கூ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூகையும் 2
கூசு 1
கூசு_இல் 1
கூட்ட 2
கூட்டத்தில் 1
கூட்டத்தின் 1
கூட்டத்து 1
கூட்டம் 8
கூட்டமான 1
கூட்டமும் 4
கூட்டமே 1
கூட்டி 4
கூட்டிக்கொண்டு 1
கூட்டிய 1
கூட்டில் 2
கூட்டினால் 1
கூட்டினும் 1
கூட்டினுள் 1
கூட்டு 1
கூட்டுணும் 1
கூட்டும் 1
கூட்டுவது 1
கூட்டுவான் 1
கூட்டுவித்தலும் 1
கூட்டுள் 1
கூட 14
கூடக 1
கூடத்து 3
கூடம் 2
கூடம்குத்தி 1
கூடமும் 2
கூடல் 2
கூடல 1
கூடலது 1
கூடலம் 1
கூடலர் 1
கூடலவேல் 1
கூடலை 1
கூடற்கு 1
கூடா 2
கூடாதார் 1
கூடாது 2
கூடாரும் 1
கூடான் 1
கூடி 19
கூடிய 2
கூடியிட்டன 1
கூடியும் 3
கூடியே 2
கூடிவிட்டு 1
கூடிற்று 2
கூடின்றே 1
கூடினர் 1
கூடினார் 1
கூடினால் 1
கூடினாலும் 1
கூடு 3
கூடுதிரோ 1
கூடுநர் 1
கூடுபவர்க்கும் 1
கூடும் 4
கூடுமே 2
கூடுமேல் 1
கூடுமோ 2
கூடுவது 2
கூடுவார் 4
கூத்தர் 1
கூத்தன் 1
கூத்தின் 1
கூந்தல் 7
கூந்தல்_மா 1
கூந்தலர் 1
கூந்தலார் 1
கூந்தலாள் 3
கூந்தலி 2
கூந்தலின் 1
கூந்தலுள் 1
கூந்தற்கு 1
கூந்து 1
கூப்ப 1
கூப்பி 7
கூப்பிய 1
கூப்பினார் 1
கூப்பினான் 2
கூம் 1
கூம்பி 1
கூய் 1
கூயக்கால் 1
கூர் 13
கூர்ங்கை 1
கூர்த்தல் 1
கூர்த்தல்_இல் 1
கூர்த்து 1
கூர்ந்தனன் 1
கூர்ந்து 6
கூர்ந்தே 1
கூர்ப்பினை 1
கூர்ப்பு 1
கூர்ம் 2
கூர 8
கூரவே 1
கூரிய 1
கூரியீர் 1
கூரினான் 1
கூலி 1
கூவ 6
கூவி 15
கூவியிட்டு 1
கூவுகின்றது-கொல் 1
கூவுபு 1
கூவும் 3
கூவையே 1
கூழ் 1
கூழன்-தன் 1
கூழின் 1
கூழைமை 1
கூளிதாய்க்கு 1
கூற்ற 2
கூற்றதாமோ 1
கூற்றது 1
கூற்றம் 4
கூற்றமும் 7
கூற்றமே 2
கூற்றவா 1
கூற்றாம் 1
கூற்றால் 1
கூற்றின் 1
கூற்றினும் 2
கூற்று 7
கூற்று_இலனால் 1
கூற்றும் 3
கூற்றுவன்-தன்னை 1
கூற 18
கூறப்பட்டது 1
கூறப்பட்டவே 1
கூறல் 2
கூறலாமோ 1
கூறலும் 17
கூறலுற்றேன் 1
கூறலோடும் 1
கூறா 1
கூறாய் 3
கூறார் 1
கூறி 26
கூறிக்காண் 1
கூறிதி 1
கூறிய 2
கூறியது 1
கூறியவாற்றால் 1
கூறியான 1
கூறியும் 1
கூறில் 1
கூறின் 3
கூறின 2
கூறினது 1
கூறினம் 1
கூறினர் 2
கூறினளே 1
கூறினன் 1
கூறினனே 1
கூறினாய் 2
கூறினார் 7
கூறினாள் 3
கூறினான் 7
கூறு 7
கூறு-மின் 2
கூறுக 3
கூறுகூறு 1
கூறுங்கால் 1
கூறுதல் 2
கூறுதல்-தன்னை 1
கூறுதற்பாலதே 1
கூறுபவ்வே 1
கூறுபாடு 1
கூறும் 18
கூறுவது 1
கூறுவன் 2
கூறுவாம் 1
கூறுவார் 2
கூறுவாள் 1
கூறுவான் 4
கூறுவேம் 1
கூறுவேன் 1
கூறை 4
கூறையாய் 1
கூறையும் 1
கூன் 2
கூனன் 1
கூனி 1
கூனியை 1

கூகையும் (2)

குண்டு கண்ணின பேய்களும் கூகையும் குழறி – நீலகேசி:1 28/3
ஊமை கூகையும் ஓரியும் உறழ் உறழ் கதிக்கும் – நீலகேசி:1 29/2
மேல்


கூசு (1)

கூசு_இல் மனத்தர் கொடும் தொழில் வாழ்க்கையர் – சூளாமணி:11 1977/3
மேல்


கூசு_இல் (1)

கூசு_இல் மனத்தர் கொடும் தொழில் வாழ்க்கையர் – சூளாமணி:11 1977/3
மேல்


கூட்ட (2)

நா புகழ் மன்னன் கண்டு நலம் பிற உரைத்து கூட்ட
காப்பு உடை பதுமையோடும் காவலன் கலந்து பொன்னின் – உதயணகுமார:3 158/2,3
தேவர்கள் உலகம் எல்லாம் செழு மணம் அயர்ந்து கூட்ட
கேவல பெண் என்பாள் ஓர் கிளர் ஒளி மடந்தை-தன்னை – சூளாமணி:6 560/2,3
மேல்


கூட்டத்தில் (1)

குருடனும் பங்குவும் கூட்டத்தில் கூட்டி – நீலகேசி:7 762/1
மேல்


கூட்டத்தின் (1)

நீ தின்னும் தோலை நெருப்பொடு கூட்டத்தின்
ஓதினை தேறுற நீர்க்கு உரைத்தாய் மற்றும் – நீலகேசி:4 365/2,3
மேல்


கூட்டத்து (1)

புல்வாய் கூட்டத்து புக்க புலி என – உதயணகுமார:1 53/1
மேல்


கூட்டம் (8)

கூடிய கூட்டம் தன் போல் குணம்-தனை நாடி என்ன – உதயணகுமார:4 202/2
குழல் அணிந்து எழுந்த குஞ்சி குடைந்தன குருவி கூட்டம் – சூளாமணி:6 555/4
துன்னிய வினைவர் கூட்டம் துணித்து வீற்றிருந்த கோனை – சூளாமணி:12 2122/3
வினை பயத்தின் கூட்டம் விரித்து உரைப்பன் என்னின் – நீலகேசி:5 654/3
குணத்தொடு குணிகளும் கூட்டம் இன்மையால் – நீலகேசி:8 800/3
கூட்டினால் அல்லது கூட்டம் இல்லையேல் – நீலகேசி:8 815/1
கூட்டுவான் செல்வதும் கூட்டம் இல்லையே – நீலகேசி:8 815/2
குறைந்து பூதங்கள் கூட்டம் உண்டாம் அவண் – நீலகேசி:10 876/1
மேல்


கூட்டமான (1)

கூட்டமான குறி எனின் அலதை – நீலகேசி:5 533/1
மேல்


கூட்டமும் (4)

விழவு அணி நகர்களும் வேந்தர் கூட்டமும்
எழுவினம் உரைப்பின் இ எண்ணம் என்பவே – சூளாமணி:9 1508/3,4
ஞாதியார் என நாட்டிய கூட்டமும்
ஓதி வைத்தது ஒன்று உண்மை உணர்த்துமால் – நீலகேசி:3 248/3,4
இரு ஆறின் கூட்டமும் தீது என்பது எம் இடமே – நீலகேசி:4 305/2
எழுத்தியலில் கூட்டமும் எப்பொழுதும் காண்டும் – நீலகேசி:6 703/4
மேல்


கூட்டமே (1)

கிரியைகள் இதற்கு என கிளத்தல் கூட்டமே – நீலகேசி:8 787/4
மேல்


கூட்டி (4)

வள்ளலை மதியில் கூட்டி வாணிக உருவினோடு – உதயணகுமார:3 166/2
கூட்டி மிடறும் கொள குற்றம் என்னோ – நீலகேசி:7 757/4
குருடனும் பங்குவும் கூட்டத்தில் கூட்டி
பொருள்-தமது ஆக்கமும் போத்தந்து உரைப்பின் – நீலகேசி:7 762/1,2
கூட்டி மற்று அவர்களை நுதலிய கொலை வினை-தங்களையும் – நீலகேசி:9 838/3
மேல்


கூட்டிக்கொண்டு (1)

அறிவினில் கூட்டிக்கொண்டு அமர்ந்து இனிது இருக்கும் அ நாள் – நாககுமார:2 61/4
மேல்


கூட்டிய (1)

கூட்டிய அ பொருள் கொடைய ஆதலான் – நீலகேசி:8 808/3
மேல்


கூட்டில் (2)

ஈங்கு நின் அயல கூட்டில் இருந்த கோழிகளும் என்றான் – யசோதர:4 251/4
கொள்ளும் இவை என கூட்டில் வளர்த்த தம் – சூளாமணி:11 1933/1
மேல்


கூட்டினால் (1)

கூட்டினால் அல்லது கூட்டம் இல்லையேல் – நீலகேசி:8 815/1
மேல்


கூட்டினும் (1)

குலம் கலந்து இல்வழி குரவர் கூட்டினும்
அலங்கல் அம் குழலியர் அன்று என்கிற்பவோ – சூளாமணி:4 230/3,4
மேல்


கூட்டினுள் (1)

கூட்டினுள் இருந்த மற்று அ கோழிகள் பிறப்பு உணர்ந்திட்டு – யசோதர:4 254/2
மேல்


கூட்டு (1)

தன் உணர் பொறி பிறர்-தங்கள் கூட்டு என – சூளாமணி:4 233/1
மேல்


கூட்டுணும் (1)

கொடிய செய்து முனை புலம் கூட்டுணும்
கடிய நீர்மையர் கானகம் காக்கும் நின் – சூளாமணி:7 785/2,3
மேல்


கூட்டும் (1)

மால் படை கூட்டும் மயங்கு இருள் தீர்ப்பது – சூளாமணி:11 2014/2
மேல்


கூட்டுவது (1)

இன்று இனி கூட்டுவது இல்லை இல்லதே – நீலகேசி:8 817/4
மேல்


கூட்டுவான் (1)

கூட்டுவான் செல்வதும் கூட்டம் இல்லையே – நீலகேசி:8 815/2
மேல்


கூட்டுவித்தலும் (1)

கொக்கொடு கருமையை கூட்டுவித்தலும்
சுக்கொடு துவர்ப்பினை துன்னுவித்தலும் – நீலகேசி:8 816/1,2
மேல்


கூட்டுள் (1)

கொண்டு போய் அவன் கூட்டுள் வளர்த்தனன் – யசோதர:3 224/3
மேல்


கூட (14)

தோள் அன தோழன் கூட தூபத்துக்கு ஏற்ற வத்தும் – உதயணகுமார:1 84/2
கூட மாளிகைகள் எல்லாம் கோட்டினால் குத்தி செம்பொன் – உதயணகுமார:1 88/1
நாரியை தோழி கூட நன்மையில் துயில்க என்று – உதயணகுமார:1 117/2
தருவன் நீ இழந்த தேவி தரணியும் கூட என்ன – உதயணகுமார:3 156/3
நீர் மிக ஆடி மன்னன் நேர் இழை மாதர் கூட – உதயணகுமார:4 199/4
வாசவதத்தையோடு மன்னிய அமைச்சர் கூட
வாசகம் சொல்க என்று வரிசையில் கேட்கின்றானே – உதயணகுமார:4 209/3,4
தேவியர் மூவர் கூட தேர் மன்னன் சேர்ந்து செல் நாள் – உதயணகுமார:4 240/1
தந்தி மேல் மாதர் கூட தோழனும் தானும் ஏறி – நாககுமார:3 86/2
என் தமரோடும் கூட எங்கள் ஊர்க்கு ஏற சென்றோம் – நாககுமார:3 89/4
தோள் அன தோழன் கூட தொல் கிரிபுரத்தை சேர்ந்தான் – நாககுமார:3 98/4
சீர் அணி குமரன் தோழன் சிறந்து அணி மாமன் கூட
பார் அணி வெற்றி கொண்டு புண்டரபுரத்தை வாங்கி – நாககுமார:3 100/2,3
விமலன் உருக்கொண்டனன் நல் வேந்தர் பலர் கூட
கமல_மலராள் நிகர் நல் காட்சி இலக்கணையும் – நாககுமார:5 163/2,3
நறும் குழல் இலக்கணையும் நங்கைமார்-தம் கூட
உறு தவம் தரித்துக்கொண்டு உவந்து அவர் செல்லும் நாளுள் – நாககுமார:5 164/1,2
ஆடகம் அணிந்த கூட நிலைகளும் அயல எல்லாம் – சூளாமணி:8 856/4
மேல்


கூடக (1)

கூடக மனத்தினற்கும் அரன் இனியன் ஆயினான் – உதயணகுமார:4 236/4
மேல்


கூடத்து (3)

ஆயிடை அத்தி கூடத்து அயல் எழுந்து அமிர்தம் ஊற – யசோதர:2 94/1
கடைப்படு துகளும் மண்ணும் கஞலிய கூடத்து ஆங்கு ஓர் – யசோதர:2 111/2
கற்றைகள் தவழ சென்று ஓர் கனக கூடத்து இருந்தான் – சூளாமணி:6 508/4
மேல்


கூடம் (2)

கொற்ற வேலவன் தன் கோயில் குளிர் மணி கூடம் ஒன்றில் – யசோதர:2 89/2
பொன் அவிர் பவழ திண் கால் புரி மணி கூடம் எய்தி – சூளாமணி:11 1852/3
மேல்


கூடம்குத்தி (1)

செம் கதிர் கூடம்குத்தி செந்நடுவாக நின்றான் – சூளாமணி:10 1668/4
மேல்


கூடமும் (2)

கண் எலாம் கவர்வன கனக கூடமும்
வெண்ணிலா சொரிவன வெள்ளி வேயுளும் – சூளாமணி:2 42/1,2
தம்பம் உற்ற தமனிய கூடமும்
அம் பொன் ஆடரங்கும் அகில் சேக்கையும் – சூளாமணி:8 895/2,3
மேல்


கூடல் (2)

கூடல் மிலைச்சர் குமானுடர் என்று இவர் – சூளாமணி:11 1978/1
ஊடலொடு கூடல் உணர்வார்கள் புணர்வாராய் – நீலகேசி:1 17/3
மேல்


கூடல (1)

கூடல என்பது கூறினம் அன்றே – நீலகேசி:5 620/4
மேல்


கூடலது (1)

கூடலது ஆய குணி பொருள் கூறினர் யாவர் என்றாள் – நீலகேசி:4 380/4
மேல்


கூடலம் (1)

கூர் இமம் வெயில் பசி கூடலம் கூடினால் – நீலகேசி:4 357/3
மேல்


கூடலர் (1)

கூடலர் துறந்து நோன்மை குணம் புரிந்து உயர்தற்காக – யசோதர:2 110/2
மேல்


கூடலவேல் (1)

கொன்றவர்க்கு அல்லது நுதலப்பட்டார்களை கூடலவேல்
தின்றவர்க்கு யாவையும் தீ_வினை சேரல தேவர்க்கு போல் – நீலகேசி:9 841/1,2
மேல்


கூடலை (1)

கொஞ்சு பைங்கிளி_மொழி-தன் கூடலை விரும்பினான் – உதயணகுமார:2 121/4
மேல்


கூடற்கு (1)

இட்டத்திற்கு அவனை ஆங்கே இயைவித்தவாறும் கூடற்கு
ஒட்டிய குறியும் சொன்னாள் ஒள்_இழை உவப்புற்றாளே – யசோதர:2 115/3,4
மேல்


கூடா (2)

முக்குலத்தாரொடும் கூடா முயற்சியர் – சூளாமணி:11 1981/3
கூடா பொருள்கள் பிறிதின் குணத்து உண்மை என்பாய் – நீலகேசி:4 422/1
மேல்


கூடாதார் (1)

கூடுவார் கூடாதார் கொன்றார் தின்றார் என்னும் – நீலகேசி:5 475/3
மேல்


கூடாது (2)

கூடாது எனினும் சில கூறலும் வேண்டும் அன்றே – நீலகேசி:1 11/3
இறப்பவும் கூடாது இரு திறத்தானும் – நீலகேசி:5 631/2
மேல்


கூடாரும் (1)

குணம் கொள் படையாய் கூடாரும் உளரோ நினக்கு கோமானே – சூளாமணி:9 1479/4
மேல்


கூடான் (1)

குறிக்கப்டாமையின் கொல் வினை கூடான்
பறித்து தின்பான் எனின் பாவமாம் பூ போல் – நீலகேசி:4 336/1,2
மேல்


கூடி (19)

தேவியும் வந்து கூடி சிறந்த நல் புதல்வர்-தம்மை – உதயணகுமார:1 25/3
ஆடவர் கூடி ஓடி அயில் குந்தம் தண்டம் ஏந்தி – உதயணகுமார:1 88/3
மாநிதி காட்டி நன்மை மகதவனோடும் கூடி
ஊனம்_இல் விச்சை-தன்னால் உருமண்ணு பிரிதல் இன்றி – உதயணகுமார:3 163/2,3
உடன் வரும் எழுவர் கூடி ஒளிர் மகதத்து வந்தார் – உதயணகுமார:3 164/4
தெருளினர் கூடி சேர வந்து அ தினம் – உதயணகுமார:3 168/3
கூடி நின்று இரு மருங்கும் கொற்றவனை வாழ்த்தினார் – உதயணகுமார:3 184/2
நங்களை வந்து கூடி நடந்தன அனந்தம் அன்றோ – யசோதர:1 38/4
வென்றி வேழ முழக்கொடு கூடி வான் – சூளாமணி:1 13/3
குழல் கொள் தும்பி கணம் கூடி ஆட நகும் – சூளாமணி:7 739/1
ஒன்று காவல் உழையாரொடு கூடி
பொன்று_இலாத புகழான் பொழில் புக்கான் – சூளாமணி:10 1574/3,4
கூடி வீழ்வன கொழும் கனி கண்டான் – சூளாமணி:10 1575/4
கொந்து தேனொடு குலாய் இணர் கூடி
வந்து தாழ்ந்து மது மாரி தயங்கி – சூளாமணி:10 1578/2,3
கூடி வண்டு குடையும் குளிர் காவில் – சூளாமணி:10 1580/1
பேயும் கூடி பெரிதும் மகி சூழ்ந்து தம் பெற்றி சொல்லின் – நீலகேசி:1 42/2
கூடி ஆவது இல்லையே – நீலகேசி:1 96/4
அறம்-தலை நின்று ஆங்கு அருளொடு கூடி
துறந்தனள் யான் என்னும் சொல்லும் உடையாய் – நீலகேசி:4 348/1,2
கொண்ட உடம்போடு உயிர் தான் உடன் கூடி நின்றால் – நீலகேசி:4 415/1
இழுக்காமை புத்தீர் எனை பலரும் கூடி
குழுக்களாய் வந்து நும் கோள் இறு-மின் என்றாள் – நீலகேசி:5 655/3,4
ஐந்தும் கூடி அறிவு இன்பம் ஆதியாய் – நீலகேசி:10 858/1
மேல்


கூடிய (2)

கூடிய கூட்டம் தன் போல் குணம்-தனை நாடி என்ன – உதயணகுமார:4 202/2
கூடிய ஐந்து குணத்தினன் ஆதலின் – நீலகேசி:7 766/3
மேல்


கூடியிட்டன (1)

கூடியிட்டன கொடுமுடி துறுகற்கள் குளிர்ந்தாங்கு – சூளாமணி:7 717/2
மேல்


கூடியும் (3)

அருவொடு கூடியும் தீண்டியும் ஆக்கும் திறம் அரிதால் – நீலகேசி:5 504/2
கூடியும் ஆகா குணத்தின நீ அவண் – நீலகேசி:7 764/1
குன்றியும் கூடியும் நின்றும் கொள் பயம் – நீலகேசி:8 812/3
மேல்


கூடியே (2)

இத்தனையும் இயல்புடன் கூடியே
மெத்தெனா வருக என்று விடுத்தனன் – உதயணகுமார:1 44/1,2
மருவி கூடியே வந்து உடன் விட்டதும் – உதயணகுமார:3 169/2
மேல்


கூடிவிட்டு (1)

கூடிவிட்டு இடையாரன கோதை மேல் – சூளாமணி:8 890/3
மேல்


கூடிற்று (2)

கொதி தவழ் வேலினான்-தன் குறிப்பொடு கூடிற்று அன்றே – சூளாமணி:5 297/4
குரவரோடு படை பொருதல் கூடிற்று அறன்று குல வேந்தே – சூளாமணி:9 1339/2
மேல்


கூடின்றே (1)

கொந்து ஆர் பூம் சோலைக்கு உலகு அறிவோ கூடின்றே – சூளாமணி:10 1645/4
மேல்


கூடினர் (1)

அங்கு வந்து அ அண்ணலை அடி வணங்கி கூடினர்
பொங்கு புறம் கௌசாம்பியில் போர்க்களத்தில் விட்டனர் – உதயணகுமார:3 178/3,4
மேல்


கூடினார் (1)

மறு_இல் வீரியர் வந்து உடன் கூடினார் – உதயணகுமார:1 50/4
மேல்


கூடினால் (1)

கூர் இமம் வெயில் பசி கூடலம் கூடினால்
சேர்தல் இல்லை நல் அறம் சிந்தை என்று செப்பலும் – நீலகேசி:4 357/3,4
மேல்


கூடினாலும் (1)

இரு நிலம் முழுதும் வானும் இனிமையில் கூடினாலும்
திரு நில மன்னர் அன்றி செய்பொருள் இல்லை என்று – உதயணகுமார:4 198/1,2
மேல்


கூடு (3)

கூடு தும்பி ஊடு தோய் குழல் தொகை துணர் துதைந்து – சூளாமணி:6 478/1
கூடு இணர் குழாம் நிலை கொழும் மலர் குமிழ் மிசை – சூளாமணி:7 794/2
சோதி கூடு சுடர் முடிக்கு – சூளாமணி:9 1374/3
மேல்


கூடுதிரோ (1)

கொண்டனிர் கூடுதிரோ கடிது என்றான் – சூளாமணி:9 1226/4
மேல்


கூடுநர் (1)

கூடுநர் கோவை மணி கலை உக்கவும் – சூளாமணி:7 655/1
மேல்


கூடுபவர்க்கும் (1)

கூடுபவர்க்கும் குணம்_இல்லவர்க்கும் – நீலகேசி:5 627/3
மேல்


கூடும் (4)

கூடும் நல் மங்கை மைந்தர் குலைந்தவர் ஏகி செம்பொன் – உதயணகுமார:1 91/3
கூடும் ஆபரணமே குமரன் கொண்டு ஏகினான் – நாககுமார:2 69/4
குன்றினில் கூர்ங்கை நட்டால் கூடும் நோய் யாதிற்கு உண்டோ – நீலகேசி:4 429/3
கூடும் அ வாசமும் குற்றம் ஒன்று இல் எனின் – நீலகேசி:5 620/2
மேல்


கூடுமே (2)

கொள் என்று ஈர்ந்து கொடுப்பினும் கூடுமே – நீலகேசி:2 215/4
கொள்ளுமேல் குற்றம் அஃதா கூடுமே பற்றும் ஆங்கண் – நீலகேசி:3 261/2
மேல்


கூடுமேல் (1)

குன்றி தத்தமுள் யாவையும் கூடுமேல்
நின்ற மெய்ம்மை நினது என நேர்வல் யான் – நீலகேசி:10 878/3,4
மேல்


கூடுமோ (2)

கூடுமோ தணி கோதையாய் – சூளாமணி:10 1618/2
குத்தவ தின்னும் போழ்தில் கூடுமோ நன்மை ஏடா – நீலகேசி:3 260/4
மேல்


கூடுவது (2)

கூடுவது ஒழிந்தது-கொல் இன்று கொலை வேலோய் – யசோதர:5 279/3
குற்றம் அன்றோ சென்று கூடுவது ஏடா – நீலகேசி:4 332/4
மேல்


கூடுவார் (4)

நிலத்தலத்து ஒர் பாகமா நீடு வாயில் கூடுவார்
கலைத்-தலை தொடுத்த கோவை கண் நெகிழ்ந்து சிந்தலான் – சூளாமணி:6 484/2,3
கூடுவார் கொற்றம் கொள்ள கூறுவார் ஆகி எங்கும் – சூளாமணி:9 1543/3
கூடுவார் குழுவு மெய் குழுமி எங்கணும் – சூளாமணி:11 1887/3
கூடுவார் கூடாதார் கொன்றார் தின்றார் என்னும் – நீலகேசி:5 475/3
மேல்


கூத்தர் (1)

கூத்தர் ஆடலும் குதிரை ஓடலும் – நீலகேசி:8 809/1
மேல்


கூத்தன் (1)

கொண்டல் வாடை என்னும் கூத்தன் யாத்த கூத்தின் மாட்சியால் – சூளாமணி:7 788/1
மேல்


கூத்தின் (1)

கொண்டல் வாடை என்னும் கூத்தன் யாத்த கூத்தின் மாட்சியால் – சூளாமணி:7 788/1
மேல்


கூந்தல் (7)

வேர்த்த வேந்தர் பல் குழாம் விரைந்த கூந்தல்_மா குழாம் – சூளாமணி:6 475/4
மையவாம் மழை கண் கூந்தல் மகளிரை வருக என்றான் – சூளாமணி:7 673/4
கூர் இருள் சுரிபட்டு அன்ன குழல் அணி கொடிறு உண் கூந்தல்
பேர் இருள் கிழிய தோன்றும் பிறை எயிற்று அமர நோக்கின் – சூளாமணி:7 759/2,3
சேறு உடை கோதை மேலால் சிறந்து வார் கூந்தல் கையால் – சூளாமணி:8 1023/3
விரை செறி குழல் அம் கூந்தல் மெல்_இயல் வருக என்றான் – சூளாமணி:10 1793/3
புயல் திறல் ஐம்_கூந்தல் தன் போல பிறனுக்கேல் – நீலகேசி:5 649/2
புயல் இரும் கூந்தல் பொலம் கொடி அன்னாய் – நீலகேசி:6 669/1
மேல்


கூந்தல்_மா (1)

வேர்த்த வேந்தர் பல் குழாம் விரைந்த கூந்தல்_மா குழாம் – சூளாமணி:6 475/4
மேல்


கூந்தலர் (1)

பின்னிவிடு கூந்தலர் பிடித்த அயில் வாளர் – சூளாமணி:8 868/3
மேல்


கூந்தலார் (1)

தாமத்து ஒத்து அலர்ந்து தாழ்ந்து இருண்ட கூந்தலார்
தூமத்து சுடர் ஒளி துளும்பு தோளினார் – சூளாமணி:2 61/2,3
மேல்


கூந்தலாள் (3)

தோகை மா மயில் போல் சுரி கூந்தலாள்
மேகமாலினி என்று உரை மிக்கு உளாள் – சூளாமணி:5 337/3,4
கொம்பின் அன்னவள் கொங்கு அணி கூந்தலாள்
அம்பின் நீண்டு அரி சிந்திய மா கயல் – சூளாமணி:5 343/2,3
இருள் உடைந்த கூந்தலாள் இட்டத்தை எண்ணுவான் – நீலகேசி:4 283/4
மேல்


கூந்தலி (2)

புயல் இரும் கூந்தலி பொருந்த சொல்லினாள் – நீலகேசி:2 225/3
புத்தனார்-தம்மை புயல் இரும் கூந்தலி பொருந்தி – நீலகேசி:5 479/2
மேல்


கூந்தலின் (1)

புயல் திறல் இகலிய கூந்தலின் பெயர் உடை புலமையினாள் – நீலகேசி:9 831/4
மேல்


கூந்தலுள் (1)

குழல் அமர் கிளவியார்-தம் கூந்தலுள் குளித்து விம்மி – சூளாமணி:10 1700/3
மேல்


கூந்தற்கு (1)

ஆர்_இருள் அனைய கூந்தற்கு அருளிய மனத்தன் ஆகி – சூளாமணி:9 1549/3
மேல்


கூந்து (1)

கூந்து இளம் பிடி வீச குழாங்களோடு – சூளாமணி:1 25/2
மேல்


கூப்ப (1)

இற்றென இசைத்து புக்கு ஆங்கு இளையவன் கழல் கை கூப்ப
எற்று நீ வந்தது என்றாற்கு இது எனா எடுத்து சொன்னாள் – சூளாமணி:8 1014/3,4
மேல்


கூப்பி (7)

இணை கரம் சிரத்தில் கூப்பி இயல்புற தொழுதும் அன்றே – உதயணகுமார:1 1/4
இணை கரம் சிரசில் கூப்பி இயல்புற தொழுதும் அன்றே – நாககுமார:0 1/4
இணை கரமும் கூப்பி நின்று இனிது இறைஞ்சி கூறுவான் – நாககுமார:4 121/4
என்று எனக்கு இறைவன் நீயே என இரு கையும் கூப்பி
இன்று யான் யாது செய்வது அருளுக தெருள என்றாள் – யசோதர:1 48/3,4
அஞ்சலி தட கை கூப்பி ஆர்வம் மிக்கு இறைஞ்சினான் – சூளாமணி:6 495/4
அஞ்சலி தட கை கூப்பி அரக்கு இலச்சினையின் வைத்த – சூளாமணி:6 512/2
தங்கிய தியான போழ்தில் தாழ்ந்து தன் தட கை கூப்பி
பொங்கிய காதல் கூர பாடினன் புலமை மிக்கான் – சூளாமணி:6 538/3,4
மேல்


கூப்பிய (1)

குன்று உடை அரசன் முன்னை கூப்பிய கையன் ஆனான் – சூளாமணி:9 1144/4
மேல்


கூப்பினார் (1)

கலம் புரி தட கையால் கதழ கூப்பினார் – சூளாமணி:8 960/4
மேல்


கூப்பினான் (2)

கல் நவில் கடக கை கதழ கூப்பினான் – சூளாமணி:4 197/4
கழலவன் அடி இணை கையில் கூப்பினான் – சூளாமணி:8 962/4
மேல்


கூம் (1)

கூம் குயில் குலம் இன்னியம் கொண்டு ஒலி – யசோதர:1 11/3
மேல்


கூம்பி (1)

மரங்கள் வளரும் என மன்னும் கூம்பி
விரிந்த இலையின் வேற்றுமை சொன்னாய் – நீலகேசி:4 363/1,2
மேல்


கூய் (1)

கூய் அத்தின் என்னை குரவர் உபதேசம் என்றாள் – நீலகேசி:6 723/4
மேல்


கூயக்கால் (1)

கூயக்கால் அறம் கோடலை ஒட்டு என – நீலகேசி:10 887/4
மேல்


கூர் (13)

குழைந்து அவன் உரைப்ப யூகி கூர் எயிறு இலங்க நக்கு – உதயணகுமார:2 129/2
கோலம் கார் அன்ன கூர் எயிறு ஆப்பியும் – உதயணகுமார:4 218/4
கொண்ட கேள்வியும் கூர் அறிவும் இலா – யசோதர:1 18/2
கூர் முள் மத்திகையில் கொலைசெய்தனர் – யசோதர:3 211/4
கூர் அறிவு உடைய நீரார் குறிப்பது மனத்தினாலே – யசோதர:4 232/4
குல கிரி ஆறு கூர் கண்டம் ஏழ் குலாய் – சூளாமணி:5 390/1
கூர் இருள் சுரிபட்டு அன்ன குழல் அணி கொடிறு உண் கூந்தல் – சூளாமணி:7 759/2
கொழும் திரள் வயிர கோடி கூர் முளை செறித்து செம்பொன் – சூளாமணி:8 853/1
கோணை செய் குறும்பு கூர் மடங்கும் ஆறு போல் – சூளாமணி:8 1066/2
கூர் அறிவு_இல்லவர் கொன்றிடுகின்றார் – சூளாமணி:11 1958/4
அடங்கல்_இல்லேற்கு அருளினால் அறம் கூர் மாரி பொழிந்தோய் நின் – நீலகேசி:1 139/3
அல் இருள் கூர் சுடுகாட்டு இடமாக – நீலகேசி:1 141/2
கூர் இமம் வெயில் பசி கூடலம் கூடினால் – நீலகேசி:4 357/3
மேல்


கூர்ங்கை (1)

குன்றினில் கூர்ங்கை நட்டால் கூடும் நோய் யாதிற்கு உண்டோ – நீலகேசி:4 429/3
மேல்


கூர்த்தல் (1)

கூர்த்தல்_இல் வினையின் இன்மை கூறுவன் என்றியாயின் – நீலகேசி:4 426/3
மேல்


கூர்த்தல்_இல் (1)

கூர்த்தல்_இல் வினையின் இன்மை கூறுவன் என்றியாயின் – நீலகேசி:4 426/3
மேல்


கூர்த்து (1)

வாழை மேல் வயிரம் கூர்த்து அனைய மாண்பினார் – சூளாமணி:9 1212/4
மேல்


கூர்ந்தனன் (1)

உலம் உறை தோளினான் உவகை கூர்ந்தனன்
குல முறை வழிபடும் தெய்வ கோயிலை – சூளாமணி:4 179/1,2
மேல்


கூர்ந்து (6)

குவி முலை நல் கோதை அன்பு கூர்ந்து உடன் புணர்ந்ததும் – உதயணகுமார:2 128/4
ஆர்வம் மிக்கு கூர்ந்து நல்ல அற்புத கிளவி செப்பி – உதயணகுமார:4 199/1
ஒருவரும் ஏற்பார் இன்றி ஓர்ந்து அவள் நெஞ்சம் கூர்ந்து
திரு நுதல் மாது நொந்து சிறப்பு இன்றி இருந்த போழ்தின் – உதயணகுமார:4 228/1,2
கண்ட பின் காமம் கூர்ந்து கார் விசும்பு-அதனில் நிற்ப – உதயணகுமார:5 261/1
சிந்தை கூர்ந்து சிறந்து ஒன்றும் கேட்டனன் – உதயணகுமார:5 270/4
கூர்ந்து வருப யாம் கூற உலவா – சூளாமணி:11 1986/4
மேல்


கூர்ந்தே (1)

இல்லை என்று எவ்வல் கூர்ந்தே இனிமையின் வந்து நல்ல – உதயணகுமார:1 21/3
மேல்


கூர்ப்பினை (1)

கூர்ப்பினை நீ என்றும் கோள்_இலை என்றாள் – நீலகேசி:4 343/4
மேல்


கூர்ப்பு (1)

கூர்ப்பு யாதும் இன்றி நின் கோள் அழியும் அன்றே – நீலகேசி:6 689/4
மேல்


கூர்ம் (2)

ஆற்ற புகை அளறு ஆர் மணல் கூர்ம் பரல் ஆய் மணியே – நீலகேசி:1 75/4
கொல்வன் என்றவன் கூர்ம் படை குன்றினும் – நீலகேசி:5 547/1
மேல்


கூர (8)

சில தினம் பிரிவிக்க சிந்தை கூர தோன்றினான் – உதயணகுமார:2 135/4
பொங்கிய காதல் கூர பாடினன் புலமை மிக்கான் – சூளாமணி:6 538/4
ஏந்திய காதல் கூர எழில் நகர் பெயர்ந்து புக்கார் – சூளாமணி:8 966/3
நலம்கொண்டு ஓர் ஆர்வம் கூர நகை முகம் முறுவல் தோன்றி – சூளாமணி:8 998/3
மெய் அகத்து உவகை கூர விரும்பி தன் அருகு கூவி – சூளாமணி:8 1007/3
உள் உலா உவகை கூர துணை புணர்ந்து ஒலித்து வைக – சூளாமணி:8 1028/3
எண் திசையும் இருள் கூர இழிந்தார் – சூளாமணி:9 1231/4
பொன் ஆர் தேரும் புரவிகளும் மிடைந்து பூமி பொறை கூர
முன்னால் செல்ல வருவானை முந்நீர்_வண்ணன்-தன் மாமன் – சூளாமணி:9 1337/2,3
மேல்


கூரவே (1)

நெஞ்சில் அன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்த பின் – நாககுமார:4 139/2
மேல்


கூரிய (1)

கூரிய சிந்தையினாய் ஒன்று சொல் என்று கூறினளே – நீலகேசி:4 383/4
மேல்


கூரியீர் (1)

வத்தன் கண்டீர் வழக்கின்-கண் கூரியீர் – நீலகேசி:3 247/4
மேல்


கூரினான் (1)

அலங்கல் அணி வேலினான் அன்பு மிக கூரினான் – உதயணகுமார:2 122/4
மேல்


கூலி (1)

பொய் பொத்தி சொல்லினவும் போம் கூலி கொண்டனவும் – நீலகேசி:3 257/1
மேல்


கூவ (6)

பூசலிட்டு ஒருவன் கூவ புரவல குமரன் கேட்டு – நாககுமார:3 93/1
குறைவு_இல அமுதம் கொண்டு குளிர்ந்து அகம் மகிழ்ந்து கூவ
செறி பொழில்-அதனுள் சென்று செவியினுள் இசைப்ப மன்னன் – யசோதர:4 256/2,3
பொலம் கலம் புலம்ப ஆயம் புடை நின்று போற்று கூவ
அலங்கலும் குழலும் தாழ அணி ஞிமிறு அரவம்செய்ய – சூளாமணி:8 975/1,2
போர் மேகம் அன்ன திறல் பொரு களிற்று மேல் அரசர் போற்று கூவ
சீர் மேகம் என செறி கண் இடி முரசம் கடிது அதிர்ந்து திசை மேல் ஆர்ப்ப – சூளாமணி:9 1530/1,2
மாது ஆர் சாயல் மங்கையர் கூவ மகிழ்வு எய்தி – சூளாமணி:10 1741/2
நின்று கூவ வாக்குவார் – நீலகேசி:1 97/4
மேல்


கூவி (15)

கொற்ற வாள் தட_கையான் கூவி கொண்டு இருந்து – சூளாமணி:5 424/2
மல்லக மார்பினான்-தன் மருமகள் இவளை கூவி
வல்லிதில் கொடுக்க மன்னன் வாழ்க தன் கண்ணி மாதோ – சூளாமணி:6 515/3,4
கொற்றவன் குறிப்பு இது ஆயின் கூவி தன் அடியன்மாரை – சூளாமணி:6 569/1
மின் அணங்கு உருவ பைம் பூண் விஞ்சையன்-தன்னை கூவி
கல் நவில் தோளினாற்கு கருமம் ஈது என்று காட்டி – சூளாமணி:7 696/2,3
தேம் கமழ் அலங்கல் மார்பன் சித்திரதரனை கூவி
பாங்கு அமை பஞ்சும் பட்டும் துகில்களும் பரப்பி மேலால் – சூளாமணி:8 918/1,2
மெய் அகத்து உவகை கூர விரும்பி தன் அருகு கூவி
கையகத்தது என் என்ன கன்னியது உருவம் என்றாள் – சூளாமணி:8 1007/3,4
வஞ்சனை சீயம் ஆய வார் கழலவனை கூவி
எஞ்சல்_இல் புகழினானுக்கு இன்னணம் இசைப்பித்தானே – சூளாமணி:9 1136/3,4
கொடியவன் விடுத்த போழ்தில் கூற்றுவன்-தன்னை கூவி
வடி எயிறு இலங்க நக்கு வாழிய தோள்கள் இன்று – சூளாமணி:9 1427/1,2
இன்னன பாடி ஆட ஈர்ம் கனி பலவும் கூவி
முன்னவன் ஆர ஊட்டி முறுவலோடு அமர்ந்த பின்னை – சூளாமணி:10 1621/1,2
மாயோன் மடந்தைமார் கூவி மகிழ்விப்பார் – சூளாமணி:10 1657/4
உடைந்து அழி மனத்தன் வேந்தன் உழையது ஓர் தெய்வம் கூவி
படம் தவா முகத்து வேழம் ஆகு என பணித்துவிட்டான் – சூளாமணி:10 1663/3,4
மன்னவன் உழையர்-தம்மால் மந்திரத்தவரை கூவி
பொன் அவிர் பவழ திண் கால் புரி மணி கூடம் எய்தி – சூளாமணி:11 1852/2,3
வன மலர் கண்ணியான் கூவி மற்றவர்க்கு – சூளாமணி:12 2080/3
தேவிமார்-தங்களை கூவி செவ்வனே – சூளாமணி:12 2095/2
கூவி யான் குறை உளது என குறுகு-மின் நமர் என்று – நீலகேசி:1 61/3
மேல்


கூவியிட்டு (1)

குஞ்சி நல் கொடி கரத்தால் கூவியிட்டு அழைக்கும் அன்றே – உதயணகுமார:1 8/4
மேல்


கூவுகின்றது-கொல் (1)

கொன் இயல் பாவம் என்னை கூவுகின்றது-கொல் என்றான் – யசோதர:2 147/4
மேல்


கூவுபு (1)

கோல் இயல் அரசன் முன்னர் கூவுபு குலுங்கி வீழ – யசோதர:2 146/3
மேல்


கூவும் (3)

கூவும் கோகிலம் கொள் மது தார் அணி – நாககுமார:1 26/3
கொந்துகள் குடைந்து கூவும் குயிலொடு குழுமி ஆர்ப்ப – யசோதர:4 226/2
கூவும் ஓடி அவை கொள்குவம் என்றான் – சூளாமணி:10 1579/4
மேல்


கூவையே (1)

கரை என கிடந்தன களிற்றின் கூவையே – சூளாமணி:9 1396/4
மேல்


கூழ் (1)

செய்தாய் முழு கூழ் அது போல சிதைக்க என்றாள் – நீலகேசி:4 399/4
மேல்


கூழன்-தன் (1)

கூழன்-தன் உழையே கொள செல்பவோ – நீலகேசி:2 208/4
மேல்


கூழின் (1)

படையினது அமைதி கூழின் பகுதி என்று இவற்றின் பல் மாண்பு – சூளாமணி:5 300/1
மேல்


கூழைமை (1)

கூழைமை பயின்ற கூற்ற அரசனை குதிக்கும் சூழ்ச்சி – சூளாமணி:11 1857/3
மேல்


கூளிதாய்க்கு (1)

கூளிதாய்க்கு என ஆக்கிய கோட்டம் ஒன்று உளதே – நீலகேசி:1 32/4
மேல்


கூற்ற (2)

கோள் வினை பயின்ற கூற்ற அரசனால் கொள்ளற்பால – சூளாமணி:11 1855/1
கூழைமை பயின்ற கூற்ற அரசனை குதிக்கும் சூழ்ச்சி – சூளாமணி:11 1857/3
மேல்


கூற்றதாமோ (1)

இருள்-தாம் இ ஐந்தனுள் எ கூற்றதாமோ
இருள்-தாம் இ ஐந்தனுள் எ கூற்றும் இல்லேல் – நீலகேசி:6 690/2,3
மேல்


கூற்றது (1)

சென்று அ விரலும் என தான் நின் கூற்றது ஆயிற்று – நீலகேசி:6 726/2
மேல்


கூற்றம் (4)

கொல் வாள் ஓச்சியே கூற்றம் விருந்து உண – உதயணகுமார:1 53/2
கூற்றம் என அடவி புடை தடவி உயிர் கோறற்கு – யசோதர:5 264/1
கோள் வினை பயின்ற கூற்றம் குறுகலது ஆயின் என்றார் – சூளாமணி:11 1854/4
கூற்றம் போல்வது ஓர் கொடுமையை உடையவள் குறைந்தே – நீலகேசி:1 57/4
மேல்


கூற்றமும் (7)

குடி மிசை வெய்ய கோலும் கூற்றமும் பிணியும் நீர் சூழ் – சூளாமணி:5 269/1
வெம்பிய உருமு தீயும் கூற்றமும் வெதுப்பும் நீரார் – சூளாமணி:5 299/4
ஓவு_இல் தொல் புகழான் உளன் கூற்றமும்
ஏவி நின்று இனிது ஆண்டிடும் ஈட்டினான் – சூளாமணி:5 338/3,4
வெம் கண் கூற்றமும் திசைகளும் விசும்பொடு நடுங்க – சூளாமணி:7 714/3
சுட்டினர் மொழிப ஆயில் கூற்றமும் துளங்கும் நீரார் – சூளாமணி:8 916/2
ஊழி நாள் எரியும் கூற்றமும் உருமும் ஒப்பவன் கை படை நவின்றான் – சூளாமணி:9 1317/3
கொண்டன சிலம்பு குலுங்கின விலங்கல் கூற்றமும் தலை பனித்ததுவே – சூளாமணி:9 1324/4
மேல்


கூற்றமே (2)

கூற்றமே என கூறலும் ஆம் குடி – நீலகேசி:1 22/2
குடை சிட்டன் ஆர் உயிர்க்கு ஓர் கூற்றமே கண்டீர் – நீலகேசி:5 474/4
மேல்


கூற்றவா (1)

யார் வினவுங்காலும் அவை மூன்று கூற்றவா
நேர்வனவே ஆகும் நிழல் திகழும் பூணாய் – நீலகேசி:1 113/3,4
மேல்


கூற்றாம் (1)

வாகுடன் குறத்தி வேடம் வகுத்தனன் குறிகள் கூற்றாம்
நாகத்தின் நகர் அழிந்த நடுக்கங்கள் தீர எண்ணி – உதயணகுமார:1 109/2,3
மேல்


கூற்றால் (1)

பற்பல கூற்றால் பிறங்கி பரக்கும் திறம் என்னையோ – நீலகேசி:4 394/3
மேல்


கூற்றின் (1)

மந்தர மா நெடு மலையின் மத்தகத்து மேல் கூற்றின்
அந்தர பேர் உலகத்துள் அமரரை மற்று அறையுங்கால் – சூளாமணி:11 2048/1,2
மேல்


கூற்றினும் (2)

குணசேனன் வீழ கண்டு கூற்றினும் கொடிய நீரான் – சூளாமணி:9 1304/1
குன்றினும் பெரியான் கூற்றினும் வெய்யோன் கொண்டனன் தண்டு கை வலித்தே – சூளாமணி:9 1321/4
மேல்


கூற்று (7)

கூற்று உரு எய்தி ஓடி கோட்டிடை குடர்கள் ஆட – உதயணகுமார:1 89/1
மாற்றலன்-தனை கூற்று உண வண்மையில் விருந்து ஆர்க என – உதயணகுமார:3 182/3
கூற்று எழும் கரி கொதித்து எழுந்ததால் – உதயணகுமார:6 325/1
எரி மணிகள் இலதை வேந்து என்ன இ கூற்று என – நாககுமார:2 70/4
கொன்று இவர்-தம்மை வாள் வாய் கூற்று உண விடுவல் என்றே – யசோதர:2 123/2
கண் மிசை கனிந்த ஒற்றன் கூற்று காதல் கனி படு செல்வம் முந்நீர் – சூளாமணி:9 1132/1
குணி குணம் எனும் கூற்று_இலனால் அது என் – நீலகேசி:10 856/3
மேல்


கூற்று_இலனால் (1)

குணி குணம் எனும் கூற்று_இலனால் அது என் – நீலகேசி:10 856/3
மேல்


கூற்றும் (3)

கொண்ட தன் கரணம்-தானும் இல்லையேல் கூற்றும் இல்லை – நீலகேசி:4 432/1
இருள்-தாம் இ ஐந்தனுள் எ கூற்றும் இல்லேல் – நீலகேசி:6 690/3
குணங்கள்-தாம் குணி எனும் கூற்றும் உண்மையின் – நீலகேசி:8 804/1
மேல்


கூற்றுவன்-தன்னை (1)

கொடியவன் விடுத்த போழ்தில் கூற்றுவன்-தன்னை கூவி – சூளாமணி:9 1427/1
மேல்


கூற (18)

வயந்தகன் கூற மன்னன் மா பிடி நிற்க என்றான் – உதயணகுமார:1 112/4
என்று அவள் கூற நன்று என்று இனிதுடன் கேட்கின்றாரே – நாககுமார:2 54/4
இன்று உமக்கு ஆளர் ஆனோம் என்று அவர் கூற நன்று என் – நாககுமார:4 109/3
அன்னணம் அண்ணல் கூற அருள் உடை மனத்தன் ஆகி – யசோதர:1 67/1
மற்று அவன் இனைய கூற மனம் நனி கலங்கி வாடி – யசோதர:4 253/1
கொற்றங்கொள் நேமி நெடுமால் குணம் கூற இப்பால் – சூளாமணி:0 3/1
கோது_இலா முனிவன் சொன்ன உரை இவை கூற கேட்டாம் – சூளாமணி:5 355/4
பஞ்சு இலங்கும் அல்குலார் பலாண்டு கூற ஆண்டு போய் – சூளாமணி:6 495/1
என்று அவர் கூற இரும் கடை காவலன் – சூளாமணி:7 660/1
ஒருத்தனுக்கொருத்தன் கூற கேட்டு உற்று செய்து வாழ – சூளாமணி:7 667/3
குறை என்று எங்களை குமர நீ பணித்ததும் கூற
அறையும் பைம் கழல் ஆழி அம் தட கை எம் அரைசன் – சூளாமணி:7 702/2,3
தானையுள்படுநர் மாண்பின் தாரவர் தொழுது கூற
வேல் நவில் தட கை வேந்தன் விண் இயல் விமானம் ஒன்று – சூளாமணி:8 846/2,3
கடிவினை நிலையும் அன்றே கண்டு வந்து ஒருவன் கூற
சுடு சொல் இஃது ஒழிக என்று துணை செவி புதைத்து வல்லே – சூளாமணி:9 1146/2,3
கொல் நவின்ற வேல் குமரன் குரு குலத்தார் கோன் இவனே கூற கேளாய் – சூளாமணி:10 1805/4
கோடு இலங்கும் நெடு வரை மேல் குடை வேந்தர் இவர் குணங்கள் கூற கேட்பின் – சூளாமணி:10 1821/3
கூர்ந்து வருப யாம் கூற உலவா – சூளாமணி:11 1986/4
ஆங்கு அவள் அறம் கூற கேட்ட அவாச்சியன்-தான் – நீலகேசி:3 259/1
மொக்கலனும் இது கூற முல்லை நாறு இரும் குழலாள் – நீலகேசி:4 290/1
மேல்


கூறப்பட்டது (1)

கொலை தரு வேலினாய் கூறப்பட்டது இ – சூளாமணி:5 390/3
மேல்


கூறப்பட்டவே (1)

கோது_இலா திறல் சில கூறப்பட்டவே – சூளாமணி:9 1507/4
மேல்


கூறல் (2)

உரிமையால் தோழர் வந்துசேர்ந்தது கூறல் உற்றேன் – நாககுமார:3 74/4
உறுதி கூறல் ஒழி ஒழுக்கம் காத்தல் ஒழி – நீலகேசி:5 556/1
மேல்


கூறலாமோ (1)

கூறலாமோ மீட்டுணர்வு கொண்டு உணர்வான் இல்லாக்கால் – நீலகேசி:5 569/4
மேல்


கூறலும் (17)

மருவி கூறலும் மன்னன் வெகுண்டனன் – உதயணகுமார:1 33/4
ஏர் அணி அரசருக்கு இயல் கூறலும்
தார் அணி மன்னன் தன்னுள் மகிழ்ந்தனன் – உதயணகுமார:3 170/3,4
உதவ காரணம் என் என கூறலும்
சிதைவு_இல் காட்சி நல் சீர்_ஒழுக்கத்தவர் – உதயணகுமார:6 342/2,3
என்று அரசன் கூறலும் இன பொருள் கவர்ந்தனர் – நாககுமார:2 68/4
நீடு மாளிகை அடைய நீர்மை நற்றாய் கூறலும்
ஆடும் சூது மனை புகுந்து அரசர்-தம்மை வென்ற பின் – நாககுமார:2 69/2,3
இந்த நல் வனத்து இருந்தான் என்று அவளும் கூறலும்
அந்த வாயுவேகனை அண்ணல் வதைசெய்தனன் – நாககுமார:4 138/3,4
என்று கூறலும் ஏதம் இது என்றிலன் – யசோதர:1 17/1
என்று கூறலும் ஏந்து நீள் முடி – சூளாமணி:7 605/1
அலங்கல் ஆழியினான் அது கூறலும்
கலங்கு நூல் கரும தொழில் மாக்கள்-தாம் – சூளாமணி:7 642/1,2
கொற்றவன் கழலடி தொழுது கூறலும்
வெற்றி வேலவன் ஒளி துளும்ப வீங்கினான் – சூளாமணி:8 901/3,4
ஆகிய வாய் மொழி கூறலும் ஆயிடை – சூளாமணி:9 1225/3
ஆழியினான் அது கூறலும் ஆயிடை – சூளாமணி:9 1227/1
கூடாது எனினும் சில கூறலும் வேண்டும் அன்றே – நீலகேசி:1 11/3
கூற்றமே என கூறலும் ஆம் குடி – நீலகேசி:1 22/2
கூறியவாற்றால் உயிர் உண்மை கூறலும் குற்றம் என்னோ – நீலகேசி:5 507/4
அன்மை வெஃகுதல் அன்று என கூறலும்
இன்மையால் வெஃகல் என்றதும் தீமையின் – நீலகேசி:5 528/2,3
கொண்டேன் என அவன் கூறினன் கூறலும்
பண்டேல் அறி என பராசர நீ இனி – நீலகேசி:7 781/2,3
மேல்


கூறலுற்றேன் (1)

அரசிளங்குமரன் செல்_நாள் அடுத்தது கூறலுற்றேன் – யசோதர:4 261/4
மேல்


கூறலோடும் (1)

கூறினார் கூறலோடும் குரை அழல் அவிவதே போல் – சூளாமணி:9 1173/3
மேல்


கூறா (1)

திங்களை இரண்டு கூறா செய்து முன் செறித்த போல – சூளாமணி:8 925/1
மேல்


கூறாய் (3)

என்னை இ உலகு காவல் எனக்கு இனி இறைவி கூறாய்
மன் உயிர்க்கு அரணம் மண் மேல் மன்னவர் அல்லரோ தான் – யசோதர:2 139/3,4
கூறுவேன் என கூறாய் குரல் முரசு அனையது ஓர் குணத்தை – நீலகேசி:2 158/2
கொள்ளும் திறம் என்னை கூறாய் குணந்து இனி – நீலகேசி:5 588/3
மேல்


கூறார் (1)

கூறார் எழாத குழக்கன்றினுக்கு இன்மை முன்னா – நீலகேசி:4 403/2
மேல்


கூறி (26)

மருமகன் நீயே என்று மன்னவன் இனிமை கூறி
வருமுறை நயந்துகொண்டு மகிழ்ந்து உடன் இருந்த போழ்து – உதயணகுமார:1 102/1,2
திரு_மகள் கனவு கூறி செல்வ நீ கற்பி என்ன – உதயணகுமார:1 102/3
வத்தவன் கையை பற்றி மன்னவன் இனிது கூறி
வத்தவன் ஓலை தன்னுள் வளமையில் புள்ளியிட்டும் – உதயணகுமார:1 107/1,2
அ திசை போவோம் என்றே அகம் மகிழ்ந்து இனிய கூறி
வெற்றி நாற்படையும் சூழ வெண்குடை கவரி மேவ – உதயணகுமார:2 150/2,3
மாண்டவன் வந்தது ஒப்ப வரிசையின் முகமன் கூறி
வேண்டு அவாம் தனிமை தீர்ந்தே விரகுடன் இன்புற்றானே – உதயணகுமார:4 195/3,4
அன்ன மெல் நடையினாளை அகம் மகிழ் குளிர கூறி
மன்னன் மானீகை-தன்னை மணம் மிக செய்துகொண்டான் – உதயணகுமார:4 239/3,4
செய துதி தேவர் கூறி சிறந்த பூசனையும் செய்ய – நாககுமார:5 165/3
நாவினால் உளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள் – யசோதர:2 109/4
நேர் எனக்கு இறைவன் ஆக நினைவல் என்று இனிய கூறி
பார் இயல் பொறையை நெஞ்சில் பரிந்தனன் மன்னன் ஆனான் – யசோதர:5 312/3,4
அந்தணர் ஆசு இடை கூறி ஆய் மலர் – சூளாமணி:3 89/1
கொங்கு அலர் தெரியலான் கூறி கொய் மலர் – சூளாமணி:3 111/3
இவ்வகை அணியன கூறி ஈண்டு நும் – சூளாமணி:4 226/2
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி
அறிந்தவை இயற்றுகிற்கும் அமைதியார் அமைச்சர் ஆவார் – சூளாமணி:5 247/3,4
அங்கு அவன் மொழிந்த பின்னை அவனையும் அமைதி கூறி
நங்கை-தன் தாதை தோழர் நால்வருள் நால்வனாவான் – சூளாமணி:5 347/2,3
பாடுவார் வணங்குவார் பலாண்டு கூறி வாழ்த்துவார் – சூளாமணி:6 476/1
உலகு உபசாரம் மாற்றம் உரைத்தலுக்கு உரிய கூறி
விலகிய கதிர ஆகி விளங்கு ஒளி கடக கையான் – சூளாமணி:6 511/2,3
தம் குல தொடர்ச்சி கூறி தானவன் இருந்த போழ்தின் – சூளாமணி:6 550/1
உற்றவன் உவப்ப கூறி உரிமை நாடகங்கள் காட்டி – சூளாமணி:6 571/2
ஆளிகட்கு அரசன் அன்ன அரசர்_கோன் அதனை கூறி
வாளி வில் தட கை வெம் போர் மணி வரை அனைய மார்பின் – சூளாமணி:7 672/1,2
பங்கய முகத்தவர் பலாண்டு பல கூறி
நங்கை அடி போற்றி என நங்கை நடை கற்றாள் – சூளாமணி:8 861/3,4
பாடுவார் கண்டு கூறி பரவுவார் பணிந்து முன்னால் – சூளாமணி:9 1543/2
பய மலை மன்னன் பாவைக்கு அவரவர் பண்பு கூறி
கய மலர் நெடும்_கணாள் ஓர் காரிகை காட்டினாளே – சூளாமணி:10 1833/3,4
குளித்தன-தாம் கொள்ளப்பாடு_இன்மையால் இன்மை கூறி நின்றேற்கு – நீலகேசி:5 513/2
என்று இவைகள் கூறி இடுவார்க்கு அறம் வேண்டான் – நீலகேசி:6 697/2
குணங்களும் தொழில்களும் கூறி வேறு எனின் – நீலகேசி:8 798/1
குணத்தொடு குணிகளை கூறி வேறு என – நீலகேசி:8 800/1
மேல்


கூறிக்காண் (1)

குறியளோ நெடியளோ நூல் ஒழிப்பாய் கூறிக்காண் – நீலகேசி:4 300/4
மேல்


கூறிதி (1)

குற்றம் இவை என கூறிதி அன்றோ – நீலகேசி:4 370/4
மேல்


கூறிய (2)

கொற்றவன் குறிப்பினை அறிந்து கூறிய
மற்று அவர் தொடங்கினார் மந்திரத்து_உளார் – சூளாமணி:3 113/3,4
அஞ்சி நின்று அவர் கூறிய பின் அரிமஞ்சு – சூளாமணி:7 646/1
மேல்


கூறியது (1)

கூறியது எ குணம் அ குணம்-தான் அ குணி பொருளே – நீலகேசி:4 393/1
மேல்


கூறியவாற்றால் (1)

கூறியவாற்றால் உயிர் உண்மை கூறலும் குற்றம் என்னோ – நீலகேசி:5 507/4
மேல்


கூறியான (1)

ஆங்கு அவள் அறிய கூறியான யூகி தன் உயிர் – உதயணகுமார:2 130/2
மேல்


கூறியும் (1)

கோது_இல் தூய்மைய ஆம் என கூறியும்
யாதும் நீ அசுவாம் என சொல்லுவாய் – நீலகேசி:5 558/2,3
மேல்


கூறில் (1)

நாவலந்தீபம் நூற்றை நண்ணு தொண்ணூறு கூறில்
ஆவதன் ஒரு கூறு ஆகும் அரிய நல் பரத கண்டம் – நாககுமார:1 5/1,2
மேல்


கூறின் (3)

கொலையினது இன்மை கூறின் குவலயத்து இறைமை செய்யும் – யசோதர:4 243/1
கொண்டு நின்றாம் பிற கூறின் ஐந்தே என – நீலகேசி:5 552/2
குல முதல் மூர்த்தியாய் கூறின் ஒன்று அவை – நீலகேசி:8 791/2
மேல்


கூறின (2)

கூறின பொருள்களும் குணனும் செய்கையும் – நீலகேசி:8 788/3
குழவி காலத்து கூறின யாவையும் – நீலகேசி:10 883/1
மேல்


கூறினது (1)

மேல் நிகழ்வு என மெய் தவர் கூறினது
ஆல் நவின்று தன் தாய் துயர் தீர்த்தனன் – உதயணகுமார:5 274/1,2
மேல்


கூறினம் (1)

கூடல என்பது கூறினம் அன்றே – நீலகேசி:5 620/4
மேல்


கூறினர் (2)

என்று தன் புறத்து இப்படி கூறினர்
சென்று சேடியர் பற்றிய அ தகர் – யசோதர:3 219/1,2
கூடலது ஆய குணி பொருள் கூறினர் யாவர் என்றாள் – நீலகேசி:4 380/4
மேல்


கூறினளே (1)

கூரிய சிந்தையினாய் ஒன்று சொல் என்று கூறினளே – நீலகேசி:4 383/4
மேல்


கூறினன் (1)

கொண்டேன் என அவன் கூறினன் கூறலும் – நீலகேசி:7 781/2
மேல்


கூறினனே (1)

குற்றம் இவையிவை ஆதலை கேள் என கூறினனே
முற்றும் அவளது பக்கம் அறிதல்_இல் மொக்கலனே – நீலகேசி:4 376/3,4
மேல்


கூறினாய் (2)

கொன்றதே கொலை என்று ஐந்தில் கூறினாய் – நீலகேசி:5 541/4
கூறினாய் அது குற்றம் உடைத்து அரோ – நீலகேசி:10 882/4
மேல்


கூறினார் (7)

ஏனை மாந்தர் இறைஞ்சுபு கூறினார் – யசோதர:1 14/4
பங்கய_முகத்தர் பல்லாண்டு கூறினார் – சூளாமணி:3 88/4
பாயின பணி மொழி பலவும் கூறினார் – சூளாமணி:8 1046/4
கூறினார் கூறலோடும் குரை அழல் அவிவதே போல் – சூளாமணி:9 1173/3
குன்றம் ஒன்று எடுத்தலும் கொணர்ந்து கூறினார்
பொன்றல்_இல் புராணநூல் புலவர் என்பவே – சூளாமணி:9 1509/3,4
அளப்பு அரும் திறல் பெயர் அமர கூறினார் – சூளாமணி:10 1735/4
கோன் இவன் ஆம் என கூறினார் யாரோ – நீலகேசி:7 768/4
மேல்


கூறினாள் (3)

கோது என கொள்-மின் என்று ஒருத்தி கூறினாள் – சூளாமணி:8 1049/4
உரை செறி மறுகில் என்று ஒருத்தி கூறினாள் – சூளாமணி:8 1052/4
மன்னுதி என்று மற்றும் கூறினாள் மாதராளே – நீலகேசி:3 264/4
மேல்


கூறினான் (7)

மன்னன் இன் உரை மகிழ்ந்து கூறினான்
பின் அமைச்சரை பேணி கேட்டனன் – உதயணகுமார:5 285/3,4
கனிய மற்று இன்னணம் கடவுள் கூறினான் – சூளாமணி:4 196/4
அன்ன மெல் நடையவட்கு அறிய கூறினான் – சூளாமணி:5 412/4
கோது_இல் கேள்வியான் தொழுது கூறினான் – சூளாமணி:7 576/4
கோல் எதிர் கையவன் தொழுது கூறினான் – சூளாமணி:9 1251/4
தாழி பேர் விலன் தமன் ஒருவன் கூறினான்
ஊழி பேர் எரியுள் நெய் சொரிந்தது ஒப்பவே – சூளாமணி:9 1257/3,4
போத என்று அந்தணன் புலம்பி கூறினான் – சூளாமணி:10 1597/4
மேல்


கூறு (7)

கூறு நல் விதி புணர்ந்து குறைவு இன்றி செல்வம் ஆம் முன் – உதயணகுமார:1 4/2
போந்து பின் வராதது என்ன புரவல நீ கூறு என்றாள் – உதயணகுமார:2 132/4
காதலின் திண் களிற்று இயல் கூறு எனா – உதயணகுமார:6 351/4
ஆவதன் ஒரு கூறு ஆகும் அரிய நல் பரத கண்டம் – நாககுமார:1 5/2
கூறு கொண்டு எழு கொன்றை அம் தீம் குழல் – சூளாமணி:1 14/2
கூறு குறி ஆறும் அவை கொள்ளும் வகை-தாமும் – நீலகேசி:5 521/2
குறிகொண்டாய் ஒன்று கூறு எனக்கு என்னவே – நீலகேசி:10 870/4
மேல்


கூறு-மின் (2)

குறை இது கூறு-மின் சென்று தூதிர்காள் – சூளாமணி:7 690/2
கொண்டு நின்றான் திசை கூறு-மின் என – நீலகேசி:8 795/2
மேல்


கூறுக (3)

நடுக்கம் ஒன்று இன்றி நம்-பால் நகுபொருள் கூறுக என்ன – யசோதர:1 62/2
கொண்டு என் சொல் எல்லாம் குணனே என கூறுக என்னேன் – நீலகேசி:0 6/3
கொல் ஏறு அது ஆகா பொழுதே உடன் கூறுக என்றான் – நீலகேசி:4 402/4
மேல்


கூறுகூறு (1)

கூறுகூறு செய்தால் உடம்புள் உயிர் – நீலகேசி:2 216/1
மேல்


கூறுங்கால் (1)

கொண்டு மீட்டு அவை கூறுதல் கூறுங்கால்
கண்ட பூதத்து காரியம் என்றியோ – நீலகேசி:10 873/3,4
மேல்


கூறுதல் (2)

குறி உணர்ந்து அதன் கூறுதல் உற்றதே – நாககுமார:1 25/4
கொண்டு மீட்டு அவை கூறுதல் கூறுங்கால் – நீலகேசி:10 873/3
மேல்


கூறுதல்-தன்னை (1)

நில்லாதாக கூறுதல்-தன்னை நெறி என்றீர் – நீலகேசி:5 566/1
மேல்


கூறுதற்பாலதே (1)

கொள்வர் எம் உரை கூறுதற்பாலதே – யசோதர:0 3/4
மேல்


கூறுபவ்வே (1)

குன்றாத ஒன்றும் குறைபாட்டதும் கூறுபவ்வே
வென்றார்-தம் நூலின் விதி மெய்ம்மை உணர்ந்தவரே – நீலகேசி:1 124/3,4
மேல்


கூறுபாடு (1)

குரு மணி கொள் நெடு முடியாய் கூறுபாடு உடையவரே – சூளாமணி:11 2042/4
மேல்


கூறும் (18)

கூறும் மன் மகளுடன் கொற்றவனை மீட்குவம் – உதயணகுமார:1 66/4
மன்னற்கு உறுதி மறித்து இனி கூறும்
பொன் அடி வணங்கி புரவலன் கேட்ப – உதயணகுமார:2 148/3,4
வழிபெறும் அமைச்சரோடு வத்தவன் இனிய கூறும்
மொழி அமிர்தம் நலாளை மோகத்தில் பிரியேன் என்ன – உதயணகுமார:3 159/2,3
பதுமை வந்து அரசன் கண்டு பன்னுரை இனிது கூறும்
மதியின் வாசவதத்தை-தன் வண் கையின் அதனை போல – உதயணகுமார:4 190/2,3
கூறும் இவள் அல்லது குவலயத்தின் இல்லை என்று – உதயணகுமார:4 237/3
வேந்தன் பக்கம் கூறும் நல் விசாலநேத்திரையவள் – நாககுமார:2 63/1
நாக நல் குமரன் கண்டு நயந்தரன் இனிய கூறும்
வேக நின் மனைக்கு சூரன் வெகுண்டவன் வந்தான் என்ன – நாககுமார:3 84/1,2
அஞ்சுநூற்றுவர்கள் வந்தே அடி பணிந்து இனிய கூறும்
தஞ்சமாய் எங்கட்கு எல்லாம் தவ முனி குறி உரைப்ப – நாககுமார:4 111/1,2
கொங்கு அவிழ் குழலி மற்று அ குணவதி பிறிது கூறும்
நங்கை நின் பெருமை நன்றே நனவு என கனவில் கண்ட – யசோதர:2 99/2,3
சென்றனள் முனிவு சிந்தை திரு_இலி பிறிது கூறும்
கொன்று உயிர் களைதல் அஞ்சில் கோழியை மாவில் செய்து – யசோதர:2 142/2,3
என்று இனிது கூறும் வணிகன் சொல் இகழாதே – யசோதர:5 273/1
ஊழ் புரிந்து உறுதி கூறும் உயர் குலம் மலர நின்றான் – சூளாமணி:5 359/2
உளர்ந்தனன் உணர்வின் ஊக்கி உரைக்கிய எடுத்து கூறும் – சூளாமணி:6 530/4
மங்கல தோழி கூறும் மாமியார் அடிகள்-தம்மை – சூளாமணி:8 1004/2
கொன்றவன்னே கொடியன் என உலகம் கூறும் அதனாலும் – நீலகேசி:1 39/1
நக்கனளாய் இது கூறும் நாதனது இயல்பு அறியா – நீலகேசி:4 290/2
குயலாகுயலம் என கூறும் வினை – நீலகேசி:5 490/1
குலம் பொய்யே என கூறும் செம் கூறையாய் – நீலகேசி:5 534/3
மேல்


கூறுவது (1)

குறி-தாம் இவை ஆறினும் கூறுவது என் – நீலகேசி:5 489/3
மேல்


கூறுவன் (2)

கோலம்_இல் நோன்றல் குமானுயர்-தம்மையும் கூறுவன் கேள் – நீலகேசி:1 85/1
கூர்த்தல்_இல் வினையின் இன்மை கூறுவன் என்றியாயின் – நீலகேசி:4 426/3
மேல்


கூறுவாம் (1)

வைத்து இசைத்தனம் மற்றதும் கூறுவாம் – சூளாமணி:7 610/4
மேல்


கூறுவார் (2)

அலை செய்தார் பலர் யார் அவை கூறுவார் – யசோதர:3 182/4
கூடுவார் கொற்றம் கொள்ள கூறுவார் ஆகி எங்கும் – சூளாமணி:9 1543/3
மேல்


கூறுவாள் (1)

தரணிசுந்தரி அவள் அவற்கு இது என்று கூறுவாள் – நாககுமார:4 136/4
மேல்


கூறுவான் (4)

துலங்கி வந்து அடி பரவி சொல் இனிது கூறுவான் – உதயணகுமார:2 137/4
விஞ்சு மா தவன் மெய்ம்மையில் கூறுவான் – உதயணகுமார:5 271/4
சித்திர நேர் மாதரை செல்வன் நோக்கி கூறுவான் – உதயணகுமார:6 356/4
இணை கரமும் கூப்பி நின்று இனிது இறைஞ்சி கூறுவான் – நாககுமார:4 121/4
மேல்


கூறுவேம் (1)

உண்டு தாம் ஆகுலம் உணர்வு-தான் கூறுவேம் – நீலகேசி:5 552/4
மேல்


கூறுவேன் (1)

கூறுவேன் என கூறாய் குரல் முரசு அனையது ஓர் குணத்தை – நீலகேசி:2 158/2
மேல்


கூறை (4)

பேன் அறா கூறை பெரு முடுகு நாறுமேல் துக்கம் துக்கம் – நீலகேசி:3 256/1
உவரோடு பல் கூறை உடன் புழுக்கி ஒலித்திடும் நீ – நீலகேசி:4 279/3
இருத்தல் நிற்றல் அன்றியும் இட்ட கூறை எய்தலும் – நீலகேசி:4 355/2
கொண்டை குண்டிகை கூறை குடம் குடை – நீலகேசி:5 532/2
மேல்


கூறையாய் (1)

குலம் பொய்யே என கூறும் செம் கூறையாய்
சலம் பொய் அன்று இது ஒன்றே நுங்கள் சத்தையே – நீலகேசி:5 534/3,4
மேல்


கூறையும் (1)

கொள்ளி மலையும் கொடிபடு கூறையும் அகலும் – நீலகேசி:1 30/2
மேல்


கூன் (2)

ஓரையாய் முதலை ஆகி கூன் படை ஒளித்த அன்றே – சூளாமணி:10 1677/4
கூன் இறா கண்டாலும் கொள்ள முடியாதேல் துக்கம் துக்கம் – நீலகேசி:3 256/3
மேல்


கூனன் (1)

குரங்கினை அனைய கூனன் குழிந்து புக்கு அழிந்த கண்ணன் – யசோதர:2 105/3
மேல்


கூனி (1)

அந்தரத்து ஒரு கூனி நின்று ஆடுவாள் – யசோதர:3 181/1
மேல்


கூனியை (1)

கொந்து வேய் குழல் கூனியை கொல் கரா – யசோதர:3 181/3

மேல்