசும்பொன் சோதி சொரிந்து போய் துறக்கம் காண – சூளாமணி:8 847/3
நான்றன மணி செய் தாமம் நகை முகம் நிறைந்த சோதி
கான்றன கனக சாலம் கலந்தன கங்கணீகம் – சூளாமணி:8 850/2,3
கதிர் நகை கன பொன் சோதி கனக சாலங்கள் என்னும் – சூளாமணி:8 858/1
விண்டு வளர் சோதி கொள் விமானமது சேர்வாள் – சூளாமணி:8 867/3
நெருங்கு ஒளி நிறைந்த மிகு சோதி நிழல் சூழ – சூளாமணி:8 871/3
சுற்றிய பளிங்கில் சோதி சுவர் மிசை எரித்து தோன்ற – சூளாமணி:8 1001/2
கணி நலம் கருதலாகா கண் கவர் சோதி என்றாள் – சூளாமணி:8 1009/4
சோதி சூழ் வடிவு நம்பி சுடர் மணி_வண்ணன் காண – சூளாமணி:8 1013/2
வான நெறி எங்கும் வளர் சோதி வடமீனை – சூளாமணி:8 1106/1
சோதி கூடு சுடர் முடிக்கு – சூளாமணி:9 1374/3
முடி மேல் சூளாமணி முளைத்த சோதி
கடி மேல் விரி தாரோன் கைத்தலத்தது அன்று – சூளாமணி:9 1519/2,3
மாலை தண் கேழ் மா மதி போலும் வளர் சோதி
மாலை தண் கேழ் மா மணி முத்த குடை நீழல் – சூளாமணி:9 1523/1,2
குரு மணி உமிழும் சோதி குலவிய ஒளி கொள் வட்டம் – சூளாமணி:10 1557/2
சோதி சூழ் சுடர் மணி குழையும் துன்னிய – சூளாமணி:10 1598/2
சோதி விடு சூழ் சுடர் வளாவ அதன் மேலால் – சூளாமணி:10 1604/2
கேள் நலம் பொலிதர கிளரும் சோதி அம் – சூளாமணி:10 1712/3
கண் கவர் சோதி காமரு தெய்வம் பல காப்ப – சூளாமணி:10 1739/1
விண் கவர் சோதி தண் கதிரோன் போல் விரிவு எய்தி – சூளாமணி:10 1739/3
மண் கவர் சோதி தண் கதிர்_வண்ணன் வளர்கின்றான் – சூளாமணி:10 1739/4
மெய்யின் சோதி சூழ் ஒளி மின்னின் பெயராளும் – சூளாமணி:10 1746/4
சோதி அம் பெயரினாளும் சுடரவன் புதல்வன்-தானும் – சூளாமணி:10 1837/3
அருள் புரி அழல் அம் சோதி ஆழியான் ஆதி_இல்லான் – சூளாமணி:11 1866/1
அளியானை ஆர் அழல் அம் சோதி வாய் சூழ்ந்த அருள் ஆழி யானை இணை அடி பரவுவார்கட்கு – சூளாமணி:11 1906/3
செம் கண் நெடு மாலே செறிந்து இலங்கு சோதி திரு முயங்கு மூர்த்தியாய் செய்ய தாமரையின் – சூளாமணி:11 1912/1
பூ விரியும் நறு மேனி பொன் இலங்கு நிமிர் சோதி
தேவர்கள்-தம் திறம் உரைத்தல் தேவருக்கும் அரிது எனினும் – சூளாமணி:11 2039/1,2
மேல்


சோதிகள் (1)

உக்க சோதிகள் சோலையின் ஊடு எலாம் – சூளாமணி:4 121/3
மேல்


சோதிடம் (1)

வினவு சோதிடம் கேட்டு உரை புட்குரல் – நீலகேசி:10 885/2
மேல்


சோதிடர் (1)

தூ மாண் பவணர் வியந்தரர் சோதிடர் கற்பர் உப்பால் – நீலகேசி:1 87/1
மேல்


சோதிடர்-தாங்களும் (1)

அந்தர வாழ்க்கையர் சோதிடர்-தாங்களும் ஐ_வகையர் – நீலகேசி:1 89/1
மேல்


சோதிடரும் (1)

ஒர் ஐவர் சோதிடரும் ஒரு பதின் மேல் அறுவர் எனும் – சூளாமணி:11 2040/2
மேல்


சோதிடரே (1)

சுந்தரம் சேர் மணி முடியாய் சுடர்பவரும் சோதிடரே – சூளாமணி:11 2045/4
மேல்


சோதித்து (1)

துஞ்சு மழை தவழும் சோலைகளும் சோதித்து
செம்_சொலவர் போய் திசை காவல் கொண்டாரே – சூளாமணி:10 1647/3,4
மேல்


சோதிமாலை (2)

சோதிமாலை என்பாள் சுடர் பூணினாள் – சூளாமணி:5 344/4
சொரி நிதி புனல் உடை சோதிமாலை என்று – சூளாமணி:5 411/3
மேல்


சோதிமாலையே (1)

தொங்கல் சூழ் சுரி குழல் சோதிமாலையே – சூளாமணி:10 1728/4
மேல்


சோதிய (1)

சோதிய சுடர சேர்த்தி பெரும் சிறப்பு அருளி செய்தான் – சூளாமணி:6 570/4
மேல்


சோதியர் (1)

விண் மலைத்து இழிதரும் விளங்கு சோதியர்
எண் மலை சிலம்பிடை இறைகொண்டு ஈண்டினார் – சூளாமணி:10 1769/3,4
மேல்


சோதியள் (1)

இன் உரை அமுதம் உண்டு எழுந்த சோதியள்
பன்னி ஒர் நோன்பு மேற்கொண்டு பாங்கினால் – சூளாமணி:4 205/2,3
மேல்


சோதியன் (1)

தாள் தவழ் தட_கையன் தயங்கு சோதியன்
கோடு உயர் குன்று என குலவு தோளினன் – சூளாமணி:3 76/2,3
மேல்


சோதியாய் (1)

திங்கள் வாள் ஒளியில் திகழ் சோதியாய்
தங்குவான் உலகில் தகை சான்றதே – சூளாமணி:5 340/3,4
மேல்


சோதியார் (1)

சிமை கொள் தேவர் போல நின்று திகழுகின்ற சோதியார் – சூளாமணி:6 502/4
மேல்


சோதியால் (2)

பைம்பொன் வாழை செம்பொனே பழுத்து வீழ்ந்த சோதியால்
வம்பு பாய்ந்து வந்து ஒசிந்து சாறு சோர்வ மானுமே – சூளாமணி:4 131/3,4
கண்டார்கள் நின் நிலைமை கண்டு ஒழுக யான் நின் கதிர் மயங்கு சோதியால் கண் விளக்கப்பட்டு – சூளாமணி:11 1910/2
மேல்


சோதியான் (4)

சோதியான் திரு_மொழி விளக்கி தோன்றுமால் – சூளாமணி:5 385/2
நிமித்திகன் உரைத்ததும் நிறைந்த சோதியான்
உமை தகை இலாதது ஓர் உவகை ஆழ்ந்து கண் – சூளாமணி:5 410/1,2
கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான்
மீட்டு ஒர் சொல் கொடா விம்மிதத்தனாய் – சூளாமணி:7 588/2,3
சோதியான் சுரர் வணங்கு திரு_அடியான் சுடு நீறா நினையப்பட்ட – சூளாமணி:10 1803/2
மேல்


சோதியானையும் (1)

பால் நிற கதிர் நகை பரந்த சோதியானையும்
நீல் நிற கரும் கடல் நிகர்க்கும் மேனியானையும் – சூளாமணி:6 497/1,2
மேல்


சோதியும் (1)

சோதியும் பேர் எண்_குணனும் துப்புரவும் துன்னுவரே – சூளாமணி:11 2047/4
மேல்


சோதியே (1)

பாணியால் கரந்த முன் பரந்த சோதியே – சூளாமணி:8 1066/4
மேல்


சோதியோடு (1)

துன்னிய அணை மிசை துளங்கும் சோதியோடு
அன்னணம் அசோகு அமர் அடிகள் தோன்றினார் – சூளாமணி:11 1891/3,4
மேல்


சோபனம் (1)

தூங்கு நீர் உடுத்த பாங்கில் சோபனம் உடைய தோன்றல் – சூளாமணி:8 837/2
மேல்


சோபனமாக (1)

சோபனமாக சுவாகதம் போந்தது என் – நீலகேசி:5 624/3
மேல்


சோபான (1)

அணி தயங்கு சோபான வீதி-வாய் அணங்கு_அனையார் அடியீடு ஏத்த – சூளாமணி:10 1800/1
மேல்


சோம்பன் (1)

சோம்பன் குணம்_இலன் தோன்றா ஒளிப்பினன் – நீலகேசி:7 744/1
மேல்


சோம (2)

சோம நல் தாபதர்கள் சூழ்ந்து அமர் பள்ளி-தன்னில் – உதயணகுமார:3 155/2
சொல்ல அரும் நாடு இழந்து சோம நல் பிரபன் போகி – நாககுமார:3 101/1
மேல்


சோமசுந்தரி (1)

சோமசுந்தரி என்னும் சுரி குழல் – உதயணகுமார:6 345/2
மேல்


சோமப்பிரபரும் (1)

நல் அரும் தவ சோமப்பிரபரும்
எல்லை_இல் குண இருடிகள்-தம்முடன் – நாககுமார:4 107/1,2
மேல்


சோமன்-தானும் (1)

தோட்டியிட்டு ஊர்வதே போல் சூரிய சோமன்-தானும்
வாள் தடம் கண்ணி நல்லாள் வாக்கு எனும் தூ கயிற்றால் – நீலகேசி:3 265/2,3
மேல்


சோமாகி (1)

ஏ புண் பட்டான் பட நோய் ஏதிலர்க்காய் சோமாகி
சா புண்பட்டேன் என்று சாற்றுவது உன் தத்துவமோ – நீலகேசி:4 303/3,4
மேல்


சோர் (2)

புரைபுரை-தோறும் நீர் சோர் பொள்ளல் இ உருவிற்றாய – யசோதர:2 131/1
அதிர் தரு விசும்பிடை அமிர்த மாரி சோர்
முதிர் தரு முகிலிடை முழங்கிற்று என்னவே – சூளாமணி:5 399/3,4
மேல்


சோர்ந்த (1)

மெய் விரிந்தன வேங்கையும் சோர்ந்த தேன் – சூளாமணி:1 17/3
மேல்


சோர்ந்தவே (2)

கது புகுந்து உறங்குபு கழுதும் சோர்ந்தவே – சூளாமணி:8 1060/4
சுடர் தரு குழைகள்-தாம் அழிந்து சோர்ந்தவே – சூளாமணி:9 1221/4
மேல்


சோர்ந்தார் (1)

இடித்தலின் மனித்தர் எல்லாம் எயிறுற இறுகி சோர்ந்தார் – சூளாமணி:7 699/4
மேல்


சோர்ந்து (5)

புகை கமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த்தாள் – யசோதர:2 130/3
கோடு இணர் குலைக்கு ஒசிந்த கொன்றை விண்ட தாது சோர்ந்து
ஓடு இணர் சுடர் பொன் உக்க தானம் ஒக்கும் ஊங்கு எலாம் – சூளாமணி:7 794/3,4
சோர்ந்து வீங்கு எருத்தில் தொடர் கண்ணிடை – சூளாமணி:8 891/3
கண்டாள் பெருந்தேவி கண்டே தன் கை சோர்ந்து
வெண் தாரை வேல் நெடும் கண் நீர் மூழ்கி மேல் பிறழ – சூளாமணி:9 1470/2,3
கந்து ஆடு மால் யானை கார்_வண்ணன் பாவை கரு மேக குழல் மடவார் கை சோர்ந்து நிற்ப – சூளாமணி:10 1754/1
மேல்


சோர்வ (2)

வம்பு பாய்ந்து வந்து ஒசிந்து சாறு சோர்வ மானுமே – சூளாமணி:4 131/4
வளையார் கண் மகிழ்பவால் மகிழ்பவால் மலர் சோர்வ
இளையாரை இனையவே இனையவே இடம் எல்லாம் – சூளாமணி:7 747/3,4
மேல்


சோர்வு (3)

தூணி முகத்தது சோர்வு_இல் ஒர் கை ஒரு – சூளாமணி:9 1244/1
சொல் நெறி திரிவாயேல் சோர்வு_இல் பேர்_இன்பம் எய்தி – நீலகேசி:3 264/3
தூய்மையது அன்று அது சொல்லுவன் சோர்வு_இல – நீலகேசி:4 341/3
மேல்


சோர்வு_இல் (2)

தூணி முகத்தது சோர்வு_இல் ஒர் கை ஒரு – சூளாமணி:9 1244/1
சொல் நெறி திரிவாயேல் சோர்வு_இல் பேர்_இன்பம் எய்தி – நீலகேசி:3 264/3
மேல்


சோர்வு_இல (1)

தூய்மையது அன்று அது சொல்லுவன் சோர்வு_இல
வாமன் உரை வையம்-தன்னொடு மாறே – நீலகேசி:4 341/3,4
மேல்


சோர (5)

சின்ன மலர் துன்னு குழல் தேறலொடு சோர
அன்னம் என அல்ல என அன்னணம் நடந்தார் – சூளாமணி:6 449/3,4
தொடுத்த மாலைகள் துணர்கொள புனைவன துகில் இடை புடை சோர
உடுத்த காஞ்சியின் ஒளி மணி கதிர் நகை பட்டங்கள் உடையாக – சூளாமணி:8 886/2,3
காது கொண்டன கன பொன் குழை சோர
மீது கொண்ட வடகம் புடை மேவ – சூளாமணி:10 1568/1,2
கயில் கலந்து இருண்டு தாழ்ந்த கரும் குழல் மருங்கு சோர
வெயில் கலந்து இலங்கும் செம்பொன் மிடை மணி குழை வில் வீச – சூளாமணி:10 1665/1,2
மிலை புனை கோதை சோர விடு புணை தழுவுவாரும் – சூளாமணி:10 1673/3
மேல்


சோரவும் (1)

சூடும் மாலை சோரவும் தொடு ஆர மாலை வீழவும் – சூளாமணி:6 476/3
மேல்


சோரன்-தன்னிடம் (1)

போந்தனள் மனைவியால் புணரும் சோரன்-தன்னிடம்
பூம் தடத்தை சுற்றிய பொற்பு உடை கரை மிசை – நாககுமார:2 63/2,3
மேல்


சோரன்-தன்னை (1)

பெரியதோர் சோரன்-தன்னை பின்னமாய் சேதித்திட்டும் – யசோதர:4 234/4
மேல்


சோரா (1)

விதுவிது விதிர்த்து அகம் நெகிழ்ந்து மிகை சோரா
மது மலர் கொள் மணி முடிய மன்னவன் மருண்டான் – யசோதர:5 300/3,4
மேல்


சோரி (2)

சோரி முழா விழவில் தெரு துற்ற பின் – சூளாமணி:7 653/3
துளைப்படு புண் உமிழ் சோரி பாய்ந்து எழ – சூளாமணி:9 1407/1
மேல்


சோலை (47)

வண்டு அலர் சோலை மாடம் வனம் எங்கும் தேடுகின்றான் – உதயணகுமார:5 261/3
சோலை நல் வயல் துகைத்து அழித்ததே – உதயணகுமார:6 316/4
மேவும் மின் முகில் சூழ் சோலை மிக்கது ஓர் மகதநாடு – நாககுமார:1 5/4
செம் தளிர் புதைந்த சோலை திரு மணி வண்டும் தேனும் – யசோதர:4 226/1
சொரி படு மது மலர் சோலை நண்ணினான் – சூளாமணி:3 118/4
பூம் குலாய் விரிந்த சோலை பொழி மது திவலை தூவ – சூளாமணி:4 161/2
வேய்ந்து இணர் ஒசிந்த சோலை வேனிலான் வென்றி ஓகை – சூளாமணி:4 162/1
பூம் சினை முருக்கம் சோலை பூக்கள் வாய் ஆர மாந்தி – சூளாமணி:4 166/2
வேழத்தால் பொலிந்த சோலை மேகமாபுரம் அது ஆளும் – சூளாமணி:5 321/1
செம் தளிர் புதைந்த சோலை சித்திரகூடம் ஆளும் – சூளாமணி:5 325/1
தங்கும் மார்பின் நம்பிமார்கள் தானை சோலை சார்ந்ததே – சூளாமணி:6 488/4
வான் அளாய சோலை வாயில் மன்ன வீரர் துன்னலும் – சூளாமணி:6 489/2
ஏதிலார்க்கு இயங்கல் ஆவது அன்று சோலை வண்ணமே – சூளாமணி:6 492/4
உள்ளிய மரம் கொள் சோலை மண் மிசை உறையும் மாந்தர் – சூளாமணி:6 523/1
மஞ்சு இவர் மணம் கொள் சோலை மணி வரை சென்னி வாழும் – சூளாமணி:6 531/1
மூசி நாள் சுரும்பு பாய முருகு உடைந்து உருக்கும் சோலை
காசிநாட்டு அரசன் செங்கோல் கதிர் முடி கச்சன் என்பான் – சூளாமணி:6 536/1,2
இலை தடம் சோலை வேலி இமவந்தம் அடைந்து நீண்ட – சூளாமணி:7 698/1
பூ மரு பொலம் கொள் சோலை பொன் அணி புரிசை வேலி – சூளாமணி:8 832/1
பொழிலகம் தழீஇய சோலை பொன் நகர் கோயில் புக்கு – சூளாமணி:8 967/2
பூம் கமழ் சோலை வேலி பொன் நகர் புகுக என்ன – சூளாமணி:8 989/2
கான் ஆர் சோலை காவகம் புக்கான் கமழ் தாரான் – சூளாமணி:8 1124/4
விரை செறி பொழில் கொள் சோலை விஞ்சையர் உலகில் பட்டது – சூளாமணி:9 1134/3
சோலை தலை மலை போல்வன தோளும் இவை உடையான் – சூளாமணி:9 1315/2
கொங்கு உலாம் குளிர் கொள் சோலை குட வரை குவடு சேர்ந்தான் – சூளாமணி:9 1544/4
சுரும்பு இவர் சோலை வேலி துணர் விரி பாரிசாதம் – சூளாமணி:10 1562/1
சென்று சோலை மதில் சேருபு வாயில் – சூளாமணி:10 1574/2
சூழ் இருள் அன்று இது சோலை காண் என – சூளாமணி:10 1586/3
சோலை அமர் தோகை எனவே தொழுது நின்றாள் – சூளாமணி:10 1603/4
கரு வளர் கன பொன் சோலை கறங்கு இசை பரந்த போழ்தில் – சூளாமணி:10 1623/2
போது அலர் பருவ சோலை பொழில் நலம் நுகரும் போழ்தில் – சூளாமணி:10 1629/3
கள் உமிழ்ந்து உயிர்க்கும் சோலை கன மடல் குமரி வாழை – சூளாமணி:10 1640/1
அணங்கு இவரும் சோலை அலர் நாற்றம் எய்தி – சூளாமணி:10 1644/2
தோகை மட மஞ்ஞை சோலை பரப்பின போல் – சூளாமணி:10 1648/1
தம் பருவ சோலை தழைத்த தகை நோக்கி – சூளாமணி:10 1653/2
போய் ஓங்கு பூம் சோலை வாழும் புன கிளிகள் – சூளாமணி:10 1657/3
கொங்கு அவிழ் குளிர் கொள் சோலை குன்றின்-நின்று இழிந்த போது – சூளாமணி:10 1668/2
மணம் கொள் பூம் துணர் கொள் சோலை மண்டு நீர் வாவி சார்ந்தான் – சூளாமணி:10 1669/4
மஞ்சு இவர் சோலை வாயில் வாயிலோன் வாயிலாக – சூளாமணி:10 1694/3
சுடர் மலைத்து இருண்ட சோலை சுரேந்திரகாந்தம் என்னும் – சூளாமணி:10 1698/1
கான் இவர் கற்பக சோலை காணவும் – சூளாமணி:10 1731/2
வாழை தாழ் சோலை வேலி வாரணவாசி மன்னன் – சூளாமணி:10 1787/2
சொரி மது கலந்த சோலை சூரியபுரம்-அது ஆளும் – சூளாமணி:10 1788/1
வழை வளர் சோலை சேர்ந்த மணி வண்டு மறிவவே போல் – சூளாமணி:10 1792/2
தகரம் நாறு இரும் சோலை சயம்பூல் தான் துறவு அரசாய் நின்ற காலை – சூளாமணி:10 1809/1
சொரி மலர் தண் மலர் அணிந்த சோலை சூழ் சூரியத்தார் கோமான் தோலா – சூளாமணி:10 1812/1
குருகு அயாவுயிர்க்கும் சோலை குளிர் அணி பழன நாட – சூளாமணி:11 1862/1
கான் உயர் சோலை கரும நிலத்தார் கரு_வினை போய் – நீலகேசி:1 86/2
மேல்


சோலை-வாய் (1)

சோலை-வாய் மலர் அணிந்த சூழ் குழலார் யாழ் இசையால் துளை கை வேழம் – சூளாமணி:10 1813/3
மேல்


சோலை-அதனுள் (1)

அரும் கடி கமழும் சோலை-அதனுள் வந்து இனிது இருந்தான் – யசோதர:5 318/4
மேல்


சோலைக்கு (1)

கொந்து ஆர் பூம் சோலைக்கு உலகு அறிவோ கூடின்றே – சூளாமணி:10 1645/4
மேல்


சோலைக்குள் (1)

மட்டு அவிழ் மலர் சோலைக்குள் மன்னவ_குமரன் மின்னின் – உதயணகுமார:5 257/3
மேல்


சோலைகள் (3)

துளரும் சந்தன சோலைகள் ஊடு எலாம் – சூளாமணி:4 123/3
காக்கள் ஆவன கற்பக சோலைகள்
வீக்கு வார் கழல் விஞ்சையர் சேடி மேல் – சூளாமணி:4 129/2,3
தழையோடு உயர் சோலைகள் தாம் விரவி – சூளாமணி:7 806/3
மேல்


சோலைகளும் (1)

துஞ்சு மழை தவழும் சோலைகளும் சோதித்து – சூளாமணி:10 1647/3
மேல்


சோலைகளூடு (1)

உயர்ந்த சோலைகளூடு எதிர்கொண்டிட – யசோதர:1 13/1
மேல்


சோலையின் (1)

உக்க சோதிகள் சோலையின் ஊடு எலாம் – சூளாமணி:4 121/3
மேல்


சோலையும் (4)

தொக்கு இள மலர் துதைவு இலாத சோலையும்
புக்கு இளம் தாமரை நகாத பொய்கையும் – சூளாமணி:5 413/1,2
வாவியும் மது மண்டப சோலையும்
தூவி மஞ்ஞை துதைந்த செய்குன்றமும் – சூளாமணி:7 618/1,2
பனி வரை பாங்கரும் பருவ சோலையும்
தனியவர்க்கு இனல் நனி பயக்கும் தன் மனக்கு – சூளாமணி:8 1048/1,2
சோலையும் அமர் தொழில் தொடங்குமோ என – சூளாமணி:10 1587/3
மேல்


சோலையே (2)

கமழ நின்றன கற்பக சோலையே – சூளாமணி:4 122/4
கொடிய ஆயின கொங்கு அவிழ் சோலையே – சூளாமணி:4 145/4
மேல்


சோலையை (1)

கடி நறும் பூம் சோலையை காரிகையார் வென்றார் – சூளாமணி:10 1643/4
மேல்


சோற்று (1)

துப்பு ஆய தூ சோற்று தூய்து அல்லாது ஆழ்ந்து உளது என்று – நீலகேசி:6 696/3
மேல்


சோறு (3)

துவர் அடுதி பூ அடுதி சோறு அடலே முனிந்தாயோ – நீலகேசி:4 279/4
துறந்தார்க்கு கடன் ஆகில் சோறு அலால் பிற வேண்டா – நீலகேசி:4 281/2
வாங்குதல் அல்லது முடையொடு சோறு உண்ணும் வயிற்றினரே – நீலகேசி:9 844/4

மேல்