கோ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 6
கோ_மகள் 1
கோகிலம் 1
கோகின் 1
கோங்கம் 3
கோங்கின் 1
கோங்கு 4
கோங்கும் 1
கோசம்பி-பால் 1
கோசலத்தார் 1
கோசலத்து 1
கோசு 1
கோசு_இல் 1
கோட்ட 1
கோட்டத்து 1
கோட்டத்துள் 2
கோட்டத்தை 1
கோட்டது 1
கோட்டம் 2
கோட்டன 1
கோட்டால் 1
கோட்டி 5
கோட்டிடை 1
கோட்டியுள் 1
கோட்டியோடு 1
கோட்டின் 3
கோட்டின 2
கோட்டினால் 1
கோட்டினில் 1
கோட்டு 7
கோட்டுப்பூ 1
கோட்டை 3
கோட்டையுள் 1
கோடக 1
கோடணை 1
கோடல் 8
கோடலினால் 1
கோடலும் 3
கோடலை 1
கோடி 15
கோடிக்குன்றம் 2
கோடிகங்களும் 1
கோடிகமொடு 1
கோடிகள் 1
கோடிய 1
கோடியர் 1
கோடியவாய் 1
கோடியின் 1
கோடியும் 1
கோடியோ 1
கோடு 16
கோடும் 3
கோடை 1
கோணை 3
கோத்து 4
கோதலால் 1
கோதாய் 4
கோதி 1
கோதியிட்டு 1
கோது 16
கோது_அறு 1
கோது_அனாளே 1
கோது_இல் 4
கோது_இலா 6
கோது_இலார் 1
கோதுகம் 1
கோதுகின்ற 1
கோதுபு 1
கோதை 38
கோதை-தன் 1
கோதை-தன்னை 2
கோதை-வாய் 1
கோதைகளில் 1
கோதைகளும் 2
கோதைமார்களோடு 1
கோதையர் 6
கோதையரும் 1
கோதையவள் 1
கோதையாய் 2
கோதையார் 1
கோதையும் 3
கோதையை 1
கோதையோடு 1
கோபத்தின் 1
கோபத்து 1
கோபம் 1
கோபி 1
கோபுர 3
கோபுரமும் 2
கோமகன் 2
கோமான் 22
கோமான்-தன் 1
கோமானே 2
கோமுகன் 2
கோமுகன்-தனை 1
கோமுகனுக்கு 1
கோமுகனும் 1
கோயில் 39
கோயில்-கண் 1
கோயில்-தன்னுள் 1
கோயில்-தன்னை 1
கோயிலது 1
கோயிலுக்கு 1
கோயிலும் 2
கோயிலை 2
கோரகையுள் 1
கோல் 13
கோல 22
கோலங்கள் 1
கோலத்தர் 1
கோலத்தன் 1
கோலம் 13
கோலம்_இல் 2
கோலம்செய்து 2
கோலமாம் 1
கோலமான 1
கோலமோடு 1
கோலர் 1
கோலார் 1
கோலால் 1
கோலி 3
கோலினர் 1
கோலினாய் 1
கோலும் 5
கோலுமா 1
கோலொடு 1
கோலோர் 2
கோவலர் 3
கோவின் 1
கோவும் 1
கோவே 13
கோவை 15
கோவையும் 4
கோவொடு 1
கோழ் 5
கோழி 2
கோழி-தன்னை 1
கோழிகள் 1
கோழிகளும் 1
கோழியை 1
கோள் 22
கோள்-மினம் 1
கோள்_இலள் 1
கோள்_இலை 1
கோள்கள் 4
கோள்களும் 1
கோளரி 7
கோளவர் 1
கோளால் 1
கோளி 1
கோளில் 1
கோளின் 1
கோளின்-கண் 1
கோளீயும் 1
கோளும் 3
கோளை 1
கோளொடு 1
கோறல் 2
கோறற்கு 1
கோன் 45
கோன்_மகளை 1
கோன்_இலா 1
கோனை 3
கோனொடு 1

கோ (6)

குஞ்சரம் இனி கோ நகர் உன்னி – உதயணகுமார:6 327/3
அண்ணல் அம் கோ_மகள் அருச்சித்து ஆயிடை – சூளாமணி:4 213/3
காது வேல் அரசர்_கோ களிப்புற்றான் இது – சூளாமணி:5 404/3
ஏவது செய்து வாழும் யாம் உளமாக எம் கோ
நோவது செய்த வேந்தர் நுனித்து உயிர் வாழ்பவாயில் – சூளாமணி:9 1161/1,2
கொற்றவற்கு இளைய காளை கோ தொழில் பாகம் பூண்டான் – சூளாமணி:9 1171/2
எரி விசயம் கோ ஏந்தி மன்னர் என்னும் – சூளாமணி:10 1838/1
மேல்


கோ_மகள் (1)

அண்ணல் அம் கோ_மகள் அருச்சித்து ஆயிடை – சூளாமணி:4 213/3
மேல்


கோகிலம் (1)

கூவும் கோகிலம் கொள் மது தார் அணி – நாககுமார:1 26/3
மேல்


கோகின் (1)

கொற்றவன்-தன் கோகின் மேல் – சூளாமணி:9 1370/3
மேல்


கோங்கம் (3)

குடை மாகம் என ஏந்தி கோங்கம் போது அவிழ்ந்தனவே – சூளாமணி:4 170/4
குடை அவிழ்வன கொழு மலரின குளிர் களியன கோங்கம்
புடை அவிழ்வன புது மலரன புன்னாகமொடு இலவம் – சூளாமணி:6 435/1,2
கொம்பு அவிழும் சண்பகங்கள் முல்லை இணர் கோங்கம்
அம் பவழ வண்ணம் முதலானவர் மெய் நாற்றம் – சூளாமணி:11 2037/3,4
மேல்


கோங்கின் (1)

கல் அறை அவை கோங்கின் கடி மலர் கலந்து உராய் – சூளாமணி:7 743/2
மேல்


கோங்கு (4)

கோங்கு பொன் குடை கொண்டு கவித்தன – யசோதர:1 11/1
கோங்கு எலாம் கமழமாட்டா குணம்_இலார் செல்வமே போல் – சூளாமணி:4 161/3
கோங்கு இவர் குவி மென் கொங்கை கொம்பினுக்கு உரிய காளை – சூளாமணி:5 330/2
கொல்லை முல்லை பைம் கோங்கு குருந்தம் கோடல் தண் குரவம் – நீலகேசி:2 150/1
மேல்


கோங்கும் (1)

பொன் விரிந்து அனைய பூம் கோங்கும் வேங்கையும் – சூளாமணி:7 754/1
மேல்


கோசம்பி-பால் (1)

பார் அணி கோசம்பி-பால் பல் மலர் காவுள் வந்தார் – உதயணகுமார:4 196/4
மேல்


கோசலத்தார் (1)

கொங்கு வார் பொழில் அணிந்த கோசலத்தார் கோமான் இ குவளை_வண்ணன் – சூளாமணி:10 1819/2
மேல்


கோசலத்து (1)

மருவு கோசலத்து மன்னன் மகள் உரு அரிவை நாமம் – உதயணகுமார:4 228/3
மேல்


கோசு (1)

கோசு_இல் தண்டத்தன் ஆய்விடின் கொற்றவன் – சூளாமணி:7 625/2
மேல்


கோசு_இல் (1)

கோசு_இல் தண்டத்தன் ஆய்விடின் கொற்றவன் – சூளாமணி:7 625/2
மேல்


கோட்ட (1)

ஒண் நிலா உருவ கோட்ட ஓடை மால் களிற்றின் மேலோர் – சூளாமணி:8 839/2
மேல்


கோட்டத்து (1)

சிறந்து கோட்டத்து செல்வக கணதரர் – நாககுமார:1 22/1
மேல்


கோட்டத்துள் (2)

இறைவி கோட்டத்துள் ஈர்_இரு திங்களது அகவை – நீலகேசி:1 33/1
அன்று அ கோட்டத்துள் அறிவு இலா மறி தலை அறுப்பான் – நீலகேசி:1 35/1
மேல்


கோட்டத்தை (1)

ஆண்டை கோட்டத்தை அணைந்தது ஓர் அகல் இலை ஆலம் – நீலகேசி:1 62/1
மேல்


கோட்டது (1)

களி யானை நால் கோட்டது ஒன்று உடைய செல்வன் கண் ஒர் ஆயிரம் உடையான் கண் விளக்கம் எய்தும் – சூளாமணி:11 1906/1
மேல்


கோட்டம் (2)

காமன் நல் கோட்டம் சூழ கன மதில் இலங்கும் வாயில் – உதயணகுமார:3 155/1
கூளிதாய்க்கு என ஆக்கிய கோட்டம் ஒன்று உளதே – நீலகேசி:1 32/4
மேல்


கோட்டன (1)

மத மழை பொழிவன வயிர கோட்டன
கதம் அழல் எழ உமிழ் தகைய காண் நில – சூளாமணி:11 1881/2,3
மேல்


கோட்டால் (1)

பெறு மத யானை கோட்டால் பெருநகர் அழித்தது அம்மா – உதயணகுமார:1 90/4
மேல்


கோட்டி (5)

கோள் நின்ற மதியம் போல குழை முகம் சுடர கோட்டி
தாள் நின்ற குவளை போதில் தாது அகம் குழைய மோந்து – சூளாமணி:8 982/1,2
குயிலொடு மாறுகொள்வார் குழை முகம் சுடர கோட்டி
கயிலொடு குழல் பின் தாழ கண்டு நீர் கொள்-மின் என்று ஆங்கு – சூளாமணி:10 1641/2,3
கோல மென் துகில்கள் தாங்கி குழை முகம் சுடர கோட்டி
வேலை_நீர்_வண்ணன் முன்னர் நாணினால் மெலிவு சென்றார் – சூளாமணி:10 1679/3,4
கந்தருவ கோட்டி உள்ளார் கண் கனிய நாடகம் கண்டு – சூளாமணி:11 2052/1
கார் தங்கும் மயில்_அனையார் காமம் சேர் கனி கோட்டி
தார் தங்கு வரை மார்ப தம் உருவின் அகலாரே – சூளாமணி:11 2054/3,4
மேல்


கோட்டிடை (1)

கூற்று உரு எய்தி ஓடி கோட்டிடை குடர்கள் ஆட – உதயணகுமார:1 89/1
மேல்


கோட்டியுள் (1)

மிடைந்தவர் தொடங்கிய வீர கோட்டியுள்
அடைந்தவர் அடு படைக்கு அஞ்சல் வேண்டுமோ – சூளாமணி:9 1382/3,4
மேல்


கோட்டியோடு (1)

இன்னன நகை மொழி இன்ப கோட்டியோடு
அன்ன மெல் நடையவள் அமர ஆயிடை – சூளாமணி:8 1055/1,2
மேல்


கோட்டின் (3)

குஞ்சரத்தின் நல் கோட்டின் வாள் ஒடிய அ – உதயணகுமார:1 57/2
வேந்தனும் கேட்டு வந்து வெண் கோட்டின் அடிவைத்து ஏறி – உதயணகுமார:6 330/1
இரும்பு உடை வயிர கோட்டின் இடையன பயிரி நீக்கி – சூளாமணி:8 929/2
மேல்


கோட்டின (2)

மணி மருங்கு உடையன வயிர கோட்டின
அணி மருங்கு அருவிய வரைகள் அன்னவால் – சூளாமணி:8 956/1,2
மணி மருங்கு உடையன வயிர கோட்டின
அணி மருங்கு அருவிய அரச வேழமே – சூளாமணி:8 956/3,4
மேல்


கோட்டினால் (1)

கூட மாளிகைகள் எல்லாம் கோட்டினால் குத்தி செம்பொன் – உதயணகுமார:1 88/1
மேல்


கோட்டினில் (1)

விடு பல் கோட்டினில் வெட்டி விட்டிட – உதயணகுமார:6 312/3
மேல்


கோட்டு (7)

பெருந்தகை ஏவி கோட்டு பெரும் கையால் தோட்டி கொண்டான் – உதயணகுமார:1 98/4
குடரின் மாலைகள் கோட்டு அணிந்து உடன் – உதயணகுமார:6 314/2
மதி நக உரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதி – சூளாமணி:6 504/2
விண் உயர் விளங்கு கோட்டு விடு சுடர் விளங்கமாட்டா – சூளாமணி:6 554/1
மங்கல வடிவின் வந்த வலன் உயர் வயிர கோட்டு
செம் களி விதிர்த்த போலும் செம் பொறி சிறு கண் வேழம் – சூளாமணி:8 925/2,3
மங்கல வயிர கோட்டு வலம்கொள வரைந்து மற்று – சூளாமணி:8 930/2
மருள் திறம் இலன் அறி இனி அரு வரை நெடும் கோட்டு
உருட்டுவேன் என உயர் தவத்தவன் முன்னை உரைக்கும் – நீலகேசி:1 47/3,4
மேல்


கோட்டுப்பூ (1)

கோட்டுப்பூ நிறைந்து இலங்கும் கொடி வகை பூவும் கோலம் – உதயணகுமார:3 153/1
மேல்


கோட்டை (3)

மாற்ற அரும் கோட்டை வாயில் மதில்புறம் போந்தது அன்றே – உதயணகுமார:1 89/4
எண்கள் தாம் நவின்ற ஈர் எண் கொடி மதில் கோட்டை கட்டி – சூளாமணி:12 2116/3
இல்லாத கோட்டை உளதாக எடுத்தும் என்று – நீலகேசி:4 405/1
மேல்


கோட்டையுள் (1)

கொடி புலிமுகத்து வாயில் கோட்டையுள் கொண்டுவந்தான் – உதயணகுமார:1 100/3
மேல்


கோடக (1)

சொரி கதிர் கோடக முடிகள் தோன்றலால் – சூளாமணி:9 1397/3
மேல்


கோடணை (1)

தார் அணி வள நகர் அறைக கோடணை
தோரணம் திசை-தொறும் சுடர நாட்டுக – சூளாமணி:8 902/2,3
மேல்


கோடல் (8)

வரவு சீர் குருகுலத்தின் வண்மை யான் கோடல் வேண்டி – உதயணகுமார:4 210/3
கோமானே எனவே என்னை கோடல் நீ வேண்டும் என்றும் – உதயணகுமார:4 212/1
அணங்கு அமர்வன கோடல் அரிது அவை பிறர் கோடல் – சூளாமணி:7 751/1
அணங்கு அமர்வன கோடல் அரிது அவை பிறர் கோடல்
வணம் கிளர்வன தோன்றி வகை சுடர்வன தோன்றி – சூளாமணி:7 751/1,2
பணியின் அமைத்திடல் குறிப்பில் பல உருவும் நனி கோடல்
துணிவு அமையும் நெடு வேலோய் சுரர் உடைய குணங்களே – சூளாமணி:11 2056/3,4
குரு உடையன கொடி மிடைவொடு குலை விரிவன கோடல்
தரு சுடரன தளவு அயலின தகை மலரன தோன்றி – நீலகேசி:1 15/1,2
கொல்லை முல்லை பைம் கோங்கு குருந்தம் கோடல் தண் குரவம் – நீலகேசி:2 150/1
போழ்ந்து கோடல் பொருந்தலது ஒக்குமே – நீலகேசி:5 546/4
மேல்


கோடலினால் (1)

புள்ளின் உரையும் பொருளாம் என கோடலினால்
எள்ளும் திறத்த அஃது உரை என்று இது நீக்கல் இன்றாய் – நீலகேசி:0 7/2,3
மேல்


கோடலும் (3)

கொன்றையும் குருந்தும் குலை கோடலும்
முன்றில் ஏறிய முல்லை அம் பந்தரும் – சூளாமணி:1 18/1,2
அத்து இட்டு ஆடை கோடலும் அமையும் என்ன நீங்கலும் – நீலகேசி:4 356/1
சேய்த்து என கோடலும் சேராது ஒலி செவிக்கண்ணது எனின் – நீலகேசி:5 517/2
மேல்


கோடலை (1)

கூயக்கால் அறம் கோடலை ஒட்டு என – நீலகேசி:10 887/4
மேல்


கோடி (15)

வந்து உடன் வணங்கும் வானோர் மணி புனை மகுட கோடி
தம் திரு_அடிகள் ஏந்தும் தமனிய பீடம் ஆக – யசோதர:1 42/1,2
எய்தும் வெம் துயர் எனை பல கோடி கோடியின் உறு பழி தீர்ந்தேன் – யசோதர:5 322/2
கோடி கைத்தலத்தன குளிர் மணி பிணையலே – சூளாமணி:6 467/4
கொண்ட கோல நீர ஆய கோடி மாடம் மேல் எலாம் – சூளாமணி:6 479/2
வண்டு அவாம் குவளை கண்ணி மன்னர்-தம் மகுட கோடி
விண்டவாம் பிணையல் உக்க விரி மது துவலை மாரி – சூளாமணி:6 557/1,2
கோடி மென் துகில் குய்ய தடம் படிந்து – சூளாமணி:7 621/2
செழும் மணி சிகர கோடி சித்திரகூடம் எல்லாம் – சூளாமணி:7 765/4
ஒட்டிய கலிங்க தாள் மேல் திரைத்து உடுத்து உருவ கோடி
பட்டிகை பதைப்ப யாத்து பரட்டையம் நரல வீக்கி – சூளாமணி:8 842/1,2
கொழும் திரள் வயிர கோடி கூர் முளை செறித்து செம்பொன் – சூளாமணி:8 853/1
மங்கல வனப்பினது ஒர் கோடி மடி தாங்கி – சூளாமணி:8 1093/1
குறுகினன் கோடி மா சிலை வன் குன்றமே – சூளாமணி:9 1511/4
கோடி குன்றம் கோடு இயல் போலும் குவவு தோள் – சூளாமணி:9 1521/1
கோடி குன்ற மன்னவன் ஏறி குளிர்வித்தான் – சூளாமணி:9 1521/4
கோடி சிலை எடுத்தான் கோள் அரிமா வாய் போழ்ந்தான் – சூளாமணி:10 1660/1
கோடி குதர்க்கம் உரைத்து குணங்களை – சூளாமணி:11 1978/3
மேல்


கோடிக்குன்றம் (2)

கோடிக்குன்றம் கொண்டு அது மீட்டே கொள நாட்டி – சூளாமணி:9 1521/2
கோடிக்குன்றம் போந்து என நின்ற கொலை வேழம் – சூளாமணி:9 1521/3
மேல்


கோடிகங்களும் (1)

கொந்து மொய் மலர் நிறை கோடிகங்களும்
உந்தி ஒன்று ஒன்றினை ஊன்றுகின்றவே – சூளாமணி:11 1885/3,4
மேல்


கோடிகமொடு (1)

பொற்பு அமை செம் கோடிகமொடு ஆடை புதைவுற்ற – சூளாமணி:8 870/2
மேல்


கோடிகள் (1)

அல்லல் எனை பல ஆயிர கோடிகள்
எல்லை_இல் துன்பம் இவற்றின் இரு மடி – சூளாமணி:11 1943/2,3
மேல்


கோடிய (1)

கோடிய நிலையின் முன்னால் குஞ்சித்த வடிவன் ஆகி – சூளாமணி:10 1566/2
மேல்


கோடியர் (1)

மாறுகொண்ட கோடியர் மணி முழா முழங்கலின் – சூளாமணி:7 796/2
மேல்


கோடியவாய் (1)

எண்_இல் பல் கோடியவாய் அ இரண்டொடு மூக்கு உடைய – நீலகேசி:1 79/2
மேல்


கோடியின் (1)

எய்தும் வெம் துயர் எனை பல கோடி கோடியின் உறு பழி தீர்ந்தேன் – யசோதர:5 322/2
மேல்


கோடியும் (1)

ஆடகம் ஆயிர கோடியும் அல்லது – சூளாமணி:7 663/2
மேல்


கோடியோ (1)

திண்ணதா வைது தீ_வினை கோடியோ – நீலகேசி:4 323/4
மேல்


கோடு (16)

நலமுறு வடிவு நோக்க நாகத்தின் கோடு பாய்ந்த – உதயணகுமார:1 82/2
கோடு உடைந்து_அன தாழையும் கோழ் இருள் – சூளாமணி:1 20/1
கோலும் பீலிய கோடு உயர் குன்றின் மேல் – சூளாமணி:1 21/2
கோடு உயர் குன்று என குலவு தோளினன் – சூளாமணி:3 76/3
குஞ்சர குழவி கவ்வி குளிர் மதி கோடு போலும் – சூளாமணி:3 95/1
வரையின் மேல் மதி கோடு உற வைகிய – சூளாமணி:4 130/1
ஆடும் மஞ்ஞை கோடு கொள்வது என்னல் ஆவது ஆயினார் – சூளாமணி:6 478/4
கோயில் முகத்தது கோடு உயர் சூளிகை – சூளாமணி:7 658/1
கோடு இணர் குலைக்கு ஒசிந்த கொன்றை விண்ட தாது சோர்ந்து – சூளாமணி:7 794/3
குழையவள் ஒளி மனம் கவர கோடு உயர் – சூளாமணி:8 1130/2
கோடு உடைந்து உதிர்ந்தன கொடு முள் கேதகை – சூளாமணி:9 1398/3
கோடி குன்றம் கோடு இயல் போலும் குவவு தோள் – சூளாமணி:9 1521/1
கோடு இலங்கும் நெடு வரை மேல் குடை வேந்தர் இவர் குணங்கள் கூற கேட்பின் – சூளாமணி:10 1821/3
கோடு உயர் கோபுர வாய்தல் சேர்ந்து தன் – சூளாமணி:11 1890/1
கொல் ஏற்றின் கோடு குழக்கன்று அது ஆயின் அக்கால் – நீலகேசி:4 402/1
குன்றும் தலையுள் பெறப்பாடு எய்தல் கோடு உறுப்பா – நீலகேசி:4 404/2
மேல்


கோடும் (3)

வாலமும் கோடும் வளை பல்லும் பெற்ற வடிவினராய் – நீலகேசி:1 85/2
காட்டி உரைப்பின் நின் காட்சியை கோடும்
கடவுள் குழாத்தார்-தம் காழ்ப்பு எலாம் கோடும் – நீலகேசி:6 699/4,5
கடவுள் குழாத்தார்-தம் காழ்ப்பு எலாம் கோடும் – நீலகேசி:6 699/5
மேல்


கோடை (1)

கோது_இலா மாரி பெய்த கோடை அம் குன்றம் ஒத்தான் – சூளாமணி:9 1170/4
மேல்


கோணை (3)

கோணை நூற்று அடங்கமாட்டா குணம்_இலார் குடர்கள் நைய – சூளாமணி:5 259/1
கோணை நூற்பவரை தன் சொல் குறிப்பின் மேல் நிறுத்த வல்லான் – சூளாமணி:5 301/2
கோணை செய் குறும்பு கூர் மடங்கும் ஆறு போல் – சூளாமணி:8 1066/2
மேல்


கோத்து (4)

பாய் கதிர் பளிங்கில் கோத்து பரு மணி வயிரம் சூழ்ந்த – சூளாமணி:8 854/1
செம்பொன் செய் கிடுகு கோத்து திகிரி-வாய் புளகம் சேர்த்தி – சூளாமணி:8 914/1
பொன் அவிர் தொடர் கண்விட்டு புறத்து கால் புரோசை கோத்து
மன்னவன் அருளுமாறு மங்கல கோலம் செய்வான் – சூளாமணி:8 928/2,3
துணங்கை கோத்து ஆடி நக்கு சுடர் இலை சூலம் ஏந்தி – சூளாமணி:9 1428/2
மேல்


கோதலால் (1)

கோதலால் நெரிந்த தாது கால் குடைந்து கொண்டு உறீஇ – சூளாமணி:6 492/2
மேல்


கோதாய் (4)

துளங்கு வார் குழை துவர் இதழ் துடி இடை சுடர் நுதல் சுரி கோதாய்
விளங்கு வெம் கதிர் விலங்கிய விசும்பிடை இயங்குதல் புலன்கொள்ளா – சூளாமணி:8 885/1,2
தேம் கமழ் ஒலி கோதாய் சித்தமே அல்லது இல்லை – நீலகேசி:3 259/2
வண்டு ஆயும் கோதாய் வரை நெல்லியின் காயது அங்கை – நீலகேசி:4 398/1
ஏலம் கொள் கோதாய் எதிர்காலத்தில் இன்மையாமேல் – நீலகேசி:4 418/3
மேல்


கோதி (1)

கொடு வாய கிளி கோதி குளிர் நறும் போது உகுத்தனவே – சூளாமணி:4 171/4
மேல்


கோதியிட்டு (1)

கோதியிட்டு உள்ளது எல்லாம் குண்டலகேசி என்பாள் – நீலகேசி:4 447/1
மேல்


கோது (16)

கோது_அறு குணங்கள் பெய்த கொள்கலம் அனையர் ஆகி – யசோதர:1 56/2
கோது அவிழ்ந்திட்ட உள்ள குணவதி கொம்பு_அனாளே – யசோதர:2 106/4
பெண்களில் கோது_அனாளே பெரிய பாவத்தள் என்றார் – யசோதர:2 154/4
கோது_இல் மாலைகள் மேல் குதிகொண்டு எழு – சூளாமணி:5 344/1
கோது_இலா முனிவன் சொன்ன உரை இவை கூற கேட்டாம் – சூளாமணி:5 355/4
கோது_இலா குணங்கள் தேற்றி கொழித்து உரை கொளுத்தல் என்றான் – சூளாமணி:6 566/4
கோது_இல் கேள்வியான் தொழுது கூறினான் – சூளாமணி:7 576/4
கோது_இலார் குல மக்கள் மாக்கள் மற்று – சூளாமணி:7 597/1
கோது_இலா குணம் புரி குன்று_அனாற்கு ஒரு – சூளாமணி:8 910/3
கோது_இலா குண கொம்பு_அன்னாள் குறு நகை முறுவல் கொண்டாள் – சூளாமணி:8 1003/4
கோது என கொள்-மின் என்று ஒருத்தி கூறினாள் – சூளாமணி:8 1049/4
கோது_இலா மாரி பெய்த கோடை அம் குன்றம் ஒத்தான் – சூளாமணி:9 1170/4
கோது_இலா திறல் சில கூறப்பட்டவே – சூளாமணி:9 1507/4
கோது கொண்ட வடிவின் தடியாலே – சூளாமணி:10 1573/3
கோது_இல் தூய்மைய ஆம் என கூறியும் – நீலகேசி:5 558/2
கோது_இல் அங்கு ஓர் குறி உயிரே கொள்ளின் நும் கோள் அழிவாம் அ – நீலகேசி:5 567/2
மேல்


கோது_அறு (1)

கோது_அறு குணங்கள் பெய்த கொள்கலம் அனையர் ஆகி – யசோதர:1 56/2
மேல்


கோது_அனாளே (1)

பெண்களில் கோது_அனாளே பெரிய பாவத்தள் என்றார் – யசோதர:2 154/4
மேல்


கோது_இல் (4)

கோது_இல் மாலைகள் மேல் குதிகொண்டு எழு – சூளாமணி:5 344/1
கோது_இல் கேள்வியான் தொழுது கூறினான் – சூளாமணி:7 576/4
கோது_இல் தூய்மைய ஆம் என கூறியும் – நீலகேசி:5 558/2
கோது_இல் அங்கு ஓர் குறி உயிரே கொள்ளின் நும் கோள் அழிவாம் அ – நீலகேசி:5 567/2
மேல்


கோது_இலா (6)

கோது_இலா முனிவன் சொன்ன உரை இவை கூற கேட்டாம் – சூளாமணி:5 355/4
கோது_இலா குணங்கள் தேற்றி கொழித்து உரை கொளுத்தல் என்றான் – சூளாமணி:6 566/4
கோது_இலா குணம் புரி குன்று_அனாற்கு ஒரு – சூளாமணி:8 910/3
கோது_இலா குண கொம்பு_அன்னாள் குறு நகை முறுவல் கொண்டாள் – சூளாமணி:8 1003/4
கோது_இலா மாரி பெய்த கோடை அம் குன்றம் ஒத்தான் – சூளாமணி:9 1170/4
கோது_இலா திறல் சில கூறப்பட்டவே – சூளாமணி:9 1507/4
மேல்


கோது_இலார் (1)

கோது_இலார் குல மக்கள் மாக்கள் மற்று – சூளாமணி:7 597/1
மேல்


கோதுகம் (1)

கோதுகம் யாவர் கொண்டாடுவார் என – சூளாமணி:12 2104/3
மேல்


கோதுகின்ற (1)

கோதுகின்ற போது கொண்டு சிந்தி நம்பிமார்களை – சூளாமணி:6 491/2
மேல்


கோதுபு (1)

குதி மகிழ்வன குவி குடையன நுதி கோதுபு குயில்கள் – சூளாமணி:6 436/2
மேல்


கோதை (38)

கோதை உத்தரியம் கொண்ட கோலத்தன் – உதயணகுமார:1 76/1
குவி முலை நல் கோதை அன்பு கூர்ந்து உடன் புணர்ந்ததும் – உதயணகுமார:2 128/4
கொங்கு உலவ கோதை பொன் குழை இலங்கு நல் முகம் – உதயணகுமார:2 144/2
பருவம் மிக்கு இலங்கும் கோதை பதுமை தேர் ஏறி வந்து – உதயணகுமார:3 157/1
கடி மலர் கோதை மன்னன் காவி நல் விழி மானீகை – உதயணகுமார:4 238/2
நல் தவன் உரைத்த சொல்லை நறு மலர் கோதை கேட்டு – நாககுமார:1 39/1
புண் தவழ் வேல் கண் கோதை பூரண மயற்கை சின்னம் – நாககுமார:2 48/1
நறு மலர் கோதை வேலான் நாக நல் குமரன் கண்டு – நாககுமார:3 81/2
புனை மலர் கோதை நல்லாள் பொற்பு உடை வசுமதிக்கு – நாககுமார:5 146/3
தோடு அலர் கோதை மாதர் துயரியில் தொடுத்து எடுத்த – யசோதர:2 88/1
மான கோதை மாசு_அறு வேலோய் வரவு எண்ணி – சூளாமணி:5 310/1
நான கோதை நங்கை பிறந்த நாளானே – சூளாமணி:5 310/2
கண் ஆர் கோதை காமரு வேய் தோள் கனக பேர் – சூளாமணி:5 315/1
கை ஆர் எஃகில் காளைகள்-தம்முள் கமழ் கோதை
மெய்யா மேவும் மேதகுவானை மிக எண்ணி – சூளாமணி:5 318/2,3
கொண்டு அமர்ந்து அகில் புகை கழுமி கோதை வாய் – சூளாமணி:5 379/1
சூடுவான் தொடுத்த கோதை சூழ் குழல் மறந்து கண் – சூளாமணி:6 482/3
வேய்ந்து அகம் நிழற்றும் கோதை மிளிர் மணி கலாப வட்டம் – சூளாமணி:6 537/1
ஆய்ந்து அகம் கமழும் கோதை அவள் பெற்ற அரச சிங்க – சூளாமணி:6 537/3
கூடிவிட்டு இடையாரன கோதை மேல் – சூளாமணி:8 890/3
தழு மலர் கோதை நல்லார் பலாண்டு இசை ததும்ப வாழ்த்த – சூளாமணி:8 967/3
கள் ஒளி கமழும் கோதை மகளிர்கள் கவரி வீச – சூளாமணி:8 968/3
புது நனை விரிந்த கோதை பொன்_அனாள் புலம்பு கொண்டாள் – சூளாமணி:8 990/4
குழலை யான் திருத்தி கோதை சூட்டுவன் குறிப்பு உண்டாயின் – சூளாமணி:8 1022/1
சேறு உடை கோதை மேலால் சிறந்து வார் கூந்தல் கையால் – சூளாமணி:8 1023/3
தேன் ஆர் கோதை செங்கயல் வாள் கண் சிறைகொள்ள – சூளாமணி:8 1124/1
குரவர் என்னும் உபசாரம் இருக்க கோதை மிளிர் வேலாய் – சூளாமணி:9 1340/1
கோதை சரிய கொடி மருங்குல் ஏர் அழிய – சூளாமணி:9 1471/1
தொழுதும் சூழ்ந்தும் அடி பற்றி தொடர்ந்தும் சுரும்பு உண் கோதை நிலை – சூளாமணி:9 1482/1
முலை முகம் நெருங்க புல்லி முருகு வேய் கோதை சூட்டி – சூளாமணி:10 1667/2
மிலை புனை கோதை சோர விடு புணை தழுவுவாரும் – சூளாமணி:10 1673/3
தாது ஆர் கோதை தாயரொடு ஆயம் புடை சூழ – சூளாமணி:10 1747/3
கொங்கை சேர்ந்த குங்குமத்தின் குழம்பும் கோதை கொய் தாதும் – சூளாமணி:10 1750/3
புனைவு-தான் இகந்த கோதை பொன்_அனாள் பூமி பாலர் – சூளாமணி:10 1827/1
குழல் வலம் புரிந்த கோதை குழை முகம் வியர்ப்ப வேட்டான் – சூளாமணி:10 1836/2
மது ஒன்றும் கோதை மலர் அன்ன கண்ணாய் – நீலகேசி:1 109/1
கோதை வார் குழல் குண்டலகேசியே – நீலகேசி:2 206/4
நறையில் பொலி கோதை நறு_நுதலே – நீலகேசி:5 485/4
அல்லி அம் கோதை நின் காட்சி அழித்திடுவேன் எனத்-தான் – நீலகேசி:5 494/4
மேல்


கோதை-தன் (1)

பாயினும் பனிக்கும் படர் கோதை-தன்
வேயினும் பணைக்கின்ற மென் தோள் பிறர் – சூளாமணி:5 334/2,3
மேல்


கோதை-தன்னை (2)

மட்டு அவிழ் கோதை-தன்னை மன்னவ_குமரன் கண்டு – உதயணகுமார:5 257/1
மனம் மகிழ் கோதை-தன்னை மருவிய காதலாலே – நாககுமார:2 40/2
மேல்


கோதை-வாய் (1)

கொங்கை-வாய் குங்கும குழம்பும் கோதை-வாய்
மங்கைமார் சிதர்ந்தன வாச சுண்ணமும் – சூளாமணி:10 1683/1,2
மேல்


கோதைகளில் (1)

கோதைகளில் யாத்து இவனை நீர் கொணர்-மின் என்றாள் – சூளாமணி:10 1614/3
மேல்


கோதைகளும் (2)

கொந்து ஆடும் பூம் குழலும் கோதைகளும் ஆட கொய் பொலம் துகில் அசைத்த கொய்சகம் தாழ்ந்து ஆட – சூளாமணி:10 1754/2
கொந்து அவிழும் பூம் குழலும் கோதைகளும் மூழ்கும் குவளை வாள் கண்ணி வரு குறிப்பு அறியமாட்டாள் – சூளாமணி:10 1755/4
மேல்


கோதைமார்களோடு (1)

கொங்கு வார் மலர் தடத்து அமர்ந்த கோதைமார்களோடு
அங்கராகம் வீற்றிருந்து அணிந்த ஆரம் மாகுலாய் – சூளாமணி:6 488/1,2
மேல்


கோதையர் (6)

நறு மலர் நல் கோதையர் நான்கிருநூற்றிருபதும் – உதயணகுமார:3 175/2
குழல் அகம் குடைந்து வண்டு உறங்கும் கோதையர்
மழலையும் யாழுமே மலிந்த மாடமே – சூளாமணி:1 10/3,4
வில தகை பூம் துணர் விரிந்த கோதையர்
நல தகை சிலம்பு அடி நவில ஊட்டிய – சூளாமணி:2 47/1,2
விரை அமர் கோதையர் வேணு கோலினர் – சூளாமணி:3 90/1
தோடு மல்கு சுரும்பு அணி கோதையர்
கோடி மென் துகில் குய்ய தடம் படிந்து – சூளாமணி:7 621/1,2
கள் கமழ் கோதையர் கணமும் மீண்டது – சூளாமணி:7 691/2
மேல்


கோதையரும் (1)

விழை தாரவரும் விரி கோதையரும்
முழை வாழ் புலியே மயிலே மொழியின் – நீலகேசி:5 465/3,4
மேல்


கோதையவள் (1)

போது புனை கோதையவள் பூம் பொழில் அணைந்தாள் – சூளாமணி:11 2029/4
மேல்


கோதையாய் (2)

கூடுமோ தணி கோதையாய்
காடு சேர் கனி காண்-தொறும் – சூளாமணி:10 1618/2,3
வீறு சேர் விரி கோதையாய்
சேறு சேர் கனி காண்-தொறும் – சூளாமணி:10 1619/2,3
மேல்


கோதையார் (1)

தொத்து இளம் கடி மலர் துதைந்த கோதையார்
மொய்த்து இளம் குமரரோடு ஆடும் முன்கடை – சூளாமணி:10 1715/1,2
மேல்


கோதையும் (3)

கோதையும் சுண்ண தாதும் குலைந்து உடன் வீழ மிக்க – உதயணகுமார:4 205/1
கோதையும் குழையும் தோடும் குளிர் முத்த வடமும் தாங்கி – சூளாமணி:8 995/3
கோதையும் குழைவு இன் பட்டின் கொய்சக தலையும் தாழ – சூளாமணி:10 1639/1
மேல்


கோதையை (1)

தேரன் சிறிதே தெரி கோதையை நக்கனனே – நீலகேசி:4 412/4
மேல்


கோதையோடு (1)

ஓடும் மேல் எருத்திடை குலைந்த கோதையோடு உலாய் – சூளாமணி:6 478/2
மேல்


கோபத்தின் (1)

மன்னனும் மடந்தை-தானும் மதன கோபத்தின் மாறாய் – யசோதர:2 93/3
மேல்


கோபத்து (1)

ஆய கோபத்து அடர்த்து ஒரு வன் தகர் – யசோதர:3 188/2
மேல்


கோபம் (1)

பா இதழ் பரப்பின் மேல் அரத்த கோபம் ஊர்ந்து அயல் – சூளாமணி:7 793/3
மேல்


கோபி (1)

சண்ட கோபி தகவு_இலி தத்துவம் – யசோதர:1 18/1
மேல்


கோபுர (3)

வயிர வேதிகை மலைவது கோபுர வாய்-தலின் படி தீண்டி – சூளாமணி:8 879/3
நகை மணி கோபுர வாயில் நான்கொடு – சூளாமணி:10 1774/2
கோடு உயர் கோபுர வாய்தல் சேர்ந்து தன் – சூளாமணி:11 1890/1
மேல்


கோபுரமும் (2)

கோபுரமும் கழிந்து குளிர் நகரை வலம்கொடு வீதி குடையோன் செல்ல – சூளாமணி:9 1529/1
கொடி மகர கோபுரமும் நெடு மதிலும் குடிஞைகளும் – நீலகேசி:4 268/1
மேல்


கோமகன் (2)

கொடி மலர் காவு-தன்னுள் கோமகன் இருந்த போழ்தில் – நாககுமார:4 110/4
ஆங்கு அமர்ந்து அமைச்சரோடு அரைசர்_கோமகன் – சூளாமணி:5 241/1
மேல்


கோமான் (22)

இஞ்சி மூன்று உடைய கோமான் எழில் வீரநாதன் இந்த – உதயணகுமார:1 5/1
கொல்லாத நல் விரத கோமான் நினை தொழுதார் – நாககுமார:1 36/1
கோமான் அவையுள் தெருண்டார் கொளப்பட்டது அன்றே – சூளாமணி:0 4/4
வழி முறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான்
விழு மலர் அடி-கண் மிக்க அன்பினார் வென்றி நீரார் – சூளாமணி:3 98/1,2
ஆங்கு அவன் அரசர்_கோமான் குறிப்பு அறிந்து அருளப்பட்டீர் – சூளாமணி:3 104/1
கோமான் சென்று அணைதலுமே கொங்கு அணிந்த மலர் தூவி – சூளாமணி:4 169/1
ஆழி கோமான் அச்சுவகண்டன் அவனுக்கே – சூளாமணி:5 314/1
சஞ்சயம் உடைய கோமான் தாள்முளை தரணி எல்லாம் – சூளாமணி:5 329/2
தீட்ட அரும் திலத கண்ணி செறி கழல் அரசர்_கோமான் – சூளாமணி:6 517/1
நாந்தக கிழவர் கோமான் நயம் தெரி மனத்தன் ஆனான் – சூளாமணி:7 666/4
அந்தரத்து அமரர் கோமான் அணிந்து போந்து அனைய நீரான் – சூளாமணி:8 833/4
அம் கலம் மலர்ந்த தோன்றல் அரிபுரத்தவர்கள் கோமான்
பொங்கு அலர் அணிந்த பைம் தார் புலி பெயர் பொலம் கொள் தேரான் – சூளாமணி:8 844/1,2
மணி வரை பிறந்து மாண்ட அரும் கலம் மன்னர் கோமான்
பணி வரை அன்றி யாரே பெறுபவர் பகர்-மின் என்றான் – சூளாமணி:9 1176/3,4
அரி குலத்து அரசர்_கோமான் அவிர் மணி ஆரம் தாங்கி – சூளாமணி:10 1788/2
கோலம் சேர் வரை வேலி குண்டலத்தார் கோமான் இ கொலை வேல் காளை – சூளாமணி:10 1811/2
சொரி மலர் தண் மலர் அணிந்த சோலை சூழ் சூரியத்தார் கோமான் தோலா – சூளாமணி:10 1812/1
கழை கரும்பு கண் ஈனும் கரபுரத்தார் கோமான் இ கதிர் வேல் காளை – சூளாமணி:10 1815/2
உண் துறை முன் விளையாடி இளையவர்கள் நடை பயிலும் உறந்தை கோமான்
கொண்டு அறையும் இடி முரசும் கொடி மதிலும் குளிர் புனலும் பொறியும் பூவும் – சூளாமணி:10 1816/2,3
அங்கநாடு உடையவர் கோன் அவ் இருந்தான் இவ் இருந்தான் அவந்தி கோமான்
கொங்கு வார் பொழில் அணிந்த கோசலத்தார் கோமான் இ குவளை_வண்ணன் – சூளாமணி:10 1819/1,2
கொங்கு வார் பொழில் அணிந்த கோசலத்தார் கோமான் இ குவளை_வண்ணன் – சூளாமணி:10 1819/2
இத்தலை அரசர்_கோமான் எரி கதிர் ஆழி வேந்தன் – சூளாமணி:10 1828/3
கோமான் முதலார் குணங்களில் குன்றிய குற்றத்தராய் – நீலகேசி:1 83/2
மேல்


கோமான்-தன் (1)

கொடி ஆடும் நெடு நகர கோமான்-தன் குணம் பரவி – சூளாமணி:4 171/1
மேல்


கோமானே (2)

கோமானே எனவே என்னை கோடல் நீ வேண்டும் என்றும் – உதயணகுமார:4 212/1
குணம் கொள் படையாய் கூடாரும் உளரோ நினக்கு கோமானே – சூளாமணி:9 1479/4
மேல்


கோமுகன் (2)

உகந்து பெற்றனள் ஓர் புகழ் கோமுகன் – உதயணகுமார:6 344/4
நழு_இல் காட்சியன் நாம வேல் கோமுகன்
ஒழிய நல் உயிர் ஓங்கி நீ ஆயினை – உதயணகுமார:6 346/3,4
மேல்


கோமுகன்-தனை (1)

கொதி நுனை வேலின் கோமுகன்-தனை
இதம் அளித்திடும் இளவரைசு என – உதயணகுமார:5 300/2,3
மேல்


கோமுகனுக்கு (1)

வத்தவன் இறைவனாக மன்னு கோமுகனுக்கு
வெற்றி நல் மணி முடியை வீறுடனே சூட்டியே – உதயணகுமார:6 356/1,2
மேல்


கோமுகனும் (1)

பரிவு ஆர் கோமுகனும் பாங்காம் தரிசகன் நாகதத்தன் – உதயணகுமார:5 253/3
மேல்


கோயில் (39)

அண்ணல் கோயில் எங்கணும் அரற்றினும் புலம்பினும் – உதயணகுமார:1 65/1
சென்று தன் கோயில் புக்கு சே இழை பதுமை-தன்னோடு – உதயணகுமார:4 194/2
பிடி மிசை மாதர் போந்து பெரு மண கோயில் புக்கார் – உதயணகுமார:4 238/1
பொன் எயிலுள் வீற்றிருக்கும் புனிதன் திரு_கோயில் – நாககுமார:2 46/1
அரிய நல் பரமன் கோயில் அன்புடன் போக எண்ணி – நாககுமார:2 50/2
சினம் மலி தேவி கோயில் திசைமுகம் அடுத்து சென்றான் – யசோதர:1 30/3
கொற்ற வேலவன் தன் கோயில் குளிர் மணி கூடம் ஒன்றில் – யசோதர:2 89/2
தாய் அமர் கோயில் எய்தி சந்திரமதி-தன் முன்னர் – யசோதர:2 132/2
அரைசனும் அமர்ந்து போகி அகநகர் கோயில் எய்தி – யசோதர:4 258/2
வரை உயர் மாட கோயில் மந்திரசாலை சேர்ந்தான் – சூளாமணி:3 110/4
இன் துணையவர்கள்-தம் கோயில் எய்தினான் – சூளாமணி:3 117/4
கோன் உயர் வள நகர் கோயில் முன்னினாள் – சூளாமணி:4 218/4
அவ்வை-தன் கோயில் புக்கு அடிசில் உண்க என – சூளாமணி:4 226/3
அறிவரன் கோயில் எய்தி அணி விழவு அயர்த்த காலை – சூளாமணி:5 352/2
அந்தரம் திவளும் ஞாயில் கோயில் புக்கு அருளுக என்றார் – சூளாமணி:5 361/4
குளிர் முத்தம் நிழற்றும் கோயில் பெரும் கடை குறுக சென்றார் – சூளாமணி:6 507/4
கொற்ற வேலவன் கோயில் மா நெதி – சூளாமணி:7 573/2
கோயில் முகத்தது கோடு உயர் சூளிகை – சூளாமணி:7 658/1
நலம் கிளர் பசும்பொன் கோயில் நகுகின்ற நகரம் எல்லாம் – சூளாமணி:7 763/4
கொம்பு_அனார் அடி தொழ கோயில் எய்தலும் – சூளாமணி:7 819/2
கிளர் ஒளி மாட கோயில் கின்னரர் கெழுவல் ஓவா – சூளாமணி:8 830/1
கொற்றவன் கொடி கோயில் புறம்பணை – சூளாமணி:8 898/1
கொல் நவில் வேலினான்-தன் கோயில் முன் குவிக்க என்றான் – சூளாமணி:8 919/4
பொழிலகம் தழீஇய சோலை பொன் நகர் கோயில் புக்கு – சூளாமணி:8 967/2
மன்னனை வணங்கி அன்னோன் பணி கொண்டு மடந்தை கோயில்
இன் இசை மகளிர் முன் சென்று எதிர்கொள எய்தினாரே – சூளாமணி:8 996/3,4
வளம் தரு கோயில் முன்னி மணி_வண்ணன் பயந்த தேவி – சூளாமணி:8 1006/3
மற்று அவள் தொழுது போகி மணி_வண்ணன் மகிழ்ந்த கோயில்
சுற்றி நின்று எரியும் செம்பொன் சுடர் மணி வாயில் நண்ணி – சூளாமணி:8 1014/1,2
செம் சுடரோன் மறை பொழுதில் சினவரன்-தன் திரு_கோயில் சென்று சார்ந்தாள் – சூளாமணி:8 1035/4
மணி வரை அரசன் மற்றை வாழ் நகர் கோயில் புக்கான் – சூளாமணி:9 1545/1
தணி வரை இலாத செய்கை தத்தமக்கு இயன்ற கோயில்
அணி வரை அனைய திண் தோள் அருக்கனோடு அரசர் சேர்ந்தார் – சூளாமணி:9 1545/3,4
மஞ்சு உடை மாட கோயில் வளை_வணன் புக்க பின்னை – சூளாமணி:9 1546/1
போவல் என்று நினையா புனை கோயில்
ஓவல்_இன்றி உடையாய் சிறிதேனும் – சூளாமணி:10 1581/2,3
பழுது உழை இலா பகல் கோயில் எய்தினான் – சூளாமணி:10 1687/4
சென்று தன் கோயில் சேர்ந்தான் செம் கதிர் திகிரியானும் – சூளாமணி:10 1699/3
கொடி படு நெடு நகர் கோயில் வீதி-வாய் – சூளாமணி:10 1767/1
மருவி சயம் கெழு கோயில் மலர்ந்து புக்கான் – சூளாமணி:10 1838/4
அரும்பு அணி அசோக நீழல் அடிகளது அணி பொன் கோயில்
விரும்பு அணி விழவு சாற்றி வியன் முரசு அறைக என்றான் – சூளாமணி:11 1864/3,4
வென்றவன் கோயில் வலம்கொண்டு மீண்டும் ஒர் – சூளாமணி:11 1913/3
குழியுள் உந்துதல் கோயில் கலம்செய்தல் – நீலகேசி:5 540/2
மேல்


கோயில்-கண் (1)

கோயில்-கண் அருகு செல்லும் குமரரை காட்டினாளே – சூளாமணி:8 976/4
மேல்


கோயில்-தன்னுள் (1)

மருவிய விச்சை-தன்னால் மன்னவன் கோயில்-தன்னுள்
மருவினர் மறைந்து சென்றார் மன்னவன் தாதை வைத்த – உதயணகுமார:3 162/2,3
மேல்


கோயில்-தன்னை (1)

பன்னுரை செய்து காட்டி பரமன்-தன் கோயில்-தன்னை
இன் இயல் வலம்கொண்டு எய்தி ஈசனை இறைஞ்சினானே – நாககுமார:1 14/3,4
மேல்


கோயிலது (1)

தேவி அமர் கோயிலது செவ்வனம் அடைந்தாள் – சூளாமணி:8 862/4
மேல்


கோயிலுக்கு (1)

பாவைமார்-தங்களை பாவை கோயிலுக்கு
ஏவி ஆங்கு இருந்த பின் இறைவற்கு இன்னணம் – சூளாமணி:10 1727/2,3
மேல்


கோயிலும் (2)

கொட்டில் சேர்ந்தன கோன் உறை கோயிலும்
வட்டமாக வகுத்தனர் வான் உலகு – சூளாமணி:8 894/2,3
பள்ளி அம்பலமும் பகல் கோயிலும்
வள்ளல் நல் நகர் வாய் மலிவுற்றவே – சூளாமணி:8 896/3,4
மேல்


கோயிலை (2)

குல முறை வழிபடும் தெய்வ கோயிலை
வலம் முறை வந்தனன் வரலும் மா மணி – சூளாமணி:4 179/2,3
கோயிலை யான் புக விலக்கும் குறை என்னை முறை திருத்தும் – நீலகேசி:2 168/2
மேல்


கோரகையுள் (1)

கொள்ளும் ஆறும் தன் கோரகையுள் கஞ்சி – நீலகேசி:3 237/1
மேல்


கோல் (13)

கோல் தொழில் நடத்தி மன்னன் குறைவு இன்றி செல்லுகின்றான் – உதயணகுமார:4 187/4
கோல் இயல் அரசன் முன்னர் கூவுபு குலுங்கி வீழ – யசோதர:2 146/3
குலவு கோல் கோவலர் கொன்றை தீம் குழல் – சூளாமணி:1 34/3
செம் சுடர் முடியினாய் நின் கோல் இது செல்க என்றார் – சூளாமணி:3 101/4
ஒற்றை அம் தனி கோல் உலகு ஓம்பும் நாள் – சூளாமணி:4 140/2
கோல் வளைவுறாமல் காக்கும் கொற்றவன் நெடியனேனும் – சூளாமணி:5 243/2
என்று தன் மனத்தின் எண்ணி இலங்கு கோல் கையர் ஆகி – சூளாமணி:7 671/1
ஏதம் ஆங்கு இல்லை கோல் இறைவ என்றனர் – சூளாமணி:8 910/2
கோல் எதிர் கையவன் தொழுது கூறினான் – சூளாமணி:9 1251/4
அங்கு அதற்கு ஐந்து கோல் அளவின் ஆடரங்கு – சூளாமணி:10 1777/1
அம் கோல் வேல் அரசர் அடி பாராட்ட ஆள்கின்றான் – சூளாமணி:12 2129/4
கோல் திரள் ஒன்றாய் அதன் தலைக்கே உடன் – நீலகேசி:5 636/1
நிலை இலை கோல் இடை நீக்கலும் நீங்கும் – நீலகேசி:5 637/2
மேல்


கோல (22)

கொம்மை வண் மணி கோல கலினமா – உதயணகுமார:1 46/3
கொடி அணி மூதூர் கோல நல் வீதி – உதயணகுமார:1 77/1
முட்டு_இல் கோல வட்டணை முயன்று பத்தியிட்டு உடன் – உதயணகுமார:4 232/1
குளிர் இளம் தென்றல் வீச கோல முற்றத்து பந்தை – உதயணகுமார:5 256/3
கொள்ளியல் அமைந்த கோல குல்லக வேடம் கொண்ட – யசோதர:1 27/3
கொலை மலி கொடுமை-தன்னை குறைத்திடும் மனத்தில் கோல
சிலை மலி நுதலினார்-தம் காதலில் தீமை செப்பும் – யசோதர:1 71/3,4
கொவ்வை அம் துவர் இதழ் கோல வாயவட்கு – சூளாமணி:4 226/1
தாழி கோல போது அன கண்ணாள் தகுவாளோ – சூளாமணி:5 314/3
சூழி கோல சூழ் களி யானை சுடர் வேலோய் – சூளாமணி:5 314/4
கொற்றவன் சிறுவன் கோல குங்கும குவவு தோளான் – சூளாமணி:5 328/2
கொண்ட கோல நீர ஆய கோடி மாடம் மேல் எலாம் – சூளாமணி:6 479/2
விலகிய கதிர ஆகி விடு சுடர் வயிர கோல
திலகம் வீற்றிருந்த கண்ணி திரு முடி செல்வ என்றான் – சூளாமணி:6 534/3,4
கோல வாய் அரச காளை குங்கும குவவு தோளான் – சூளாமணி:8 979/2
கோல வால் வளை எயிறு இலங்க நக்கனன் – சூளாமணி:9 1262/3
குழை சுடர்ந்து இலங்கு தார் அரசர் கோல மாண் – சூளாமணி:9 1399/1
குழவி நாயிற்று எழில் ஏய்க்கும் குழம்பு ஆர் கோல குங்குமமே – சூளாமணி:9 1475/1
மை வரை ஒன்று கோல மணி தயங்கு அருவி தாழ – சூளாமணி:10 1664/1
கோல மென் துகில்கள் தாங்கி குழை முகம் சுடர கோட்டி – சூளாமணி:10 1679/3
குலம் புரி சிறுவனை தரித்து கோல மா – சூளாமணி:10 1710/1
கொண்டனர் இயற்றிய கோல செய்கையால் – சூளாமணி:11 1901/2
கோல மணி மால் குவடு குங்குமம் அடுத்தால் – சூளாமணி:11 2028/3
கொடிகளும் குடையும் கோல கவரியும் அமரர்-தங்கள் – சூளாமணி:12 2121/1
மேல்


கோலங்கள் (1)

கொட்டு ஆர்த்தார் செய்யும் கோலங்கள் வண்ணம் – நீலகேசி:1 130/4
மேல்


கோலத்தர் (1)

ஊட்டு அரக்கு உண்ட கோலர் ஒண் கோலத்தர்
ஓட்டு அரும் பொறி ஒற்றிய ஓலையர் – சூளாமணி:7 650/1,2
மேல்


கோலத்தன் (1)

கோதை உத்தரியம் கொண்ட கோலத்தன்
காதில் குழையினன் காலில் சதங்கையன் – உதயணகுமார:1 76/1,2
மேல்


கோலம் (13)

கோட்டுப்பூ நிறைந்து இலங்கும் கொடி வகை பூவும் கோலம்
காட்டும் நம் தேவி என்று கால் விசை நடவா மன்னன் – உதயணகுமார:3 153/1,2
கோலம் கார் அன்ன கூர் எயிறு ஆப்பியும் – உதயணகுமார:4 218/4
குலம் புரிந்தவர்க்கு எலாம் கோலம் ஆகுமே – சூளாமணி:5 417/4
குரு மணி கொம்பு_அனார் கோலம் செய்கவே – சூளாமணி:8 904/4
கொங்கு அலர் பெரும் படை கோலம் செய்கவே – சூளாமணி:8 904/4
மன்னவன் அருளுமாறு மங்கல கோலம் செய்வான் – சூளாமணி:8 928/3
ஆதலால் இவர்-தமது அரச கோலம் எம் – சூளாமணி:9 1493/3
ஈங்கு இவற்கு இசைந்த கோலம் இனிதினின் இயற்றுக என்றான் – சூளாமணி:10 1626/3
கோலம் சேர் வரை வேலி குண்டலத்தார் கோமான் இ கொலை வேல் காளை – சூளாமணி:10 1811/2
கொண்டு இயல் அணியொடு கோலம் தாங்கினார் – சூளாமணி:11 1873/4
கோலம்_இல் நோன்றல் குமானுயர்-தம்மையும் கூறுவன் கேள் – நீலகேசி:1 85/1
கோலம்_இல் குரங்கு ஆட்டி கொல்வார்களை – நீலகேசி:2 222/2
கோலம் சிதையும் என்று எண்ணெய் அட்டாள் என்னும் – நீலகேசி:5 635/2
மேல்


கோலம்_இல் (2)

கோலம்_இல் நோன்றல் குமானுயர்-தம்மையும் கூறுவன் கேள் – நீலகேசி:1 85/1
கோலம்_இல் குரங்கு ஆட்டி கொல்வார்களை – நீலகேசி:2 222/2
மேல்


கோலம்செய்து (2)

மன்னவன் தேவிமார்கள் மணவினை கோலம்செய்து
பின் அதனோடு சேர்த்தி பெருகிய களியர் ஆனார் – சூளாமணி:10 1628/2,3
கன்னி அம் கோலம்செய்து கதிர் மணி கலங்கள் தாங்கி – சூளாமணி:10 1631/3
மேல்


கோலமாம் (1)

குலத்தினும் குணத்தினும் கொண்ட கோலமாம்
நலத்தினும் நின்னொடு நிகர்க்கும் நன்மையன் – சூளாமணி:8 909/1,2
மேல்


கோலமான (1)

கோலமான குஞ்சி முதல் வாங்கி தவம்கொண்டனர் – உதயணகுமார:6 360/4
மேல்


கோலமோடு (1)

மென் மலர் அணி நகை மிளிரும் கோலமோடு
இன் மலர் இருநிதி_கிழவர் ஈண்டினார் – சூளாமணி:11 1877/3,4
மேல்


கோலர் (1)

ஊட்டு அரக்கு உண்ட கோலர் ஒண் கோலத்தர் – சூளாமணி:7 650/1
மேல்


கோலார் (1)

அம் பொன் செய் ஆழியானுக்கு உரைத்தனர் அரக்கு உண் கோலார் – சூளாமணி:9 1424/4
மேல்


கோலால் (1)

பறைந்து போய் மெல் கோலால் பல் எலாம் தூயவாம் – நீலகேசி:4 278/2
மேல்


கோலி (3)

தடம் சிறை வலத்தது கோலி தாம் தமது – சூளாமணி:8 1061/2
கொடும் சிலை குலவ கோலி குருதி நீர் வெள்ளம் ஓட – சூளாமணி:9 1197/2
மதி ஒரு பாலது ஆக வானவில் மருங்கு கோலி
புதியது ஓர் பருவ மேகம் போந்து எழுகின்றது ஒத்தான் – சூளாமணி:9 1438/3,4
மேல்


கோலினர் (1)

விரை அமர் கோதையர் வேணு கோலினர்
உரை அமர் காவல் பூண் கடையின் ஊடு போய் – சூளாமணி:3 90/1,2
மேல்


கோலினாய் (1)

செய்ய கோலினாய் செப்பலாவது அன்று – சூளாமணி:7 598/3
மேல்


கோலும் (5)

கோலும் பிச்சமும் கொண்டு பறந்தனன் – உதயணகுமார:1 42/4
கோலும் பீலிய கோடு உயர் குன்றின் மேல் – சூளாமணி:1 21/2
அற்றம்_இல் அரசும் கோலும் ஆபவர் அமைச்சர் அன்றே – சூளாமணி:5 244/4
குடி மிசை வெய்ய கோலும் கூற்றமும் பிணியும் நீர் சூழ் – சூளாமணி:5 269/1
கோலும் தலையும் உடன் இல்லையாம் எனின் – நீலகேசி:5 638/1
மேல்


கோலுமா (1)

அணியமும் ஆரமும் கொடிஞ்சும் கோலுமா
துணி வினை கவனமா துரக்கும் பாகரா – சூளாமணி:9 1403/1,2
மேல்


கோலொடு (1)

கவைத்த கோலொடு கட்டில் கடிஞை கா – நீலகேசி:10 863/1
மேல்


கோலோர் (2)

ஊட்டு இலங்கு உருவ கோலோர் தங்களுக்கு உரைத்த எல்லாம் – சூளாமணி:7 693/3
துன்ன அரும் கவை முள் கோலோர் சூழ்ந்து வந்து அணைக என்றான் – சூளாமணி:8 928/4
மேல்


கோவலர் (3)

ஏறு கொண்டு எறியும் பணை கோவலர்
கூறு கொண்டு எழு கொன்றை அம் தீம் குழல் – சூளாமணி:1 14/1,2
குலவு கோல் கோவலர் கொன்றை தீம் குழல் – சூளாமணி:1 34/3
ஏறு கொண்ட கோவலர் ஏந்து தண்ணவ குரல் – சூளாமணி:7 796/1
மேல்


கோவின் (1)

அந்தமாய் அமர்ந்த கோவின் அருள் புரி தீர்த்த காலம் – நாககுமார:1 1/3
மேல்


கோவும் (1)

சுற்றம் ஆயவரும் சூழ் நீர் சுரமைநாடு உடைய கோவும்
மற்று அவன் புதல்வர்-தாமும் வருக என வந்தார் மாற்றம் – சூளாமணி:9 1188/2,3
மேல்


கோவே (13)

அழல் கதிர் இலங்கும் செவ்வேல் அதிர் கழல் அரசர்_கோவே – சூளாமணி:5 258/4
மந்திரத்து அரசர்_கோவே மற்று அவன் வையம் காக்கும் – சூளாமணி:5 354/1
நாந்தக கிழவர் கோவே நமி என்பான் நலத்தின் மிக்கான் – சூளாமணி:6 537/4
வாள் ஒளி வயிரம் மின்னும் மணி முடி மன்னர் கோவே – சூளாமணி:9 1169/4
உற்றவாறு அறிய சொன்னான் ஒளி வரை அரசர்_கோவே – சூளாமணி:9 1188/4
சூழி மால் யானை வல்ல சுரமைநாட்டு இளைய கோவே – சூளாமணி:9 1458/4
அரைசர்_கோவே அடல் ஆழி வலவ ஆர்க்கும் தோலாதாய் – சூளாமணி:9 1473/1
இங்கு ஆரும் நிகர்_இல்லா இக்குவா குலத்து இறைவன் இருந்த கோவே – சூளாமணி:10 1802/4
ஒண் துறையும் மும்மூன்றும் உடைய கோவே இவனது எழிலும் காணாய் – சூளாமணி:10 1816/4
மாம் தளிர்கள் மருங்கு அணிந்த மணி அருவி குன்று உடைய மகதை கோவே – சூளாமணி:10 1818/4
பூ வடிவு கொண்டனவோ பொங்கு ஒளிகள் சூழ்ந்து புலம்கொளாவால் எமக்கு எம் புண்ணியர்-தம் கோவே – சூளாமணி:11 1903/4
வண்டு ஆர் அசோகின் நிழல்-வாய் அமர்ந்தாய் என்றும் வாழ்த்தினால் வாராயோ வானவர்-தம் கோவே – சூளாமணி:11 1910/4
குடை கெழு வேந்தர்கள் ஆகுவர் கோவே – சூளாமணி:11 1997/4
மேல்


கோவை (15)

கோவை வாய் குழல் அம் குளிர் கொம்பு_அனாள் – சூளாமணி:4 148/1
கோவை வண்டு ஊதுகின்ற குரவு எனும் குரை கொள் மாதர் – சூளாமணி:4 167/1
கலைத்-தலை தொடுத்த கோவை கண் நெகிழ்ந்து சிந்தலான் – சூளாமணி:6 484/3
குணம் நிரைத்து இசைத்த கீதம் கேட்டலும் மணி கொள் கோவை
கணம் நிரைத்து இலங்கும் காய் பொன் முடி மிசை ஈர்_ஐஞ்ஞாறு – சூளாமணி:6 543/2,3
கூடுநர் கோவை மணி கலை உக்கவும் – சூளாமணி:7 655/1
பாய்ந்து எழு சுடர் சங்கு ஈன்ற பரு மணி தரள கோவை
ஏந்து எழில் காகதுண்டம் மருப்பு இணை கவரி கற்றை – சூளாமணி:7 677/2,3
கோவை அம் குழு நிலை மாடம் யாவையும் – சூளாமணி:7 817/3
அணி தொழில் ஆர கோவை ஆடக கொடிஞ்சி அம் பொன் – சூளாமணி:8 841/2
சுற்றும் தாது அணிந்து காமர் சூழ் மணி கோவை சூழ்ந்து – சூளாமணி:8 915/2
பொன் அணிகலத்தின் குப்பை புரி மணி கோவை போர்வை – சூளாமணி:8 919/1
மன்னிய வயிர குன்றம் வலம்புரி மணியின் கோவை
பின்னிய பவழ வல்லி பிறங்கலோடு அனைய எல்லாம் – சூளாமணி:8 919/2,3
செம்பொன் கோவை கிண்கிணி ஏங்க திலதம் சேர் – சூளாமணி:10 1740/1
அம் பொன் கோவை பல் மணி மின் இட்டு அரை சூழ – சூளாமணி:10 1740/2
பைம்பொன் கோவை பாடக மென் சீறடி நல்லார்-தம் – சூளாமணி:10 1740/3
பொன் கோவை பூண் முலை முன்றில் தவழ்கின்றான் – சூளாமணி:10 1740/4
மேல்


கோவையும் (4)

தூசினுள் நின்று சொரி மணி கோவையும்
பூசின சாந்தும் பிணையலும் போர்த்து இடை – சூளாமணி:5 293/2,3
கோவையும் முகத்தும் ஆக்கி குலவிய இதழதாக – சூளாமணி:10 1634/2
குரு மணி கோவையும் குளிர் பொன் குன்றமும் – சூளாமணி:10 1721/1
பாரித்த பளிங்கு எழில் பழித்த கோவையும்
பூரித்த பொழி கதிர் பொன் செய் தாமமும் – சூளாமணி:10 1780/2,3
மேல்


கோவொடு (1)

குல நலம் மிகு செல்கை கோவொடு ஒப்பார்கள் வாழும் – சூளாமணி:6 572/3
மேல்


கோழ் (5)

கோடு உடைந்து_அன தாழையும் கோழ் இருள் – சூளாமணி:1 20/1
கொம்பு_அனார் கொடுத்த முத்த நீர ஆய கோழ் அரை – சூளாமணி:4 131/2
தகளி-வாய் கொழும் சுடர் தனித்தும் கோழ் இருள் – சூளாமணி:5 416/1
கோளி ஆலமும் கோழ் அரை மரங்களும் குழுமி – நீலகேசி:1 32/1
அணி செய் கோழ் அரை அரை நிழல் அழகனை பொருந்தி – நீலகேசி:5 476/1
மேல்


கோழி (2)

மாவினில் வனைந்த கோழி வடிவுகொண்டு அவ்வையாய – யசோதர:2 145/1
சாலியின் இடியின் கோழி தலை அரிந்திட்டது ஓடி – யசோதர:2 146/2
மேல்


கோழி-தன்னை (1)

மன்னவன் அன்னையோடு மாவின் நல் கோழி-தன்னை
கொன் நவில் வாளில் கொன்ற கொடுமையில் கடியது உன் – யசோதர:4 250/2,3
மேல்


கோழிகள் (1)

கூட்டினுள் இருந்த மற்று அ கோழிகள் பிறப்பு உணர்ந்திட்டு – யசோதர:4 254/2
மேல்


கோழிகளும் (1)

ஈங்கு நின் அயல கூட்டில் இருந்த கோழிகளும் என்றான் – யசோதர:4 251/4
மேல்


கோழியை (1)

கொன்று உயிர் களைதல் அஞ்சில் கோழியை மாவில் செய்து – யசோதர:2 142/3
மேல்


கோள் (22)

கோள் களைந்து புட்பகத்தில் கொண்டுவந்து வைத்தனன் – உதயணகுமார:1 67/4
கொந்து எரி உமிழ்ந்து எதிர் குரைத்து அதிர்வ கோள் நாய் – யசோதர:5 265/1
கோள் வலி சீயம் ஒப்பீர் சூழ்ச்சியே குணம் அது என்றான் – சூளாமணி:5 248/4
கோள் நின்ற மதியம் போல குழை முகம் சுடர கோட்டி – சூளாமணி:8 982/1
கோள் என நாள் என மின்னுபு குன்று எறி – சூளாமணி:9 1242/1
கோடி சிலை எடுத்தான் கோள் அரிமா வாய் போழ்ந்தான் – சூளாமணி:10 1660/1
கோள் நலம் பொலிந்து விண் குளிர குங்கும – சூளாமணி:10 1712/1
கோள் நிற்கும் விசும்பிடை குழவி திங்களும் – சூளாமணி:10 1732/3
கோள் வினை பயின்ற கூற்றம் குறுகலது ஆயின் என்றார் – சூளாமணி:11 1854/4
கோள் வினை பயின்ற கூற்ற அரசனால் கொள்ளற்பால – சூளாமணி:11 1855/1
குலம்_இலர் குணம்_இலர் என்னும் கோள்_இலள் – சூளாமணி:12 2087/2
கூர்ப்பினை நீ என்றும் கோள்_இலை என்றாள் – நீலகேசி:4 343/4
கோள் எல்லாம் தான் ஒருங்கே கொள்ளுமேல் ஈர்ம் குவள்ளை – நீலகேசி:4 436/2
நின்று கோள் செய்யும் என்றால் நீடிய குற்றம் ஆகாது – நீலகேசி:4 439/2
கோது_இல் அங்கு ஓர் குறி உயிரே கொள்ளின் நும் கோள் அழிவாம் அ – நீலகேசி:5 567/2
குழுக்களாய் வந்து நும் கோள் இறு-மின் என்றாள் – நீலகேசி:5 655/4
எண்ணாதே இந்திய கோள் எய்தாமை வேண்டும் – நீலகேசி:6 688/4
கூர்ப்பு யாதும் இன்றி நின் கோள் அழியும் அன்றே – நீலகேசி:6 689/4
கொணர்ந்து நீ ஐந்து என்ற கோள் அழியும் அன்றே – நீலகேசி:6 689/5
கடும் கதிரோன் மீதூர காணா கோள் எல்லாம் – நீலகேசி:6 695/1
அலையும் நின கோள் உடனே எனலும் – நீலகேசி:6 707/4
நனி காரணமாய் நடுக்கும் நின கோள்
தனி காரியமும் உளதேல் தவறு ஆம் – நீலகேசி:6 710/2,3
மேல்


கோள்-மினம் (1)

நின்று அ கோள்-மினம் என சொல்லி நெறி அறிவுறுவோன் – நீலகேசி:1 35/3
மேல்


கோள்_இலள் (1)

குலம்_இலர் குணம்_இலர் என்னும் கோள்_இலள்
வலம் மிகு சூழ்ச்சியார் வழியள் மற்று அவள் – சூளாமணி:12 2087/2,3
மேல்


கோள்_இலை (1)

கூர்ப்பினை நீ என்றும் கோள்_இலை என்றாள் – நீலகேசி:4 343/4
மேல்


கோள்கள் (4)

பொறை-வயின் நோய் மீக்கூர பொருவு_இல் வான் கோள்கள் எல்லாம் – உதயணகுமார:1 15/2
தீது இன்றி கோள்கள் எல்லாம் சிறந்து நல் வழியை நோக்க – உதயணகுமார:5 252/2
இ கோள்கள் எழல் நோக்கி இவை இவையே ஆம் என்றால் – நீலகேசி:4 298/1
அ கோள்கள் எழல் நோக்கி அவை அவையா கண்டிருந்து – நீலகேசி:4 298/2
மேல்


கோள்களும் (1)

வெம் திறல கோள்களும் ஆம் என விளங்கி விசும்பு ஆறா – சூளாமணி:11 2045/2
மேல்


கோளரி (7)

உறையும் கோளரி ஒழிக்கலான் நமக்கு உவந்து ஈயும் – சூளாமணி:7 704/3
கொன்று ஒர் கோளரி கொடுமுடி உறைவதோ என்றான் – சூளாமணி:7 705/4
உளது கோளரி உரும் என இடித்து உயிர் பருகி – சூளாமணி:7 706/3
பைங்கண் கோளரி உருவுகொண்டவன் மிசை படர்ந்து – சூளாமணி:7 714/2
முதிர்வு_இல் கோளரி முனிந்து எதிர் முழங்கலின் நெரிந்து – சூளாமணி:7 720/3
உளைந்து கோளரி எழுதலும் உளை மிசை மிதியா – சூளாமணி:7 723/2
அழிந்த கோளரி குருதி அது அடும் கடம் களிற்றோடு – சூளாமணி:7 725/1
மேல்


கோளவர் (1)

சந்திர சூரியர் கோளவர் நாளவர் அல்லவராய் – நீலகேசி:1 89/2
மேல்


கோளால் (1)

மெய் கோளால் என்றி யான் மிகை தெருட்டும் திறம் காணேன் – நீலகேசி:4 298/4
மேல்


கோளி (1)

கோளி ஆலமும் கோழ் அரை மரங்களும் குழுமி – நீலகேசி:1 32/1
மேல்


கோளில் (1)

தான கோளில் சாதக ஓலை தலைவைத்தார் – சூளாமணி:5 310/4
மேல்


கோளின் (1)

வான கோளின் மாண்பு உணர்வார்கள் மறு_இல்லா – சூளாமணி:5 310/3
மேல்


கோளின்-கண் (1)

கொண்ட நின் கோளின்-கண் குற்றம் உண்டாமோ – நீலகேசி:5 591/4
மேல்


கோளீயும் (1)

உள எலா பொது குணத்தான் ஒருங்கு கோளீயும் என்னில் – நீலகேசி:4 438/2
மேல்


கோளும் (3)

நுதலிய பொருள் நிகழ்வும் நும் கோளும் எமக்கு அறிய – நீலகேசி:2 172/2
எ கோளும் இல் என்பாய் யாண்டு எண்ணி ஏத்துதியால் – நீலகேசி:4 298/3
குன்றும் பிறவோ இனி நீ கொண்ட கோளும் என்றான் – நீலகேசி:4 414/4
மேல்


கோளை (1)

கோளை யாம் விசும்பிடை குளிர் வெண் திங்களார் – சூளாமணி:8 1053/3
மேல்


கோளொடு (1)

கோளொடு மடுத்த குளிர் மா மதியம் ஏய்ப்ப – சூளாமணி:9 1293/3
மேல்


கோறல் (2)

உயிர் பொருள் வடிவு கோறல் உயிர் கொலை போலும் என்னும் – யசோதர:2 144/1
கோறல் பொய்த்தல் கொடும் களவு நீக்கி பிறர் மனைகள் மேல் – நீலகேசி:1 40/1
மேல்


கோறற்கு (1)

கூற்றம் என அடவி புடை தடவி உயிர் கோறற்கு
ஏற்றபடி பெற்றது_இலன் இற்றை வினை முற்றும் – யசோதர:5 264/1,2
மேல்


கோன் (45)

கந்து இறு கைம்மா இ கோன் கை வீணை கடவாது என்ன – உதயணகுமார:1 94/3
நயந்து கோன்_மகளை மிக்க நல் பிடி ஏற்ற தோழி – உதயணகுமார:1 111/3
கோன் அவர் குமரன் கண்டு கொலை தொழில் ஒழித்தது அன்றே – நாககுமார:3 83/4
மற்று அ மா நகர்க்கு வேந்தன் மான யானை மன்னர்_கோன் – சூளாமணி:4 137/1
கோன் உயர் வள நகர் கோயில் முன்னினாள் – சூளாமணி:4 218/4
நம் கோன் நங்கை நல் மகன் ஆகி நனி வந்தான் – சூளாமணி:5 312/1
தம் கோன் ஏவ தான் இளவேந்தாய் தலை நின்றான் – சூளாமணி:5 312/2
எம் கோன் என்றே இ உலகு ஏத்தும் இயல்-தன்னால் – சூளாமணி:5 312/3
ஆழி தேர் அரவ தானை அரசர்_கோன் புதல்வன் அம் தார் – சூளாமணி:5 321/2
அம் தளிர் அலங்கல் மாலை அரசர்_கோன் சிறுவன் அம் தார் – சூளாமணி:5 325/2
விஞ்சையன் எழுந்து தம் கோன் வெள்ளி வேதண்டம் நோக்கி – சூளாமணி:6 512/1
வாட்ட அரும் பெருமை எம் கோன் ஓலையை மதியா ஆறு என்று – சூளாமணி:6 517/3
வெள்ளி அம் சிலம்பின் என் கோன் விடுத்ததே ஏதுவாக – சூளாமணி:6 523/3
கொற்றவன் உலகம் காத்த கோன் முறை வேண்டி அன்றே – சூளாமணி:6 552/3
எங்கள் கோன் இவன்-கண்-நின்று மிக்கு உயர் குலத்து வேந்தர் – சூளாமணி:6 561/1
முற்று வான் கடை மூன்றும் சென்று கோன்
சுற்று வார் கழல் தொழுது துன்னினான் – சூளாமணி:7 573/3,4
ஆளிகட்கு அரசன் அன்ன அரசர்_கோன் அதனை கூறி – சூளாமணி:7 672/1
போகிய தூதர் தம் கோன் பொலம் கழல் தொழுதல் அஞ்சி – சூளாமணி:7 692/1
இருள் உக எழுந்தது ஒத்து இருந்த கோன் அடி – சூளாமணி:7 820/2
பாடிவிட்டது பாவை-தன் கோன் படை – சூளாமணி:8 890/2
கொட்டில் சேர்ந்தன கோன் உறை கோயிலும் – சூளாமணி:8 894/2
வேண்டுப அவன் திறத்து அருளி வேந்தர்_கோன் – சூளாமணி:8 907/1
அவ்வழி அமுதம் பூத்த அரும் கல கொம்பை தம் கோன்
இவ்வழி வருக என்றது அவள் தமர் இசைப்ப கேட்டு – சூளாமணி:8 983/1,2
அழல் அணங்கு தாமரை ஆர் அருள் ஆழி உடைய கோன் அடி கீழ் சேர்ந்து – சூளாமணி:8 1039/1
தொக்க நீர் சுரமைநாடு உடைய கோன் இவை – சூளாமணி:9 1492/3
மா காய வரை ஆளும் மன்னர் கோன் மட மகளை வம்-மின் காண்பாம் – சூளாமணி:9 1534/4
கோன் இலா உலகம் ஓம்ப நிறீஇய பின் குவளை_வண்ணன் – சூளாமணி:10 1556/3
அன்னணம் இயலும் நாளுள் அக்கிரத்தேவி தன் கோன்
பொன் அணி உலகின் வந்த பூ விரி பாரிசாதம் – சூளாமணி:10 1561/1,2
தட மலர் பெரிய வாள் கண் தையல் மற்று அவளை எம் கோன்
விடம் அலைத்து இலங்கு செவ்வேல் வெய்யவன் பெயரன் வேட்டான் – சூளாமணி:10 1698/3,4
தேவி_கோன் தமன் தொழுது ஒருவன் செப்பினான் – சூளாமணி:10 1727/4
எங்கள் கோன் எறி கதிர் பெயரன் நீர் மலர் – சூளாமணி:10 1728/1
அ வரை அரைசர்_கோன் அருக்கன் தன் மகன் – சூளாமணி:10 1770/1
கொல் நவின்ற வேல் குமரன் குரு குலத்தார் கோன் இவனே கூற கேளாய் – சூளாமணி:10 1805/4
அங்கநாடு உடையவர் கோன் அவ் இருந்தான் இவ் இருந்தான் அவந்தி கோமான் – சூளாமணி:10 1819/1
யான் அருள வேண்டி அடி_இணை பணியும் போழ்து இமையவர்_கோன் ஆயிர செம்_கணான் வந்து – சூளாமணி:11 1909/3
கோன்_இலா அவரின் மிக்கவர் இல்லை குடை வேந்தே – சூளாமணி:11 2065/4
அமைச்சரும் அரசர்_கோன் அருளினால் தம் – சூளாமணி:12 2096/3
இன்று கோன் புரிந்ததற்கு இரங்கல் வேண்டுமோ – சூளாமணி:12 2105/3
குணங்கள்தாம் அல்ல கோன் குறிப்பும் அன்று என – சூளாமணி:12 2106/3
தம் கோன் அமர்_உலகம் இனிதின் ஆள தரங்க நீர் – சூளாமணி:12 2129/1
சலம் புரி வினை வென்ற தம் கோன் செந்தாமரை அடி கீழ் – சூளாமணி:12 2130/3
கோன் உரைத்த உரை கேட்டே குண்டலமாகேசியும் – நீலகேசி:2 175/2
கோன் பட்டான் குந்தத்தால் கத்துண்டான் ஏனாதி – நீலகேசி:2 197/1
கோன் சொனான் இது குண்டலகேசிக்கே – நீலகேசி:2 224/4
கோன் இவன் ஆம் என கூறினார் யாரோ – நீலகேசி:7 768/4
மேல்


கோன்_மகளை (1)

நயந்து கோன்_மகளை மிக்க நல் பிடி ஏற்ற தோழி – உதயணகுமார:1 111/3
மேல்


கோன்_இலா (1)

கோன்_இலா அவரின் மிக்கவர் இல்லை குடை வேந்தே – சூளாமணி:11 2065/4
மேல்


கோனை (3)

வான் மகிழ் மணம்கொள் மேனி அணங்கினுக்கு உரிய கோனை
யான் மகிழ்ந்து உணர்த்த கேட்பின் இடை சிறிது அருளுக என்றான் – சூளாமணி:5 277/3,4
தேம் துணர் இலங்கு கண்ணி தேவன் அ தேவர்_கோனை – சூளாமணி:6 545/1
துன்னிய வினைவர் கூட்டம் துணித்து வீற்றிருந்த கோனை
பன்னிய துதியர் ஆகி அமரர்கள் பரவுகின்றார் – சூளாமணி:12 2122/3,4
மேல்


கோனொடு (1)

அரைசரும் ஆயிரர் அரைசர்_கோனொடு – சூளாமணி:12 2099/3

மேல்