சா – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சா 2
சாக்காடு 1
சாக 1
சாகம் 1
சாகை 3
சாகைய 2
சாங்கிய 1
சாங்கியம் 1
சாங்கியன்-தன்னை 1
சாசாரம் 1
சாட்சி 1
சாடினானே 1
சாடும் 1
சாத்தன் 1
சாத்தனும் 1
சாத்தி 1
சாத்திரத்தால் 1
சாத்திரம் 2
சாத்திரமாவது 1
சாத்து 1
சாதக 3
சாதகம் 3
சாதகன் 1
சாதம் 1
சாதமாம் 1
சாதல் 2
சாதலால் 1
சாதலும் 2
சாதலை 2
சாதனை 1
சாதானிகன் 1
சாதி 22
சாதிக்-கண் 1
சாதிக்க 1
சாதிக்கலுற்றான் 1
சாதிகள் 1
சாதிப்பான் 1
சாதியும் 4
சாதியே 1
சாதுவர் 1
சாந்தம் 4
சாந்தமும் 3
சாந்தி 1
சாந்தின் 1
சாந்தினர் 1
சாந்தினும் 1
சாந்து 15
சாந்தும் 11
சாந்தொடு 1
சாப 1
சாபம் 1
சாபம்-தான் 1
சாபவன் 1
சாம் 1
சாம்பி 1
சாம 2
சாம_வண்ணன் 1
சாமர 1
சாமரமும் 1
சாமரை 9
சாமரையும் 2
சாய்த்தார் 1
சாய்த்து 3
சாய்த்தோய் 1
சாய்ந்த 2
சாய்ந்ததே 1
சாய்ந்தான் 3
சாய 1
சாயல் 15
சாயலார்-தம் 1
சாயலாள் 2
சாயலாளும் 1
சாயினும் 1
சாயை 1
சார் 13
சார்த்தி 2
சார்த்திய 1
சார்த்தினர் 1
சார்த்தினை 1
சார்த்தூலகன் 1
சார்தரும் 1
சார்தலின் 1
சார்தலும் 2
சார்ந்த 3
சார்ந்தது 3
சார்ந்ததும் 1
சார்ந்ததே 2
சார்ந்தவர் 1
சார்ந்தவர்கள் 1
சார்ந்தவே 1
சார்ந்தன 1
சார்ந்தனன் 1
சார்ந்தார் 5
சார்ந்தார்க்கு 1
சார்ந்தாள் 1
சார்ந்தான் 5
சார்ந்து 13
சார்பவர் 1
சார்பினால் 1
சார்வன 1
சார்வு 1
சார்வும் 1
சார்வோம் 1
சார 4
சாரணர் 3
சாரணை 1
சாரல் 14
சாரல்-தன்னில் 1
சாரல்-வாய் 1
சாரலாய் 1
சாரலில் 1
சாரலின் 1
சாரன்-தன் 1
சாரனை 1
சாரனோடு 1
சாரா 4
சாராதாய் 1
சாராது 2
சாராய் 1
சாரார் 1
சாரிகை 3
சாரியும் 1
சாரிவட்டம் 1
சாரினும் 1
சாரும் 1
சாருமோ 1
சால் 15
சால்க 1
சால்கள் 1
சால்பு 1
சால்பும் 2
சால 21
சாலங்கள் 2
சாலங்காய 1
சாலங்காயன் 2
சாலங்காயனும் 2
சாலங்காயனோடு 1
சாலத்து 1
சாலம் 4
சாலமும் 1
சாலவும் 4
சாலி 2
சாலிகை 2
சாலியின் 1
சாலினீ 1
சாலும் 1
சாலை 2
சாவ 4
சாவதே 1
சாவதை 1
சாவன் 1
சாவின்-கண் 1
சாவு 1
சாவுகள் 1
சாற்ற 3
சாற்றலும் 1
சாற்றி 6
சாற்றிய 1
சாற்றின் 1
சாற்றினான் 1
சாற்று 1
சாற்றுக 1
சாற்றுதியாய்விடின் 1
சாற்றுதியேலும் 1
சாற்றுதும் 1
சாற்றும் 2
சாற்றுவது 1
சாற்றுவன் 1
சாறு 6
சான்ற 1
சான்றதே 1
சான்றவன் 1
சான்றார் 1
சானகி 1

சா (2)

தன் கன்று சா கறப்பான் தயா பிறிதிற்கு உடையவனோ – நீலகேசி:2 190/4
சா புண்பட்டேன் என்று சாற்றுவது உன் தத்துவமோ – நீலகேசி:4 303/4
மேல்


சாக்காடு (1)

முறையினால் அறியலன்னேல் மூத்தலே இளமை சாக்காடு
உறையல ஒருவன் கண்ணே உடன் அவை ஆக ஒட்டி – நீலகேசி:4 434/1,2
மேல்


சாக (1)

நக்கனர் சாக எனும் நீ உரைக்கும் நயங்கள் என்றாள் – நீலகேசி:5 503/4
மேல்


சாகம் (1)

கடி அவிழ்வன கமழ் பாதிரி கலி களிகைய சாகம்
இடை அவிழ்வன மலர் அளவு_இல இது பொழிலினது இயல்பே – சூளாமணி:6 435/3,4
மேல்


சாகை (3)

மஞ்சி நின்று அகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும் – சூளாமணி:5 275/2
மண் இயல் மரத்தின் சாகை நுதி பிடித்து அவையும் விட்டு – சூளாமணி:8 1026/3
தண் தழைய பொழில் நாவல் சாகை நட்டு உரைபெறா – நீலகேசி:2 164/3
மேல்


சாகைய (2)

தலைமகன் தாள்-தனக்கு ஆக சாகைய
நிலைமை கொள் மனைவியா நிமிர்ந்த பூம் துணர் – சூளாமணி:5 414/1,2
ஈந்த சாகைய இ மலை ஆரமே – சூளாமணி:7 752/4
மேல்


சாங்கிய (1)

சாங்கிய மகள் எனும் தபசினியை கண்டு உடன் – உதயணகுமார:2 130/1
மேல்


சாங்கியம் (1)

இலங்கு சாங்கியம் மகள் எழில்பெற கொண்டுவந்து – உதயணகுமார:2 137/2
மேல்


சாங்கியன்-தன்னை (1)

சாங்கியன்-தன்னை தலைப்பெய சென்றாள் – நீலகேசி:7 730/4
மேல்


சாசாரம் (1)

தந்திரம் துறந்து நோற்று மறைந்த சாசாரம் என்னும் – சூளாமணி:5 354/2
மேல்


சாட்சி (1)

ஐயம்_இல் சாட்சி ஞானத்து ஒழுக்கத்தோர் அறிவது ஆகும் – யசோதர:4 238/4
மேல்


சாடினானே (1)

கொல் களி யானை கம்பம் கொண்டு உடன் சாடினானே – நாககுமார:3 82/4
மேல்


சாடும் (1)

என்னும் சாடும் எரி வாய் பெய்து இரங்கி அழுது ஆங்கு ஏகினரால் – சூளாமணி:9 1484/3
மேல்


சாத்தன் (1)

சாத்தன் பயின்றால் அறியாவிடும் தன்மை உண்டோ – நீலகேசி:4 413/2
மேல்


சாத்தனும் (1)

சாத்தனும் யானும் அவன்-தன்னின் சால இசையுடையம் – நீலகேசி:6 683/2
மேல்


சாத்தி (1)

தார் அணி தயங்க சாத்தி தவிசின் மேல் விரித்து மஞ்சில் – சூளாமணி:8 932/1
மேல்


சாத்திரத்தால் (1)

சாத்திரத்தால் அ தவிரன்-கண் தாழ்ச்சியும் – நீலகேசி:5 613/3
மேல்


சாத்திரம் (2)

சாத்திரம் இவை மூன்று என வல் தவ தோன்றல் – நீலகேசி:5 477/3
சாத்திரம் யாவையும் தன்_நிகர் இல்லாள் – நீலகேசி:6 670/4
மேல்


சாத்திரமாவது (1)

சாத்திரமாவது வேதம் அன்றோ அது-தான் சயம்பு – நீலகேசி:9 826/2
மேல்


சாத்து (1)

சாத்து ஆகும் ஆகாமை சாதிக்க வல்லையோ – நீலகேசி:5 645/4
மேல்


சாதக (3)

தான கோளில் சாதக ஓலை தலைவைத்தார் – சூளாமணி:5 310/4
என்றால் அன்று அ சாதக ஓலை எழுதிற்றால் – சூளாமணி:5 313/1
தான் செய்திட்டனன் சாதக கற்பங்கள் – நீலகேசி:2 224/2
மேல்


சாதகம் (3)

பொன் நிற பொறி புகழ்ந்த சாதகம்
துன்னி வாசகம் தொழுது கொண்டதும் – சூளாமணி:7 587/3,4
சாதகம் இவை என்று தலைத்தலை – நீலகேசி:2 206/2
சாதகம் இவற்றான் அருள் சாதிப்பான் – நீலகேசி:2 212/3
மேல்


சாதகன் (1)

தான் உடம்போடு பொறியினன் ஆதலின் சாதகன் ஆம் – நீலகேசி:6 684/2
மேல்


சாதம் (1)

சாதம் நல்ல தகர் முகத்து படின் – யசோதர:3 194/2
மேல்


சாதமாம் (1)

சாதமாம் உயிர் தன்மையில் தேற்ற தவறு எவனோ – நீலகேசி:5 496/4
மேல்


சாதல் (2)

சாதல் நோய் சரை பிறவி-தாம் செய் தீ_வினை கடலுள் – நீலகேசி:2 155/1
தாய் கண்டாய் என்றும் சாதல் இல்லை என – நீலகேசி:10 891/4
மேல்


சாதலால் (1)

சாதலால் வரும் இடர்-தாம் எனை பலவுமே – நீலகேசி:1 105/4
மேல்


சாதலும் (2)

சாதலும் பிறத்தலும் இலாத தானமும் – சூளாமணி:8 1049/3
தீக்கள் பாய்ந்து சாதலும் தீய செம் கழுவ்வின் மேல் – நீலகேசி:4 353/3
மேல்


சாதலை (2)

அல்லவர்கள் சாதலை அறிந்தனன் அவன் எனில் – நீலகேசி:4 361/1
ஊணின வாழ்ந்தும் உண்ணாவிடின் சாதலை
காணவும் பட்டது கஞ்சியோடு அல்லதை – நீலகேசி:4 374/2,3
மேல்


சாதனை (1)

சாதனை நிற்கும் சத்துவன் ஆம் என்றீர் – நீலகேசி:3 246/4
மேல்


சாதானிகன் (1)

இள மயில் அனைய தேவிக்கு இரங்கிய சாதானிகன் தான் – உதயணகுமார:1 24/3
மேல்


சாதி (22)

இன்ன சாதி விலங்கில் இரட்டைகள் – யசோதர:1 20/3
தீது செய் சிறு புன் சாதி சிதைத்தலும் திறம் அன்று என்றான் – யசோதர:2 124/4
வள மலர் வனத்துள் தீய மனிதரோடு அனைய சாதி
களைபவன் கடவுள் கண்ணில் கண்டு கை தொழுது நின்றான் – யசோதர:4 229/3,4
ஆழ் துயர் உழக்கும் அந்தோ அளி அற்ற அறிவு_இல் சாதி
தாழ் வினை விலக்கும் சார்வு தலைப்படா அளவும் என்றான் – சூளாமணி:4 199/3,4
எடுத்தனன் இலங்கு சாதி எழிலொடு திகழுமேனும் – சூளாமணி:5 253/1
தண்ணிய தன்மை நீங்கா சந்தன சாதி போல – சூளாமணி:5 262/2
நின்றன விலங்கு சாதி நிலம் கொண்ட பறவை எல்லாம் – சூளாமணி:6 542/2
காய்ந்து ஒளிர் பவழ சாதி கடிகைகள் காண மின்னு – சூளாமணி:7 677/1
சாரல் ஆகாதன சாதி சால பல – சூளாமணி:7 736/4
மண் நலம் கனியும் சாதி மணி முழா அதிரும் மாட – சூளாமணி:8 831/1
அம் சிறை பறவை சாதி ஆவிப்ப அணிந்து மேலால் – சூளாமணி:8 851/1
ஈண்டி நின்று இன வண்டு ஆர்க்கும் இன் சுவை நறவின் சாதி
வேண்டுநர் வேண்டுமாறு விருந்து அயர்ந்து உயரும் வண்ணம் – சூளாமணி:8 920/2,3
பாங்கு அமை பளித சாதி பாசிலை தழையின் கற்றை – சூளாமணி:8 921/2
பாடிய சாதி பாடல் பாணியோடு இலயம் கொள்ள – சூளாமணி:10 1566/3
பாவையும் விலங்கு சாதி படிமமும் பறப்பை-தாமும் – சூளாமணி:10 1634/1
அழகு உள சுழலும் மன்னோ ஆயிர சாதி மாதோ – சூளாமணி:11 1850/4
விலங்குடன் சாதி விரிப்பில் பெருகும் – சூளாமணி:11 1956/1
பண்பு ஒத்த சாதி பவம் என்ப மற்று அவை – சூளாமணி:11 1985/2
சாதி வேதனை அவை – நீலகேசி:1 102/1
சாதி அறுக்கும் தகையும் இவை என – நீலகேசி:5 572/2
சாதி முதலா பிணி-தாம் இவை அ பிணியிற்கு – நீலகேசி:6 724/1
சாதி கண்டாய் என தான் தளராது சாற்றுக என்றாட்கு – நீலகேசி:9 827/2
மேல்


சாதிக்-கண் (1)

சாதிக்-கண் பயவா தவ பயம் தரும் என தந்து உரைப்ப – நீலகேசி:9 834/1
மேல்


சாதிக்க (1)

சாத்து ஆகும் ஆகாமை சாதிக்க வல்லையோ – நீலகேசி:5 645/4
மேல்


சாதிக்கலுற்றான் (1)

சடர் உடை வாசனை சாதிக்கலுற்றான் – நீலகேசி:5 617/4
மேல்


சாதிகள் (1)

ஏனை ஒழிந்த இயங்கு நல் சாதிகள்
ஆனை முதலா அளிய விலங்குகள் – சூளாமணி:11 1960/1,2
மேல்


சாதிப்பான் (1)

சாதகம் இவற்றான் அருள் சாதிப்பான்
ஓதினார்க்கும் உணர்வு ஒருப்பு ஆயதே – நீலகேசி:2 212/3,4
மேல்


சாதியும் (4)

சாதியும் தக்கது அன்றால் அவன்-வயின் தளரும் உள்ளம் – யசோதர:2 106/2
வண் திரள் மணி முத்தும் வயிர சாதியும்
கொண்டு இயல் அணியொடு கோலம் தாங்கினார் – சூளாமணி:11 1873/3,4
ஒண் தமர் மணிகளும் ஒளிர் பொன் சாதியும்
கொண்டனர் இயற்றிய கோல செய்கையால் – சூளாமணி:11 1901/1,2
கொண்டு இரையாக உயிர் கொல்லும் சாதியும்
கண்டிடு காதனை நின்னால் செயப்படும் – சூளாமணி:11 1954/2,3
மேல்


சாதியே (1)

சாதியே மிக்க தடுமாற்ற வெம் துயரம் – நீலகேசி:5 469/1
மேல்


சாதுவர் (1)

சாதுவர் அன்றி யாரே சரண் நமக்கு உலகின் ஆவார் – யசோதர:1 56/4
மேல்


சாந்தம் (4)

அம் பொன் சாந்தம் அணிந்த நல் மார்பன் – உதயணகுமார:1 75/2
நிழல் நகுவன நிமிர் தழையன நிறை குளிர்வன சாந்தம்
எழில் நகுவன இள மலர் என எழு சண்பக நிகரம் – சூளாமணி:6 432/1,2
தாமம் சாந்தம் புனைபவர்-தாம் எலாம் – நீலகேசி:5 557/3
அலரோடு சாந்தம் அணிந்து எம் இறைவர் – நீலகேசி:6 663/1
மேல்


சாந்தமும் (3)

மலி விழா பிணையலும் மணம்கொள் சாந்தமும்
பலி விழா பதாகையும் பரந்து பாடுவார் – சூளாமணி:5 365/2,3
தீட்டினார் நறும் சாந்தமும் சிறிது மெய் கமழ – சூளாமணி:6 471/2
தளிர் முத்தம் மலரும் போதும் சாந்தமும் உழக்கி வண்டு ஆர் – சூளாமணி:6 507/2
மேல்


சாந்தி (1)

சாந்தி ஆக தருமம் உரைப்புழி – நீலகேசி:2 219/1
மேல்


சாந்தின் (1)

வம்ப வெண் முத்த சாந்தின் மட்டித்து மணிகள் எல்லாம் – சூளாமணி:8 855/2
மேல்


சாந்தினர் (1)

கொய் மலர் குங்குமம் குழைந்த சாந்தினர்
கை மலர் மணி நகை கடகம் வில்லிட – சூளாமணி:11 1875/2,3
மேல்


சாந்தினும் (1)

விட்ட திரள்வினும் தோன்றிய சாந்தினும் வேற்றுமையாம் – நீலகேசி:4 389/3
மேல்


சாந்து (15)

பொங்கு இள முலையில் வாச பூசு சாந்து அழிய புல்லி – உதயணகுமார:4 203/3
செய்ய மாலை சாந்து பட்டு செம்மையுடன் தாங்கியே – நாககுமார:2 64/3
பூசு சாந்து அழித்து இழிந்த புள்ளி வேர்பு உலர்த்தலால் – சூளாமணி:4 134/2
சிலை தடம் தோளவர் செம் சாந்து அணிந்த – சூளாமணி:5 288/1
செம் சாந்து அணிந்து திகழ்ந்த மணி வண்டு – சூளாமணி:5 292/2
சந்தன துளி தலை ததும்ப சாந்து அளைந்து – சூளாமணி:5 370/1
நல் புடைய பேழை நறும் சாந்து நனி பெய்த – சூளாமணி:8 870/3
சாந்து சொரி மாரி பொழிகின்ற தகையோடும் – சூளாமணி:8 1092/1
சாந்து மெழுகிட்ட தட மா மணி நிலத்தை – சூளாமணி:8 1095/1
சிகரமாய் இலங்கு சென்னி தென்மலை சாந்து மூழ்கி – சூளாமணி:10 1636/1
சாந்து நீர் நிறைந்த வாவி தயங்கு செங்குவளை வாவி – சூளாமணி:10 1670/1
சாந்து எழு சிவிறி தாரை சதுர் முகமாக வீக்கி – சூளாமணி:10 1676/1
வெண் துகில் உடுத்து வெண் சாந்து மெய் வழித்து – சூளாமணி:11 1873/1
தாமம் சாந்து தண் மலர் இன்ன பல கொண்டு துணை சால் – நீலகேசி:1 59/3
போது சாந்து அவியொடு புகையும் பொருந்திய பொரும் தெய்வக்கு எனலும் – நீலகேசி:1 66/3
மேல்


சாந்தும் (11)

கடி மலர் சாந்தும் ஏந்தி காவலன் தேவியோடும் – நாககுமார:1 13/3
விரி நிற மலரும் சாந்தும் வேண்டிய பலவும் ஏந்தி – நாககுமார:2 50/3
வள்ளிய மலரும் சாந்தும் மணி புனை கலனும் இன்றாய் – யசோதர:1 27/1
பூசின சாந்தும் பிணையலும் போர்த்து இடை – சூளாமணி:5 293/3
வல்லி ஆங்கு அணி சாந்தும் வனைந்து உராய் – சூளாமணி:5 332/2
சாந்தும் தண் தழையும் சுரமங்கையர்க்கு – சூளாமணி:7 752/1
கண்ணியுடன் வெறி மலரும் நறும் பொடியும் கமழ் சாந்தும் கையின் ஏந்தி – சூளாமணி:8 1036/3
காழ் அகிலும் நறும் சாந்தும் கடி வாச பூம் பொடியும் கமழ்ந்து கைபோய் – சூளாமணி:9 1528/3
பொன் இயல் மலரும் சாந்தும் சுண்ணமும் புகையும் பொங்க – சூளாமணி:11 1869/3
கடி கமழ் மலரும் சாந்தும் சுண்ணமும் கலந்த அன்றே – சூளாமணி:12 2121/4
கெட்ட திரட்சியும் தோன்றிய சாந்தும் பொருள் எனவும் – நீலகேசி:4 389/1
மேல்


சாந்தொடு (1)

தூமம் சாந்தொடு சுண்ணம் துதியொடு பரவுபு தொழுதே – நீலகேசி:2 153/1
மேல்


சாப (1)

அழுதும் சாப அகல்_இடத்தார் இவன் – நீலகேசி:10 889/2
மேல்


சாபம் (1)

தரளமாகிய நயனத்தொடு அம் சிறை சாபம் போல் சவி என்ன – யசோதர:3 225/1
மேல்


சாபம்-தான் (1)

விரும்பு சிங்கம் ஈன் வீரிய சாபம்-தான்
பரம்பு மண்-நின்று பாங்கின் எழுந்ததே – உதயணகுமார:5 279/3,4
மேல்


சாபவன் (1)

நீப்பவன் சாபவன் ஈப்பவன் ஏற்பவன் – நீலகேசி:7 773/3
மேல்


சாம் (1)

சாவின்-கண் செய்கையும் சாம் களைந்தாயோ – நீலகேசி:5 581/4
மேல்


சாம்பி (1)

ஒடுக்க சாம்பி வைதால் உவப்பார் இல்லை – நீலகேசி:5 537/2
மேல்


சாம (2)

சாம லேகைகள் மயிர் நிரை அல தல மீது – சூளாமணி:6 463/2
சாம_வண்ணன் தழல்வேகன் சாய்ந்தான் சாய்ந்த பொழுதத்தே – சூளாமணி:9 1335/3
மேல்


சாம_வண்ணன் (1)

சாம_வண்ணன் தழல்வேகன் சாய்ந்தான் சாய்ந்த பொழுதத்தே – சூளாமணி:9 1335/3
மேல்


சாமர (1)

போர்த்த சாமர குழாம் புதைத்த வெண் கொடி குழாம் – சூளாமணி:6 475/3
மேல்


சாமரமும் (1)

கொடியும் குடையும் குளிர் சாமரமும்
முடியின் சுடரும் மிசை மூடினவே – சூளாமணி:8 1073/3,4
மேல்


சாமரை (9)

வாங்கு வாகை வளைத்தன சாமரை
கூம் குயில் குலம் இன்னியம் கொண்டு ஒலி – யசோதர:1 11/2,3
கண்கவர் சாமரை வெண் மயிரின் கணம் – சூளாமணி:7 665/2
சாமரை நல் நுதல் தட கை யானையான் – சூளாமணி:8 961/4
சாமரை பயந்த தென்றல் தகை முடி தாது சிந்த – சூளாமணி:8 969/2
சாமரை முகத்தன மத களிறு-தம் மேல் – சூளாமணி:8 1085/2
சாமரை வீச தாழ் குழை செம்பொன் சுடர் வீச – சூளாமணி:9 1526/2
சாமரை என தமர் அசைப்ப தாமரை – சூளாமணி:10 1692/2
திருந்திய சாமரை திசைகள் தேர்த்தன – சூளாமணி:11 1883/2
பொங்கு சாமரை ஏந்தி புடைபுடை இயக்கர் நின்று இரட்ட – நீலகேசி:2 157/1
மேல்


சாமரையும் (2)

குடையும் கொடியும் குளிர் சாமரையும்
படையும் முடியும் பல சின்னமுமே – சூளாமணி:9 1229/1,2
சங்கு இவர் வெண் சாமரையும் தாழ் குழையும் நீள் சுடரும் தயங்கி வீச – சூளாமணி:10 1808/2
மேல்


சாய்த்தார் (1)

புரை எடுத்த மா மகர பொன் முடிகள் சாய்த்தார் – சூளாமணி:9 1520/4
மேல்


சாய்த்து (3)

மன்னும் இங்கு ஓர் மத யானை நுதல் மேல் மறிந்து மணி முடி சாய்த்து
என்னும் உரையாய் துயில்கோடல் இசையோ எங்கள் பெருமானே – சூளாமணி:9 1476/3,4
இருள் ஆழி நிழல் துளும்பும் எரி பொன் மணி நெடு முடி சாய்த்து இறைஞ்சப்பட்டான் – சூளாமணி:10 1806/3
தாங்களும் உரைக்கில்லார் தலை சாய்த்து அங்கு இருந்தார் – நீலகேசி:4 271/2
மேல்


சாய்த்தோய் (1)

நள்ளலர் சாய்த்தோய் நரகம் அடைவார் – சூளாமணி:11 1952/4
மேல்


சாய்ந்த (2)

சாம_வண்ணன் தழல்வேகன் சாய்ந்தான் சாய்ந்த பொழுதத்தே – சூளாமணி:9 1335/3
சாய்ந்த விலங்குகள் தாள் உடைந்து ஆழ்தர – சூளாமணி:11 1961/2
மேல்


சாய்ந்ததே (1)

அடியிட விடம் பொறாமை யானை மண்ணில் சாய்ந்ததே – உதயணகுமார:2 127/4
மேல்


சாய்ந்தான் (3)

சாம_வண்ணன் தழல்வேகன் சாய்ந்தான் சாய்ந்த பொழுதத்தே – சூளாமணி:9 1335/3
மலை ஆகம் போழாக மற்று இவனோ சாய்ந்தான்
நிலையாமை சால நிலைபெற்றது அன்றே – சூளாமணி:9 1464/3,4
எரி பொன் மணி முடியான் இன்று இவனோ சாய்ந்தான் – சூளாமணி:9 1465/4
மேல்


சாய (1)

மண்களை மயக்கி மாக்கள் துயில்கொள மரங்கள் சாய
புண்களை அணையும் வேலான் படை முகம் புக்கது அன்றே – சூளாமணி:9 1455/3,4
மேல்


சாயல் (15)

மன்னவன் உள்ளத்து_உள்ளாள் மா மணி மயில் அம் சாயல்
அன்ன மெல் நடை வேல்_கண்ணாள் அருந்ததி அனைய நங்கை – உதயணகுமார:1 11/1,2
பெண் ஆர் சாயல் பெற்றனள் தேவி பெறு பட்டம் – சூளாமணி:5 315/4
அடிகளது அருளினால் அம் பொன் சாயல் இ – சூளாமணி:5 422/3
மலை-தலை மயில் கணம் மருட்டும் அவர் சாயல் – சூளாமணி:6 451/4
எண்ணிலாய சாயல் அம் இடா மணல் பிறங்கல் மேல் – சூளாமணி:7 791/2
தீ உடை இலங்கு வேலான் திரு_மகள் அமிர்து இன் சாயல்
வீ உடை அலங்கல் ஞான்ற மிடை மணி விமானம் சேர்ந்தாள் – சூளாமணி:8 974/3,4
பெண்களை மருட்டும் சாயல் பேதையை காண்-மின் என்று – சூளாமணி:8 1002/3
மாது உலாம் சாயல் என்ன மாதவசேனை என்பாள் – சூளாமணி:8 1003/2
ஆவியாய அயக்கிரீவற்கு அமிர்தம் பூத்த அம் சாயல்
தேவிமார்கள் கலன் அழித்து சேணி உலகம் சென்று எய்தி – சூளாமணி:9 1485/1,2
தேம் மரு குழல் அம் சாயல் தேவி கை பட்டது அன்றே – சூளாமணி:10 1704/4
மாதராள் அமிழ்து இன் சாயல் தோட்டியால் வணக்கப்பட்டு – சூளாமணி:10 1705/3
மாது ஆர் சாயல் மங்கையர் கூவ மகிழ்வு எய்தி – சூளாமணி:10 1741/2
போது ஆர் சாயல் பூம் கொடி போல பொலிவு எய்தி – சூளாமணி:10 1747/2
மாது ஆர் சாயல் மா மயில்_அன்னாள் வளர்கின்றாள் – சூளாமணி:10 1747/4
பெடை ஊடு சாயல் பிணை அன்ன நோக்கி – நீலகேசி:1 110/1
மேல்


சாயலார்-தம் (1)

தோகை அம் சாயலார்-தம் குழாங்களும் நெதியும் சொல்லி – சூளாமணி:7 692/4
மேல்


சாயலாள் (2)

வஞ்சி அம் கொடி இடை மயில் அம் சாயலாள்
எஞ்சல்_இன்று இயங்கி வந்து இழியுமாய்விடில் – சூளாமணி:3 115/2,3
அணி மருள் உருவு உடை அமிர்து இன் சாயலாள்
பணி மொழி பலவுடன் பரவி வாழ்த்தினாள் – சூளாமணி:8 1040/2,3
மேல்


சாயலாளும் (1)

மாதர் அம் சாயலாளும் மணி_வண்ணன் சிறுவன்-தானும் – சூளாமணி:10 1837/1
மேல்


சாயினும் (1)

சாயினும் தத்துவத்தை சாராதாய் அன்றோ – நீலகேசி:6 694/4
மேல்


சாயை (1)

தண் மதி கெட்டு அதன் சாயை உடன் பெறல் – நீலகேசி:5 608/1
மேல்


சார் (13)

தணிவு_இல் சீர் யூகியோடு சார் உருமண்ணுவாவும் – உதயணகுமார:1 28/3
சார் துணையாக கொள்க தகவும் அ தயவும் என்றான் – யசோதர:4 247/4
உக்க நெல் பொரியுற்று ஒரு சார் எலாம் – சூளாமணி:7 780/3
சாறு கொண்டு மான் கணம் தயங்கு நீர சார் எலாம் – சூளாமணி:7 796/4
தார் உடைய மார்பினிடை சார் கணை குளிப்ப – சூளாமணி:9 1281/1
புடைப்ப நடுங்கி புரள்வர் ஒரு சார் – சூளாமணி:11 1936/4
மறிப்பர் மலை மிசை மற்றும் ஒரு சார் – சூளாமணி:11 1940/4
நாவும் அழுக நரல்வர் ஒரு சார் – சூளாமணி:11 1941/4
கழல்வனர் வீழ்ந்து கரிவர் ஒரு சார் – சூளாமணி:11 1942/4
ஏற்ற நினைப்போடு இரு சார் விழு தவமும் – நீலகேசி:1 125/2
தச்சன் அஞ்சி சார் அகழ் கள்வன் என்கின்ற தன்மையினாய் – நீலகேசி:5 510/4
எய்தார் பிறவோ இரு சார் வினை பயனும் – நீலகேசி:5 652/3
கைகளும் காலும் இரு சார் இடக்கரும் – நீலகேசி:7 756/1
மேல்


சார்த்தி (2)

சார்த்தி பிறவா தவ நெறிகள்-தாம் உளவோ – நீலகேசி:6 661/2
சார்த்தி பிறவா தவ நெறிகள்-தம்மே போல் – நீலகேசி:6 661/3
மேல்


சார்த்திய (1)

தண் நறும் தமனக கொழுந்தும் சார்த்திய
ஒண் நிற பிணையல் அன்று உவக்கப்பட்டதே – சூளாமணி:10 1689/3,4
மேல்


சார்த்தினர் (1)

சார்த்தினர் புடைக்கும் தண்டினர் எதிர தாங்கியும் வாங்கியும் தடுத்தும் – சூளாமணி:9 1323/3
மேல்


சார்த்தினை (1)

தண்டிகள்-தம்மொடும் சார்த்தினை கொள் நீ – சூளாமணி:11 1954/4
மேல்


சார்த்தூலகன் (1)

தள்ளாதவன் எதிரே மிகு சார்த்தூலகன் ஏற்றான் – சூளாமணி:9 1313/4
மேல்


சார்தரும் (1)

திரு_மகள் பரிவொடு சென்று சார்தரும்
உருவினும் ஒளியினும் உலகம்-தன்னின் மேல் – சூளாமணி:9 1498/1,2
மேல்


சார்தலின் (1)

பிண்டி நீழலவன் பேர்_அறம் சார்தலின்
கொண்ட நின் கோளின்-கண் குற்றம் உண்டாமோ – நீலகேசி:5 591/3,4
மேல்


சார்தலும் (2)

துன்ன அரும் நல் கானமோடு தொல் மலையில் சார்தலும்
செந்நெல்கள் விளை வயல் செழும் புனல் நதிகளும் – உதயணகுமார:1 71/1,2
தண்டினன் கழலன் தமனிய தாரான் சார்ந்தனன் சார்தலும் அவனை – சூளாமணி:9 1319/2
மேல்


சார்ந்த (3)

சார்ந்த மந்திரி சாலங்காயன் என்பவன் – உதயணகுமார:1 41/4
சமைய வேள்வியும் சார்ந்த ஒழுக்கமும் – உதயணகுமார:6 338/3
சார்ந்த பொழுதே தலை_நாள் கருவினுள் – சூளாமணி:11 1986/1
மேல்


சார்ந்தது (3)

தாம் பல் மாலையும் சார்ந்தது அனைத்து அரோ – சூளாமணி:5 342/4
சார்ந்தது சண்டவேகை பணிபணி என்று சார – சூளாமணி:9 1426/2
எல்லா இமையோர்க்கும் என்றும் இறுதி சார்ந்தது
அல்லால் அகல் துன்பம் ஆகா நுமர் அன்றி – நீலகேசி:1 114/2,3
மேல்


சார்ந்ததும் (1)

புள் இரைப்பது ஓர் பொய்கை சார்ந்ததும் – சூளாமணி:7 580/4
மேல்


சார்ந்ததே (2)

தாய் வயிற்றினில் தாதுவில் சார்ந்ததே – யசோதர:3 188/4
தங்கும் மார்பின் நம்பிமார்கள் தானை சோலை சார்ந்ததே – சூளாமணி:6 488/4
மேல்


சார்ந்தவர் (1)

தன் அலால் தெய்வம் பேணார் சார்ந்தவர் தானும் சார்ந்தார்க்கு – சூளாமணி:5 302/1
மேல்


சார்ந்தவர்கள் (1)

தழை கரும்பின் முருகு உயிர்க்கும் தார் அகலம் சார்ந்தவர்கள் தவஞ்செய்தாரே – சூளாமணி:10 1815/4
மேல்


சார்ந்தவே (1)

சக்கர பெரும் செல்வ சாலை சார்ந்தவே – சூளாமணி:9 1504/4
மேல்


சார்ந்தன (1)

சந்தன தடம் தாளொடு சார்ந்தன
கந்தினை கனலும் களி யானையே – சூளாமணி:8 892/3,4
மேல்


சார்ந்தனன் (1)

தண்டினன் கழலன் தமனிய தாரான் சார்ந்தனன் சார்தலும் அவனை – சூளாமணி:9 1319/2
மேல்


சார்ந்தார் (5)

மண்டு புனல் புரிசை பதி சார்ந்தார் – சூளாமணி:7 657/4
தழல் ஆர் அயில் வலன் ஏந்துபு சார்ந்தார் தலை சரிந்தார் – சூளாமணி:9 1295/4
அரு மணி அரும்பி தாழ்ந்த அம் தளிர் பொதும்பர் சார்ந்தார் – சூளாமணி:10 1622/4
காதலில் களித்து தங்கள் கன வரை உலகம் சார்ந்தார் – சூளாமணி:10 1837/4
புக்கு அவருளே படுவர் போக நிலம் சார்ந்தார்
ஒக்க அவர் தன்மையும் உரைக்க உலவாவே – சூளாமணி:11 2023/3,4
மேல்


சார்ந்தார்க்கு (1)

தன் அலால் தெய்வம் பேணார் சார்ந்தவர் தானும் சார்ந்தார்க்கு
என் அலால் இவருக்கு உற்றார் இல்லை என்று இரங்கும் நீரான் – சூளாமணி:5 302/1,2
மேல்


சார்ந்தாள் (1)

செம் சுடரோன் மறை பொழுதில் சினவரன்-தன் திரு_கோயில் சென்று சார்ந்தாள் – சூளாமணி:8 1035/4
மேல்


சார்ந்தான் (5)

தங்கு ஒலி மிகுத்த தானையொடு கதிர் எறிப்ப சார்ந்தான் – சூளாமணி:8 844/4
தான் முறையின் ஓது சமிதை தொழுதி சார்ந்தான் – சூளாமணி:8 1097/4
மணம் கொள் பூம் துணர் கொள் சோலை மண்டு நீர் வாவி சார்ந்தான் – சூளாமணி:10 1669/4
தழுவியது அனைய தோளான் தன் ஒளி தயங்க சார்ந்தான் – சூளாமணி:10 1785/4
தழல் வலம் புரிந்த வேலான் தட முலை வாரி சார்ந்தான் – சூளாமணி:10 1836/4
மேல்


சார்ந்து (13)

சற்புருடு ஒருவன் வந்து சார்ந்து அவதரித்து மிக்க – உதயணகுமார:1 12/2
சாலங்காய நீ சார்ந்து தருக என – உதயணகுமார:1 42/1
சாலங்காயனும் சார்ந்து வெகுண்டிட – உதயணகுமார:1 52/1
தம் இல் எண்ணினன் சார்ந்து காண்க என – உதயணகுமார:5 283/2
சக்கரம் வலம் சார்ந்து இறைஞ்சின – உதயணகுமார:5 292/1
சொன்ன நீர் வளமைத்து ஆய சுரமை நாட்டு அகணி சார்ந்து
மன்னன் வீற்றிருந்து வைக நூலவர் வகுக்கப்பட்ட – சூளாமணி:2 36/1,2
தண் நிலா தவழ் மணி தலமும் சார்ந்து அரோ – சூளாமணி:2 42/3
தந்திரம் அறிந்து சூழ்வான் சூழ்ச்சி சார்ந்து அமையல் வேண்டும் – சூளாமணி:5 252/2
யோசனை எல்லை சார்ந்து பின்னை இஃது உரைக்கலுற்றான் – சூளாமணி:7 768/4
திங்கள்_வண்ணன் வெம் கண் யானை வேந்து சேர்ந்த நாடு சார்ந்து
இங்கண் இன்னஇன்ன காண் என புகழ்ந்து இயம்பினான் – சூளாமணி:7 786/3,4
துன்னும் நீர் வயல் சுரமியத்து அகணியுள் சுடர் அணி நகர் சார்ந்து
தென்னென் தேன் நிமிர் திருநிலையகம் எனும் செறி பொழில்அது சேர்ந்தார் – சூளாமணி:8 889/3,4
கிழவு எனும் எல்லை கெழீஇயினர் சார்ந்து
வழுவினர் செல்வது மற்று ஓர் கதியே – சூளாமணி:11 1987/3,4
இப்படி தோன்றும் இருதுக்கள் சார்ந்து என – நீலகேசி:4 367/2
மேல்


சார்பவர் (1)

தாம் சுவை திரிந்த பின்றை சார்பவர் இல்லை அன்றே – சூளாமணி:4 166/4
மேல்


சார்பினால் (1)

சந்தினால் தவிர்க்கல் ஆமோ சார்பினால் ஒழிக்கல் ஆமோ – சூளாமணி:11 1856/1
மேல்


சார்வன (1)

தா_இலாத தழை சார்வன நோக்கி – சூளாமணி:10 1579/2
மேல்


சார்வு (1)

தாழ் வினை விலக்கும் சார்வு தலைப்படா அளவும் என்றான் – சூளாமணி:4 199/4
மேல்


சார்வும் (1)

சார்வும் அகல்வும் தலைப்பெய்தலோடு உள்ளம் இன்மை – நீலகேசி:4 412/2
மேல்


சார்வோம் (1)

தத்துவ முனி உளன் நாம் இனி சார்வோம் – உதயணகுமார:2 149/4
மேல்


சார (4)

சார நெய் பெய் சலாகை கடைந்த பின் – யசோதர:3 211/3
சார ஆங்கு ஒர் கல் தலத்து இருந்து தான் விளம்பினான் – சூளாமணி:6 499/4
தீது தீர்ந்திருந்த பெம்மான் திரு_அடி சார சென்று – சூளாமணி:6 535/3
சார்ந்தது சண்டவேகை பணிபணி என்று சார
வார்ந்த நீர் உலகின் வாழும் மனிதரை வல்லை ஏகி – சூளாமணி:9 1426/2,3
மேல்


சாரணர் (3)

கனிகள் காய் மிசை காணும் சாரணர்
இனிய நூல் மிசை இசைந்து செல்வரும் – உதயணகுமார:6 319/3,4
சாரணர் விசும்பின்-நின்று இழிந்து தாதை-தன் – சூளாமணி:4 186/2
சகத் அபி நந்தனர் என்னும் சாரணர்
மிக நவின்று இறைவனை வணங்கி விண்ணிடை – சூளாமணி:4 208/2,3
மேல்


சாரணை (1)

ஊற்றினை செறித்திடும் உறு தவனுடை சாரணை
நாற்ற மிக்க குமரனும் நன்புற பணிந்த பின் – நாககுமார:4 144/1,2
மேல்


சாரல் (14)

சற்கிரி விபுலம் மன்னும் சாரல் அம் வனத்தில் சென்று – உதயணகுமார:1 14/2
ஏந்து சந்தன சாரல் இரும் கைமா – சூளாமணி:1 25/3
வேய் இனம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவி புல்வாய் – சூளாமணி:5 265/3
தங்கள் சோதி சாரல் ஆவ அல்ல அன்ன நீரவால் – சூளாமணி:6 501/3
சாரல் ஆகாதன சாதி சால பல – சூளாமணி:7 736/4
சாரல் மேகம் நீர் முதிர்ந்து தண் தளி துளித்தலால் – சூளாமணி:7 799/2
வேய் உடை அருவி சாரல் வெள்ளி வேய் விலங்கல் நாடன் – சூளாமணி:8 974/2
மஞ்சு இவர் சாரல் மணி அறையும் வார் பொதும்பும் – சூளாமணி:10 1647/2
ஆகம் மணி சூழ் சாரல் ஐய இரும் பொழில்-வாய் – சூளாமணி:10 1648/3
மருவி மழை தவழும் மை ஓங்கு சாரல்
அருவி கொழித்த அரு மணிகள் வாரி – சூளாமணி:10 1651/1,2
வெம்பு அரிய தண் சாரல் வேரூரி அ கொழுந்து – சூளாமணி:10 1653/1
வேய் ஓங்கு சாரல் விளை புனம் காவல் கொண்டு – சூளாமணி:10 1657/1
ஐவனம் கலந்த சாரல் அருகு வந்து அணைவதே போல் – சூளாமணி:10 1664/2
பூம் தளவம் கமழ் சாரல் பொன் அறை சூழ் தண் சிலம்பன் அன்றே பொன்னே – சூளாமணி:10 1818/2
மேல்


சாரல்-தன்னில் (1)

வரை வன சாரல்-தன்னில் வன் பொறி யானை விட்டேன் – உதயணகுமார:4 210/4
மேல்


சாரல்-வாய் (1)

தாம் மரை தடத்திடை மலர்ந்த சாரல்-வாய்
தாமரை துளையொடு மறலி தா_இல் சீர் – சூளாமணி:7 748/1,2
மேல்


சாரலாய் (1)

போது உலாய வேரி மாரி சாரலாய் பொழிந்து தேன் – சூளாமணி:6 492/1
மேல்


சாரலில் (1)

கடி கமழ் சாரலில் கண்ட மா தவன் மகள் – உதயணகுமார:2 134/3
மேல்


சாரலின் (1)

சந்திரம்மதி நாயும் அ சாரலின்
வந்து கார் இருள் வண்ணத்த நாகம் ஆய – யசோதர:3 177/1,2
மேல்


சாரன்-தன் (1)

தப்பு_இல் அன்னது சாரன்-தன் கண்களை – யசோதர:3 172/3
மேல்


சாரனை (1)

தையலாள் மெல்ல தேறி சாரனை மகிழ்ந்து நோக்கி – யசோதர:2 121/1
மேல்


சாரனோடு (1)

தனி வயின் இகுளை யானே தரப்படு சாரனோடு
கனி புரை கிளவி காமம் கலந்தனள் கனிந்து செல் நாள் – யசோதர:2 116/1,2
மேல்


சாரா (4)

தன் தனு மேவி சாரா தரத்தினால் விலக்கி பின்னும் – உதயணகுமார:1 118/2
சந்திர முனிவரன் உரைப்ப தளிர்_இயல் சாவுகள் சாரா
மந்திரம் உளது எனின் அடிகள் மனத்தொடு பணி-மினம் எனவே – நீலகேசி:1 71/1,2
பங்கங்கள் சாரா பரசமையர் சொல் உளவோ – நீலகேசி:6 660/2
பங்கங்கள் சாரா பரசமையர் சொல்லே போல் – நீலகேசி:6 660/3
மேல்


சாராதாய் (1)

சாயினும் தத்துவத்தை சாராதாய் அன்றோ – நீலகேசி:6 694/4
மேல்


சாராது (2)

பெரும் படையும் சாராது இ பெண் பாவி மரம் நட்டு இங்கு – நீலகேசி:2 167/3
புலவன் உரைத்த புற கேள்வி சாராது
உலகம் நவின்று உரைக்கும் ஓத்து எங்கு உளதோ – நீலகேசி:6 662/1,2
மேல்


சாராய் (1)

பெண்ணும் அல்லவும் சாராய் பிரிதல்_இல் பேர்_இன்பம் உடையை – நீலகேசி:2 159/2
மேல்


சாரார் (1)

மன்னவரை வணங்கியும் தம் மனம் மகிழ்வர் ஒரு சாரார் – சூளாமணி:11 2043/4
மேல்


சாரிகை (3)

சாரிகை கறங்கு என மலைந்து சுழல்கின்றார் – சூளாமணி:9 1290/3
திரி சாரிகை நிகரானவர் உளரோ திறல் வினவும் – சூளாமணி:9 1296/4
திரிவு_இல் சாரிகை செயல் – சூளாமணி:9 1367/1
மேல்


சாரியும் (1)

ஏத்து அரிய வீதி-தொறும் ஈடு_இல் வட்ட சாரியும்
பார்த்து அரிய நடனமும் பல்லியங்கள் ஆர்ப்பவே – நாககுமார:2 67/2,3
மேல்


சாரிவட்டம் (1)

உற்ற நல் வீதி-தோறும் ஊர்ந்து நல் சாரிவட்டம்
பற்றி நன்கு ஓட்ட கண்டு பார்த்திபன் மகிழ்ச்சிகொண்டான் – உதயணகுமார:1 99/3,4
மேல்


சாரினும் (1)

பேடிகள் சாரினும் பிள்ளை பெறாமையை – நீலகேசி:7 764/3
மேல்


சாரும் (1)

சண்பக தனி வனம் தும்பி சாரும் நீ – சூளாமணி:4 225/2
மேல்


சாருமோ (1)

தரும் சிறை களமது சென்று சாருமோ – சூளாமணி:12 2078/4
மேல்


சால் (15)

பேச அரும் பெருமை சால் ப்ரச்சோதனன் தூதர் வந்து – உதயணகுமார:4 209/1
சமையும் நாற்படையும் சூழ சால் இலக்கணையினோடும் – நாககுமார:5 154/2
மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறு சால்
நூலினால் பெரியவர் நுழைந்த சுற்றமா – சூளாமணி:2 57/1,2
துன்னிய வினை பகை துணிக்கும் தொன்மை சால்
இன் உரை அமிழ்து எமக்கு ஈ-மின் என்பதாம் – சூளாமணி:4 197/1,2
வெருவு உடை வினை பகை விலக்கும் வீறு சால்
மருவு உடை மொழிகளால் பரவி வாமன – சூளாமணி:4 217/2,3
அலகை சால் ஆதி காலத்து அரசர்கள் தொடர்ச்சி எல்லாம் – சூளாமணி:6 534/1
ஆற்றல் சால் அடியன் சென்று அதனை நீக்கினான் – சூளாமணி:7 824/4
ஆதி சால் அமர கற்பம் ஆம் என அமரும் காலை – சூளாமணி:9 1203/2
நந்தாஅவனத்து இளையார் எழுவு யாழ் நரம்பினுக்கும் நலம் சால் இன் சொல் – சூளாமணி:9 1539/2
எல்லை சால் முரசில் சாற்றி இன்னன அறைதலோடும் – சூளாமணி:11 1868/1
அணங்கு சால் அடிகளது அருள் அதாய்விடில் – சூளாமணி:12 2106/1
யாமம் நீங்கலும் அரசன்-தன் ஒரு மகள் உரை சால்
காமலேகை-தன் உருவொடு திரு என தோன்றி – நீலகேசி:1 59/1,2
தாமம் சாந்து தண் மலர் இன்ன பல கொண்டு துணை சால்
சேமம் காவல சேவடி போற்று என சென்றாள் – நீலகேசி:1 59/3,4
ஆதி அந்து அளப்பு அரிய அருகந்தபகவர்-தம் அறம் சால்
சேதியம் புக்கு அவர்-தம் திருந்து அடிகளை பெரும் துதி சேர் – நீலகேசி:2 162/1,2
ஆதி சால் ஆவணத்துள் ஆர்கதர்-தம்மை வென்ற – நீலகேசி:4 447/2
மேல்


சால்க (1)

சால்க என்று இறைவன் செப்ப தன்னுடை கையின் ஓச்சி – உதயணகுமார:1 101/1
மேல்


சால்கள் (1)

தேன் அமர் அகலம் என்னும் செறுவு செம் சால்கள் போக்கி – சூளாமணி:9 1199/2
மேல்


சால்பு (1)

சாவதே உங்கள் சத்துவர் சால்பு எனின் – நீலகேசி:2 218/2
மேல்


சால்பும் (2)

மற்று அவன் மனமும் கண்ணும் வாழ்க்கையும் வலியும் சால்பும்
அற்றம்_இல் அரசும் கோலும் ஆபவர் அமைச்சர் அன்றே – சூளாமணி:5 244/3,4
உறுதியும் சால்பும் உடையன யாவையும் உண்மையினால் – நீலகேசி:9 835/3
மேல்


சால (21)

தசைந்த கை உதிரம் பாய சால மந்திரம் அம் காதில் – உதயணகுமார:1 114/3
சயந்தி அம் பதியும் சால இலாவாண நகரும் ஈந்தே – உதயணகுமார:4 207/1
உற்று வந்துளது சால உறுதியும் உடையது ஒக்கும் – சூளாமணி:5 306/2
சால வாயில்-தாம் எலாம் ஒர் தாமரை தடத்திடை – சூளாமணி:6 480/3
சால வாயில் ஆறு சந்தன குழம்பு சிந்தியும் – சூளாமணி:6 486/2
மீட்டு உரை கொடாது சால விம்மலோடு இருப்ப நோக்கி – சூளாமணி:6 517/2
அளியமோ அளியம் சால அறிவினால் பெரியமே காண் – சூளாமணி:7 669/4
சாரல் ஆகாதன சாதி சால பல – சூளாமணி:7 736/4
ஆய் கதிர் சால வாயில் அகில் அயாவுயிர்த்த ஆவி – சூளாமணி:8 854/2
மாலை வாய் குழலி சால மம்மர் கொள் மனத்தள் ஆனாள் – சூளாமணி:8 979/4
கலவியும் களிப்பும் காம புலவியும் கலந்து சால
நிலவிய மது உண்டார் போல் நெஞ்சு உண மயங்கியிட்டார் – சூளாமணி:8 1113/3,4
இடை புகுந்து உரைப்பின் சால பெருகும் அஃது இருக்க என்று – சூளாமணி:9 1185/2
தாழியாது எய்யும் தெய்வ படை முதல் அழிந்தும் சால
பாழியான் மெலிந்தும் பண்டை பாவனை பயிற்றி என்னை – சூளாமணி:9 1458/1,2
நிலையாமை சால நிலைபெற்றது அன்றே – சூளாமணி:9 1464/4
துன்னிய சால வாயில் துளைகளே துளைகள் ஆக – சூளாமணி:9 1542/3
செய்யன செறிந்தன திரண்ட விரல் சால
ஐய தசை ஆர்ந்த அடியின் அழகினாலே – சூளாமணி:10 1607/1,2
பிறந்தனர் பிறந்து சால பெருகினர் பெருகி பின்னை – சூளாமணி:11 1847/1
தாம் சால வாழ்நாள் தளிர் ஈனும் தகையது உண்டு – நீலகேசி:1 10/3
மற்றும் சால உள பிற மாண்பு_இல – நீலகேசி:5 535/2
சாத்தனும் யானும் அவன்-தன்னின் சால இசையுடையம் – நீலகேசி:6 683/2
இன்று எனின் சால எளிது ஆம் பிற அதன் இன்மையுமே – நீலகேசி:6 715/4
மேல்


சாலங்கள் (2)

கதிர் நகை கன பொன் சோதி கனக சாலங்கள் என்னும் – சூளாமணி:8 858/1
கந்து என திரண்ட திண் தோள் கனக சாலங்கள் காட்டி – சூளாமணி:10 1627/2
மேல்


சாலங்காய (1)

சாலங்காய நீ சார்ந்து தருக என – உதயணகுமார:1 42/1
மேல்


சாலங்காயன் (2)

சார்ந்த மந்திரி சாலங்காயன் என்பவன் – உதயணகுமார:1 41/4
சாலங்காயன் சகோதரம் ஆன நல் – உதயணகுமார:4 218/1
மேல்


சாலங்காயனும் (2)

சாலங்காயனும் சார்ந்து வெகுண்டிட – உதயணகுமார:1 52/1
கன்றி உள் சாலங்காயனும் மேல் வர – உதயணகுமார:1 54/3
மேல்


சாலங்காயனோடு (1)

தரும நல் நூல் வகை சாலங்காயனோடு
அரு மதி யூகியும் அன்பின் உரைத்தான் – உதயணகுமார:4 215/1,2
மேல்


சாலத்து (1)

குன்று சூழ் வன சாலத்து குமரன் சென்று இருந்த அன்றே – நாககுமார:4 109/4
மேல்


சாலம் (4)

சந்திரகாந்தி வாளும் சாலம் மிக்கு அமளி-தானும் – நாககுமார:3 95/3
மேக சாலம் விரிந்து எதிர் செல்லுமோ – சூளாமணி:7 637/2
உம்பர் வான் மேக சாலம் ஒலி முழா கருவி ஆக – சூளாமணி:7 766/3
கான்றன கனக சாலம் கலந்தன கங்கணீகம் – சூளாமணி:8 850/3
மேல்


சாலமும் (1)

சாலமும் புனைந்து உரைத்தி சமழ்ப்பு என்னும் இலை ஆகி – நீலகேசி:4 297/2
மேல்


சாலவும் (4)

சயந்தியின் எல்லை விட்டு சாலவும் மகதநாட்டுக்கு – உதயணகுமார:3 151/1
சத்தியகாயன்னுடன் சாலவும் அமைச்சரை – உதயணகுமார:3 176/1
சமத்தினில் அகற்றினன் சாலவும் பாஞ்சாலனும் – உதயணகுமார:3 180/2
பொய்யொடும் பொருளொடும் குவகொடும் சாலவும் பொருந்துதலின் – நீலகேசி:9 828/2
மேல்


சாலி (2)

படை உறு சாலி என்பான் பலம் உறு சத்தி என்பான் – உதயணகுமார:3 164/2
தாது பூம் பொழில் சாலி நல் நாட்டிடை – உதயணகுமார:6 336/3
மேல்


சாலிகை (2)

திரைத்த சாலிகை
நிரைத்த போல் நிரந்து – சூளாமணி:7 744/1,2
சாலிகை புக்கது தயங்கு தாரினாய் – சூளாமணி:10 1587/2
மேல்


சாலியின் (1)

சாலியின் இடியின் கோழி தலை அரிந்திட்டது ஓடி – யசோதர:2 146/2
மேல்


சாலினீ (1)

வீறு உடை சாலினீ தாம் இடை தவழ் கொங்கை கொண்டை – நாககுமார:1 9/3
மேல்


சாலும் (1)

வம்பு அழகு நோக்கி வழிபடுவதே சாலும்
அம் பவழ வாயும் அளகம் சேர் வாள் நுதலும் – சூளாமணி:8 1119/2,3
மேல்


சாலை (2)

சக்கர பெரும் செல்வ சாலை சார்ந்தவே – சூளாமணி:9 1504/4
ஊட்டுதும் யாம் என்று நுமர்களை நுதலி ஓர் சாலை வைத்தால் – நீலகேசி:9 838/1
மேல்


சாவ (4)

சாவ அரிது இவண் அரசி தகவு_இல் வினை தரும் நோய் – யசோதர:5 292/3
சாவ நலிந்திடும் தண்ணீர் பிணி பெரிது – சூளாமணி:11 1941/1
உடம்பின் உள்ள பல் உயிர் சாவ ஊன் உண் மானுக்கு – நீலகேசி:4 360/1
சாவ சொல்லுவ தத்துவமாம் பிற – நீலகேசி:5 538/3
மேல்


சாவதே (1)

சாவதே உங்கள் சத்துவர் சால்பு எனின் – நீலகேசி:2 218/2
மேல்


சாவதை (1)

சாவதை அஞ்சுவார்க்கும் தகைமை_இல்லவர்க்கும் அன்றே – சூளாமணி:9 1179/3
மேல்


சாவன் (1)

சாவன் என்பது ஓர் சங்கையும் இன்றியே – நீலகேசி:2 210/3
மேல்


சாவின்-கண் (1)

சாவின்-கண் செய்கையும் சாம் களைந்தாயோ – நீலகேசி:5 581/4
மேல்


சாவு (1)

சாவு அது போக வாழ்க்கை தவம் தலை நிற்றல் ஒன்றோ – சூளாமணி:9 1161/3
மேல்


சாவுகள் (1)

சந்திர முனிவரன் உரைப்ப தளிர்_இயல் சாவுகள் சாரா – நீலகேசி:1 71/1
மேல்


சாற்ற (3)

தக்கவர் குணம் சாற்ற அரிது என்றே – உதயணகுமார:6 322/4
பொன் அவிர் சிலம்பு ஒலி போந்து புடை சாற்ற
கன்னியர் நிரந்து பலர் காவலொடு சூழ – சூளாமணி:10 1602/2,3
தாழ்க மற்று அரும் துயர் சாற்ற கேள்-மினே – சூளாமணி:10 1764/4
மேல்


சாற்றலும் (1)

இங்கு வந்து ஏறுக என்று சாற்றலும்
சங்கொலி பரந்தன தயங்கும் மா முரசு – சூளாமணி:10 1783/2,3
மேல்


சாற்றி (6)

இடி படு முரசில் சாற்றி ஏற்பவர் ஆசை தீர – சூளாமணி:8 1108/1
அறைந்தனர் முரசில் சாற்றி அறைதலும் அரசர் எல்லாம் – சூளாமணி:9 1150/2
முரசு என அதிரும் பேழ் வாய் முழங்கு இசை மொழியில் சாற்றி
வரை செறிந்து அனைய தோளான் மந்திரசாலை சேர்ந்தான் – சூளாமணி:9 1174/2,3
காலை ஆம் அணிவது என்று கண் அதிர் முரசில் சாற்றி
பாலை யாழ் மழலையாளை காப்பு அணி பயின்ற செல்வம் – சூளாமணி:9 1547/2,3
விரும்பு அணி விழவு சாற்றி வியன் முரசு அறைக என்றான் – சூளாமணி:11 1864/4
எல்லை சால் முரசில் சாற்றி இன்னன அறைதலோடும் – சூளாமணி:11 1868/1
மேல்


சாற்றிய (1)

சாற்றிய வகையில் மேன்மேல் சய்யம் மா சய்யமத்தின் – யசோதர:5 317/2
மேல்


சாற்றின் (1)

சாற்றின் உயிர் தன் பொழுதே உண்மை தங்கும் என்றாள் – நீலகேசி:4 419/4
மேல்


சாற்றினான் (1)

தந்து கொல்க என மன்னவன் சாற்றினான் – யசோதர:3 181/4
மேல்


சாற்று (1)

சான்றார் அறியவும் சாற்று இனி என்றாள் – நீலகேசி:7 750/4
மேல்


சாற்றுக (1)

சாதி கண்டாய் என தான் தளராது சாற்றுக என்றாட்கு – நீலகேசி:9 827/2
மேல்


சாற்றுதியாய்விடின் (1)

சாற்றுதியாய்விடின் தக்கது என்னேனோ – நீலகேசி:5 636/4
மேல்


சாற்றுதியேலும் (1)

சாற்றுதியேலும் தவறு அது ஆதலை – நீலகேசி:5 628/3
மேல்


சாற்றுதும் (1)

சாற்றுதும் யாமும் சந்தானம் என என்னின் – நீலகேசி:5 611/2
மேல்


சாற்றும் (2)

தலையும் இடையும் கடையுமா சாற்றும்
நிலைமைய தானம் நிழல் மணி பூணோய் – சூளாமணி:11 1992/1,2
சாற்றும் சந்தானத்தை சந்தித்து காட்டாய் – நீலகேசி:5 604/4
மேல்


சாற்றுவது (1)

சா புண்பட்டேன் என்று சாற்றுவது உன் தத்துவமோ – நீலகேசி:4 303/4
மேல்


சாற்றுவன் (1)

சவையே அறிய சில சாற்றுவன் கேள் – நீலகேசி:6 678/2
மேல்


சாறு (6)

வம்பு பாய்ந்து வந்து ஒசிந்து சாறு சோர்வ மானுமே – சூளாமணி:4 131/4
தாம் துணர் துணையோடு ஆடி சாறு கொண்டு ஊறும் ஏர் ஆர் – சூளாமணி:4 162/3
சாறு கொண்டு மான் கணம் தயங்கு நீர சார் எலாம் – சூளாமணி:7 796/4
பொழி சாறு அடு வெம் புகை பொங்கி அயல் – சூளாமணி:7 806/2
திரு ஒத்த களியின் தீம் சாறு ஆர உண்டு ஆரமாட்டார் – சூளாமணி:8 1112/3
தீம் சாறு ஒழுகும் திணையின் அணி தங்கி ஏங்கும் – நீலகேசி:1 10/2
மேல்


சான்ற (1)

தந்திரம் சான்ற தவத்திற்கு அரசனும் – சூளாமணி:11 1919/3
மேல்


சான்றதே (1)

தங்குவான் உலகில் தகை சான்றதே – சூளாமணி:5 340/4
மேல்


சான்றவன் (1)

ஆற்றல் சான்றவன் அரும் தவ அழல் எனை அடுமால் – நீலகேசி:1 57/1
மேல்


சான்றார் (1)

சான்றார் அறியவும் சாற்று இனி என்றாள் – நீலகேசி:7 750/4
மேல்


சானகி (1)

இடை மின் தேவியும் சானகி என்பவள் – உதயணகுமார:6 337/3

மேல்