கி – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிஞ்ஞர 1
கிடக்கும் 1
கிடங்கு 1
கிடத்தல் 3
கிடந்த 9
கிடந்தது 3
கிடந்தன 1
கிடந்தார் 1
கிடந்தில 1
கிடந்து 6
கிடந்தேன் 1
கிடப்ப 2
கிடுகிடென்றிடும் 1
கிடுகின 1
கிடுகு 1
கிண்கிணி 2
கிண்கிணிகள் 1
கிண்கிணியும் 1
கிண்டி 1
கிண்ணம் 1
கிண்ணர்கள் 1
கிம்புரி 1
கிரண 2
கிரணம் 1
கிரந்தியும் 1
கிரமத்து 1
கிரமம்-தன்னில் 1
கிராதன் 1
கிரி 3
கிரிகை 1
கிரிநகர்-தன்னை 1
கிரிபுரத்தை 1
கிரியம்-தன்னில் 1
கிரியும் 3
கிரியை 1
கிரியைகள் 1
கிரீவன் 1
கிரீவனுக்கு 1
கிருதமாதனத்தை 1
கிருமி 1
கிருமியோ 1
கிலுகிலுத்ததே 1
கிலுகிலுப்பு 1
கிலேசமும் 1
கிழக்காய் 1
கிழத்தி 1
கிழத்தி-தன் 1
கிழமை 1
கிழமை-தன்னால் 1
கிழமை-தன்னில் 1
கிழமையின் 1
கிழமையும் 1
கிழவ 1
கிழவர் 8
கிழவர்-தங்கள் 1
கிழவர்-தம்மை 1
கிழவர்க்கு 1
கிழவர்கள் 1
கிழவன் 9
கிழவன்-கண் 1
கிழவனாய் 1
கிழவனை 2
கிழவியும் 1
கிழவு 2
கிழி 2
கிழி-அதன்னை 1
கிழித்ததும் 1
கிழித்திடும் 1
கிழிய 2
கிழியும் 1
கிழியோடு 1
கிள்ளி 2
கிள்ளை 1
கிளக்குவேன் 1
கிளக்குவை 1
கிளத்தல் 1
கிளத்தல்-தான் 1
கிளத்தும் 1
கிளந்த 2
கிளந்து 1
கிளப்பின் 1
கிளர் 24
கிளர்கின்றது 1
கிளர்த்தன 1
கிளர்தர 1
கிளர்ந்த 1
கிளர்ந்தவே 1
கிளர்ந்தனர் 1
கிளர்ந்து 8
கிளர்வன 2
கிளர 1
கிளரும் 3
கிளவாது 1
கிளவி 6
கிளவி-தன்னால் 1
கிளவியர் 1
கிளவியார்-தம் 1
கிளவியாரும் 1
கிளவியாலும் 1
கிளவியாளை 1
கிளி 6
கிளிகள் 1
கிளிப்பிள்ளைகள் 1
கிளியும் 2
கிளை 7
கிளைக்கும் 1
கிளைகள் 1
கிளைகளும் 2
கிளைஞர் 1
கிளைத்தலை 1
கிளைத்து 1
கிளைமையும் 1
கிளையவர் 1
கிளையை 1
கிளையொடு 4
கிளையொடும் 1
கின்னர 2
கின்னரகீதம் 1
கின்னரம் 1
கின்னரர் 3
கின்னரர்கள் 1
கின்னரி 1
கின்னரியோ 1

கிஞ்ஞர (1)

கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே – சூளாமணி:11 1899/4
மேல்


கிடக்கும் (1)

பக்கம் கிடக்கும் பதர் என கொள் நீ – சூளாமணி:11 1982/4
மேல்


கிடங்கு (1)

கிடங்கு அருகு இஞ்சி ஓங்கி கிளர் முகில் சூடி செம்பொன் – நாககுமார:1 7/1
மேல்


கிடத்தல் (3)

ஈன மண்ணில் இவர் காண கிடத்தல் இனிதோ இகல் வேந்தே – சூளாமணி:9 1474/4
பகர கழுகு பாராட்ட கிடத்தல் தகுமோ படை வேந்தே – சூளாமணி:9 1477/4
வாலை நீட்டி கிடத்தல் தன் மாட்சியோ – நீலகேசி:2 222/4
மேல்


கிடந்த (9)

படம் கிடந்த அல்குலார்கள் பாடலோடு ஆடலாலே – நாககுமார:1 7/3
எற்றிய வயிர திண் தூண் நெரிந்து இடை கிடந்த ஆறும் – சூளாமணி:9 1151/3
மெழுகி மீது ஓர் மணி ஆரம் வீசி கிடந்த விரை ஆகம் – சூளாமணி:9 1475/2
அனைத்துணைய தடம் கடலும் அற கிடந்த பிறந்து உழப்பும் – நீலகேசி:2 183/2
ஓத்தில் கிடந்த வகை இது கேள் என்று உரைத்தனளே – நீலகேசி:4 395/4
ஓதியே வைத்தார் அ ஓத்து எலாம் மீ கிடந்த
வீதியே காணலாம் என்றாளால் நின்றாரும் – நீலகேசி:5 469/2,3
இஃதால் என் மெய்ம்மை கிடந்த ஆறு என்றானுக்கு – நீலகேசி:5 652/2
கிடந்த கதிருள் கிளந்த பொருளும் – நீலகேசி:6 674/2
நூலில் கிடந்த அ நுண் பொருள் அன்றே – நீலகேசி:7 732/4
மேல்


கிடந்தது (3)

திரு மணி கிடந்தது என்ன செழு மகன் கிடப்ப கண்டு – உதயணகுமார:1 16/2
பிளந்து போழ்களாய் கிடந்தது அ பெரு வலி அரியே – சூளாமணி:7 723/4
சென்றாய் கிடந்தது அசேதனை-தான் என்றும் – நீலகேசி:7 759/2
மேல்


கிடந்தன (1)

கரை என கிடந்தன களிற்றின் கூவையே – சூளாமணி:9 1396/4
மேல்


கிடந்தார் (1)

வேதியால் கிடந்தார் உளராயினான் – நீலகேசி:3 248/2
மேல்


கிடந்தில (1)

எழிலும் தோளிலும் எருத்திலும் கிடந்தில எழுந்தே – சூளாமணி:7 715/4
மேல்


கிடந்து (6)

புடை கிடந்து உறங்குவானை புழுங்கிய மனத்தோடு அண்மி – யசோதர:2 111/3
வரம் கிடந்து எய்தல் ஆமோ மற்று எமர் பெருமை மன்னா – சூளாமணி:6 522/4
உராவி கிடந்து ஒளிரும் ஒண் கேழ் மணி – சூளாமணி:7 733/2
பருவம் ஓவா முகில் படலம் மூடி கிடந்து
இரவு உண்டு ஏனை பகல் இல்லை ஒல்லென்று இழிந்து – சூளாமணி:7 735/1,2
பரிய பாறை திரள் படர்ந்த போல கிடந்து
இரிய வேழங்களை விழுங்கி எங்கும் தமக்கு – சூளாமணி:7 737/1,2
தாங்கார் புரண்டு தலை தடுமாறாய் கிடந்து அங்கு – சூளாமணி:9 1472/2
மேல்


கிடந்தேன் (1)

கண்டேன் கிடந்தேன் கனவில் இது கண்டவாறே – நீலகேசி:0 3/4
மேல்


கிடப்ப (2)

திரு மணி கிடந்தது என்ன செழு மகன் கிடப்ப கண்டு – உதயணகுமார:1 16/2
வண்டு ஆர் மணி_முடியான் மார்பு துணி கிடப்ப
கண்டாள் பெருந்தேவி கண்டே தன் கை சோர்ந்து – சூளாமணி:9 1470/1,2
மேல்


கிடுகிடென்றிடும் (1)

கொடி உடை மதில் கிடுகிடென்றிடும்
விடு பல் கோட்டினில் வெட்டி விட்டிட – உதயணகுமார:6 312/2,3
மேல்


கிடுகின (1)

செம்பு இயல் கிடுகின செம்பொன் தட்டின – சூளாமணி:9 1277/1
மேல்


கிடுகு (1)

செம்பொன் செய் கிடுகு கோத்து திகிரி-வாய் புளகம் சேர்த்தி – சூளாமணி:8 914/1
மேல்


கிண்கிணி (2)

சிலம்பு கிண்கிணி சில சீர் கலன்கள் ஆர்ப்பவும் – உதயணகுமார:4 235/1
செம்பொன் கோவை கிண்கிணி ஏங்க திலதம் சேர் – சூளாமணி:10 1740/1
மேல்


கிண்கிணிகள் (1)

தவளை கிண்கிணிகள் மிக்க தரத்தினால் பேசல் இன்றி – உதயணகுமார:1 115/3
மேல்


கிண்கிணியும் (1)

செம்பொன் சிலம்பும் கிண்கிணியும் செல்வ செம் சீறடி போற்ற – சூளாமணி:10 1749/1
மேல்


கிண்டி (1)

எக்கர் ஈர் மணல் கிண்டி இளம் பெடை – சூளாமணி:1 22/3
மேல்


கிண்ணம் (1)

கிண்ணம் போல் முலையாள் புத்ரி கேணிகாசுந்தரி என்பாள் ஆம் – நாககுமார:3 79/3
மேல்


கிண்ணர்கள் (1)

கீழார் அலி கண் முழு செவி கிண்ணர்கள் எண்_இகந்த – நீலகேசி:1 76/3
மேல்


கிம்புரி (1)

தூ ஒளி மணி முடி சுடரும் கிம்புரி
நா வளைக்கொண்டன நாம வென்றி வேல் – சூளாமணி:9 1222/1,2
மேல்


கிரண (2)

தான் உமிழ் கிரண மார்பன் சதானிகன் அரசன் ஆமே – உதயணகுமார:1 10/4
தண் சொரி கிரண முத்த தவள நல் குடையின் நீழல் – உதயணகுமார:4 186/3
மேல்


கிரணம் (1)

சோதி மிக்க கிரணம் தோன்றும் சூரியன் உச்சி காலம் – நாககுமார:3 91/2
மேல்


கிரந்தியும் (1)

கிரந்தியும் வெப்பும் கிளக்குவை ஆயின் – நீலகேசி:4 368/2
மேல்


கிரமத்து (1)

இ கிரமத்து இந்திரன் இருடிகளை தேவியரை – நீலகேசி:4 290/3
மேல்


கிரமம்-தன்னில் (1)

இந்த நல் கிரமம்-தன்னில் இனிமையின் நோன்பு நோற்று – நாககுமார:5 152/1
மேல்


கிராதன் (1)

இந்த நல் கிராதன் தேவி-தனை விடுவித்த பின்பு – நாககுமார:3 95/2
மேல்


கிரி (3)

மதி கதிர் அவியும் அத்த வான் கிரி கண்டு மீண்டும் – உதயணகுமார:5 251/3
நீல நல் கிரி நெடிய யானையும் – உதயணகுமார:6 316/1
குல கிரி ஆறு கூர் கண்டம் ஏழ் குலாய் – சூளாமணி:5 390/1
மேல்


கிரிகை (1)

ஒன்று கிரிகை இன்று அப்பியத்தம் அது – நீலகேசி:7 737/2
மேல்


கிரிநகர்-தன்னை (1)

கிரிநகர்-தன்னை சேர கேட்டு நல் நகரை சென்றான் – நாககுமார:4 112/3
மேல்


கிரிபுரத்தை (1)

தோள் அன தோழன் கூட தொல் கிரிபுரத்தை சேர்ந்தான் – நாககுமார:3 98/4
மேல்


கிரியம்-தன்னில் (1)

இருந்து இனிது உறையும் மிக்க இராச நல் கிரியம்-தன்னில்
பொருந்தி செல் நகர்ப்புறத்தில் பொலிவுடன் இருந்தான் அன்றே – உதயணகுமார:3 154/3,4
மேல்


கிரியும் (3)

உதய நல் கிரியும் கண்டே உற்று உடன் தெற்கில் சென்று – உதயணகுமார:5 251/1
குல கிரியும் மலை_அரசும் குளிர் பொழிலும் நளிர் கயமும் – சூளாமணி:11 2044/1
பல கிரியும் தீவகமும் படு கடலும் படி நகரும் – சூளாமணி:11 2044/2
மேல்


கிரியை (1)

சித்தம் பனிரெண்டு சீர் கிரியை பதின்மூன்றுடன் – உதயணகுமார:6 364/3
மேல்


கிரியைகள் (1)

கிரியைகள் இதற்கு என கிளத்தல் கூட்டமே – நீலகேசி:8 787/4
மேல்


கிரீவன் (1)

கேளவர் மொழிதலும் கிரீவன் தம்பிமார் – சூளாமணி:9 1390/3
மேல்


கிரீவனுக்கு (1)

கிளை அமர் கிரீவனுக்கு இளைய வீரரே – சூளாமணி:9 1409/4
மேல்


கிருதமாதனத்தை (1)

கின்னரம் பிணிக்கும் செய்கை கிருதமாதனத்தை காப்பான் – சூளாமணி:8 836/2
மேல்


கிருமி (1)

கரு மலி கிருமி அன்ன கடைமகற்கு அடிமைசெய்த – யசோதர:2 127/3
மேல்


கிருமியோ (1)

மலை படு கிருமியோ நம் மாறு நிற்பனகள் என்றான் – சூளாமணி:9 1198/4
மேல்


கிலுகிலுத்ததே (1)

கிளை படு வள நகர் கிலுகிலுத்ததே – சூளாமணி:10 1714/4
மேல்


கிலுகிலுப்பு (1)

கிளர்த்தன கிலுகிலுப்பு அரவ புள் குலாம் – சூளாமணி:8 1065/1
மேல்


கிலேசமும் (1)

பாரமீ துதாங்கொடு பற்பல கிலேசமும்
நேரும் மனையில் உண்மையால் நீரும் வேண்டினீர் என – நீலகேசி:4 357/1,2
மேல்


கிழக்காய் (1)

தருப்பையின் நுனி தலை வடக்கொடு கிழக்காய்
பரப்பினன் அதற்கும் ஒரு வால் வளை பயின்றான் – சூளாமணி:8 1096/3,4
மேல்


கிழத்தி (1)

வீணை நல் கிழத்தி நீ வித்தக உருவி நீ – உதயணகுமார:2 145/1
மேல்


கிழத்தி-தன் (1)

திரு மனை கிழத்தி-தன் தேம் கொள் சில் மொழி – சூளாமணி:5 423/1
மேல்


கிழமை (1)

ஆழி அம் கிழமை எம் அடிகள் தோன்றினார் – சூளாமணி:5 394/4
மேல்


கிழமை-தன்னால் (1)

எல்லையில் கிழமை-தன்னால் இறைஞ்சுக என்பது என்றாள் – சூளாமணி:8 1011/4
மேல்


கிழமை-தன்னில் (1)

மைப்படல் இன்றி நின்ற மங்கல கிழமை-தன்னில்
கை பலி கொடுத்து தேவி கழல் அடி பணியில் காளை – யசோதர:2 136/2,3
மேல்


கிழமையின் (1)

நின்ற நூல் கிழமையின் நீதிமாக்களை – சூளாமணி:4 238/2
மேல்


கிழமையும் (1)

கிளத்தல்-தான் ஓர் கிழமையும் போலுமே – நீலகேசி:2 209/4
மேல்


கிழவ (1)

இரந்தவர்க்கு ஈட்டப்பட்ட இருநிதி கிழவ என்றான் – சூளாமணி:5 273/4
மேல்


கிழவர் (8)

மா மலர் அணிந்த கண்ணி மந்திர கிழவர் மன்னார் – சூளாமணி:3 96/2
புண்ணிய கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப ஆயின் – சூளாமணி:5 262/3
காரிய கிழவர் சூழ கவின்று கண் குளிர தோன்றி – சூளாமணி:6 510/2
நாந்தக கிழவர் கோவே நமி என்பான் நலத்தின் மிக்கான் – சூளாமணி:6 537/4
மந்திர கிழவர் கண்ணா மக்கள் தன் தாள்கள் ஆக – சூளாமணி:6 565/1
நாந்தக கிழவர் கோமான் நயம் தெரி மனத்தன் ஆனான் – சூளாமணி:7 666/4
போர்த்தன பதாகை பொங்கி பூமி அம் கிழவர் உள்ளம் – சூளாமணி:10 1826/3
இன் மலர் இருநிதி_கிழவர் ஈண்டினார் – சூளாமணி:11 1877/4
மேல்


கிழவர்-தங்கள் (1)

போதி அம் கிழவர்-தங்கள் தியானத்து புலம் கொண்டு ஏத்தி – சூளாமணி:4 200/2
மேல்


கிழவர்-தம்மை (1)

மந்திர கிழவர்-தம்மை மனை புக விடுத்து மன்னன் – சூளாமணி:5 362/1
மேல்


கிழவர்க்கு (1)

ஈண்டிய மந்திர கிழவர்க்கு என்னை யாம் – சூளாமணி:8 907/2
மேல்


கிழவர்கள் (1)

தந்திர கிழவர்கள் தாங்க செல்லுமே – சூளாமணி:4 237/4
மேல்


கிழவன் (9)

தூ மாண் தமிழின் கிழவன் சுடர் ஆர மார்பின் – சூளாமணி:0 4/3
புண்ணிய கிழவன் போகி பொலம் கலம் புலம்ப நீக்கி – சூளாமணி:6 554/3
வென்றியால் விளங்கு தானை விஞ்சை அம் கிழவன் கண்ணா – சூளாமணி:6 568/3
திருத்தினான் இறைவனே காண் செய்வினை கிழவன் என்பான் – சூளாமணி:7 667/4
ஏமரு கடல் அம் தானை இரு நில கிழவன் சொன்னான் – சூளாமணி:8 969/4
விண்ணிடை இழிந்து வந்த விண்ணவர் கிழவன் ஒப்பாய் – சூளாமணி:8 970/1
புனை மலர் அலங்கல் மார்பின் பூமி அம் கிழவன் தேவி – சூளாமணி:8 993/2
நாந்தக கிழவன் பொய்யே நங்கைமார்க்கு உடைந்து நின்றான் – சூளாமணி:10 1676/4
ஓங்கிய உலகிற்கு எல்லாம் ஒரு பெரும் கிழவன் ஆனான் – சூளாமணி:12 2119/4
மேல்


கிழவன்-கண் (1)

துத்தல் குழவி கிழவன்-கண் சொல் என்பன் – நீலகேசி:5 582/2
மேல்


கிழவனாய் (1)

ஆழி அம் கிழவனாய் அலரும் என்பது – சூளாமணி:3 112/3
மேல்


கிழவனை (2)

போதி அம் கிழவனை பூ மிசை ஒதுங்கினை – சூளாமணி:4 214/2
போதி அம் கிழவனை பூ மிசை ஒதுங்கிய – சூளாமணி:4 214/3
மேல்


கிழவியும் (1)

பாந்தவ கிழவியும் பண்பு இனிய சொல்லிய பின் – உதயணகுமார:2 132/2
மேல்


கிழவு (2)

கிழவு எனும் எல்லை கெழீஇயினர் சார்ந்து – சூளாமணி:11 1987/3
கிழவு காலத்துக்-கண் அவை கேட்டலால் – நீலகேசி:10 883/2
மேல்


கிழி (2)

மரத்தினும் கிழி மாவின் மயிரினும் – உதயணகுமார:1 39/2
படுகளத்தின் நொந்தவர்க்கு பல கிழி நெய் பற்றுடன் – உதயணகுமார:3 185/1
மேல்


கிழி-அதன்னை (1)

மணி பொதி கிழி-அதன்னை மணியுடன் நன்கு வைப்பார் – உதயணகுமார:1 3/2
மேல்


கிழித்ததும் (1)

மடுத்ததும் கிழித்ததும் மண்ணினுள் புக – சூளாமணி:9 1422/2
மேல்


கிழித்திடும் (1)

வழி வருவாரை மார் கிழித்திடும்
எழில் வனம் பொய்கை ஈடு அழித்திடும் – உதயணகுமார:6 317/1,2
மேல்


கிழிய (2)

ஆளி மொய்ம்ப அங்கு அகல் இலை அலரொடும் கிழிய
வாளை பாய்வன கயம் அல்ல வன திடர் மறவோய் – சூளாமணி:7 730/3,4
பேர் இருள் கிழிய தோன்றும் பிறை எயிற்று அமர நோக்கின் – சூளாமணி:7 759/3
மேல்


கிழியும் (1)

மணி பொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:1 3/1
மேல்


கிழியோடு (1)

கிழியோடு மாறாக்காசு என்றான் சொல் கேட்பவோ – நீலகேசி:2 182/4
மேல்


கிள்ளி (2)

ஒள் எழில் உருவும் கிள்ளி உழையவர்க்கு அருளுவாரும் – சூளாமணி:10 1640/4
வாயும் கிள்ளி புடைப்ப வருவது என் – நீலகேசி:10 887/2
மேல்


கிள்ளை (1)

கிள்ளை அம் மொழியினாரை கேட்டு உடன் பெறுகிலன் – நாககுமார:4 124/3
மேல்


கிளக்குவேன் (1)

மனக்கொள கிளக்குவேன் மன்னும் கேள் என – நீலகேசி:8 784/4
மேல்


கிளக்குவை (1)

கிரந்தியும் வெப்பும் கிளக்குவை ஆயின் – நீலகேசி:4 368/2
மேல்


கிளத்தல் (1)

கிரியைகள் இதற்கு என கிளத்தல் கூட்டமே – நீலகேசி:8 787/4
மேல்


கிளத்தல்-தான் (1)

கிளத்தல்-தான் ஓர் கிழமையும் போலுமே – நீலகேசி:2 209/4
மேல்


கிளத்தும் (1)

கீழாம் நரகம் கிளத்தும் படலங்கள் – சூளாமணி:11 1923/1
மேல்


கிளந்த (2)

கிடந்த கதிருள் கிளந்த பொருளும் – நீலகேசி:6 674/2
கிளவாது ஒழியாய் கிளந்த குழவிக்கு – நீலகேசி:6 708/3
மேல்


கிளந்து (1)

கின்னரர்கள் முதலாய வியந்தரரை கிளந்து உரைப்பின் – சூளாமணி:11 2043/1
மேல்


கிளப்பின் (1)

கேசவனார் திறம் கிளப்பின் வெண் மலை – சூளாமணி:5 402/1
மேல்


கிளர் (24)

கிளைத்தலை இருவர் கற்ற கிளர் நரப்பு இசையும் கீதம் – உதயணகுமார:1 81/1
கிடங்கு அருகு இஞ்சி ஓங்கி கிளர் முகில் சூடி செம்பொன் – நாககுமார:1 7/1
கின்னரியோ கிளர் கார் மாதரோ – நாககுமார:1 29/2
அடுத்தன நிறத்தது ஆகும் அணி கிளர் பளிங்கு போல – சூளாமணி:5 253/2
புலம் கிளர் பொறி நுகர்வு இலாத புண்ணியன் – சூளாமணி:5 396/3
நலம் கிளர் திரு_மொழி நாதன் என்பவே – சூளாமணி:5 396/4
ஆட்டினார் வெறி கமழ்வன அணி கிளர் நறு நீர் – சூளாமணி:6 471/1
கேவல பெண் என்பாள் ஓர் கிளர் ஒளி மடந்தை-தன்னை – சூளாமணி:6 560/3
நலம் கிளர் பசும்பொன் கோயில் நகுகின்ற நகரம் எல்லாம் – சூளாமணி:7 763/4
கிளர் பார்வை உற கிளர்கின்றது கேள் – சூளாமணி:7 811/4
கிளர் ஒளி மாட கோயில் கின்னரர் கெழுவல் ஓவா – சூளாமணி:8 830/1
மட்டு உயர் அலங்கல் சூடி மறம் கிளர் மள்ளர் சூழ்ந்தார் – சூளாமணி:8 842/4
மறம் கிளர் மன்னர்-தம் மகுட நெற்றியும் – சூளாமணி:9 1276/2
திறம் கிளர் புரவிகள் திரிதர்கின்றவே – சூளாமணி:9 1276/4
கேடகம் இடத்தது வலக்கை கிளர் ஒள் வாள் – சூளாமணி:9 1282/1
நிரை கிளர் சுடரது ஆகி நிமிர்ந்தது ஓர் உருவ செம் தீ – சூளாமணி:9 1430/2
விரை கிளர் உருவ தெய்வம் இது படை விடுத்த ஆறே – சூளாமணி:9 1430/4
புரை கிளர் பொடிகள் ஆர புணர்த்திடும் புணர்த்த போழ்தில் – சூளாமணி:9 1431/2
திரை கிளர் பரவை முந்நீர் திரைத்துக்கொண்டு ஒழுகும் இஃதால் – சூளாமணி:9 1431/3
கிளர் உலகை தெய்வம் உண்ணிய உடன்ற ஆறே – சூளாமணி:9 1431/4
நங்கை-தன் நலம் கிளர் மேனி நோக்கினான் – சூளாமணி:10 1759/4
திரு கிளர் குணம் மேல் சேடி செழும் மலை குவட்டின் ஓட்டி – சூளாமணி:12 2114/2
திரு கிளர் மதில் உஞ்சை தென் திசை அகல் நகருள் – நீலகேசி:2 227/3
ஒளி கிளர் தேவன் உளன் என்னும் ஆறோ – நீலகேசி:5 606/4
மேல்


கிளர்கின்றது (1)

கிளர் பார்வை உற கிளர்கின்றது கேள் – சூளாமணி:7 811/4
மேல்


கிளர்த்தன (1)

கிளர்த்தன கிலுகிலுப்பு அரவ புள் குலாம் – சூளாமணி:8 1065/1
மேல்


கிளர்தர (1)

கிளையொடு படலிகை கிளையொடு கிளர்தர
வளையொடு வயிர் இசை மருவின மழை என – சூளாமணி:8 936/2,3
மேல்


கிளர்ந்த (1)

கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான் – சூளாமணி:7 588/2
மேல்


கிளர்ந்தவே (1)

கெண்டையோடு நின்று அலைந்த கேழவாய் கிளர்ந்தவே – சூளாமணி:6 479/4
மேல்


கிளர்ந்தனர் (1)

ஒளிறு வாள் படை உளர்ந்தது கிளர்ந்தனர் உழை கல உழையோர்கள் – சூளாமணி:8 874/1
மேல்


கிளர்ந்து (8)

கெண்டை அம் சினை மேய்ந்து கிளர்ந்து போய் – சூளாமணி:1 28/1
கிளர்ந்து ஒளி துளும்பும் மேனி கேசரரோடு மண் மேல் – சூளாமணி:6 530/1
கொண்டல் கிளர்ந்து பரந்து குவிந்து அலை – சூளாமணி:9 1231/1
கேடகம் திசைதிசை கிளர்ந்து வீழ்ந்தவே – சூளாமணி:9 1406/4
கேள் வினை பயின்ற நூலின் கிளர்ந்து நீர் உரை-மின் என்ன – சூளாமணி:11 1855/2
கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே – சூளாமணி:11 1899/4
மா தெய்வம் தலைப்பட்டு கிளர்ந்து இன்ன உரைக்கும் – நீலகேசி:1 44/4
காடு கிளர்ந்து காட்டி யான் கலக்க ஒன்றும் கலங்காத – நீலகேசி:1 137/3
மேல்


கிளர்வன (2)

கிளர்வன போது இள வாசம் கிளைத்து உண்டு – சூளாமணி:5 291/3
வணம் கிளர்வன தோன்றி வகை சுடர்வன தோன்றி – சூளாமணி:7 751/2
மேல்


கிளர (1)

உற்று இங்கு ஒர் காதல் கிளர தமிழ் நூற்கலுற்றேன் – சூளாமணி:0 3/2
மேல்


கிளரும் (3)

கிளரும் சூழ் ஒளி கின்னர தேவர்-தம் – சூளாமணி:4 123/1
கெண்டை கண் கிளரும் புருவம் சிலை – சூளாமணி:4 152/3
கேள் நலம் பொலிதர கிளரும் சோதி அம் – சூளாமணி:10 1712/3
மேல்


கிளவாது (1)

கிளவாது ஒழியாய் கிளந்த குழவிக்கு – நீலகேசி:6 708/3
மேல்


கிளவி (6)

ஆர்வம் மிக்கு கூர்ந்து நல்ல அற்புத கிளவி செப்பி – உதயணகுமார:4 199/1
பண்ணுக கிளவி வாயில் பரவிய தீரும் சேரும் – நாககுமார:2 48/3
கனி புரை கிளவி காமம் கலந்தனள் கனிந்து செல் நாள் – யசோதர:2 116/2
மழலை அம் கிளவி செவ்வாய் மடந்தையும் அடைந்த போழ்தில் – சூளாமணி:10 1700/2
கனி புரை கிளவி நீக்கி கண்_அனார் கருத்து உள் கொண்டு – சூளாமணி:11 1861/2
தேம்படு கிளவி நீ சிந்தி என்னவே – நீலகேசி:8 822/4
மேல்


கிளவி-தன்னால் (1)

பால் நலம் கிளவி-தன்னால் பரிவுடன் இருக்கும் நாளில் – உதயணகுமார:3 163/4
மேல்


கிளவியர் (1)

கரும்பு சூழ் கிளவியர் சொரிந்து கை தொழ – சூளாமணி:5 377/2
மேல்


கிளவியார்-தம் (1)

குழல் அமர் கிளவியார்-தம் கூந்தலுள் குளித்து விம்மி – சூளாமணி:10 1700/3
மேல்


கிளவியாரும் (1)

கனி வளர் கிளவியாரும் கதிர் மணி கலங்கள் வாங்கி – சூளாமணி:10 1697/1
மேல்


கிளவியாலும் (1)

மருவினும் புதிய போலும் மழலை அம் கிளவியாலும்
திரு_மகள் புலமை ஆக்கும் செல்வி என்று இவர்கள் போல – சூளாமணி:2 65/2,3
மேல்


கிளவியாளை (1)

கனி வளர் கிளவியாளை கைப்பற்றி தருதும் என்பார் – சூளாமணி:9 1164/3
மேல்


கிளி (6)

இளம் கிளி மொழி நல் கொங்கை ஈடு_இல் பொன் கலசம் அல்குல் – உதயணகுமார:4 229/2
இளம் கிளி மொழியினார்கள் இனிமையில் நால்வரோடும் – உதயணகுமார:6 303/3
கொடு வாய கிளி கோதி குளிர் நறும் போது உகுத்தனவே – சூளாமணி:4 171/4
தூவி அரும் கிளி அன்ன சொல்லினீர் துணை_இல்லார் – சூளாமணி:4 177/3
பஞ்சு உடைய பந்து கிளி பாவையொடு பூவை – சூளாமணி:8 869/2
மின் ஒளியோடு உற மிழற்ற மிழற்றுவ கிளி என மொழிந்தாள் – நீலகேசி:1 65/3
மேல்


கிளிகள் (1)

போய் ஓங்கு பூம் சோலை வாழும் புன கிளிகள்
மாயோன் மடந்தைமார் கூவி மகிழ்விப்பார் – சூளாமணி:10 1657/3,4
மேல்


கிளிப்பிள்ளைகள் (1)

மாஞ்சோலை பொங்கி மருதம் கிளிப்பிள்ளைகள் வாய் – நீலகேசி:1 10/1
மேல்


கிளியும் (2)

பொழில் அகம் பூவையும் கிளியும் பாடுமே – சூளாமணி:1 10/2
பூவையும் கிளியும் கொண்டு புலம்பின பொழில்கள் எல்லாம் – சூளாமணி:4 167/4
மேல்


கிளை (7)

இன் சொல் மாதரும் இளம் கிளை சுற்றமும் எரி திரள் என அஞ்சி – யசோதர:5 323/1
நாண் தொழில் மகளிர் முன்னும் நகை கிளை ஆயத்துள்ளும் – சூளாமணி:9 1162/1
கிளை அமர் கிரீவனுக்கு இளைய வீரரே – சூளாமணி:9 1409/4
கிளை படு வள நகர் கிலுகிலுத்ததே – சூளாமணி:10 1714/4
பார் ஆர் செல்கை பல் கிளை எல்லாம் உடன் ஈண்டி – சூளாமணி:10 1745/1
மரம் கிளை ஒப்புமையால் உயிர் என்ன – நீலகேசி:4 368/1
வித்தின் வழி வழி தோன்றும் முளை கிளை
சத்தியின் ஆய சந்தானத்தை மாற்று என்பன் – நீலகேசி:5 573/1,2
மேல்


கிளைக்கும் (1)

நண்டு பொன் கிளைக்கும் நாடன் நாதவன் குலத்துள் தோன்றி – சூளாமணி:10 1786/1
மேல்


கிளைகள் (1)

காதி அம் கிளைகள் சீறும் காமரு நெறிக்கும் கண்ணாய் – சூளாமணி:4 200/1
மேல்


கிளைகளும் (2)

எழு பெரும் கிளைகளும் இனிதின் ஈண்டினார் – சூளாமணி:10 1718/4
இரு புடை கிளைகளும் விரவி இன்னணம் – சூளாமணி:10 1773/1
மேல்


கிளைஞர் (1)

ஏதிலா மன்னர் வாட இரு புடை கிளைஞர் எல்லாம் – சூளாமணி:10 1835/3
மேல்


கிளைத்தலை (1)

கிளைத்தலை இருவர் கற்ற கிளர் நரப்பு இசையும் கீதம் – உதயணகுமார:1 81/1
மேல்


கிளைத்து (1)

கிளர்வன போது இள வாசம் கிளைத்து உண்டு – சூளாமணி:5 291/3
மேல்


கிளைமையும் (1)

கிளைமையும் அனையதே கெழுமும் நம் உளம் அ – யசோதர:2 81/3
மேல்


கிளையவர் (1)

கிளையவர் உவகையின் கெழும ஈன்றனள் – யசோதர:2 78/3
மேல்


கிளையை (1)

பொருது அவன் கிளையை முந்நீர் புறங்கரை படுத்தும் என்றான் – சூளாமணி:9 1177/4
மேல்


கிளையொடு (4)

வண் திரள் கிளையொடு வளைகள் ஆர்த்தவே – சூளாமணி:5 364/4
கிளையொடு படலிகை கிளையொடு கிளர்தர – சூளாமணி:8 936/2
கிளையொடு படலிகை கிளையொடு கிளர்தர – சூளாமணி:8 936/2
காக்கை ஆர்ப்பன கழுது தம் கிளையொடு கதறி – நீலகேசி:1 31/1
மேல்


கிளையொடும் (1)

கிளையொடும் கீண்டு அரசு ஆடும் அன்று எனில் – சூளாமணி:9 1261/3
மேல்


கின்னர (2)

கிளரும் சூழ் ஒளி கின்னர தேவர்-தம் – சூளாமணி:4 123/1
கீத மாலைய கின்னர வண்டு இனம் – சூளாமணி:5 344/2
மேல்


கின்னரகீதம் (1)

கேடு_இல் இ மலையின் மேலால் கின்னரகீதம் ஆளும் – சூளாமணி:5 319/1
மேல்


கின்னரம் (1)

கின்னரம் பிணிக்கும் செய்கை கிருதமாதனத்தை காப்பான் – சூளாமணி:8 836/2
மேல்


கின்னரர் (3)

அன்று மெய்மறந்து சேர்ந்தார் கின்னரர் அமரர் தாழ்ந்தார் – சூளாமணி:6 542/3
இயங்கு கின்னரர் இன்புறு நீரவே – சூளாமணி:7 753/1
கிளர் ஒளி மாட கோயில் கின்னரர் கெழுவல் ஓவா – சூளாமணி:8 830/1
மேல்


கின்னரர்கள் (1)

கின்னரர்கள் முதலாய வியந்தரரை கிளந்து உரைப்பின் – சூளாமணி:11 2043/1
மேல்


கின்னரி (1)

கின்னரி மனோகரீ என் கெணிகை நல் கன்னிமாரும் – நாககுமார:2 54/1
மேல்


கின்னரியோ (1)

கின்னரியோ கிளர் கார் மாதரோ – நாககுமார:1 29/2

மேல்